Followers

Saturday, May 02, 2020

அன்புள்ள சகோதரர்களே....

அன்புள்ள சகோதரர்களே....
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு எங்கள் ஊரில் வசிக்கும் ஒரு முஸ்லிம் சகோதரர் இந்த ஊரில் யார் மிகவும் கஷ்டப்படுகிறார்கள் என்று அவரது நண்பரிடம் விசாரித்துள்ளார்!
அவரது நண்பர் ஓர் ஆட்டோ ஓட்டுனர். எனவே அவர்தான் தொழில்சார்ந்த ஆட்டோ ஓட்டுனர்களை பற்றி அவரிடம் ஆட்டோ ஓட்டுனர்கள் படும் கஷ்டங்களை எடுத்துரைத்துள்ளார்!
அதற்கு அந்த முஸ்லிம் சகோதரர்... 'அப்படியா ' என கேட்டுவிட்டு உங்கள் ஊரில் எத்தனை ஆட்டோக்கள் ஓடுகிறது என்று கேட்டுள்ளார்.
அதற்கு பதில் அளித்த நண்பர்... "எனக்கு இரண்டு நாள் அவகாசம் கொடுங்கள். இந்த ஊரில் எத்தனை ஆட்டோக்கள் ஓடுகிறது என்று கணக்கெடுத்து வருகிறேன்" என்று கூறிவிட்டு எங்கள் ஊரில் பிரதான 2 ஆட்டோ ஸ்டாண்டுகளில் வந்து ஆட்டோ ஓட்டுனர்கள் மொத்தம் எத்தனை பேர்கள் என்ற கணக்கை எடுத்துக் கொண்டு அந்த முஸ்லிம் சகோதரரிடம் அந்த லிஸ்டை கொடுத்துள்ளார்.
அந்த பெயர் லிஸ்ட்டை வாங்கிக் கொண்டு இன்று சுமார் ரூ3 ஆயிரம் மதிப்புள்ள மளிகை சாமான்களை ஒவ்வொரு ஆட்டோ ஓட்டுனராக தனது வீட்டுக்கு வரச்சொல்லி எங்களிடம் தந்த மளிகை சாமான் இது!
இந்துவாக இருந்தாலும்,
முஸ்லிமாக இருந்தாலும்,
கிறிஸ்தவனாக இருந்தாலும்,
இன்னும் எவனாக இருந்தாலும், இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்தியன் தான் என்ற மனநிலை ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் வரும் வரையிலும் மத வெறுப்பு அரசியலுக்கு முடிவுரை என்பதே இல்லை
மத வெறுப்புகளை பரப்பிவிட்டு
ஏசி ரூமில் இராமாயணம் பார்த்துக்கொண்டு தூங்கும் கட்சித் தலைவனுக்கு தொண்டனின் பசியை அறிய நேரம் இருக்காது,
இதுபோன்ற இக்கட்டான நேரங்களில் இஸ்லாமியர்கள் இந்துக்களுக்கு செய்யக்கூடிய உதவியும், இந்துக்கள் இஸ்லாமியருக்கு செய்யக்கூடிய உதவியும், கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் செய்யும் உதவியும் அரசியல் சார்ந்தது அல்ல, அது மனம் சார்ந்தது மனிதம் சார்ந்தது இதுபோன்ற இந்தியாதான் கடந்த 60 ஆண்டு காலமாக இருந்தது.
ஆனால் தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலையில் மத நல்லிணக்கமும் மத பாகுபாடின்றி உதவியும் கிடைப்பது கானல் நீரே.. அதையும் தாண்டி பல நல்லவர்கள், நல் உள்ளம் கொண்டவர்கள் மதம் பார்க்காமல் சாதி பார்க்காமல் கட்சி பார்க்காமல் கொள்கை பார்க்காமல் தன்னை அழிக்கும் கொள்கையுடைய கூட்டத்திற்கும் உதவி செய்வது உண்மையிலேயே வியப்படையச் செய்கிறது
பாய் கொடுத்தாலும்...
பாதிரி கொடுத்தாலும்....
கொள்கையாவது, ஐக்கோர்ட்டாவது.
பாய் வாழ்க...
பாய் குடும்பம் வாழ்க....
பாய் கோத்திரம் வாழ்க....
வாழ்க, வாழ்க, வாழ்க....
@Saravana Kumar


1 comment:

Dr.Anburaj said...

நாடு முழுவதும் சாதி மதம் பாராது தினக் கூலியாக வாழும் அனைவருக்கும் உதவிகள் அள்ளி அள்ளி வழங்கப்பட்டு வருகின்றது. இந்துக்கள் சாதி, மதம் பார்த்து தானம் செய்வதில்லை. இந்துவான....இன்னாா் ...... இன்னின்ன உதவிகளை இன்னாருக்கெல்லாம் வழங்கினாா்கள் என்று யாரும் செய்திகள் போடுவதில்லை.
முஸ்லீம்(கள்) கொடுத்து விடடால் மட்டும் ”பாய் கொடுத்து விட்டாா்” என்று செய்தி போடுவது ஏன் என்று எனக்கு விளங்கவில்லை.