Followers

Saturday, August 30, 2014

லூஸி - அமெரிக்க பெண்மணியின் உணர்வுபூர்வமான மனமாற்றம்!லூஸி என்ற இந்த அமெரிக்க பெண்மணி இஸ்லாத்தை ஏற்கிறார். உறுதி மொழி எடுக்கும் போது தன்னையறியாமல் அழுகிறார். இறை வேதத்துக்கும் அதன் உண்மைத் தன்மைக்கும் இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அவ்வாறு அவர்கள் முதன் முதலாக உறுதி மொழி எடுக்கும் போது உடலில் இனம் புரியாத ஒரு உலுக்கல் எடுக்கிறதாக சொல்கின்றனர். இதனை பலரும் சொல்லக் கேட்டுள்ளேன். இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்து விட்டதனால் அந்த உணர்வை என்னால் உணர முடியாது. ஆனால் அந்த பெண்ணின் உணர்வை என்னால் உணர முடிகிறது.

உறுதி மொழியை ஒவ்வொரு படியாக சொல்லிக் கொடுக்கும் சகோதரர் யூசுபை நான் ரியாத்தில் வைத்து சந்தித்துள்ளேன். ஹாஸ்யமாக பேசக் கூடியவர். கை குலுக்கி 15 நிமிடங்கள் இவரிடம் பேசிக் கொண்டும் இருந்தோம். எதையுமே ஹாஸ்யமாக எடுத்துக் கொள்ளக் கூடியவர். எந்த நேரமும் சிரித்த முகத்துடனேயே இருப்பார். ஒரு அழைப்பாளனுக்கு அவசியம் இருக்க வேண்டிய பண்பு இது. இவர் அமெரிக்க தேவாலயத்தில் ஃபாதராக பணிபுரிந்தவர். குர்ஆனை விளங்கி சில ஆண்டுகளுக்கு முன்புதான் இஸ்லாத்தை ஏற்றார். இன்று இவர் மூலம் ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் இஸ்லாத்தை நோக்கி வந்தவண்ணம் உள்ளனர்.

எல்லா புகழும் இறைவனுக்கே!

3 comments:

Anonymous said...

சுற்றி வளைத்து அந்த அன்னாத்த செய்த மூளை சலவையில், பாவம் லூசி அக்கா. லூசா போய்ட்டாங்க.

இப்படி கண்டதையும் பேசி குழப்பி மூளை சலவை செய்து மதம் மாற்றி விடுவது. பிறகு 'பாத்தீங்களா, அவங்களா விரும்பி வந்துட்டாங்க' என்று டம டம என்று விளம்பரம் செய்வது. தரங்கெட்ட பொருளை கூட நல்ல மார்க்கெட்டிங் யுத்தி இருந்தால் வித்து விடலாம். அது தான் இங்கயும் நடக்குது. மற்றபடி உங்க மார்கத்தையும் உங்க நடவடிக்கைகளையும் பார்த்து ஒருத்தரும் வர்றது இல்லை

Anonymous said...

அறிவை அடகு வைத்து சுய மூளையை கழற்றி வைக்கும் போது உலுக்கல் எடுக்கதானே செய்யும். மறை கழன்ற கூட்டத்தின் எண்ணிக்கையில் ஒன்று கூடி இருக்கிறது.

tamilan said...

இது அர்த்தமுள்ள இந்து மதத்தின் அவலட்சணம்!

சூரியன் கூடப் புணருவான் பிள்ளையையும் பெற்றுத் தள்ளுவான்.சூரியன், சந்திரனின் வீட்டில் நின்று, சந்திரன் சூரியனை எதிர் கொள்ளும் பவுர்ணமி தினமே ஆவணி அவிட்ட தினமாம்.

சூரியன் - சந்திரன் வீட்டில் நின்றானாமே!

இந்தச் சந்திரன் பூமியிலிருந்து 27 லட்சத்து 38 ஆயிரத்து 800 மைல் தூரத்தில் இருக்கிறது. (இவர்களின் புராணக் கதைப்படி பார்த்தால் இந்தச் சந்திரன் தனது குரு பத்தி னியின் கற்பை அழித்தான் –
முனிவரின் சாபத்தினால் கிரகணத்துக்கு ஆளானான்).

சூரியனை எடுத்துக் கொண்டால் பூமியிலிருந்து 9 கோடியே 28 லட்சத்து 30ஆயிரம் மைலுக்கு அப்பால் உள்ளது. 9 கோடி மைலுக்கு மேல் உள்ள சூரியன் 27 லட்சம் தூரத்தில் உள்ள சந்திரன் வீட்டில் நின்றானாமே - இப்படி எழுதப்பட்டுள்ள கட்டுரைக்குத் தினமலர் கொடுத்துள்ள தலைப்பு என்ன தெரியுமா! அறிவு திறனும் ஆவணி அவிட்டமும் நன்றாக ஒரு முறை வயிறு குலுங்கக் குலுங்க சிரியுங்கள் - உடலுக்காவது நல்லது!

இந்தச் சூரியனுக்கு அவாளின் புராணம் சொல்லும் கதை என்ன தெரியுமா?

சூரியனின் ரத சாரதியின் பெயர் அருணன். இவன் இரு கால்களும் அற்ற முடவன். தாயால் அவயங் காக்கப் பட்ட முட்டையிலிருந்து பிறந்தவன். இவன் இந்திர லோக வினோதங்களைக் காண்பதற்கு என்று பெண் வேடம் பூண்டு அங்குச் சென்றான். இதைக் கண்ட இந்திரன் பெண் வேடத்திலிருந்த அருணனை மோகித்துப் புணர்ந்தான் - இதனால் வாலி என்பவன் பிறந்தான்.
இந்நிகழ்ச்சியால் அருணன் வேலைக்குத் தாமதித்து வர, சூரியன் காரணம் கேட்டு, நடந்ததையறிந்து, மீண்டும் அருணனைப் பெண் வேடத்தில் வரச் செய்ய, அவன் அப்படியே வர, அவனைச் சூரியன் புணர்ந்தான் - அதனால் சுக்ரீவன் பிறந்தானாம் - இது அர்த்தமுள்ள இந்து மதத்தின் அவலட்சணம்!

இந்த அர்த்தமுள்ள இந்து மதத்தில்தான் 5500 (செல்சியஸ்) டிகிரியுடைய சூரியன் கூடப் புணருவான்! பிள்ளையையும் பெற்றுத் தள்ளுவான். ஹி..... ஹி....


--------------------- மின்சாரம் அவர்கள் 12-08-2014 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை