Followers

Saturday, November 14, 2015

யாதும் ஊரே யாவரும் கேளிர்!யாதும் ஊரே யாவரும் கேளிர்!

//Anonymous said...

"இந்தியனாகவும் இருப்பதற்கு மிகவும் மகிழ்ந்து போனேன். என்னை இந்தியாவில் அதிலும் தமிழ்நாட்டில் பிறக்க வைத்தமைக்கும் இறைவனுக்கு நன்றி சொன்னேன்." பரவாயில்லையே//

இந்த அனானி சகோதரருக்கு ஒரு முஸ்லிம் தமிழகத்தை நேசிப்பதும், தமிழ் மொழியை நேசிப்பதும், பாரத நாட்டை நேசிப்பதும் ஆச்சரியமாக தெரிகிறது. அவரைச் சொல்லிக் குற்றமில்லை. அந்த அளவு ஊடகங்கள் நமது மக்களை மூளை சலவை செய்து வைத்துள்ளன.


என்னைப் பொருத்த வரை இனம் மொழி கடந்து அனைத்து மக்களையும் நேசிக்கக் கூடியவன். அவன் ஆரியனோ, திராவிடனோ, அராபியனோ, ஐரோப்பியனோ, ஆப்ரிக்கனோ யாராக இருந்தாலும் என்னைப் பொருத்தவரை அவன் ஆதமுடைய மகன். என்னுடைய சகோதரன். அதே போல் இந்த உலகம் அதிலும் இந்த பூமிப் பந்தை உண்டாக்கியது இறைவன் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ளவன். இதனால் உலக நாடுகள் அனைத்தையுமே நான் நேசிக்கிறேன். அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்ரிக்கா, ஆசியா என்று எந்த கண்டத்து நாடுகளையும் நான் விரோதமாக பார்க்கவில்லை. ஏனெனில் அத்தனை கண்டங்களையும் படைத்து பரிபாலிப்பது என்னைப் படைத்த இறைவனே!

அதே போல் உலக மொழிகள் அனைத்தையுமே நான் ஒரே தரத்திலேயே வைத்து பார்க்கிறேன். ஏனெனில் இந்த உலக மொழிகள் அனைத்தையும் மனிதர்கள் ஒருவரையொருவர் புரிந்து கொள்வதற்காக இறைவனே மனிதனுக்கு அருளினான் என்று குர்ஆன் கூறுவதால் உலக மொழிகள் அனைத்துமே எனது சகோதர மொழிகளே! தேவ மொழிகள் என்று தனித்து பிரிக்கச் சொல்லி இஸ்லாமும் எங்கும் சொல்லவில்லை. எனவே எனக்கு மொழி வெறியும் கிடையாது.

அதே நேரம் நான் பிறந்த மண்ணான இந்திய தேசத்தையும், எனது தாய் மொழியான தமிழையும் மற்ற நாட்டையும் மொழிகளையும் விட சற்றே அதிகமாக நேசிக்கிறேன். காரணம் பிறந்த மண்ணை நேசிப்பதும், தாய் மொழியை நேசிப்பதும் நமது ரத்தத்திலேயே காலகாலமாக ஊறி விட்டதனால் இந்த நேசிப்பு வருகிறது. நான பிறந்து வளர்ந்து ஆளாகி எனக்கென்று ஒரு அடையாளத்தை தருவதனால் நான் பிறந்த மண்ணை நேசிப்பது இயல்பாகவே வந்து விடக் கூடிய ஒன்று.

அதே நேரம் இந்த நேசம், பாசம் மற்ற நாடுகளையும், மொழிகளையும், இனங்களையும் வெறுக்கும் அளவுக்கு சென்று விடக் கூடாது என்பதில் நான் மிகக் கவனமாக இருக்கிறேன். இந்த இடத்தில்தான் பலரும் தவறு செய்து விடுகின்றோம். ஒரு முஸ்லிமாக இருக்க வேண்டுமானால் முஸ்லிம் அல்லாதவர்களை ஒதுக்கி வாழ வேண்டும்: அல்லது ஒரு இந்துவாக வாழ வேண்டுமானால் இந்து மதத்தின் மேல் உள்ள நம்பிக்கை இல்லாதவர்களோடு அந்நியனாக பழக வேண்டும் என்று ஒரு மாயை தவறாக உருவாக்கப்பட்டுள்ளது. இது மற்ற நாடுகளுக்கு எப்படியோ.....பல மத இனங்கள் இணைந்து வாழும் நமது பாரத தேசத்துக்கு இந்த கொள்கையானது மிக ஆபத்தானது.

இஸ்லாம் இந்தியாவுக்கு சொந்தமான மதமல்ல...இந்து மதமே இந்தியாவுக்கு சொந்தமானது என்ற கருத்து பரவலாக விதைக்கப்படுகிறது. சொல்லப் போனால் நமது இந்திய நாட்டுக்கென்று குறிப்பிட்டு சொல்லக் கூடிய எந்த மதமோ மார்க்கமோ இருந்திருக்க வில்லை. வரலாறு பதியப்பட்ட காலம் தொட்டு கடந்த 2000, 3000 வருடங்களாக நமது நாட்டின் வரலாறுகளை தோண்டிப் பார்த்தோமானால் எங்குமே அமைதி நிலவியதாக சரித்திரங்களை பார்க்க முடியவில்லை. யாருக்கெல்லாம் படை பலமும், ஆள் பலமும் இருந்ததோ அவர்கள் அனைவரும் அந்தந்த காலங்களில் நமது நாட்டை ஆண்டிருக்கின்றனர். எனவே ஒரு குழுவோ, ஒரு இனமோ, ஒரு மதமோ அல்லது ஒரு மார்க்கமோ நமது பாரத நாட்டுக்கு உரிமை கொண்டாட முடியாது.

நமது நாட்டில் பல மார்க்கங்களாக இருந்த பல சாதிகளை ஒன்றாக்கி இன்று இந்து மதம் என்ற பொது மதத்தை காட்டுகின்றனர் சில இந்துத்வாவாதிகள். 'நாங்கள் பெரும்பான்மையாக இருப்பதால் இதை இந்து ராஷ்டிரமாக அறிவிப்போம்' என்று அறிக்கைகளும் விடுகின்றனர். இந்த இந்து மதத்துக்கு பூரண உரிமை கொண்டாடுபவர்கள்..நம் தேசத்திலே இரண்டு அல்லது மூன்று சதவீதமே இருக்கும் பார்ப்பணர்கள். இவர்களில் தீவிர எண்ணம் கொண்ட அத்வானி, மோடி, மோகன் பகவத், போன்ற பலர் இஸ்லாம் இந்த மண்ணுக்கு அந்நியமானது. எனவே இந்த மண்ணின் சொந்த தயாரிப்பான இந்து மதத்தையே நாம் பின்பற்ற வேண்டும் என்று தினமும் எங்காவது ஒரு இடத்தில் சொல்லி வருகின்றனர். இந்து மதம் இந்தியாவுக்கு சொந்தமானது என்பது எந்த அளவு ஒரு இட்டுக்கட்டப்பட்ட வாதம் என்பதும், அத்வானி போன்ற ஆரியர்களின் பூர்வீகம் எந்த நாடு அவர்கள் எங்கிருந்து வந்தனர் என்பதன் வரலாற்று ஆய்வுகளை கீழே தருகிறேன். படித்து தெளிவு பெறுவோம்.

-----------------------------------------------------------------


மாஸ்கோ: ரஷ்யாவில் பனி படர்ந்த தெற்கு சைபீரிய பகுதியில் 4,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஆரிய நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கஜாகிஸ்தான் எல்லையை ஒட்டிய இந்தப் பகுதியில் இந்த நகரம் ஆரிய இனத்தினரால் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. ஐரோப்பாவில் மேற்கத்திய நாகரீகப் பரவலின் ஆரம்ப காலத்தில் இந்த நகரம் உருவாகியிருக்கலாம் என்று தொல்லியல் அராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். எகிப்தில் பிரமிடுகள் கட்டப்பட்ட காலத்துக்கு சற்று பிந்தைய காலகட்டத்தில் இந்த நகரம் உருவாகியிருக்கலாம். இந்தப் பகுதியில் பல ஆண்டுகளாக தொல்லியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் பெத்தனி ஹூக்ஸ் மற்றும் அவரது குழுவினர் தான் இந்த நகரை கண்டுபிடித்துள்ளனர்.

பிபிசி தொலைக்காட்சியில் 'Tracking The Aryans' என்ற தொடரை வழங்கி வரும் பெத்தனி இது குறித்துக் கூறுகையில், இந்த நாகரீகம் கிரேக்க நாகரீகத்துக்கு போட்டியானதாக இருந்திருக்கலாம், இந்த நகரில் மட்டும் சுமார் 2,000 பேர் வரை வசித்திருக்கலாம் என்றார். இந்தப் பகுதியில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆரியர்கள் குடியேற்றம் இருந்தது 20 ஆண்டுகளுக்கு முன்பு தான் தெரியவந்தது. சோவியத் யூனியன் உடைந்த பிறகு இந்தப் பகுதியில் தொல்லியல் ஆய்வுகளுக்கு அனுமதி கிடைத்தவுடன் பெத்தனியும் அவரது குழுவினரும் இங்கு ஆராய்ச்சிகளில் இறங்கினர். அப்போது கிடைத்த சில தடயங்களின்படி இங்கு ஆரிய நகரம் இருந்திருக்க வேண்டும் என்று தெரியவந்தது. இதையடுத்து கடந்த பல ஆண்டுகளுக்கு முன் இந்த பனிப் பகுதியில் தொல்லியல் ஆராய்ச்சியை அவரது குழு மேற்கொண்டு வருகிறது. இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த நகரில் கிடைத்த பொருட்களில் மேல் நோக்கு வளைவான அமைப்பு கூடிய 20 வீடுகள், மேக்-அப் சாதனங்கள், பாண்டங்கள், ஸ்வஸ்திக் புதைக்கப்பட்ட குதிரைகள், ரதத்தின் பாகங்கள், சின்னங்கள் (Swastika symbol) ஆகியவை அடங்கும்.

ஆரிய நாகரீகத்தின் அடையாளமான சுவஸ்திக்கை தான் 1930களில் ஹிட்லர் தனது நாஜி அமைப்பின் சின்னமாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. உலகிலேயே சிறந்த இனம் இது தான் என்று கூறிக் கொண்டு பிற இனத்தினரை அழிக்கும் வேலையை, யூதர்களை அழிப்பதில் இருந்து தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல பல ஐரோப்பிய மொழிகளின் மூலமாக ஆரிய மொழி் இருந்திருக்கலாம் என்பதும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நகர கண்டுபிடிப்பு குறித்து பெத்தனி கூறுகையில், பண்டைய பல இந்திய வேதங்களிலும் குதிரைகளைப் பலி கொடுப்பது குறித்தும், இறந்த தலைவனின் உடலுடன் அவனது குதிரையும் கொன்று புதைக்கப்பட்ட விவரங்களும் உள்ளன. இங்கு கிடைத்துள்ள ஆதாரங்களுக்கும் அந்த வேதங்களுக்கும் அதிக ஒற்றுமை உள்ளது என்றார். இவர் லண்டனின் கிங்க்ஸ் கல்லூரியில் வரலாற்றுத்துறை 'விசிட்டிங்' பேராசிரியையாகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://timesofindia.indiatimes.com/world/europe/4000-year-old-Aryan-city-discovered-in-Russia/articleshow/6683681.cms?intenttarget=no

http://www.thehindu.com/news/international/4000yearold-aryan-city-discovered-in-russia/article812961.ece

http://www.dailymail.co.uk/sciencetech/article-1317362/Europe-begins-Cities-built-swastika-painting-Aryans-remote-Russian-plains.html

http://tamil.oneindia.in/art-culture/essays/2010/4-000-year-old-aryan-city-discovere-russia.html

------------------------------------------

இந்த பதிவை படித்தவுடன் அதே அனானி எனக்கு எழுதிய பின்னூட்டம்.

Anonymous said...

குறிப்பிட்ட அந்த பின்னூட்டம் எழுதியதற்கு உண்மையிலேயே வருந்துகிறேன். மிகவும் தரம் தாழ்ந்து போய்விட்டேன். நண்பர் அவர்கள் தயவுசெய்து என்னை மன்னிக்கவேண்டுகிறேன். அந்த பின்னூட்டத்தையும் நீக்கிவிட வேண்டுகிறேன்.....

5 comments:

Dr.Anburaj said...

நடமாடும் கோவில் நம்மவா்கள், யாவருக்கும் ஈமீன் அவன் இவன் என்றன்மீன், யாதும் ஊரே யாவரும் கேளீா் போன்ற கருத்தக்கள் வளம் சோ்த்து வருகின்றன. ஆதவன் முன் விட்டில் புச்சிப்போல் இந்துத்துவ கருத்தின் பிரகாசம் முன்பு விட்டில் புச்சியான சுவனப்பாியன் மதிப்பிழந்து வருகின்றாா்.

Dr.Anburaj said...


ஹட்லா் எந்த சின்னத்தை வைத்திருந்தாலும் இந்தியா்களுக்கு அதில் பொறுப்பும் பழியும் இல்லை.இலலவேயில்லை.

Dr.Anburaj said...


சீமானின் கட்டுரையை - பட்டாணி முஸ்லீம்கள் தமிழா்கள் அல்ல என்ற கட்டுரையை - தங்களின் ஆாிய எதிா்ப்பு கருத்துக்களோடு இணைத்து பாருங்கள். தாங்கள் ஒரு நயவஞ்சகன் டிஎன்பது தொியவரும்.

Ashak S said...

ஹிட்லரை ஆதரிக்கும் இந்துத்வாக்கு உண்டு

C.Sugumar said...


ஹிடலா் செத்து அடக்கம் செய்து ஆண்டுகள் பல கழ்ிந்து விட்டது ஆசீக்கு. இந்து மதத்திற்கும் இந்திய பண்பாட்டிற்கும் ஹடலருக்கும் என்ன சம்பந்தம் ? ஏன் உளறுகின்றாய்.
கட்டுரைக்கு பொருத்தமக ஒரு குறிப்பு கூட உனக்கு எழுதத் தொியவில்லையே ஏன் ? 5ம்வகுப்புக்கு அரையாண்டு தோ்வு அட்டவணை வந்து விட்டதா ? நன்றாகப் படித்து பாஸாகி 6ம் வகுப்பில் சேரப்பாா். 8 ம்வகுப்பு வரை கட்டாயத்தோ்ச்சி அளிக்கும் முறை ரதது செய்யபபட வாயப்பு உளள்து. என் அறிவிற்கு 5ல் வோ்விட்டு இருக்க வேண்டியது இருக்கும் போலிருக்கின்றது.எனவே முதலில் தோ்வைக் கவனி. 5 ம்வகுப்பில் தோ்ச்சிப் பெற்று விட எனது நல் வாழ்ததுக்கள். சிவபெருமாள் திருவருள் கூடட்டும். எனது பிராத்த்தனைகள்.