
செப்டம்பர் 17, இன்று பெரியார் பிறந்த தினம்.
-------------
"இந்தக் காலத்து இளைஞர்கள் மனம் என் மீது (வெறுப்புக் கொள்ளாது) வெறுப்புக் கொண்டு விடுமானாலும் கூட நான் அஞ்சவில்லை. இனி வருங்கால இளைஞர் பாராட்டுவார்கள். பாராட்டாவிட்டாலும் இன்று நான் சொன்னதைப் பின்பற்றி வீரத்தோடு மான வாழ்வு வாழும் வழியில் இருப்பார்கள். சரியாகவோ தப்பாகவோ நான் அதில் உறுதி கொண்டு இருப்பதால் எனக்கு எக்கேடு வருவதானாலும் சாவு வருவதானாலும் மனக்குறையின்றி நிறைமனதுடன் அனுபவிப்பேன் - சாவேன் என்பதை உண்மையாய் வெளியிடுகிறேன்."
- தோழர் #பெரியார்
- [12.04.1947 அன்று 'குடிஅரசு' இதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரையில் இருந்து சில...]
No comments:
Post a Comment