
அஸ்ஸலாமு அலைக்கும்....
பாய் என் பெயர் ஆட்டோ கபீர்.....
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியை சார்ந்தவன்.....
நீங்கள் டீக்கடை குரூப்பில் முஹாஜிரின் பாயை பற்றி ஒரு பதிவு போட்டீர்கள். அவரை பற்றிய கூடுதல் தகவல் தருகிறேன்.
முஹாஜிரின் சகோவை பற்றி சொல்ல வேண்டுமென்றால்..
தன்னுடைய முகநூல் மூலமாக எங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த ஒரு கிறித்தவ சகோதரருக்கு தாவா செய்து... இது பற்றிய தகவல் என்னிடம் தந்து இறுதியில் எங்கள் Tntj தக்கலை கிளையில் அந்த கிறித்தவ சகோதரர் சில மாதங்களுக்கு முன் இஸ்லாத்தை ஏற்று கொண்டார்.
முஹாஜிரின் பாயால் முகநூல் தாவா மிக பெரிய பலன் கிடைத்தது.
அல்லாஹ் இந்த சகோதருக்கு அருள் புரிய வேண்டும்....
இந்த போட்டோவில் நான் (வெள்ளை பனியன்) எங்கள் மாவட்ட செயலாளர் நிஸார் மற்றும் இஸ்லாத்திற்கு மாறிய சகோதரர் ஸ்டெபி.
இதை நீங்கள் பதிவு செய்தால் மற்ற முகநூல் சகோதரர்களுக்கு தாவாவின் அவசியம் புரியும்.
-----------------------------------------
வஅலைக்கும் சலாம் சகோதரர் ஆட்டோ கபீர்!
நீங்கள் கேட்டுக் கொண்டதன் படி உங்கள் கடிதத்தை வெளியிட்டுள்ளேன். நம் மூலமாக ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் அவர் செய்யும் நன்மையான காரியங்கள் அனைத்தும் நமக்கு ராயல்டியாக நன்மைகள் நமது கணக்கில் சேர்ந்து கொண்டேயிருக்கும்.
“அல்லாஹ்வின்பால் மக்களை அழைத்து, தானும் நற்செயல்செய்து; "நிச்சயமாக நான் முஸ்லிம்களில் உள்ளவன்" என்று கூறுபவனை விட சொல்லால் மிக அழகானவன் யார்?”
குர்ஆன் - 41:33
1 comment:
“அல்லாஹ்வின்பால் மக்களை அழைத்து, தானும் நற்செயல்செய்து; "நிச்சயமாக நான் முஸ்லிம்களில் உள்ளவன்" என்று கூறுபவனை விட சொல்லால் மிக அழகானவன் யார்?”
குர்ஆன் - 41:33
Post a Comment