
"முதல் படம் :- குடி , கூத்து , கும்மாளம்!
இரண்டாவது படம் :- ஏகத்துவமே எனது உயிர் மூச்சு!
அல்ஹம்துலில்லாஹ்!" - முஹாஜிரின் புது மடம்
--------------------------------------
முகநூலில் எனது நண்பர் 'முஹாஜிரின் புது மடம்' தனது பழைய புகைப்படத்தையும் ஏகத்துவ கொள்கைக்கு வந்தவுடன் தான் எவ்வாறு மாறியுள்ளேன் என்பதையும் தனது முகநூல் கணக்கில் பதிவேற்றியுள்ளார். அது உங்களின் பார்வைக்கும் வைக்கிறேன்.
ஒரு இளைஞனை ஏகத்துவ கொள்கை எப்படி மாற்றி விடுகிறது?
நானும் ஆரம்ப காலங்களில் பெரும் சினிமா பைத்தியமாக இருந்துள்ளேன். 'சலங்கை ஒலி' படத்தை படிக்கும் காலங்களில் மூன்று நாள் தொடர்ந்து தியேட்டரில் போய் பார்த்துள்ளேன். இளையராஜா, எம்.எஸ்.விஸ்வநாதன் பாடல்களில் எனது பெரும்பாலான நேரங்களை வீணில் செலவழித்துள்ளேன். என்னோடு படித்தவர்களுக்கு நன்றாக தெரியும். டெஸ்க்கின் மேலேயே மிருதங்கம் மற்றும் தபேலா மிக அருமையாக வாசித்து பாடலும் பாடுவேன்.
ஏகத்துவ கொள்கையை ஏற்றவுடன் சினிமா மயக்கமும், இசை மயக்கமும் என்னை விட்டு சென்று விட்டது. சினிமா படம் முழுமையான ஒன்றை பார்த்து பல வருடங்களாகிறது. எனது நிலை மட்டுமல்ல... தமிழகத்தின் பல லட்சக்கணக்கான இளைஞர்களின் நிலையும் இதுதான்.
நேரான வழியை காட்டித் தந்த அந்த ஏக இறைவனுக்கே புகழ் அனைத்தும்.
எல்லா புகழும் இறைவனுக்கே!
No comments:
Post a Comment