Followers

Saturday, September 17, 2016

கல்லூரி மாணவன் பிரவீனின் தற்கொலை உணர்த்துவதென்ன?



கல்லூரி மாணவன் பிரவீனின் தற்கொலை உணர்த்துவதென்ன?

ஹைதரபாத் பல்கலைக் கழகத்தின் முதலாம் ஆண்டு மாணவன் பிரவீன் தனது அறையில் தூக்கிட்டு தொங்கியுள்ளான். எந்த கடிதமும் எழுதி வைக்கவில்லை. இவரது அப்பா பிஎஸ்என்எல்லில் நல்ல சம்பளத்தில் உள்ளார். பொருளாதார அளவில் எந்த நெருக்கடியும் இவருக்கு இல்லை. சென்ற செப்டம்பர் 9 ந்தேதி பிரவீன் தனது லேப்டாப்பில் சில குறிப்புகளை எழுதி வைத்துள்ளார். அதன் தமிழாக்கம் வருமாறு...

'என்னால் ஏன் சரியாக படிக்க முடிவதில்லை?.. நான் ஏன் எதைப் பார்த்தாலும் பயந்து கொள்கிறேன்?... என்னால் ஏன் மற்றவர்களோடு சகஜமாக பழக முடிவதில்லை? இன்று காலை ஒரு இடத்துக்கு சென்றிருந்தேன். ஒரு மாணவன் என்னோடு கை குலுக்கி பேசினான். ஆனால் அவனோடு சகஜமாக என்னால் ஏன் பழக முடியவில்லை? நான் நன்றாக படித்து எதையாவது சாதிக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் வாழ்ந்து ஒரு பிரயோசனமும் இல்லை. நான் ஏன் எப்போதும் மகிழ்ச்சி இல்லாமல் இருக்கிறேன்? நான் ஏன் என்னை ஒரு தனி மனிதனாக உணருகிறேன்?'

இவ்வாறு செல்கிறது அந்த மாணவனின் எண்ண ஓட்டங்கள். இதுதான் அவனை தற்கொலைக்கு தூண்டியிருக்கிறது. உண்மையான இறை நம்பிக்கை அந்த மாணவனுக்கு ஊட்டப்படாததாலேயே ஒரு விரக்தி அவனுக்குள் ஏற்பட்டுள்ளது. தனக்கு ஏற்படும் மன அழுத்தங்களை பகிர்ந்து கொள்ள ஒரு வடிகாலை தேடி அலைந்திருக்கிறான் அந்த மாணவன். இஸ்லாமியர்கள் ஒரு நாளைக்கு ஐந்து வேளையும் பள்ளிக்குச் சென்று தங்களின் மனச் சுமைகளை எல்லாம் இறக்கி வைத்து விடுகிறார்கள். ஆனால் மற்ற மதங்களில் முற்போக்கு என்ற போர்வையில் மதத்தை தூரமாக்கி வைத்துள்ளார்கள்.

தற்போது இந்து மதத்தில் மத நம்பிக்கை என்ற போர்வையில் இந்துத்வாவாதிகள் போலியான மத நம்பிக்கைகளை விதைக்கிறார்கள். பசு பாதுகாப்பு, ராமர் ஆலயம் என்று இந்து மக்களை உண்மையான இறை பக்தியிலிருந்து தூரமாக்கி விட்டார்கள். அதன் விளைவுகளே இது போன்ற தற்கொலைகள்.

இன்று இந்தியாவில் தலித்களை விட பொருளாதாரத்தில் கீழ் மட்டத்தில் உள்ளனர் இஸ்லாமியர். அனால் அவர்களிடமிருந்து இது போன்ற தற்கொலை செய்திகளை என்றாவது பத்திரிக்கைகளில் படித்திருக்கிறீர்களா?

எனவே உண்மையான இறை பக்தியை இது போன்ற மாணவர்களுக்கு ஊட்ட அரசும் பெற்றோரும் முயல வேண்டும். இதை செய்ய தவறினால் இது போன்ற தற்கொலை சாவுகளை நாம் தினம் தினம் சந்தித்துதான் ஆக வேண்டும்.

தகவல் உதவி
இந்தியன் எக்ஸ்பிரஸ்
17-09-2016


Cops recovered two notebooks, one laptop, two cellphones from among his possessions. In one of the notebooks, on September 9, Praveen wrote about his state of mind. “Why am I unable to study well? Why am I so scared of everything? Why am I unable to mingle with anyone? When I went to the department today morning, one student came and greeted me but I could not acknowledge properly, why am I like this? I have to study well and do something otherwise there is no meaning to my life. Why am I always unhappy? Why do I have this feeling that I am a lonely person?’’ Praveen wrote.

http://indianexpress.com/article/india/india-news-india/hyderabad-university-student-commits-suicide-no-note-found-yet-3035523/

No comments: