Followers

Sunday, April 13, 2014

தவ்ஹீத் ஜமாத்துக்கும் பிஜேக்கும் சில ஆலோசனைகள்!

இன்று அரசியல் களத்தில் மிக முக்கியமான இடத்தில் நிற்கிறோம். தற்போது தவ்ஹீத் ஜமாத் அதிமுக ஆதரவை விலக்கிக் கொண்ட செய்தியை படித்து ஆனந்தம் அடைந்தேன். மிச சரியான நேரத்தில் தெளிவாக எடுக்கப்பட்ட முடிவாகவே நினைக்கிறேன். இன்று கரூர் கூட்டத்தில் அதன் எதிரொலியாக பிஜேபியை தாக்கி ஜெயலலிதா சில வார்த்தைகளை விட்டுள்ளார். இவை எல்லாம் உதட்டளவிலான வார்த்தைகள் என்பது எல்லோருக்கும் தெரியும். இந்த அளவு ஜெயலலிதாவை இறங்க வைத்த அந்த இறைவனுக்கே புகழ் அனைத்தும்.

பார்பனர் சோ ராமசாமி போன்றவர்கள் பிஜேபி நிற்காத மற்ற தொகுதிகளில் அதிமுகவுக்கு வாக்களித்து மோடியை பிரதமராக்க முயற்சி செய்யுங்கள் என்று வெளிப்படையாக கூறும் அளவுக்கு அவர்களுக்கு தைரியம் வந்துள்ளது. விஜயகாந்தையும், வைகோவையும், ராமதாஸையும் கூட்டணி தர்மத்தை உடைத்து பூணூல் தர்மத்தை நிலைநாட்ட முயற்சிக்கின்றனர். பாவம் விஜயகாந்தும், ராமதாஸூம், வைகோவும். :-( விட்டில் பூச்சிகள். பிஜேபியில் யஸ்வந்த் சின்ஹா, ஜஸ்வந்த் சிங் போன்ற மிதவாத தலைவர்கள் எல்லாம் ஓரங்கட்டப்பட்டு இன்று மோடி முரளி மனோகர் ஜோஸி போன்ற தீவிரவாத தலைவர்கள் முன்னிலைப்படுத்தப் பட்டு இந்த தேர்தலை சந்திக்கிறது பிஜேபி. இன்று மோடி ரஜினியை சந்தித்து ஆதரவு கேட்ட செய்தியையும் பார்த்தேன். மோடி அலை என்ற ஒன்று இல்லை என்பதை கூத்தாடிகளை வீடு தேடி சந்திப்பதிலிருந்து தெரிய வருகிறது. எதிரிகள் மிக சாமர்த்தியமாக தங்கள் காய்களை நகர்த்தி வருகின்றனர். இதற்கு முன்னால் வாஜ்பாயின் ஆட்சியில் உளவுத்துறை ராணுவம் போன்ற முக்கிய துறைகளில் இந்துத்வாவரினர் திட்டமிட்டு புகுத்தப்பட்டனர். அதன் பலனை இஸ்லாமிய இளைஞர்கள் பொய் வழக்குகளால் சொல்லொணா துயரங்களை இன்று வரை அனுபவித்து வருகின்றனர். இந்தியன் முஜாஹிதீன் கதைகளை நாம் அறியாதவர்கள் அல்ல.

இந்த முறை மோடி பதவியேற்றால் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்தியாவும் மதக் கலவரங்களை நாடெங்கும் சந்திக்கும் அபாயம் உள்ளது. எனவே எந்த வகையிலாவது இந்த மோடி என்ற கொடுங்கோலனை வர விடாமல் தடுப்பதுதான் நமது நோக்கமாக இருக்க வேண்டும். அந்த வகையில் நம்முன் உள்ள தேர்வுகளாக காங்கிரஸூம், ஆம் ஆத்மி கட்சியும், திமுகவும் உள்ளன. இவற்றில் ஆம் ஆத்மிக்கு தமிழகத்தில் சரியான அடித்தளம் இல்லை. காங்கிரஸூக்கு பலமான கூட்டணியும் இல்லை. அதிலும் இலங்கை பிரச்னையில் தமிழர்கள் பலரின் கோபத்தில் இருக்கிறது காங்கிரஸ். எனவே இந்த இரண்டு கட்சிகளுக்கும் போடும் ஓட்டுக்கள் சிதறவே வாய்ப்பிருக்கிறது. ஐந்து முனை போட்டி நிலவுவதால் இஸ்லாமியர்களின் ஓட்டு எந்த பக்கம் சாய்கிறதோ அவர்களே வெற்றிக் கனியை பறிப்பவர்களாக தெரிகின்றனர்.

கடைசியாக நமக்குள்ள தேர்வாக திமுகவே தெரிகிறது. ஒரு வார காலமாக மோடியை மிகக் காட்டமாக கலைஞரும், ஸ்டாலினும் விமரிசித்து வருவதால் பிஜேபியின் பக்கம் செல்ல மாட்டார்கள் என்றே நினைக்கிறோம். மோடியும், அதன் ஆதரவு கட்சியான அதிமுகவும் வராமல் தடுக்க நாம் திமுகவை ஆதரிப்பதுதான் சிறப்பானதாக எனக்குத் தோன்றுகிறது. இந்த முடிவை பெரும்பாலான தவ்ஹீத் சகோதரர்களும் விரும்புவார்கள் என்றே நினைக்கிறேன். தமுமுகவை 'இனி வருங்காலங்களில் இஸ்லாமிய ஊர்களில் தவ்ஹீத் பிரச்னைகளில் தலையிட மாட்டோம்' என்ற உறுதி மொழியை வாங்கிக் கொண்டு அவர்களையும் ஆதரிக்கலாம். மத்தியில் இட ஒதுக்கீட்டுக்காக குரல் கொடுக்கவும், மோடியை ஆதரிக்க மாட்டோம் என்ற உறுதி மொழியையும் திமுகவிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். இதற்கு சம்மதிப்பார்கள் என்றே நினைக்கிறேன்.

தவ்ஹீத் ஜமாத்தும் பிஜே அண்ணனும் எந்த முடிவை எடுத்தாலும் அது வருங்கால ஒட்டு மொத்த இஸ்லாமியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அமைய வேண்டும் என்று விரும்புகிறோம்.

நமது இந்திய நாடு சாதி மத பூசல்களை தவிர்த்து அனைத்து மக்களும் அண்ணன் தம்பிகளாக மாமன் மச்சான்களாக என்றும் போல வாழக் கூடிய ஆட்சியை வழங்கக் கூடிய ஆட்சியாளர்களை தந்தருள்வானாக என்று எல்லோருக்கும் பொதுவான அந்த ஏக இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

'இறைவா! ஆட்சியின் அதிபதியே! நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகிறாய். நீ நாடியோரிடமிருந்து ஆட்சியைப் பறித்துக் கொள்கிறாய். நாடியோரைக் கண்ணியப்படுத்துகிறாய். நாடியோரை இழிவு படுத்துகிறாய். நன்மைகள் உன் கைவசமே உள்ளன. நீ அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்' என்று கூறுவீராக.

குர்ஆன் 3:26

2 comments:

mohamed ansari said...

மிக நல்ல கருத்து அல்லாஹ் நன்மையை தருவான்

சிராஜ் said...

// கடைசியாக நமக்குள்ள தேர்வாக திமுகவே தெரிகிறது. ஒரு வார காலமாக மோடியை மிகக் காட்டமாக கலைஞரும், ஸ்டாலினும் விமரிசித்து வருவதால் பிஜேபியின் பக்கம் செல்ல மாட்டார்கள் என்றே நினைக்கிறோம். மோடியும், அதன் ஆதரவு கட்சியான அதிமுகவும் வராமல் தடுக்க நாம் திமுகவை ஆதரிப்பதுதான் சிறப்பானதாக எனக்குத் தோன்றுகிறது. இந்த முடிவை பெரும்பாலான தவ்ஹீத் சகோதரர்களும் விரும்புவார்கள் என்றே நினைக்கிறேன். தமுமுகவை 'இனி வருங்காலங்களில் இஸ்லாமிய ஊர்களில் தவ்ஹீத் பிரச்னைகளில் தலையிட மாட்டோம்' என்ற உறுதி மொழியை வாங்கிக் கொண்டு அவர்களையும் ஆதரிக்கலாம்.//

மாஷா அல்லாஹ்..

மிகத் தெளிவான ஆலோசனை...

மமக போட்டியிடும் தொகுதிகள் தவிர்த்து வேறு தொகுதிகளில் திமுக வை ஆதரிப்பது கூடு நல்ல முடிவு தான்....

எக்ஸலன்ட் போஸ்ட்....