Followers

Monday, November 09, 2015

ஹானஸ்ட் மேன் என்ற இந்துத்வாவாதியின் புலம்பல்!

//Dr அன்புராஜ் அவர்களே! வணக்கம்.....

இந்து மதத்தின் மீதான உங்களின் அக்கறை எனக்கு மிக நன்றாக விளங்குகிறது. நான் கூட பல முறை இந்து மதத்தில் ஒரு புரட்சி ஏற்படவேண்டும் என்று எழுதி இருக்கிறேன். ஆனால் அதை மறுத்து பேசுவதற்கு என்றே உயர்திரு கிருஷ்ணகுமார் போன்ற அன்பர்கள் படையெடுத்து வந்துவிடுகிறார்கள். என்ன செய்ய? கற்பூரத்தை எரிப்பதால் carbon mono oxide வெளியாகிறது. அது மிகவும் சுற்றுபுரத்திற்கு கெடுதி விளைவிக்க கூடியது

//////.those who pray together stay together.////

அது இந்து மதத்தில் நடக்கவில்லையே! ஒரு சாராரை கோவில் உள்ளே விட மறுக்கிறார்கள். அவர்களையும் இவர்களை படித்த ஆண்டவந்தானே படைத்தான். ஆண்டவன் படைத்த குரங்கை, பசுவை நாம் மதிக்கிறோம். ஆனால் அவன் படைத்த 6 அறிவு உள்ள மனிதனை மிதிக்கிறோம். இங்குள்ள மொத்த தலித்துக்களும் ஒரு தீர்க்கமான முடிவெடுத்து அனைவரும் முஸ்லிம்களாக மாறினால் அவனை நாம் என்ன செய்யமுடியும்? அப்போது முஸ்லிம்களின் ஜனத்தொகை அதிகரித்தால் இந்துக்கள் நிலை என்னாகும்? நம்முடைய வீர சூரமெல்லாம் ஒரு ஹரிஜனிடம்தான். ஆனால் ஒரு முஸ்லிமிடம் நம் ஜம்பம் ஓங்காது. முஸ்லிம் ஆதிக்கம் அதிகரித்து நாம் மைனாரிட்டி ஆகும் பட்சத்தில் நம் நிலை என்னாகும் என்று கொஞ்சம் யோசித்து பாருங்கள்.

நம் மதத்தில் உள்ள சில மூடநம்பிக்கைகளை (குரங்கு பிடியாக ) பிடித்து கொண்டிராமல் அவற்றை விட்டொழித்து மதத்தை தூஇமைபடுத்தினால் நாத்திக பசங்க நம்மை விமர்சனம் செய்வது குறையும்.//

--------------------------------------------

இந்த புலம்பலுக்கு அந்த தளத்தில் நான் அளித்த பதில்.....

//ஆனால் ஒரு முஸ்லிமிடம் நம் ஜம்பம் ஓங்காது. முஸ்லிம் ஆதிக்கம் அதிகரித்து நாம் மைனாரிட்டி ஆகும் பட்சத்தில் நம் நிலை என்னாகும் என்று கொஞ்சம் யோசித்து பாருங்கள்.//

என்ன ஆகும்.... ?

ஹானஸ்ட் மேன், க்ருஷ்ணகுமார் போன்ற மேல் சாதியினர் மற்ற சாதிகளோடு சமமாக பாவிக்கப்படுவார். சூத்திரன் என்று மனிதனை இழிவு படுத்தும் சொல் அகலும். 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற பண்டைய தமிழரின் வணக்க முறை மீட்டெடுக்கப்படும். மொத்தத்தில் இந்தியா உலக அளவில் தலை நிமிர்ந்து நிற்கும்.

மோடி இன்னும் 10 வருடம் பிரதமராக இருந்தால் கூடிய விரைவிலேயே அந்த நாளும் வரும் இன்ஷா அல்லாஹ்... (இறைவன் நாடினால்)


1 comment:

முஹம்மத் அலி ஜின்னா said...

பலத்த சத்தத்துடன் நள்ளிரவில் பூஜை… குவைத்தில் 11 இந்தியர்கள் கைது:

குவைத்: குவைத்தில் நள்ளிரவில் பலத்த சத்தத்துடன் பூஜை செய்ததாக 11 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 15 நாட்களுக்கு முன்னர் குவைத்தில் நவசைதன்யா நல சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்த சத்யநாராயணா பூஜை நடைபெற்றது. இதில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

குவைத்தின் மையப் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் இந்த பூஜை நடத்தப்பட்டது. நள்ளிரவை தாண்டியும் நடந்த பூஜையில், பக்தர்கள் பலத்த சத்தத்துடன் பஜனை பாடல்களை பாடியதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த அக்கம்பக்கத்தார், இது குறித்து போலீசுக்கு தகவல் அளித்தனர். அதனைத் தொடர்ந்து விரைந்து வந்த போலீசார், பூஜையில் ஈடுபட்ட 11 இந்தியர்களைக் கைது செய்தனர்.

குவைத் சட்டப்படி எந்த வழக்கில் கைது செய்தாலும் அவர்களை 10 நாளில் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும். ஆனால் 15 நாட்களுக்கு மேலாகியும் அவர்கள் இன்னும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்படவில்லை. இதுகுறித்து உடுப்பி- சிக்மகளூரு தொகுதி எம்.பி. ஷோபா சரன் தலாஜி குவைத்தில் உள்ள இந்திய தூதர் ஜெயினுடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மேலும் அவர்களை விடுதலை செய்யும்படி மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜை தொடர்பு கொண்டு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
—————————–

இதுதான் துலுக்க புத்தி. நீ எவ்வளவுதான் பாப்பாத்தியை விட்டு ஷேக்கை உருவினாலும், கடைசியாக உனக்கு அவன் அல்லாஹு அக்பரென ஆப்படித்துவிடுவான். அபுதாபி ஷேக்கும் ஒரு நாள் இதை செய்வான் பார்.