Followers

Tuesday, September 06, 2016

குஜராத் ஒளிர்கிறது என்று பீலா விட்ட மோடியின் பித்தலாட்டங்கள்!



குஜராத் ஒளிர்கிறது என்று பீலா விட்ட மோடியின் பித்தலாட்டங்கள்!

ஆட்சிக் கட்டிலில் ஏற குஜராத் ஒளிர்கிறது என்ற பொய்யை நாடு முழுக்க பரப்பியவர் மோடி. அந்த பொய்களினால் ஆட்சியையும் பிடித்துள்ளார். ஆனால் தற்போது குஜராத்தின் உண்மை நிலை உலகுக்கு தெரிய ஆரம்பித்துள்ளது. நமது நாட்டில் வறுமைக்காக கிட்னியை விற்பவர்களின் எண்ணிக்கை குஜராத்தில்தான் அதிகமாக உள்ளது.

குஜராத மாநிலம் பண்டோனி என்ற கிராமத்தில் மட்டும் கடந்த ஒரு வருடத்தில் 11 நபர்கள் கிட்னி விற்றுள்ளதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். கிட்னி விற்க தயாராக இருப்பவர்களை அறிமுகம் செய்பவர்களுக்கு ரூ.25,000 ஊக்க தொகை என்று அறிவித்து கிட்டத்தட்ட ஒரு மல்டி லெவல் மார்க்கெட்டிங் போன்று இக்குற்றம் நடந்து கொண்டிருக்கிறது. மேல்மட்ட கார்ப்பரேட் மருத்துவமனை நிர்வாகத்தில் ஆரம்பித்து கிட்னி விற்பவர் வரை மிகப் பிரம்மாண்டமான ஒரு வலைப்பின்னல் இருப்பதும் தெரியவந்துள்ளது.

ஹர்ஷத் சோலன்கி : வயது 24 தொழில் : விவசாயம்
கிட்னி விற்ற தேதி : ஆகஸ்ட், 2015 பணம் : 2.50 இலட்சம் ரூபாய்

கனுபாய் கொகெல் : வயது 37 தொழில் : விவசாயம்
கிட்னி விற்ற தேதி : நவம்பர், 2015 டெல்லி பணம் : 2.30 இலட்சம் ரூபாய்

அமீன் மாலீக் : வயது 27 தொழில் : விவசாயம்
கிட்னி விற்ற தேதி : பிப்ரவரி, 16 2016 பணம் : 1.5 இலட்சம் ரூபாய்

அதானிக்கும் அம்பானிக்கும் முழு நேர சேவகனாக உலா வரும் மோடி இனிமேலாவது தனது சொந்த மாநிலமான குஜராத்தின் அவல நிலையை போக்க முன் வர வேண்டும்.

No comments: