Followers

Saturday, September 24, 2016

கோவை கலவரம் அன்றும் இன்றும்!







கோவை கலவரம் அன்றும் இன்றும்!

பல வருடங்கள் முன்பு நடந்த கோவை கலவரத்தையும் நேற்று நடந்த கோவை கலவரத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தேன். முன்பு இஸ்லாமியர்களிடத்தில் போதிய விழிப்புணர்வு இல்லை. வழி காட்ட சிறந்த தலைவர்கள் இல்லை. தெருக்களில் இளைஞர்கள் விளையாட்டாக செய்யும் சில செயல்கள் பெரும் கலவரமாக முன்பு மாறியது.

ஆனால் இன்று....

தமிழகம் தழுவி தவ்ஹீத் ஜமாத், தமுமுக, பாபுலர் ஃப்ரண்ட் என்று அமைப்புகள் தமிழக இஸ்லாமியரிடத்தில் வேரூன்றிய பிறகு இந்துத்வாவின் கலவரத்தை எப்படி சமாளிப்பது என்ற வழி முறைகள் நமக்கு கிடைத்தது. அமைப்பு ரீதியாக அதிகார வர்க்கத்தை கண்டு கலவரக்காரர்களை கைது பண்ண வைத்துள்ளோம். அதன் நீட்சியாக கொவையில் சென்ற வெள்ளிக் கிழமை பொறுமை காத்தோம். காவிகளின், அமீத்ஷாக்களின், மோடிக்களின் திட்டம் பலிக்க விடாமல் ஆக்கினோம்.

கலவரத்தில் வந்த அனைவருமே திருட வேண்டும் என்ற நோக்கிலேயே வந்துள்ளனர். பிரியாணி அண்டாவைக் கூட இவர்கள் விடவில்லை. அந்த அளவு காய்ந்து போய் இருக்கிறார்கள். வந்தவர்கள் அனைவருமே கோழைகள். கூட்டத்தில்தான் இந்த நாய்களின் வீரமெல்லாம். விடிந்தால் சோத்துக்கு லாட்டரி. இதுதான் இவர்களின் நிலைமை. எங்கோ இருந்து சில லட்சங்களை வாங்கிக் கொண்டு இவர்களை அர்ஜூன் சம்பத் போன்றவர்கள் ஆட்டி வைக்கிறார்கள். உண்மை விளங்காமல் பல தலித், பிற்படுத்தப்பட்ட இளைஞர்கள் தங்களை அறியாமலேயே இந்த படு குழியில் வீழ்கிறார்கள்.

தவ்ஹீத் ஜமாத் போன்ற அமைப்புகள் இஸ்லாமிய இளைஞர்களை தொழுகை, நோன்பு, மறுமை வாழ்வு போன்றவற்றை ஞாபகப்படுத்தி அந்த இளைஞர்களை பொறுமைசாலிகளாக மாற்றியுள்ளது. இதனால்தான் இத்தனை இழப்புகள் வந்தும் பொறுமை காத்தனர்.


அதே நேரம் ராம கோபாலன், அர்ஜூன் சம்பத், ஹெச் ராஜா போன்ற தேச விரோதிகள் உருவாக்கியுள்ள இளைஞர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை சென்ற வெள்ளிக் கிழமை பார்த்தோம். மொபைல் கடை, பிரியாணி கடை என்று கடைகளை உடைத்து திருடிச் செல்வதை கேமரா பதிவின் மூலம் பார்த்தோம். கட்ட பஞ்சாயத்து, சின்ன வீடு, திருட்டு, கொலை, கந்து வட்டி என்று இந்த இளைஞர்களை இந்துத்வா தலைவர்கள் கெடுத்து வைத்துள்ளார்கள். இவர்களை பெற்ற தாய் தந்தைக்கும், பிறந்த தாய் நாட்டுக்கும் மிகப் பெரும் பாரமாக மாறப் போகிறவர்கள். இன்று இந்துத்வா ஆட்சி நடப்பதால் போலீஸ் வழக்குகளிலிருந்து தப்பி விடலாம். ஆனால் வரும் காலமும் இப்படியே சென்று விடாது. திருடி பழக்கப்பட்ட இந்த இளைஞர்கள் இனி படிப்பிலோ கவுரமான வேலையிலோ தங்களின் கவனத்தை கொண்டு செல்ல மாட்டார்கள். இவர்களின் வாழ்க்கை இனி குடி, கூத்தியா என்றுதான் செல்லும். கலவரத்தில் ஈடுபட்ட இந்துத்வா இளைஞர்களை எண்ணி கோபம் வரவில்லை. பரிதாபமே மேலோங்குகிறது.

No comments: