Followers

Sunday, March 02, 2014

காஃபாவில் மொழி மாற்றும் வசதி அறிமுகம்!



இனி மெக்கா காஃபாவில் தொழ வருபவர்கள் வெள்ளிக் கிழமை தொழுகைக்கு முன் நடத்தப்படும் உரையை ஆங்கிலத்திலும் உருது மொழியிலும் ஒரே நேரத்தில் கேட்கலாம். ஏர் ஃபோன் (INTRA -FM SERVICE) மூலமாக மொழி பெயர்க்கப்படும் இந்த சேவையை மெக்கா பள்ளியின் இமாம் சுதைஸ் தொடங்கி வைத்தார். வெள்ளிக் கிழமை தொழுகைக்கு முன் நடத்தப்படும் உரையானது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக முகமது நபி காலத்திலிருந்து இருந்து வருகிறது. அரசாங்கமே பள்ளியில் தான் பெரும்பாலும் நடத்தப்பட்டது. தொழுகைக்கு வரும் மக்களுக்கு சொற்பொழிவில் அந்த இமாம் என்ன சொல்கிறார் என்பது புரிய வெண்டும். அந்த சொற்பொழிவு தாய் மொழியில் இருந்தால்தான் அது சாத்தியப்படும். முதன் முதலாக உருதுவிலும் ஆங்கிலத்திலும் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. மொழி மாற்றும் வசதி கொண்ட பூத்கள் நிறுவப்பட உள்ளன. இனி உலகின் பல மொழிகளிலும் மொழி மாற்றும் வசதிகள் செய்யப்படலாம் . தமிழும் மலையாளமும் கூடிய விரைவிலேயே வரலாம். இது வரவேற்கத்தக்க மாற்றம்.

உலகில் தேவ மொழி என்று எந்த மொழியையும் இஸ்லாம் காட்டவில்லை. உலகில் உள்ள மூல மொழிகள் எல்லாம் இறைவன் மனிதனுக்கு கற்றுக் கொடுத்தவையே. உலகில் உள்ள மொழிகள் எல்லாமே இறைவனால் மனிதனுக்கு அவனது அறிவை பெருக்கிக் கொள்ள வழங்கப்பட்டது.

ஆனால் நமது தமிழகத்தில் இன்றும் பல பள்ளிவாசல்களில் அரபி மொழியை தேவ மொழியாக நினைத்து வெள்ளிக்கிழமை பிரசங்கத்தை அரபியில் ஒரு சடங்காக ராகத்தோடு ஓதுவதைப் பார்க்கிறோம். புரியாத மொழி என்பதால் பலர் பிரசங்கம் முடியும் தருவாயில்தான் பள்ளிக்குள் நுழைகின்றனர். முன்பே பள்ளிக்கு வந்து விடுபவர்கள் கூட பிரசங்கம் புரியாததால் தூங்க ஆரம்பித்து விடுகின்றனர். வெள்ளிக் கிழமை பிரசங்கமானது வரக் கூடிய மக்களை தட்டி எழுப்பும் வகையில் கம்பீரமாக இருக்க வேண்டும். தாலாட்டி தூங்க வைக்கக் கூடாது. கஃபாவிலேயே உலக மொழிகள் வர ஆரம்பித்து விட்டது. எனவே நமது தமிழக பள்ளிவாசல்களிலும் பிரசங்கங்களை தாய் மொழியான தமிழிலேயே தர நிர்வாகிகள் முயற்சிக்கலாமே!

எங்கள் ஊரில் பெரிய பள்ளி, கீழப் பள்ளி என்று இரண்டு பள்ளிகள் உண்டு. பெரிய பள்ளியில் ஜூம்ஆ பிரசங்கம் அரபியில் நடைபெறும். கீழப் பள்ளியில் ஜூம்ஆ பிரசங்கம் தமிழில் நடைபெறும். 'அருகருகே இருக்கும் இரண்டு பள்ளியில் ஏன் இந்த வித்தியாசம்? இனிமேல் தமிழில் பிரசங்கம் பண்ணக் கூடாது.தமிழில் பிரசங்கம் பண்ணுவது நபி வழிக்கு மாற்றமானது' என்று ஒரு கூட்டம் 70 ஆண்டுகளுக்கு முன்பு பிரச்னை பண்ணியது. வழக்கும் தொடர்ந்தனர். அப்போது வெள்ளையரின் ஆட்சி. பெரும் பெரும் மார்க்க அறிஞர்கள் வந்து விவாதமும் நடைபெற்றது. இரு தரப்பும் தங்கள் வாதங்களில் பிடிவாதமாக இருக்கவே வெள்ளைக்கார நீதிபதி 'யாரும் யாரையும் வற்புறுத்தக் கூடாது. ஒருமித்த கருத்து ஏற்படும் வரை முன்பு எந்த வழக்கம் கடை பிடிக்கப்பட்டதோ அதுவே தொடர வேண்டும்' என்று தீர்ப்பளித்து சென்று விட்டார். இந்த வரலாற்றை எனது தாத்தா என்னிடம் சொல்லக் கேட்டுள்ளேன். அந்த காலத்திலிருந்தே இஸ்லாமிய சட்டங்களை சரிவர விளங்காத ஒரு கூட்டம் தொடர்ச்சியாக இருந்து கொண்டிருக்கிறது. தமிழில் குர்ஆனை மொழி பெயர்க்கக் கூடாது என்று ஒரு கூட்டம் பெரும் எதிர்ப்பை கொடுத்துக் கொண்டிருந்த கூத்தும் சில காலம் தமிழகத்தில் இருந்தது. முதலில் குர்ஆனை தமிழில் மொழி பெயர்த்த ஏ கே ஏ அப்துல் சமதின் தந்தையை சில மார்க்க அறிஞர்கள் 'இஸ்லாத்தை விட்டு வெளியேறி விட்டார்' என்று கூட ஃபத்வா கொடுத்தனர். :-) இது போன்றவர்களுக்கு அன்பாக உண்மையை புரிய வைக்க வேண்டியது நமது கடமை.

'எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்'
-குர்ஆன் 14:4


இந்த வசனத்தின் மூலம் தமிழ் மொழிக்கு இறைத்தூதரும் இறை வேதமும் வந்துள்ளதை அறியலாம். முகமது நபி அரபியரக இருந்ததால் குர்ஆன் அரபி மொழியில் இறங்கியது. முகமது நபி தமிழராக இருந்திருந்தால் குர்ஆன் தமிழிலேயே இறங்கியிருக்கும்.

தகவல் உதவி
சவுதி கெஜட்
03-03-2014

2 comments:

Anonymous said...

ரியாத் மண்டல மர்கஸில் இஸ்லாத்தை ஏற்ற குருமூர்த்தி:

செய்தி வெளியிடப்பட்ட நாள் Monday, March 3, 2014, 13:32.

ரியாத் மண்டல மர்கஸில் கடந்த 28-02-2014 அன்று நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள செட்டிபுளம் கிராமத்தை சேர்ந்த குருமூர்த்தி என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை உமர் ஃபாருக் என மாற்றிக் கொண்டார். இவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் நூல்கள் வழங்கப்பட்டது அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.

http://www.tntj.net/229989.html

Dr.Anburaj said...

ஒரு அறிவாளி முட்டாள்கள் கூட்டத்தில் சேர்ந்து விட்டான். இந்துக்களின் எண்ணிக்கை ஒன்று குறைந்து விட்டது.இந்துக்களை கொல்ல வேண்டும் காபீர்கள் என்று திட்டுபவன் எண்ணிக்கை ஒன்று கூடிவிட்டது.