
பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் பெட்ரோல் பாம்கள்!
உத்தர பிரதேசத்தில் உள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக் கழகத்தில் சில நாட்களாக வன்முறை நிகழ்ந்து வருகிறது. இது சம்பந்தமாக இருபதுக்கு மேற்பட்ட மாணவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். நேற்று ஆசாரியா நரேந்திர தேவ் ஹாஸ்டலில் காவல் துறை ரெய்டு நடத்தியது. அப்போது அங்கு பயங்கர சேதத்தை உருவாக்கும் எட்டு குரூட் பெட்ரோல் பாம்களை காவல் துறை கைப்பற்றியுள்ளனர். இது பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவர்கள் கல்வி கற்க கல்லூரிக்கு வருகிறார்களா? அல்லது வன்முறை பாடம் எடுக்க இங்கு வருகிறார்களா?
இதே போல் இஸ்லாமியர்களின் மதரஸாக்களில் இவ்வாறு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டிருந்தால் நமது இந்திய மீடியாக்கள் செய்திகளை எப்படி திரித்து வெளியிட்டிருக்கும் என்று சொல்லவே வேண்டாம்!
தகவல் உதவி
டைம்ஸ் ஆஃப் இந்தியா
02-09-2015
http://timesofindia.indiatimes.com/city/varanasi/Petrol-bombs-recovered-from-BHU-hostel/articleshow/53980099.cms
No comments:
Post a Comment