Followers

Tuesday, September 06, 2016

சவுதியில் ருசியான கோழிக்கு அலை மோதும் கூட்டம்!



அல்பெய்க் என்ற இந்த உணவகம் சவுதியில் பிரபலம். மெக்கா, மதினா, ஜெத்தா, அல்கஸீம் என்று குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய ஊர்களில் மாத்திரமே இதன் கிளைகள் உண்டு. இரண்டு முறை அல் கஸீம் பிராஞ்சில் 'அல்பெய்க் கோழி' சாப்பிட்டுள்ளேன். 12 ரியாலுக்கு நான்கு கோழி துண்டுகள் பிரட் என்று அசத்துகிறார்கள். குறைந்த செலவில் வயிறு நிரம்ப சாப்பிட முடிவதால் இங்கு எப்போதும் கூட்டம் அலை மோதுகிறது.

கெண்டகி, மெக்னோடால்ஸ் போன்ற அமெரிக்க கம்பெனிகள் மற்ற ஊர்களுக்கு அல்பெய்க் வருவதற்கு மறைமுகமாக தடை செய்து வருகிறார்கள். ஒரு சிலர் கஸீமிலிருந்து மொத்தமாக வாங்கி ரியாத்தில் விற்று வந்தனர். காவல் துறை அவர்களை கைதும் செய்துள்ளது.

உடலுக்கு தீங்கு விளைவிக்கும் இது போன்ற கோழிகளை தவிர்த்துக் கொள்வதே நல்லது. வீட்டில் வளர்க்கும் நாட்டுக் கோழியே சிறந்தது.






No comments: