Followers

Thursday, September 01, 2016

குலக் கல்வியை சந்தடி சாக்கில் நுழைக்கும் மோடி அரசு!



அன்பார்ந்த மாணவர்களே – இளைஞர்களே!

அன்று, உடலால் இந்தியர்களாகவும், சிந்தனையால் ஆங்கிலேயர்களாகவும் உள்ள ஊழியர்களை உருவாக்க மெக்காலே கல்வித் திட்டத்தை புகுத்தியது ஆங்கிலேய அரசு. இன்று, இந்து – இந்தி – இந்தியா எனும் பார்ப்பன தேசியத்தை கட்டுவதற்கு மாணவர்களை தயார்படுத்த புதிய கல்விக் கொள்கை எனும் நவீன மெக்காலே திட்டத்தை புகுத்துகிறது மோடி அரசு.

பார்ப்பனர்கள் வேதம் ஓத மட்டுமே பயன்படுத்தக் கூடிய, செத்த மொழியான சமஸ்கிருதத்திற்கு சிங்காரமாம் – ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை தனிப்பாடப் பிரிவாம். இது ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி-யின் சமஸ்கிருத – வேத கலாச்சாரத்தைத் திணிக்கும் முயற்சியே!

‘படிப்பில் பின் தங்கும் ஏழை மாணவர்களுக்கு ஐந்தாம் வகுப்புக்கு மேல் இனி கல்வி இல்லை. அதன்பின் திறன் மேம்பாட்டுப் பயிற்சி’ என்று பார்ப்பன நரி ராஜாஜியின் குலக்கல்வி திட்டத்தை மீண்டும் உயிர்ப்பிக்க துடிக்கிறது மோடி அரசு.

“200 வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள் இந்தியாவில் கிளை தொடங்க அனுமதி; தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்கள் கல்வித் துறையில் முதலீடு செய்ய ஊக்குவிப்பு; கல்வி நிறுவனங்களில் கல்விக் கட்டணம், நன்கொடை, உள்கட்டுமான வசதிகள் உள்ளிட்ட பிரச்சனைகளில் அரசோ, நீதிமன்றமோ தலையிடக் கூடாது. இதற்கென தனியாக ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்படும்”. இதன் மூலம் கல்வியை கார்ப்பரேட் முதலாளிகள் கைப்பற்றி கொள்ளையடிப்பதையும், அவர்களுக்குத் தேவையான படித்த திறமையான அடிமைகளை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது இந்த புதிய கல்விக் கொள்கை.

கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சங்கம் வைக்கத் தடை – கல்லூரி வாயிலில் போலீசு பூத் வைத்து கண்காணிப்பு என்று மாணவர்கள் படிக்கும் கல்விக் கூடத்தை குற்றவாளிகள் அடைக்கப்படும் சிறைக்கூடமாக மாற்றுகிறது மோடி அரசு!

மொத்தத்தில் இது தேசிய கல்விக் கொள்கையல்ல, பெரும்பான்மை மக்களுக்கு கல்வியை மறுக்கும் கொள்கை. இந்த சதித் திட்டத்தை முறியடிக்க ஓரணியில் திரள்வோம்!

இந்துத்துவா கொள்கை, மறுகாலனியாக்கத்தையும் ஒன்றாக சேர்த்து உருவாக்கப்பட்டுள்ள வீரிய ஒட்டுரகமான புதிய கல்விக் கொள்கையை (2016) முறியடிப்போம்.

சமஸ்கிருத – வேத கலாச்சார திணிப்பின் மூலம் நாட்டை பார்ப்பனிய மயமாக்கத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ்-ன் இந்து ராஷ்டிர கனவைத் தகர்த்தெறிவோம்.!

புதிய கல்விக் கொள்கைக்குஎ திரான சென்னைக் கூட்டத்தில் அணி திரள்வீர்!

மீண்டும் மனுதர்ம ஆட்சி!மீண்டும் காலனியாக்கம்!

சேட்டுகள் – பார்ப்பனர்களின் சதித்திட்டத்தை முறியடிப்போம்!

மோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து…
செப்டம்பர் 1, 2016 மாலை 5 மணி

பொதுக்கூட்டம்
மதுரவாயல்
எம்.எம்.டி.ஏ EB ஆபிஸ் அருகில், சென்னை

நிகழ்ச்சி நிரல்
தலைமை : தோழர் கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர், பு.மா.இ.மு, தமிழ்நாடு

சிறப்புரை :
திரு. பேரா. அ கருணானந்தம், வரலாற்றுத் துறை முன்னாள் தலைவர், விவேகானந்தா கல்லூரி, சென்னை
திரு ரமேஷ், அம்பேத்கர், பெரியார் வாசகர் வட்டம், ஐ..ஐ.டி, சென்னை
திரு பழ கருப்பையா, எழுத்தாளர், சென்னை
திரு பேரா. D. ரமேஷ் பட்நாயக், ஒருங்கிணைப்பு செயலர், அகில இந்திய கல்வி உரிமைக்கான கூட்டமைப்பு, ஹைதராபாத்
தோழர் சி. ராஜு, மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம், தமிழ்நாடு

தகவல்

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
சென்னை, 94451 12675

நன்றி
வினவு தளம்!

http://www.vinavu.com/2016/08/31/public-meeting-opposing-modi-govts-new-education-policy/

No comments: