Followers

Saturday, May 26, 2018

காடு வெட்டி குரு - மரணம்


காடு வெட்டி குரு - மரணம்

பாமக கட்சி தலைவர்களில் ஒருவரான காடு வெட்டி குரு அப்போலோ மருத்துவ மனையில் காலமானார். அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் மற்றும் அவரது இயக்க தொண்டர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

ஆனால் இந்த இறப்பை காரணமாக வைத்து நேற்று இரவு விழுப்புரத்திலும் அதன் சுற்று வட்டாரத்திலும் 30க்கு மேற்பட்ட அரசு பேரூந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு பொது மக்களுக்கும் அரசுக்கும் சேதத்தை சிலர் உண்டு பண்ணியுள்ளனர். இயற்கையான முறையில் ஒருவர் இறந்ததற்கு அரசு சொத்துக்களை ஏன் நாசமாக்க வேண்டும்? இதனை அன்பு மணியோ ராமதாஸோ கண்டித்திருக்க வேண்டாமா?

 ஒரு எம்எல்ஏ வோ ஒரு எம்பியோ இல்லாத ஒரு சங்கத்தின் தலைவர் இறந்ததற்கு இப்படி ஒரு வன்முறையில் இறங்கினால் இவர்கள் கையில் ஆட்சி அதிகாரம் வந்தால் எத்தகைய நிலை இருக்கும்? வன்முறையால் எந்த இயக்கமும் கட்சியும் வளர்ந்ததாக சரித்திரம் இல்லை. இதனை பாமக தொண்டர்களுக்கு அவர்களின் தலைவர்கள் உணர்த்த வேண்டும்.



1 comment:

Dr.Anburaj said...


. எதை எடுத்தாலும்எட்டிக்குப் போட்டிஎன்று

விவகாரம் பேசி ஒரு பெரிய கூட்டத்தை வளா்த்து விட்டாகிவிட்டது. விளைவுகள்

இப்படித்தான் இருக்கும்.