

சிறிது நேரத்துக்கு முன் விநாயகர் ஊர்வலம் தஞ்சை ஆற்றுப்பாலத்தை கடந்தது. அங்கு ஒரு ஜும்மா பள்ளிவாசல் உள்ளது. அதுவரை வெறும் ஆட்டம் மட்டுமே போட்டு வந்த காவி துண்டும், காவி தலைப்பாகையும் கட்டி வந்த இளைஞர்கள் பள்ளிவாயிலின் முன் ஊர்வலத்தை நிறுத்தி "பாரத் மாதா கி ஜெய்" "ஹிந்துஸ்தான், ஹிந்துஸ்தான்" என்றும் மேலும் சில கோஷங்களை எழுப்பியபடி நின்றனர். பாதுகாப்புக்கு வந்த போலீசார் கெஞ்சி தம்பி வாங்க ஊர்வலத்தை நிறுத்தாதீங்க என்று கெஞ்சுகின்றனர்.. அதையெல்லாம் 'என் முதுகுக்கு சொல்லு' என்ற தொனியில் கோஷங்களை தொடர்ந்தனர்.
பின்னாடி இருந்து பாய்ந்து வந்த சிலர் பள்ளிவாசலுக்கு முன் குத்தாட்டம் போட தொடங்கினர். விபரீதம் எதுவும் நிகழ்ந்து விடுமோ என்ற அச்சம் போலீசாரின் கண்ணில் மட்டுமல்ல, ஊர்வலத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு நின்ற பொதுமக்கள் கண்ணிலும் தெரிந்தது நான் உட்பட. சட்டென்று நான்கு போலீசார் பாரிகேட்டுக்களை இழுத்து பள்ளிவாசலின் பாதையை அடைத்தது காவல் காத்தனர். ஒவ்வொரு விநாயகர் சிலை வந்த வண்டியையும் பள்ளிவாசலுக்கு முன் நிறுத்தி ஆட சிலையுடன் வந்தவர்கள் மறக்கவில்லை. ஒருவழியாக கெஞ்சி அந்த கூட்டத்தை அந்த இடத்தை விட்டு நகர செய்த பின்னரே போலீசாரின் முகத்தில் நிம்மதி தெரிந்தது.
விநாயகர் சதுர்த்தியும், ஊர்வலமும் என்ன நோக்கத்துக்காக சங் கும்பலால் முக்கியத்துவம் கொடுத்து கொண்டாடப்படுகிறது என்று படித்து தெரிந்திருந்தாலும் இன்று கண்கூடாக கண்டேன்.
என் அருகில் டூ வீலரை நிறுத்தி வேடிக்கை பார்த்தவர் சொன்னார் " இந்த வருஷம் போன வருடத்தை விட கூட்டம் கம்மியா இருக்கு" என்று..
-Akila Ramakrishnan
No comments:
Post a Comment