
கேரள கோழிக்கோட்டில் ஜர்னலிஸ்டாக பணி புரிந்து வரும் ஏபி ரெஜினா தனது முக நூல் பக்கத்தில் பகிர்ந்த செய்திகளுக்காக பலராலும் மிரட்டப்படுகிறார்.
அவர் பதிந்த செய்தியின் சுருக்கம்:
'நான் சிறுமியாக மதரஸாக்களில் படித்து வரும் போது மாணவர்களும் மாணவிகளும் ஆசிரியர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டனர். இதனை வெளியில் சொல்லாமல் இருக்க மிரட்டவும் பட்டனர்.
இதனை நான் முகநூலில் பகிர்ந்ததற்காக பலராலும் மிரட்டப்படுகிறேன். நான் உண்மையைத்தான் சொன்னேன். இதனை பகிர்ந்ததன் மூலம் தவறிழைக்கும் ஆசிரியர்கள் திருந்த வாய்ப்புள்ளது. இதைப் பகிர்ந்ததற்காக என்னையும் எனது தனிப்பட்ட வாழ்க்கையையும் சிலர் அவதூறுகளால் விமரிசிக்கின்றனர். அதைப் பற்றி நான் கவலை கொள்ளவில்லை. இறைவன் இட்ட கட்டளைப்படி வாழும் ஒரு முஸ்லிம் பெண்மணி நான். என் உள் மனதில் என்ன உள்ளது என்பதை எனது இறைவன் அறிவான்' என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் ரெஜினா!
தகவல் உதவி
என்டிடிவி
26-11-2015
இந்த பெண்மணி கூறியதில் உண்மை இருந்தால் சம்பந்தப்பட்ட மதரஸாக்களின் ஆசிரியர்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். அந்த ஆசிரியர்களை மதரஸாக்களிலிருந்து நீக்கவும் வேண்டும். மதரஸாக்களின் கண்ணியம் காக்கப்பட வேண்டும்.
அதை விடுத்து குற்றம் சுமத்திய பெண்ணை மிரட்டுவதாலோ அவரது முகநூலை முடக்குவதாலோ தவறுக்கு நாமும் துணை போகிறோம் என்பதை ஏனோ இதனை எதிர்ப்பவர்கள் உணரவில்லை.
இறைவன் நம் அனைவரையும் நேர் வழியில் செலுத்துவானாக!
2 comments:
இசுலாமை விமா்சனம் செய்தால் நபியை விமா்சனம் செய்தால் கொல்லலாம் என்ற கருத்து அரேபிய புத்தகங்களில் கிடைக்கின்றது. அப்படி ஒரு சுழ்நலையில் இது வெல்லாம் சிறி விசயம். சகோதாியின் தலை இன்னும் உருளாமல் இருகின்றதே அது குறித்து மகிழ்ச்சி அடைய வேண்டும் சகோதரியே.
இஸ்லாத்தை விமர்சனம் செய்ய வாருங்கள் ஆனால் யாரோ விருந்தாளிக்கு பிறந்தவன் எழுதியதை கொண்டுவந்து காட்டி இதுதான் இஸ்லாம் என்று அவதூறு பரப்பாதீர்
Post a Comment