
பாலிவுட் நடிகர் அமீர்கானின் இந்து மனைவி கிரன் ராவ் இந்தியாவில் நிலவும் இந்துத்வா மத வெறியை நினைத்து நாட்டை துறக்க முடிவு செய்துள்ளார். இது பற்றி விருது வழங்கும் விழாவில் அமீர்கான் பேசியதாவது:
'தனிப்பட்ட மனிதனாகவும் இந்திய குடிமகனாகவும் நான் தினமும் பத்திரிக்கையில் படிக்கும் நிகழ்வுகள் என்னை நிலைகுலையச் செய்கின்றன. தற்போது நாட்டில் நிலவும் மத சகிப்பின்மையைப் பற்றி நாம் அனைவரும் அறிவோம். கடந்த 8 அல்லது ஒன்பது மாதமாகத்தான் இந்த பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. விருதகளை அரசுக்கே திருப்பி கொடுத்தவர்களை நான் பாராட்டுகிறேன்.
பல முறை என் மனைவி என்னிடம் 'நாம் இந்தியாவை விட்டு போய் விடுவோமா?' என்று கேட்கிறார். தனது மகனின் எதிர்காலத்தை நினைத்து கவலைப்படுகிறார். ஒவ்வொரு நாளும் பத்திரிக்கைகளை படிக்கும் கிரன் கலவரப்படுகிறார் நாட்டின் நிலையை நினைத்து. நமது அரசுகளும் நமது நாட்டு மக்களும் முக்கியமான முடிவெடுக்கும் கட்டாயத்தில் இருக்கிறோம்.'
என்று பொரிந்து தள்ளியுள்ளார்.
மோடிக்களும் அமீத்ஷாக்களும் இனியாவது விழித்துக் கொண்டு நாட்டு நலனில் அக்கறை செலுத்த வேண்டும்.
இல்லை என்றால் உலக வரலாற்றில் மிக கேவலப்பட்ட பிரதமர் என்ற பெருமையை மோடி சுமக்க வேண்டி வரும்.
தகவல் உதவி
என்டிடிவி
22-11-2015
No comments:
Post a Comment