Followers

Thursday, September 22, 2016

மாற்றாந் தாய் கோடுமை! குழந்தைக்கு நல்வாழ்வு கிடைக்க பிரார்த்திப்போம்!



இன்று காலை நேரம் 6.30 அன்மித்தது நான் குளியலறையில் குளித்துக்கொண்டிருந்தேன்.அயலில் உள்ள தோட்டக்கிணற்றடியில் பெண் ஒருவர் மிக ஆக்கிரோசமாக யாரையோ திட்டித்தீர்க்கும் சத்தமும், சிறுமியின் அழுகுரலும் கேட்டது. அயல் வீட்டில் குடியிருக்கும் பெண் தனது பிள்ளையை அடிக்கடி இவ்வறு திட்டுவதை அவதானித்திருக்கிறேன். ஆகையால் இது வழமையான ஒன்று என்று என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டு குளித்துக்கொண்டிருந்தேன். ஆனாலும் பெண்ணின் அதட்டும் பத்தமும் அதனைத்தொடர்ந்து பலமாக தாக்கும் சத்தமும் சிறுமியின் அலறல் சத்தமும் குளியலறையிலிருந்த என்னை வெளியே இழுத்து வந்தது. வெளியில் வந்த நான் சத்தம் கேட்கும் திசையை அவதாணித்தேன்.

தடி ஒன்றினால் ஆறு வயது முதிக்கத்தக்க அந்த சிறுமியை அவளது தாய் பலமாக தாக்குவதைப்பார்த்து என்ன செய்வது என ஒரு கணம் திகைத்து விட்டேன். ஓடிச் சென்று அந்தப் பெண்ணிடம் இருந்த தடியை பறித்தெடுக்க எண்ணினாலும் அந்தப் பெண் பற்றியும் அவரது கணவர் பற்றியும் ஏற்கனவே நான் அறிந்த சம்பவங்கள் என்னை தடுத்து நின்றன. இருந்தும் சிறுமி தொடர்ந்தும் தாக்கப்பட்டுக் கொண்டிருப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் ஒரு முடிவெடுத்தேன். இந்த சிறுமி தாக்கப்படும் கடைசி நாள் இன்றாகத்தான் இருக்க வேண்டும் என்று கருதிக்கொண்டு எனது ஒளிப்படக்கருவியின் ஊடாக நடப்பவை அனைத்தையும் ஒளிப்பதிவு செய்தேன். அவ்வாறு ஒளிப்பதிவு செய்யப்பட்ட இந்தக் கானொளியை தயவு செய்து எல்லோரும் பார்க்கவேண்டும் என்பதற்காகவும் அந்த ராட்சசியிடமிருந்து அந்த சிறுமியை காப்பாற்றுமாறும் எல்லோரையும் வேண்டுகிறேன்.

இந்த ஒளிப்பதிவைமேற்கொண்டதன் பின்னர் இந்தப் பெண்பற்றி அயலில் விசாரணை செய்த போது சிறுமியை தாக்கிய குறித்த பெண் சிறுமியின் தந்தையை இரண்டாம் தாரமாக திருமணம் செய்திருப்பதாகவும் சிறுமியின் தாய் இறந்து விட்டார் என்றும் சிறுமிக்கு இந்தப்பெண் சிறியதாய் என்றும் அறிய முடிந்தது.

இந்தக் கானொளியில் தயவு செய்து அவதாணியுங்கள் மிகக்கூர்மையான கத்தியால் சிறுமி பலமாகத் தாக்கப்படுகிறாள் எனவே குழந்தை நலக்காப்பகங்கள், சிறுவர் நன்நடத்தை அதிகாரிகள், சிறுவர்கள் மீது அன்பு செலுத்துவோர் தயவு செய்து இந்தப் பெண்ணிடமிருந்து சிறுமியை காப்பாற்றும் அதே நேரம் குறித்த பெண்ணை சட்டத்தின் முன்னிறுத்தி தண்டணை வழங்க ஏற்பாடுகளை செய்யுமாறும் வேண்டுகிறேன். மேலதிக தகவல்களை எதிர் பார்ப்பவர்கள் உள் பெட்டியில் தொடர்பு கொள்ளவும்.

Siva Karan

No comments: