Followers

Monday, September 15, 2014

ஐந்து வேளை நீங்கள் தொழுவதால் என்ன நன்மை?

ஐந்து வேளை நீங்கள் தொழுவதால் என்ன நன்மை?

29-08-2014 அன்று இஸ்லாம் பற்றிய அறிமுக நிகழ்ச்சி பதியா அழைப்பு வழி காட்டல் மையம் சார்பாக ரியாத் பத்ஹாவில் நடந்தேறியது.. அந்த விழாவுக்கு நானும் சென்றிருந்தேன். இந்து நண்பர்கள் பலரையும் இந்த விழாவுக்கு அழைத்திருந்தனர். விழாவின் முடிவில் இந்து நண்பர்களை இஸ்லாத்தின் மேல் உள்ள உங்களின் விமரிசனங்களை தாராளமாக வைக்கலாம் என்றும் அறிவிப்பு செய்யப்பட்டது.

இந்த விழாவில் பல மாற்று மத நண்பர்கள் தங்கள் கேள்விகளை வைத்தனர். ராம் கவாஸ்கர், கணேசன், செல்வகுமார், பாலாஜி, சிவா, சேகர், சித்ர வேலு, மருத்துவர் சிவகுமார் என்று பலரும் விழாவுக்கு வருகை தந்து தங்கள் ஐயங்களை பகிர்ந்து கொண்டனர்.

அதில் ஒரு கேள்வியை ராம் கவாஸ்கர் வைத்தார்.

ராம் கவாஸ்கர்: ஐந்து வேளை இஸ்லாத்தில் கட்டாய கடமை என்று சொல்லப்படுவது ஏன்? இதனால் கடவுளுக்கு என்ன நன்மை?

பொறியாளர் ஜக்கரியா: 'இறைவன் குர்ஆனில் ஐந்து வேளை தொழுக சொல்லி கட்டளையிடுகிறான். அதுதான் முக்கிய காரணம். உடற் பயிற்சி, ஆன்மீக பயிற்சி என்று அதற்கு பல விளக்கங்கள் இருந்தாலும் இறைவன் கூறியதால் உலக முஸ்லிம்கள் ஐந்து வேளை தொழுகையை கட்டாயமாக கடை பிடிக்கின்றனர்.' என்று கூறி நேரமின்மை காரணமாக சுருக்கமாக முடித்துக் கொண்டார். ஆனால் நமக்கு நேரம் இருப்பதால் அந்த தொழுகையில் என்னனென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை சற்று விரிவாக பார்ப்போம்.

பள்ளி வாசலில் தொழச் செல்பவர் தனக்கு முன்னால் யாரும் அமர்ந்திருந்தால் அவரை நகர்த்தி விட்டோ அல்லது அவருக்கு சிரமத்தை தரும் பொருட்டோ அமரக் கூடாது. கூட்டுத் தொழுகையில் நிற்கக் கூடிய ஒருவர் அருகில் உள்ளவரோடு விலகி நிற்கக் கூடாது. அவருடைய தோளும், நமது தோளும் ஒன்றோடு ஒன்று உரசும் வகையில் நிற்க வேண்டும். யாரும் கூச்சப்பட்டுக் கொண்டு விலகி நின்றால் அவரை தனது கையால் இழுத்து தனது அருகில் நிறுத்திக் கொண்டே தொழ வேண்டும் என்பது நபிகள் நாயகத்தின் கட்டளை. கூட்டுத் தொழுகையில் அவ்வாறு இடைவெளி விட்டு நின்றால் உங்கள் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்ற நபி மொழியையும் நாம் பார்க்கிறோம்.

நான் தினமும் தொழச் செல்லும் பள்ளிக்கு தெருக்களைக் கூட்டி சுத்தம் செய்யக் கூடிய பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்து சகோதரர்கள் இருவர் தொடர்ந்து பள்ளிக்கு வருவர். நம் ஊரில் இவர்களை 'தோட்டி' என்று இளக்காரமாக பார்த்து அதற்கென்று ஒரு சாதியையும் ஏற்படுத்தி வைத்துள்ளோம். இங்கு சவுதியில் அந்த பங்களாதேஷத்தவர் தெருவை கூட்டிக் கொண்டே அவர்களின் மஞ்சள் கலரான சீருடையிலேயே பள்ளிக்கு தொழ வருவர். வெயிலில் எந்த நேரமும் வேலை செய்வதால் அவர்கள் உடையிலிருந்து ஒரு வித வியர்வை வாசனையும் வரும். இதனால் சங்கோஜப்பட்டுக் கொண்டு அந்த பங்களாதேசத்து சகோததரர்கள் பக்கத்தில் நிற்பவர்களிடமிருந்து சற்று இடைவெளி விட்டு நிற்பர்.

இவர்களுக்கு அருகில் பெரும் கோடீஸ்வரர்களும், உலகின் மிக உயர்ந்த ஆடைகளையும் வாசனை திரவியங்களையும் பூசிக் கொண்டு நிற்பவர்களுமான சவுதிகளை நாம் பார்போம். அந்த பங்களாதேசத்தவர் விலகி நிற்பதை கண்டு தங்கள் கைகளால் அவர்கள் சட்டையை பிடித்து இழுத்து தங்கள் அருகில் நிறுத்திக் கொள்வதை நான் தினமும் பார்க்கிறேன். ஒருகால் மனதால் இந்த செய்கையை சவுதிகள் வெறுத்தாலும் தங்கள் தொழுகை வீணாகி விடக் கூடாது. இதனால் இறைவனின் கோபத்திற்கு நாம் ஆளாகி விடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையால் தனதருகில் இழுத்து நிறுத்திக் கொள்கிறார். தான் ஒரு அரபி: தான் ஒரு கோடீஸ்வரன்: தான் ஒரு சவுதி போன்ற நினைப்பெல்லாம் மசூதிக்கு வெளியேதான். இறைவனின் ஆலயத்துக்குள் வந்து விட்டால் ஆண்டியும் அரசனும் ஒன்றுதான் என்பதை நிலை நிறுத்தவே தொழுகையில் இது போன்ற கட்டளைகள் நபிகள் நாயகத்தால் இடப்படுகின்றது. உலக அளவில் தீண்டாமை இஸ்லாமியரிடத்தில் முழு அளவில் ஒழிக்கப்பட்டதற்கு முக்கிய காரணமே இந்த ஐவேளை தொழுகைதான் என்றால் மிகையாகாது.

அடுத்து வீட்டிலேயே அடைந்து கிடக்காமல் ஒரு நாளுக்கு ஐந்து வேளை பள்ளிக்கு தொழுக வந்து அனைத்து மக்களோடும் அன்பாக பேசி சலாம் சொல்லி செல்வதால் மனதுக்கு ஒரு நிம்மதி கிடைக்கிறது. நமது கஷ்டங்களை எல்லாம் இறைவன் முன்னால் தலையை கீழே வைத்து அனைத்து பாரங்களையும் இறக்கி வைத்து விடுகிறோம். இதனால்தான் தமிழகத்திலும், இந்தியாவிலும், ஏன் உலகம் முழுவதிலும் தற்கொலை விகிதத்தில் மற்றவர்களை விட முஸ்லிம்கள் குறைவாக இருப்பதற்கு முக்கிய காரணமே .இந்த தொழுகைதான்.

மேலும் இறைவன் குர்ஆனில் 'உங்கள் முகங்களை கிழக்கு நோக்கியோ மேற்கு நோக்கியோ திருப்புவதால் எந்த பலனும் இல்லை.: மாறாக உங்களின் இறை அச்சமே இறைவனால் பொருந்திக் கொள்ளப்படும்' என்ற பொருள்பட கூறுகிறான். இதன் மூலம் ஒரு மனிதன் தொழுவதால் இறைவனின் அந்தஸ்து உயரப் போவதில்லை. இது போன்ற தேவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவன் நம்மை படைத்த இறைவன். இந்த தொழுகையானது மனிதனுக்குள் மறைந்துள்ள 'தான்' என்ற அகம்பாவத்தை வீழ்த்தி அவனை ஒரு சராசரி மனிதனாக மாற்றுகிறது என்றால் மிகையில்லை. எனவே இந்த தொழுகைகள் மூலம் மனிதன்தான் பலன் அடைகிறான். அதனை இறை கட்டளையாக செய்வதால் அந்த மனிதன் இரு பலன்களை பெறுகிறான். ஒன்று தனது இறைவனின் கட்டளையை நிறைவேற்றுகிறான். மற்றொன்று தன்னை சராசரி மனிதனாகவும் மாற்றிக் கொள்கிறான். இதுதான் இந்த தொழுகையின் மூலம் நாம் பெறும் படிப்பினையாகும்.

4 comments:

UNMAIKAL said...

அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல். அருட்கொடையாம் தொழுகை

ஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி ஒழு செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி உடற்சுகாதாரம் எவ்வாறு பேணி கடைப் பிடிக்கப்படுகின்றது என்பதை சிந்தித்தீர்களா?

ஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.

இதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.
ஆச்சரியமான விந்தை புலப்படவில்லையா?

சுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தொழுகை தன்னகத்தில் கொண்டது.

ஐவேளை தொழுகையின் மூலம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாதய சூழ்நிலைகளிலேயே மூழ்கி கிடந்திடாமலும்

இறைவனிடம் தொடர்பை சற்றும் தொய்வில்லாமல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்பதற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா ?

உலகின் அத்தனை முஸ்லீம்களும் எந்த மூலை முடுக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை. இதன் சூட்சுமம் அளவிலடங்காதது.

உலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற உண்மை உணர்ந்தீர்களா?

தொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,
நெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய சஜ்தா செய்யும்பொழுது
நம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா?

உடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார்.

பிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள். ஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது ' என கூறுகிறார்.

தொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்."

தொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முயற்ச்சி அல்ல இது.

தொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாளபடுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.

தொழுகை தீய காரியங்களை அகற்றி மானக்கேடாவைகளைத் தடுக்கிறது.

தொழும்போது இறைவனிடம் பேசுகிறீர்கள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவன் உங்களிடம் பேசுகிறான்.

நமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை. தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே.

எங்கேயும்! ஒவ்வொரு விநாடியும் !! எச்சூழ்நிலையிலும்!!! அகிலம் முழுவதிலும்!!!! மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிரயாணத்திலும், சண்டையிலும், சமாதானத்திலும், சிறையிலும், சுகபோகத்திலும், நட்பிலும், பகையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… அனைத்திடத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் ஒரே சீரிய செயல்.

ஓ மானுடனே! சிந்திப்பாயா ? உள்ளத்தை திறக்கும் காட்சிகள். சற்றே சிந்தியுங்கள். பார்ப்பவை எல்லாம் நதியில் ஒரு துளிதான். அகிலஉலக பிரஜைகளான முஸ்லீம்களே !

கீழே உள்ள சுட்டியை சொடுக்கி உன் சகோதரர்களை பார் ?.


அரிதான விடியோக்கள் காணத்தவறாதீர்கள்.

>>>>>>>***இங்கே*** <<<<<

.

UNMAIKAL said...

எப்படியும் -- உண்மையான இறையச்சம் கொண்ட முஸ்லிம்கள், தொழுகையை எக்காரணம் கொண்டும் விடுவதில்லை. ஆனாலும், இங்கே... சிலர் பள்ளிவாசல்களில் இடம் கிடைக்காவிட்டாலும், அல்லது அது எங்கு இருக்கிறது என்று தெரியாவிட்டாலும், அல்லது அங்கெல்லாம் போக அப்போதைய சூழ்நிலை இடம் தராமையாலும், நேரம் குறிக்கப்பட்ட கடமையான தொழுகையை விட்டுவிடாமல் எப்படியெல்லாம் நிறைவேற்றுகின்றனர் பாருங்களேன்..! இறைவனுக்கே எல்லாபுகழும்..!

>>>>எங்கும்...எந்த நிலையிலும்...எப்படியும்...! (Photo Gallery) <<<<

.

UNMAIKAL said...

இப்படியா இஸ்லாமியர்கள்! காஷ்மீர் இந்துக்கள்!?

காஷ்மீர் வெள்ளப்பெருக்கு அனைவரும் அறிந்ததே, மனிதம் வாழ்க! மதத்தை கடந்து மனிதம் பேணுகிறார்களே இஸ்லாமியர்கள் என்று ஆச்சரியப்படுகிறார்கள் காஷ்மீர் இந்துக்கள்.

இப்படி செய்வீர்கள் என்று தெரிந்திருந்தால் அன்றே சங்க பரிவார் RSS தகர்த்திருக்கும் உங்கள் மசூதியை, (பாபர் மஸ்ஜித் அயோத்தி) தடுத்திருக்கலாமே.

ஐயகோ! உங்கள் மசூதிக்குள் சாதி பேதம் பாராமல் இந்துக்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளீர்களே தீட்டுப்பட்டு விடாதா???

இதை அறிந்தால் சம்ஸ்கிருத சங்க்பரிவார் RSS இன் மனம் கொதித்தெலாதா??

இப்படி சகோதரத்துவம் பேசி மனிதம் காக்க இன்னும் எத்தனை மசூதிகளை இழக்கப் போகிறீர்களோ ??? காஷ்மீர் இந்துக்கள், மனிதம் வாழ்க!

காஷ்மீரில் வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு மதம் பார்க்காமல் உணவு வழங்கி புகலிடம் தரும் மசூதி!

இந்துக்களும் பெரும்பான்மையாக உள்ளனர். குறிப்பாக, வெளி மாநிலங்களில் இருந்து பணி நிமித்தமாக காஷ்மீர் வந்த இந்துக்கள் இந்த மசூதிகளில் தங்கியுள்ளனர்.

மசூதிகளில் தங்கியுள்ள அனைவருக்கும் தங்குமிடம் மட்டுமின்றி சாப்பாடும் மசூதி நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்படுகிறது.

ஆண்கள் மட்டுமின்றி, பெண்கள், குழந்தைகள் போன்ற பலருக்கும் இந்த மசூதி ஆபத்தில் இருந்து காப்பாற்றும் புகலிடமாக மாறியுள்ள மூன்றடுக்கு கொண்ட மசூதியில் மொத்தம் 2400 பேர் தங்கியுள்ளனர். அவர்களுக்கு சாப்பாடு வழங்குவதற்கு என்று சமுதாய சமையலறை உருவாக்கப்பட்டுள்ளது.

தானமாக மக்கள் அளிக்கும் துணிகள் இங்கு வந்து தரப்படுகின்றன எனவே வெள்ளம் வடியும் வரை இந்த மசூதியில் தங்கியிருக்க மக்கள் முடிவு செய்துள்ளனர்.

இப்போது சொல்லுங்கள் மதமா! மனிதமா!?. நம்மவர்களை பிரிப்பது, பிரித்தாளுவது எது??.

http://www.sinthikkavum.net/2014/09/blog-post_30.html


Harmony amid despair: A mosque in Kashmir gives shelter to Hindus displaced by floods –

Press Trust of India | Srinagar |

It is evening time and the maulvi here just sounded the ‘azaan’, the call for prayer and devouts rush inside to offer ‘namaaz’. Shortly thereafter, scores of people assemble in the tented courtyard of the mosque to have food.

This is Jama Masjid in Hyderpora area which has turned into a major relief centre for those affected by the devastating floods in the Kashmir valley, housing hundreds of people, including women and children.

People are angry at the administration as they did nothing to help the victims.

Significantly, in this hour of tragedy, this mosque has become a symbol of communal harmony as a number of Hindus, who had come from outside the state for work, are also taking shelter here.

The inmates of this camp at the mosque, which remained unaffected by the floods, have come from various parts of the Valley and each one had a story of horror and pain to tell.- Press Trust of India


http://indianexpress.com

Wanderer said...

அருமையான விளக்கம்.