ராம்குமாரின் பிரேத பரிசோதனையின் போது தங்களது மருத்துவர் ஒருவர் இருக்க வேண்டும் என்று ராம்குமாரின் தந்தை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் ராம்குமாரின் பிரேத பரிசோதனை 2வது முறையாக தள்ளி வைக்கப்பட்டதற்கு பின்னர், சென்னை உயர்நீதிமன்றத்தில் ராம்குமார் தந்தை செய்திருந்த மனு மீதான விசாரணையில் இரண்டு நீதிபதிகளுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால் ராம்குமாரின் பிரேத பரிசோதனை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ராமச்சந்திரா மருத்துவமனை மருத்துவர் சம்பத், ராம்குமாரின் பிரேத பரிசோதனையின் போது இருக்க வேண்டும் என்ற ராம்குமார் தரப்பு வாதத்திற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எங்களுக்கு அரசு மருத்துவர்கள் இருப்பதில் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. அதே நேரத்தில் அரசு மருத்துவர்கள் அரசு சார்ந்துதான் செயல்படுவார்கள் என்பதால் தனியார் மருத்துவர் ஒருவரும் உடன் இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள் .
ஆனால் இதனை ஏற்க அரசு தரப்பு வழக்கறிஞர் மறுத்துவிட்டார். இந்த வழக்கல் தமிழக அரசின் வாதம் தமிழர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சுவாதி கொலையில் விசாரிப்பதற்காக அழைத்து செல்லப்பட்ட ராம்குமார் சந்தேகத்திற்குரிய வகையில் மரணம் அடைந்திருக்கிறார். பிரேத பரிசோதனை முறையாகவும் நியாயமாகவும் நடக்க வேண்டும் என்ற அவர்களது கோரிக்கையை தமிழக அரசு ஏற்க மறுப்பதை பார்த்தால் இந்த வழக்கில் தொடர்புடைய யாரையோ அரசு காப்பாற்ற முயற்சி செய்கிறது. எதையோ மூடி மறைக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளது.
ஆனால் ராம்குமாரின் மரணம் திட்டமிட்ட கொலை என்பதை வெளி கொண்டு வரும் வரை சட்ட ரீதியான அவர்களது போராட்டம் தொடர்ந்து நடைபெற வேண்டும் தமிழக அரசு யாருக்கு துணை நிற்கிறது ஐயோ தமிழா
No comments:
Post a Comment