Followers

Sunday, September 25, 2016

"உயிர் காக்கும் இரத்த தானம்"







"உயிர் காக்கும் இரத்த தானம்"

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,

தூத்துக்குடி மாவட்டம்,

கொங்கராயகுறிச்சி கிளையின் சார்பாக...

இன்று 25/09/2016 மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற்றது. மாவட்ட தலைவரின் தலைமையில் கிளை நிர்வாகிகளின் முன்னிலையில் முகாம் துவங்கியது.

இதில் நாற்பதற்கும் மேற்பட்ட சகோதரர்கள் குருதி கொடையளித்தார்கள் ( மாற்றுமத நண்பர்கள் உள்பட)

முகாமிற்கு திருவைகுண்டம் காவல்துறை ஆய்வாளர் திரு.G.வெங்கடேஷன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக வந்திருந்தார்கள். முகாம் இனிதே நடைபெற்று முடிந்தது

எல்லா புகழும் இறைவனுக்கே!

இந்து முன்னணி கலவரம் செய்து மனித உயிர்களை எடுக்கிறது...

தவ்ஹீத் ஜமாத் ரத்த தானம் செய்து மனித உயிர்களை காப்பாற்றுகிறது.

இரண்டுமே மத இயக்கங்கள்தான். இரண்டுக்கும் கொள்கைகளும், குறிக்கோள்களும் வேறாகும்.

பெரும்பான்மை இந்து மக்கள் இதனை உணர்வார்களாக!

இந்து முன்னணி நபர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு



இந்து முன்னணி நபர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு...

உங்க ஆளுங்க நேற்று புரட்டாசி மாசம்ன்னு கூட பார்க்காம "அஜிம் பாய் கடைல இருந்த "பிரியாணி"யை குண்டா ஓட திருடிட்டு போய் தின்னு இருக்கானுவ...

களவாண்டவர்கள் எங்கு இருந்தாலும் குண்டாவை திருப்பி தர சொல்லும் படி கேட்டு கொள்கிறோம்......


-பாசிச எதிர்ப்பாளர்களின் குரல்

Saturday, September 24, 2016

பார்பனன் நலமாக வாழ வன்முறையில் ஈடுபடுகிறாயே!

தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களே! பார்பனன் நலமாக வாழ வன்முறையில் ஈடுபடுகிறாயே! உன்னோடு ஒரு பார்பனனாவது வந்தானா? உன்னோடு சிறை சென்றானா? தனது வாழ்வை தொலைத்தானா? உன்னைச் சுற்றி நடக்கும் இந்த மாய வலையை உணராமல் சூத்திர பட்டத்தை சுமந்து கொண்டு இன்னும் எத்தனை காலம் அடிமைபட்டு கிடக்கப் போகிறாய்! பெரியாரும் அம்பேத்காரும் சொன்ன சுய மரியாதையை ஏன் இழந்தாய்? நீ என்னதான் கம்பு சுற்றி இஸ்லாமியரின் பொருளாதாரத்தை அழிக்க நினைத்தாலும் ஒரு வருடத்தில் பழைய நிலைக்கு வந்து விடுவோம். எனவெ இனியாவது பார்பனனின் சூழ்ச்சியை புரிந்து கொண்டு வாழ்வில் முன்னேறப் பார்!

பிச்சை புகினும் கற்கை நன்றே!

பிச்சை புகினும் கற்கை நன்றே!

கற்கை நன்றே! கற்கை நன்றே!

பிச்சை புகினும் கற்கை நன்றே!

காவிகளின் அழிவு ஆரம்பம் - ஜோதி மணி

தங்கையை சீரழித்த கயவனின் தலையை கொய்த அண்ணன்!

தங்கையை சீரழித்த கயவனின் தலையை கொய்த அண்ணன்!

கர்நாடக மாநிலம் தும்கூரில் பள்ளிக்குச் சென்ற தனது தனது தங்கையை கற்பழித்தவனை தலை வேறு முண்டம் வேறாக ஆக்கிய பாசக்கார அண்ணன். சரியான தீர்ப்பு!



கோவை கலவரம் அன்றும் இன்றும்!







கோவை கலவரம் அன்றும் இன்றும்!

பல வருடங்கள் முன்பு நடந்த கோவை கலவரத்தையும் நேற்று நடந்த கோவை கலவரத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தேன். முன்பு இஸ்லாமியர்களிடத்தில் போதிய விழிப்புணர்வு இல்லை. வழி காட்ட சிறந்த தலைவர்கள் இல்லை. தெருக்களில் இளைஞர்கள் விளையாட்டாக செய்யும் சில செயல்கள் பெரும் கலவரமாக முன்பு மாறியது.

ஆனால் இன்று....

தமிழகம் தழுவி தவ்ஹீத் ஜமாத், தமுமுக, பாபுலர் ஃப்ரண்ட் என்று அமைப்புகள் தமிழக இஸ்லாமியரிடத்தில் வேரூன்றிய பிறகு இந்துத்வாவின் கலவரத்தை எப்படி சமாளிப்பது என்ற வழி முறைகள் நமக்கு கிடைத்தது. அமைப்பு ரீதியாக அதிகார வர்க்கத்தை கண்டு கலவரக்காரர்களை கைது பண்ண வைத்துள்ளோம். அதன் நீட்சியாக கொவையில் சென்ற வெள்ளிக் கிழமை பொறுமை காத்தோம். காவிகளின், அமீத்ஷாக்களின், மோடிக்களின் திட்டம் பலிக்க விடாமல் ஆக்கினோம்.

கலவரத்தில் வந்த அனைவருமே திருட வேண்டும் என்ற நோக்கிலேயே வந்துள்ளனர். பிரியாணி அண்டாவைக் கூட இவர்கள் விடவில்லை. அந்த அளவு காய்ந்து போய் இருக்கிறார்கள். வந்தவர்கள் அனைவருமே கோழைகள். கூட்டத்தில்தான் இந்த நாய்களின் வீரமெல்லாம். விடிந்தால் சோத்துக்கு லாட்டரி. இதுதான் இவர்களின் நிலைமை. எங்கோ இருந்து சில லட்சங்களை வாங்கிக் கொண்டு இவர்களை அர்ஜூன் சம்பத் போன்றவர்கள் ஆட்டி வைக்கிறார்கள். உண்மை விளங்காமல் பல தலித், பிற்படுத்தப்பட்ட இளைஞர்கள் தங்களை அறியாமலேயே இந்த படு குழியில் வீழ்கிறார்கள்.

தவ்ஹீத் ஜமாத் போன்ற அமைப்புகள் இஸ்லாமிய இளைஞர்களை தொழுகை, நோன்பு, மறுமை வாழ்வு போன்றவற்றை ஞாபகப்படுத்தி அந்த இளைஞர்களை பொறுமைசாலிகளாக மாற்றியுள்ளது. இதனால்தான் இத்தனை இழப்புகள் வந்தும் பொறுமை காத்தனர்.


அதே நேரம் ராம கோபாலன், அர்ஜூன் சம்பத், ஹெச் ராஜா போன்ற தேச விரோதிகள் உருவாக்கியுள்ள இளைஞர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை சென்ற வெள்ளிக் கிழமை பார்த்தோம். மொபைல் கடை, பிரியாணி கடை என்று கடைகளை உடைத்து திருடிச் செல்வதை கேமரா பதிவின் மூலம் பார்த்தோம். கட்ட பஞ்சாயத்து, சின்ன வீடு, திருட்டு, கொலை, கந்து வட்டி என்று இந்த இளைஞர்களை இந்துத்வா தலைவர்கள் கெடுத்து வைத்துள்ளார்கள். இவர்களை பெற்ற தாய் தந்தைக்கும், பிறந்த தாய் நாட்டுக்கும் மிகப் பெரும் பாரமாக மாறப் போகிறவர்கள். இன்று இந்துத்வா ஆட்சி நடப்பதால் போலீஸ் வழக்குகளிலிருந்து தப்பி விடலாம். ஆனால் வரும் காலமும் இப்படியே சென்று விடாது. திருடி பழக்கப்பட்ட இந்த இளைஞர்கள் இனி படிப்பிலோ கவுரமான வேலையிலோ தங்களின் கவனத்தை கொண்டு செல்ல மாட்டார்கள். இவர்களின் வாழ்க்கை இனி குடி, கூத்தியா என்றுதான் செல்லும். கலவரத்தில் ஈடுபட்ட இந்துத்வா இளைஞர்களை எண்ணி கோபம் வரவில்லை. பரிதாபமே மேலோங்குகிறது.

கோவை கலவரம் பற்றி சமூக ஆர்வலர் ஸ்வரா மூர்த்தி!

டேஷ் பக்தர்களா அல்லது பீஃப் பிரியாணி பக்தர்களா?

பிரியாணிக்கு நாக்கு செத்தவனுகபோல!

வழக்கமா சாவு வீட்டுக்கு போகும் யாரும் அசைவம் சாப்பிட மாட்டாங்க ( இப்ப புரட்டாசி மாதம்வேற). ஆனால் சசிகுமார் சாவு ஊர்வலத்திற்கு போன தேச பக்தர்கள் இந்த கடையை உடைத்துதான் பீஃப் பிரியாணியை அண்டாவோட திருடிட்டு போயிருக்காங்க.

பிரியாணிக்கு நாக்கு செத்தவனுகபோல!

-Nambikai Raj

இந்து முன்னணியை தடை செய்ய இந்துக்கள் கோரிக்கை!



கோவை வன்முறையை கண்டித்து போராட்டம் : காணொளி.....!!

நடத்தாதே நடத்தாதே, அப்பாவி மக்கள் மீது தாக்குதலை நடத்தாதே !!

தடை செய் தடை செய் இந்து முன்னணியை தடை செய் !!

அடக்கி வை அடக்கி வை, காவி கும்பலை அடக்கி வை !!
அடக்க உன்னால் முடியாவிட்டால் அடக்கி காட்டுவோம் கருப்பு சட்டை !!

வன்முறையை தூண்டிய இந்து முன்னணி தலைவரை குண்டர் சட்டத்தில் கைது செய் !!

ராம கோபாலனுக்கும் அர்ஜூன் சம்பந்துக்கும் சமர்ப்பணம்!

கோவை கலவரம் சம்பந்தமாக திருநாவுக்கரசர் விளக்கம்!



கோவை கலவரம் சம்பந்தமாக திருநாவுக்கரசர் விளக்கம்!

கோவை கலவரம் தொடர்பாக நான் கூறிய ஒரு கருத்தை சில இஸ்லாமிய சகோதரர்கள் தவறாக புரிந்து கொண்டு...
எனக்கு கண்டனம் தெரிவித்து சமூக வலைதளங்களில் கருத்து பகிர்வது வேதனை அளிக்கிறது..!

தீவிரவாதத்தை அடக்க வேண்டும் என நான் ஒரு கருத்துச் சொன்னால் அது இஸ்லாமியர்களை குறித்து கூறியதாக நினைப்பவர்களை பற்றி நான் என்ன சொல்வது..?

நான் கூறியது காவித் தீவிரவாதிகளை குறித்து என்றல்லவா அவர்கள் நினைத்திருக்க வேண்டும்...?

அதை விடுத்து நாங்கள்தான் தீவிரவாதி... திருநாவுக்கரசர் எங்களைத்தான் தீவிரவாதி என்று கூறிவிட்டார் என முகநூலில் பதிவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் அது..?

பாஜக கட்சியில் இருந்து நான் விலகியது கூட இந்த இஸ்லாமிய மக்களின் அன்புக்காகத் தானே..??

அப்படிப் பட்ட என்னை இஸ்லாமியர்களுக்கு எதிராக சித்தரிப்பது...

சில காவிகள் செய்த தவரான பிரச்சாரத்தில் அவர்கள் வீழ்ந்து விட்டார்கள் என்றுதானே அர்த்தம்..!???

ஏதாவது ஒரு இந்துத்துவா வாதி எனக்கு ஆதரவாக ஏதாவது முகநூலில் பதிவிட்டிருந்தால்... அந்த பதிவில் சென்று...
அவர் உன்னைத்தானே தீவிரவாதி என குறிப்பிட்டார்..! என்று எந்த இஸ்லாமிய சகோதரனாவது தைரியமாக கருத்து பதிந்து இருந்தால் பாராட்டி இருப்பேன்...!!!

அதை விட்டு விட்டு எங்களைத்தான் அவர் சொன்னார்... ஏனென்றால் நாங்கள்தான் தீவிரவாதி என தங்களை தாங்களே கேளி செய்யும் எவரும் ஒரு உண்மையான முஸ்லீமாகவே இருக்க முடியாது..!

இது தொடர்பாக இஸ்லாமியர்கள் யாராவது விளக்கம் பெற விரும்பினால்... இந்த அபுபக்கர்GPM உடன் இணைந்து எப்போது வேண்டுமானாலும் என் வீட்டுக்கு வந்து விளக்கம் கேளுங்கள்..!

அதை விட்டு எதிரிகளின் சூழ்ச்சியான பிரச்சாரங்களுக்கு துணைபோய் விடாதீர்கள்..!

உங்களுக்கு ஒன்று தெரியுமா..??

எனக்கு ஜாதி மத வேறுபாடே கிடையாது..!

எனது மருமகள் ஒரு கிருஷ்டீன் ஆவார்.

அதுபோல எனது வீட்டில் சம்பந்தம் செய்து கொள்ள விரும்பினால் இந்து முஸ்லீம் கிருஷ்தவர் யாராக இருந்தாலும் வாருங்கள் பொருத்தமாக இருந்தால் சம்பந்தம் செய்து கொள்வோம்..

அதை விடுத்து எனக்கு மதச் சாயமோ ஜாதிச் சாயமோ பூச நினைக்காதீர்கள்..!

-Abubakkar Gpm

அப்பவும் இப்படித்தான் ஒட்டினானுங்க

இன்னும் சில நாட்களில் இதே போன்ற செய்தி வரும்!



இன்னும் சில நாட்களில் இதே போன்ற செய்தி வரும்!
---------------------------------------------------------
கட்ட பஞ்சாயத்து, சின்ன வீடு, கந்து வட்டி என்று சமூக விரோத செயல்களை செய்பவன் எல்லாம் பிஜேபியிலும், இந்து முன்னணியிலும் ஐக்கியமாகி விடுகிறான். இவர்கள் செய்யும் சட்ட விரோத செயல்களுக்கு இந்து மதத்தை துணைக்கழைத்துக் கொள்கிறான். இதனை இந்து மக்கள் உணரும் போது அவர்களே விரட்டி அடிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.

இந்து முன்னணி அல்ல இது திருட்டு முன்னணி!



இந்து முன்னணி அல்ல இது திருட்டு முன்னணி!

போலோ சாம்சங்க் மாதா கீ ஜே!

போலோ நோக்கியா மாதா கீ ஜே!

போலோ லெனோவா மாதா கீ ஜே!

அட திருட்டு நாய்களா! இன்னொருவனின் உழைப்பில் உருவான கடையில் என்ன உரிமையிலடா திருடுகிறீர்கள்? நீ எல்லாம் ஒரு தேச பக்தனா? மற்றவரின் வயிற்றெரிச்சலில் உனது குடும்பம் உருப்படுமா? உனது சந்ததிதான் விளங்குமா?

கோவையில் கலவர நாய்களால் தாக்கப்பட்ட போலீஸ்!

இது தமிழகம்... இனியாவது திருந்துங்கள் இந்து முன்னணி திருடர்களே!

பிரியாணிக்காக கலவரம் செய்த பிச்சைக்காரர்கள்!

சங்பரிவார பிரியாணி திருடர்களுக்கு செருப்படி....



சங்பரிவார பிரியாணி திருடர்களுக்கு செருப்படி கொடுத்த சகோதரர் சித்தன் குமார்.

நான் ஹிந்து, நான் இந்தியன், எங்கள் பெயரை சொல்லி வன்முறை புரிவதை ஒரு போதும் ஏற்க்க முடியாது.

உங்கள் கொட்டத்தையும் வெறியாட்டத்தையும் வட நாட்டோடு நிறுத்திக்கொள்ளுங்கள் இங்கே ஒரு போதும் அனுமதிக்க முடியாது.

உங்களுக்கு எதிராக தான் நாங்கள் நிற்ப்போம்.

-சித்தன் குமார்.

இது தான் ஒட்டுமொத்த ஹிந்து சகோதரர்களின் மனநிலை.

சங்பரிவார காவிகளின் அராஜகத்திற்கு எந்த ஹிந்துவும் துணை நிற்க்க மாட்டான் என இவரை போலவே பெரும்பாலான ஹிந்து சகோதரர்கள் இதன் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்கள்.

மொபைல் கடையில் திருடும் டேஷ் பக்தர்கள்!



மொபைல் கடையில் திருடும் டேஷ் பக்தர்கள்!

நேற்றைய கோவை கலவரத்தில் யார் கொலை செய்தார்களோ அவர்களை பிடித்து தண்டிக்காமல் இஸ்லாமியர்களை வம்புக்கிழுத்ததை பார்த்தோம். இவர்களின் நோக்கம் கொலையாளிகளை பிடிப்பது அல்ல. அந்த சாக்கை வைத்து கொள்ளையடிப்பது.

இந்த திருட்டு நாய்கள் அனைவரும் தேச பக்தர்களாம். 'பாரத் மாதா கீ ஜே' என்று கோஷம் போட்டுக் கொண்டு வரும் போதே இந்த நாய்கள் திருட்டு நாய்கள் என்று தெரிந்து விட்டது. எந்த ஒரு குற்ற உணர்வும் இல்லாமல் கூட்டத்தில் கோஷம் போட்டு வந்த அனைவரும் திருடுவதை பார்க்கிறோம். அதில் ஒருவன் கூட இந்த திருட்டை தடுக்கவில்லை.

இந்து முன்னணி என்ற பெயரை வைத்துக் கொண்டு இவ்வாறு திருட்டு தொழிலை செய்வது அந்த மதத்துக்கே கேவலம் இல்லையா? இந்து மக்களே பொங்கி எழுந்து இந்த நாய்களை காவல் துறை வசம் ஒப்படைக்க வேண்டாமா?

ஒரு பெரும் பான்மை சமூகத்தையே திருட்டு தொழிலுக்கு பழக்குகிறார்கள். ருசி கண்ட இந்த இளைஞர்கள் இனி தொழிலுக்கோ உழைக்க வேண்டும் என்ற எண்ணத்துக்கோ வர மாட்டார்கள். இந்த பெருமைகளெலலாம் ராம கோபாலனையும், அர்ஜூன் சம்பத்தையும் இவர்களுக்கு ஆதரவு அளிக்கும் இந்து மக்களையுமே சாரும்.

இந்து முன்னணி, மற்றும் இந்து மக்கள் கட்சியில் உள்ள இந்த திருட்டு நாய்களால் இஸ்லாமியருக்கோ இஸ்லாத்துக்கோ எந்த பங்கமும் வந்து விடப் போவதில்லை என்பதை சொல்லி வைக்கிறோம்.

இவர்களின் அராஜகங்களையும் சமூக விரோத செயல்களையும் பார்க்கும் நல்ல உள்ளம் கொண்ட இந்து மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை நோக்கி வருவார்கள். இது வருங்காலத்தில் நடந்தே தீரும்.

Thursday, September 22, 2016

சவுதி அரேபியாவுக்கு இன்று நேஷனல் டே!



சவுதி அரேபியா என்ற நாட்டை மன்னர் அப்துல் அஜீஸ் நிர்மாணித்த இந்த நாளை நேஷனல் டே யாக சவுதி அரசு கொண்டாடுகிறது. சவுதி நமக்கு அன்னிய மண்ணாக இருந்தாலும் பல ஆசிய நாட்டவருக்கு வாழ்வளித்த பூமி என்பதால் இவர்களின் கொண்டாட்டத்தில் நாமும் பங்கு பெறுவோம்!

வல்லரசுகளின் கொடூர பிடியிலிருந்து தப்பி உலக மக்களுக்கு மேலும் பல நல்லவைகளை செய்ய சவுதி அரசுக்கு இறைவன் வல்லமையை வழங்குவானாக!

மாற்றாந் தாய் கோடுமை! குழந்தைக்கு நல்வாழ்வு கிடைக்க பிரார்த்திப்போம்!



இன்று காலை நேரம் 6.30 அன்மித்தது நான் குளியலறையில் குளித்துக்கொண்டிருந்தேன்.அயலில் உள்ள தோட்டக்கிணற்றடியில் பெண் ஒருவர் மிக ஆக்கிரோசமாக யாரையோ திட்டித்தீர்க்கும் சத்தமும், சிறுமியின் அழுகுரலும் கேட்டது. அயல் வீட்டில் குடியிருக்கும் பெண் தனது பிள்ளையை அடிக்கடி இவ்வறு திட்டுவதை அவதானித்திருக்கிறேன். ஆகையால் இது வழமையான ஒன்று என்று என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டு குளித்துக்கொண்டிருந்தேன். ஆனாலும் பெண்ணின் அதட்டும் பத்தமும் அதனைத்தொடர்ந்து பலமாக தாக்கும் சத்தமும் சிறுமியின் அலறல் சத்தமும் குளியலறையிலிருந்த என்னை வெளியே இழுத்து வந்தது. வெளியில் வந்த நான் சத்தம் கேட்கும் திசையை அவதாணித்தேன்.

தடி ஒன்றினால் ஆறு வயது முதிக்கத்தக்க அந்த சிறுமியை அவளது தாய் பலமாக தாக்குவதைப்பார்த்து என்ன செய்வது என ஒரு கணம் திகைத்து விட்டேன். ஓடிச் சென்று அந்தப் பெண்ணிடம் இருந்த தடியை பறித்தெடுக்க எண்ணினாலும் அந்தப் பெண் பற்றியும் அவரது கணவர் பற்றியும் ஏற்கனவே நான் அறிந்த சம்பவங்கள் என்னை தடுத்து நின்றன. இருந்தும் சிறுமி தொடர்ந்தும் தாக்கப்பட்டுக் கொண்டிருப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் ஒரு முடிவெடுத்தேன். இந்த சிறுமி தாக்கப்படும் கடைசி நாள் இன்றாகத்தான் இருக்க வேண்டும் என்று கருதிக்கொண்டு எனது ஒளிப்படக்கருவியின் ஊடாக நடப்பவை அனைத்தையும் ஒளிப்பதிவு செய்தேன். அவ்வாறு ஒளிப்பதிவு செய்யப்பட்ட இந்தக் கானொளியை தயவு செய்து எல்லோரும் பார்க்கவேண்டும் என்பதற்காகவும் அந்த ராட்சசியிடமிருந்து அந்த சிறுமியை காப்பாற்றுமாறும் எல்லோரையும் வேண்டுகிறேன்.

இந்த ஒளிப்பதிவைமேற்கொண்டதன் பின்னர் இந்தப் பெண்பற்றி அயலில் விசாரணை செய்த போது சிறுமியை தாக்கிய குறித்த பெண் சிறுமியின் தந்தையை இரண்டாம் தாரமாக திருமணம் செய்திருப்பதாகவும் சிறுமியின் தாய் இறந்து விட்டார் என்றும் சிறுமிக்கு இந்தப்பெண் சிறியதாய் என்றும் அறிய முடிந்தது.

இந்தக் கானொளியில் தயவு செய்து அவதாணியுங்கள் மிகக்கூர்மையான கத்தியால் சிறுமி பலமாகத் தாக்கப்படுகிறாள் எனவே குழந்தை நலக்காப்பகங்கள், சிறுவர் நன்நடத்தை அதிகாரிகள், சிறுவர்கள் மீது அன்பு செலுத்துவோர் தயவு செய்து இந்தப் பெண்ணிடமிருந்து சிறுமியை காப்பாற்றும் அதே நேரம் குறித்த பெண்ணை சட்டத்தின் முன்னிறுத்தி தண்டணை வழங்க ஏற்பாடுகளை செய்யுமாறும் வேண்டுகிறேன். மேலதிக தகவல்களை எதிர் பார்ப்பவர்கள் உள் பெட்டியில் தொடர்பு கொள்ளவும்.

Siva Karan

Wednesday, September 21, 2016

ஜெ அரசு, கருப்புவை நெருங்குவதற்கு அஞ்சுவது ஏன்?

ஜெ அரசு, கருப்புவை நெருங்குவதற்கு அஞ்சுவது ஏன்?
-----------
38 வழக்குப் பதிவுகளும், 20 வழக்குகள் விசாரணையிலும் உள்ள ஒரு நபர் எப்படி தேர்தலில் நிற்க முடியும்? என்ற சர்ச்சையோடுதான் பா.ஜ.க.வின் மாநில இளைஞரணிச் செயலாளர் 'கருப்பு' வேட்பாளராக அறிவிக்கப்பட்டு மோடி தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்தும் டெபாசிட் கூட கிடைக்காத கருப்பு எப்போதும் மத்திய அரசுக்கு செல்லப்பிள்ளை.

தமிழ்நாட்டு இந்து பரிவாள அமைப்புகளுக்கு அடியாள் வேலை பார்ப்பதோடு இவர்களின் வாழ்நாள் கடமையாக மதக் கலவரம் ஏற்படுத்துவது, சிறுபாண்மையினர் மீது வன்முறை பிரயோகிப்பது, கொலைகள் செய்வது வீரதீர சாகசம் செய்து காவிப் படை தளபதியாக தமிழ்நாட்டு மக்களுக்கு சனி பகவானாக சுற்றிக் கொண்டிருக்கும் கருப்புக்கு 5 மாதங்களுக்கு முன்பு அதிமுக்கியத்துமான பதவியை மத்திய அரசு கொடுத்திருக்கிறது.

சென்னை துறைமுகத்தில் பங்குத்தாரர்களில் ஒருவராக மத்திய அரசு நியமித்திருக்கிறது. சென்னை துறைமுகம் மாநில அரசு கட்டுப்பாட்டில் இல்லை. 1 மணி நேரத்திற்கு கோடிக்கணக்கில் குவியும் பணங்களை இந்து பரிவாள அமைப்புகள் வளர்ச்சிகளுக்கும் பா.ஜ.கட்சி நிரந்தர பொருளாதாரத்திற்கும் பொதுப்பணத்தை அபகரிக்கும் பா.ஜ.க அரசு அதற்கு தேர்ந்தெடுத்தது சட்ட விரோத குற்றவாளியை. சாதாரண மனிதன் வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும் என்றால் கூட வழக்கு இருக்கிறதா? குற்றவாளியா? என்று விசாரிக்கும் அரசு அமைப்பு இப்படி கருப்புக்கு சலுகைகளை வாரி வழங்குவது எதற்காக?

"பத்து பைசா முறுக்கு, மசூதிய அடிச்சு நொறுக்கு" என்ற கோஷங்களோடு மதக் கலவரத்தை தூண்டுபவர்களுக்கு 1 லட்சம் பணம் பட்டுவாடா செய்யும் இந்த கருப்பு...
"ஜெயிலில் ராம்குமார் செத்துப் போனதுக்குக்கூட நான்தான் காரணம் என்றுகூட சொல்வார்கள். அவரை சிறைக்குள் கொல்லக் கூடிய அளவுக்கு நான் பெரிய ஆளா? ஆளுங்கட்சி அமைச்சர்களால்கூட இப்படிச் செய்ய முடியாது" என்று பேட்டி கொடுத்திருக்கிறார்.

கதர் சட்டையை விட காக்கி டவுசர் சிறைக்குள் தூணிலும் இருக்கும் துரும்பிலும் இருக்கும். காக்கி டவுசர் கருப்புக்கும் அந்த மகிமையை வாரி வழங்கி இருக்கிறது. காந்தியையும் இந்த காவிதான் சாகடித்தது. அம்பேத்கரையும் இந்த காவிதான் சாகடித்தது. சுவாதி, ராம்குமாரையும் இதே காவிதான் சாகடித்திருக்கிறது.
இப்பவும் முதலில் சொல்லியதையே சொல்கிறேன். கருப்பு கூலிப்படை சுவாதியோடு ராம்குமாரையும் சேர்த்து படுகொலை செய்துள்ளது. இத்தனை பொறுக்கித்தனங்களை செய்யவும் கூலிப்படைகளுக்கு கூலி கொடுக்கவும்தான் மத்திய அரசு சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் குற்றவாளியை ஊக்குவித்து பொருளாதார உதவியும் செய்கிறது.
ஜெ அரசு, கருப்புவை நெருங்க அஞ்சுவதற்கு காரணமும் இதுதான்!

#தமிழச்சி
22/09/2016

தமிழச்சி மீது கருப்பு போலிசில் புகார்:
https://www.patrikai.com/swathi-murder-case-complaint-face…/

சுவாதி படுகொலையும் ராம்குமார் மரணமும்! -பா.ஜ.க 'கருப்பு' பேட்டி
http://www.vikatan.com/…/68563-bjp-karuppu-muruganantham-sp…

ஊடகங்களை மிரட்டும் பார்பன வெறியை முறியடிப்போம்!


Tuesday, September 20, 2016

தமிழக அரசு யாருக்கு துணை நிற்கிறது ஐயோ தமிழா

ராம்குமாரின் பிரேத பரிசோதனையின் போது தங்களது மருத்துவர் ஒருவர் இருக்க வேண்டும் என்று ராம்குமாரின் தந்தை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் ராம்குமாரின் பிரேத பரிசோதனை 2வது முறையாக தள்ளி வைக்கப்பட்டதற்கு பின்னர், சென்னை உயர்நீதிமன்றத்தில் ராம்குமார் தந்தை செய்திருந்த மனு மீதான விசாரணையில் இரண்டு நீதிபதிகளுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால் ராம்குமாரின் பிரேத பரிசோதனை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ராமச்சந்திரா மருத்துவமனை மருத்துவர் சம்பத், ராம்குமாரின் பிரேத பரிசோதனையின் போது இருக்க வேண்டும் என்ற ராம்குமார் தரப்பு வாதத்திற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எங்களுக்கு அரசு மருத்துவர்கள் இருப்பதில் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. அதே நேரத்தில் அரசு மருத்துவர்கள் அரசு சார்ந்துதான் செயல்படுவார்கள் என்பதால் தனியார் மருத்துவர் ஒருவரும் உடன் இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள் .
ஆனால் இதனை ஏற்க அரசு தரப்பு வழக்கறிஞர் மறுத்துவிட்டார். இந்த வழக்கல் தமிழக அரசின் வாதம் தமிழர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சுவாதி கொலையில் விசாரிப்பதற்காக அழைத்து செல்லப்பட்ட ராம்குமார் சந்தேகத்திற்குரிய வகையில் மரணம் அடைந்திருக்கிறார். பிரேத பரிசோதனை முறையாகவும் நியாயமாகவும் நடக்க வேண்டும் என்ற அவர்களது கோரிக்கையை தமிழக அரசு ஏற்க மறுப்பதை பார்த்தால் இந்த வழக்கில் தொடர்புடைய யாரையோ அரசு காப்பாற்ற முயற்சி செய்கிறது. எதையோ மூடி மறைக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளது.

ஆனால் ராம்குமாரின் மரணம் திட்டமிட்ட கொலை என்பதை வெளி கொண்டு வரும் வரை சட்ட ரீதியான அவர்களது போராட்டம் தொடர்ந்து நடைபெற வேண்டும் தமிழக அரசு யாருக்கு துணை நிற்கிறது ஐயோ தமிழா

மாலேகான் கொலைக் குற்றவாளி பிரக்யாசிங் தற்போது....



மாலேகான் கொலைக் குற்றவாளி பிரக்யாசிங் தற்போது....

பல முஸ்லிம்கள் மாலேகானில் கொல்லப்பட காரணமாயிருந்த இந்துத்வா தீவிரவாதி பிரக்யாசிங்குக்கு தற்போது கொடுக்கப்படும் மரியாதையை பாருங்கள். மோடி ஆட்சிக்கு வந்ததே இது போன்ற கொலைகாரர்களுக்கு பிணை வழங்கி அவர்களை சுதந்திரமாக நடமாட விடத்தான்.

ஆனால் இறைவனின் தீர்ப்பு என்று ஒன்று உண்டு. அதன் பிடியிலிருந்து மோடியோ அமீத்ஷாவோ பிரக்யா சிங்கோ தப்ப முடியாது. அந்த நாளுக்காக பொறுத்திருப்போம்.

சமஸ்கிரதத்தை தெய்வ மொழியாக மாற்றத் துடிக்கும் பாரதியார்!

சமஸ்கிரதத்தை தெய்வ மொழியாக மாற்றத் துடிக்கும் பாரதியார்!

“நம் முன்னோர்கள் அவர்களைப் பின்பற்றி நாமுங் கூடப் புண்ணிய பாஷையாகக் கொண்டாடி வரும் ஸம்ஸ்கிருத பாஷை மிகவும் அற்புதமானது. அதைத் தெய்வ பாஷையென்று சொல்வது விளையாட்டன்று. மற்ற ஸாதாரண பாஷைகளையெல்லாம் மனித பாஷையென்று சொல்லுவோமானால், இவை அனைத்திலும் சிறப்புடைய பாஷைக்குத் தனிப்பெயர் ஒன்று வேண்டுமல்லவா. அதன் பொருட்டே அதைத் தெய்வ பாஷை என்கிறோம்.”

இந்தியாவிலுள்ள மொழிகள் யாவும் சமசுகிருத மொழியோடு கலந்த பிறகே மேன்மை பெற்றதாகப் பாரதி கருதுகிறார். தமிழுக்கு முறையான இலக்கணம் இல்லாதிருந்ததாகவும், ஆரியர்கள் இலக்கணம் வகுத்ததாகவும் பாரதி கூறுவதாவது:

“தமிழ் பாஷைக்கோ, இலக்கணம் முதல் முதலாக அகஸ்தியராலும், அவருடைய சிஷ்யராகிய திரணதூமாக்கி (தொல்காப்பியர்) என்ற ஆரிய முனிவராலுமே சமைத்துக் கொடுக்கப்பட்டதென்பதும் மெய்யே. அதனின்றும் தமிழ் இலக்கணம் பெரும்பாலும் சமஸ்கிருத இலக்கணத்தை அனுசரித்தே சமைக்கப்பட்டிருக்கிறதென்பதும் மெய்யே” என்கிறார் பாரதியார்.

இந்தியாவிலுள்ள அனைத்துச் செல்வங்களையும் ‘ஆரிய ஸம்பத்து’ என்கிறார் பாரதியார். “நமது வேதம், நமது சாஸ்திரம், நமது ஜனக்கட்டு, நமது பாஷைகள், நமது கவிதை, நமது சிற்பம், நமது ஸங்கீதம், நமது நாட்டியம், நமது தொழில்முறைகள், நமது கோபுரங்கள், நமது மண்டபங்கள், நமது குடிசைகள் இவை அனைத்துக்கும் பொதுப்பெயர் ஆரிய ஸம்பத்து. காளிதாசன் செய்த சாகுந்தல நாடகம், ஹிந்தி பாஷையிலேயே துளஸிதாசர் செய்திருக்கும் ராமாயணம், கம்பராமாயணம், சிலப்பதிகாரம், திருக்குறள், ஆண்டாள் திருமொழி – இவையனைத்துக்கும் பொதுப்பெயராவது ஆர்ய ஸம்பத்து. தஞ்சாவூர்க் கோயில், திருமலை நாயக்கர் மஹால், தியாகையர் கீர்த்தனங்கள், எல்லோராவிலுள்ள குகைக்கோயில், ஆக்ராவிலுள்ள தாஜ்மஹால், சரப சாஸ்திரியின் புல்லாங்குழல் -இவை அனைத்துக்கும் பொதுப்பெயர் ஆரிய ஸம்பத்து.

-பாரதியார் கட்டுரைகள், ப.46, வானதி பதிப்பகம், சென்னை, 1981.

பாரதி,செந்தமிழில் தன் பெயரைச் செப்பவில்லை தன் பெயரைக் கூட ஸி.ஸுப்பிரமணிய பாரதி என்றே எழுதி உள்ளார். அவரது மூலத்தில் எழுதிய கவிதைகள் அனைத்தும் சமஸ்கிருதம் கலந்த ‘தமிஸ்கிருத” கிரந்த எழுத்துக்களே!
இதுகுறித்து ஆய்வாளர் க.கைலாசபதி கூறுவதாவது:

“1949 இல் ஓமந்தூரார் அரசு பாரதி நூல்களின் பதிப்பு உரிமையை வாங்கியது. 1950 இல் அரசு பாரதி நூல்கள் பதிப்புக் குழு ஒன்றை உருவாக்கியது. அக்குழுவில் இருந்த ரா.பி.சேதுப்பிள்ளை, மு.வரதராசனார் போன்றோர் பாரதியின் கவிதைகளில் மூலப்படியில் இருந்த கிரந்த எழுத்துக்களை முழுமையாக நீக்கிவிட்டதாகவும், 1909 இல் வெளிவந்த ஜன்மபூமியில் ஸமர்ப்பணம் முகவுரை ஆகியவற்றின் கீழ் ஸி.ஸுப்பிரமணிய பாரதி என்றே கையொப்பமிட்டுள்ளார்” என்றும் ஆய்வாளர் க.கைலாசபதி கூறியுள்ளார்.

— க.கைலாசபதி, பாரதி ஆய்வுகள், ப.180, நி.செ.பு.நி. 1984.

தமிழில் என்னதான் பாரதிக்கு ஆளுமை இருந்தாலும் சமஸ்கிரத பித்து பாரதியையும் விடவில்லை. ஆரியர்களின் தாய் மொழி சமஸ்கிரதம் என்பதாலேயே இந்த பித்து பாரதிக்கும் வந்துள்ளது.

இஸ்லாமியர்களில் சிலரும் அரபி மொழியை தேவ மொழி என்று கூறுவர். ஆனால் இறைவன் குர்ஆனில் 'உலக மூல மொழிகள் அனைத்தையும் தாமே உருவாக்கியதாக சொல்கிறான். இஸ்லாமியரைப் போன்றே பாரதியும் சமஸ்கிரதத்தை தேவ மொழியாக எண்ணியிருக்கிறார். உண்மை விளங்காததே இதற்கு தலையாய காரணம்.

ராம்குமார் கொலை பின்னணி - காணொளி

ஈழத் தமிழர்களிடத்தில் சாதிகள் இல்லை என்பது உண்மையா?



ஈழத் தமிழர்களிடத்தில் சாதிகள் இல்லை என்பது உண்மையா?

"ஈழத்தில் சாதி இல்லையென்று" Yogoo Arunagiri தனது முகநூலில் எழுதிய பதிவொன்று, பலரது விமர்சனத்திற்குள்ளானது. அவரது கூற்றில் இருந்து:

//இன்றுவரை ஈழத்தில் ஒரு சாதி சங்கம் இல்லை, ஒரு சாதிக்கு என கட்சி இல்லை, ஒரு சாதிக்கு என கொடி இல்லை, ஒரு சாதி தலைவர் இல்லை, தனி சாதிக்கு என ஒரு பள்ளிக்கூடம் இல்லை, ஒரு சாதியினருக்கு என கோயில் இல்லை...//

இதைச் சொன்னவர் ஒரு (புலம்பெயர்ந்த) ஈழத்தமிழர் தான். ஆனால், ஈழத்தின் சமூக அரசியல் அறியாதவர். தமிழ்நாட்டின் சாதி அமைப்பிற்கும், ஈழத்தின் சாதி அமைப்பிற்கும் வித்தியாசம் இருக்கிறது.

யாழ்ப்பாணத்தில் தற்போதுள்ள சாதிய பாகுபாடுகள் குறித்து, அங்கிருந்து இயங்கும் சமூக ஆர்வலர் Hasee Aki என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

யாழ் குடாநாட்டில் இன்றைக்கும் தொடரும் சாதிப் பாகுபாடுகள் பற்றி அவர் வெளியிட்ட ஆதாரங்கள்:

//கோவில்களில் சாதிய புறக்கணிப்பு இல்லை என்று கூறியவருக்கு, காரைநகரில் மருதப்புரம் என்னும் கிராமம் உள்ளது. நாயன்மார் என்னும் கோவில் உள்ளது வருடத்தில் ஒரு முறை பொங்கள்,செய்வார்கள் ஒடுகப்பட்ட சாதியினர் கோயிலுக்கு பின் பக்கமும் மற்றும் உயர்சாதியினர் கோயிலுக்கு முன்னாலும் பொங்குகிறார்கள். கடவுளுக்கு படைக்கும் பொங்கள் உயர்சாதியினரின் மற்றவர்கள் பொங்கி விட்டு தாமே எடுத்து செல்ல வேண்டியது தான் அவர்ககளை அங்கு படைக்க விடமாட்டார்கள்.

காரைநகரிலுள்ள திக்கரை முருகன் கோவில் வாரிவளவு பிள்ளையார், முத்துமாரி அம்மன் கோவில் மணற்காட்டு அம்மன் கோவில், கருங்காலி மூர்த்தி கோவில்.... இவ்வாறு பல கோவில்களுக்கு இன்றும் நுழைய விடுவதில்லை. மடத்தில் இருந்துசாப்பிட கூட விடமாட்டார்கள். ஈழத்து சிதம்பரம் கோவில், அன்று போராட்டம் நடை பெற்றதால் தான் எல்லோரும் நுழைய கூடியதாக இருந்தது. இன்று சாதி பிரச்சனை இல்லை என்று தம்மட்டம் அடித்துக் கொண்டிருந்தால் அக் கோவிலும் நல்ல ஆதிக்கத்தின் கீழ் இருந்திருக்கும்.

காரைநகரில் ஊரி என்னும் பிரதேசம் உள்ளது அங்கு இன்றும் பாடசாலைகளிலும் சாதிய ஒடுக்கு முறையுள்ளது. வெளிப்பார்வைக்கு அவ்வாறு தான் தெரியும் தம்பி. ஆனால் நிலமை அவ்வாறு இல்லை. அச்சுவேலியில் பத்தமேனியில் தம்மை வேளாளார் என்று கூறிக்கொள்பவர்கள் வசிக்கிறார்கள். ஒடுக்கப்படும் சாதியினர் ஒருவர் அப்பிரதேசத்தில் காணி ஒன்றினை வாங்கினார்.

அவ்விடத்தில் அவரை வாசிக்க விடாமல் பல பிரச்சனைகளை கொடுத்தார்கள். மின்சார சபையை அங்கு வந்து தூண் நிறுத்த விடாமல் பல பிரச்சனைகளை செய்தார்கள். சாதி பெயர் சொல்லி ஒவ்வொரு நாளும் சண்டைகள். தங்கள் பிரதேசத்தில் இருக்காமல் எழும்பி போக சொல்கிறார்கள்.

கல்வியங்காட்டில் செங்குந்தான் என்னும் சாதியில் உள்ளவர்கள் தமது ஊருக்குள் ஒடுக்கப்பட்ட சாதி வாகுப்பினத்தவர் அதிபராக வரவிடாமல் பல ஆர்பாட்டங்களை செய்து அவரை மாற்றம் செய்தார்கள், கிராம உத்தியோகத்தர்கள் சிலருக்கு இதே நிலையே. உயர்கல்வி மட்டங்களும் அவைக்கு துணை போகின்றன.

இப்படியே பல பிரச்சனைகளை கூறிக் கொண்டு போகலாம். எண்ணிக்கையில் அடங்காத பிரச்சனைகள் எமது ஆணாதிக்க சமூகத்தை பீடித்துள்ளது. இவ்வாறான பிரச்சனைகளை கூறினால் சாதிய கட்டமைப்பை ஆதரித்து பேணி காக்க விரும்புபவர்கள், இவை பொய்யான கதைகள், இல்லாத பிரச்சனைகளை நாம் கதைப்பதாக கூறுவார்கள். முடியுமானால் நான் கூறிம இடங்களை சென்று ஆழமாக பாருங்கள்.//

-----------------------------------------------------------

//என்ன பிறப்பு! எரியும் வீட்டில் பிடுங்கும் ஒரு கேவலமான மனிதர்கள். மனிதவர்க்கத்துக்கே சாபக்கேடு! இறுதி யுத்தம்இடம்பெற்ற வேளை செல்வீச்சுக்களால் கொல்லப்படும் மக்களின் நகைகளை சிலர் களவாக கழற்றி எடுப்பார்கள். அனாதரவாக கிடக்கும் உடலங்களிலும் கழற்றி எடுப்பார்கள்....// (தகவலுக்கு நன்றி: Vaiththilingam Rajanikanthan)

இறுதி யுத்தம் இடம்பெற்ற வேளை, தம்மிடம் இருந்த உடைமைகளை கொடுத்து உணவுப் பொருட்களை வாங்கியவர்கள் எத்தனை பேர்? ஒரு தேங்காய்க்காக வாகனத்தை பண்டமாற்று செய்தவர்கள் எத்தனை பேர்? நகைகளை கூட கொடுத்து சாப்பாடு வாங்கினார்கள்.

முள்ளிவாய்க்கால் வரையில், எந்தவொரு கடைக்காரரும் தன்னிடமிருந்த பொருட்களை மக்களுக்கு பங்கிட்டுக் கொடுக்கவில்லை. மாறாக, மனிதப் பேரவலத்திற்கு மத்தியிலும் காசுக்கு விற்பனை செய்துகொண்டிருந்தார்கள்! இலவசமாகக் கிடைத்த நிவாரணப் பொருட்களை, காசுக்கு விற்பனை செய்த கடைக்காரர்களும் உண்டு!

அப்படிப் பட்ட இரக்கமற்ற வர்த்தகர்கள் என்ற ஈனப்பிறவிகளை கண்ட மக்களின் மனம் எந்தளவு மரத்துப் போயிருக்கும்? கொத்துக் கொத்தாக செத்துக் கொண்டிருந்த நேரத்தில் கூட, இல்லாதவர்களுக்கு கொடுத்து சாப்பிட்ட மனமில்லாத ஈனப்பிறவிகளை தமிழர் என்று சொல்ல முடியுமா?

பேரவலத்தின் மத்தியிலும் தம்மிடம் இருந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாத ஈனப்பிறவிகளிடம் திருடினால் அதில் என்ன தவறு? செத்த பிறகு இந்த சொத்துக்களால் என்ன பிரயோசனம்? நகைகளையும் எடுத்துக் கொண்டு சொர்க்கத்திற்கு செல்ல முடியுமா? அத்தகைய கேவலமான பிறவிகளை கண்டும் காணாமல் இருந்த ஈனப்பிறவிகள், இப்போது அறிவுரை கூறுகின்றன.

இரக்கமற்ற வர்த்தகர்கள் என்ற ஈனப்பிறவிகளும், அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் கேவலமான மனிதர்களும் மனிதவர்க்கத்துக்கே சாபக்கேடு!

தகவல் உதவி

கலையரசன்

- http://kalaiy.blogspot.com/2016/09/blog-post.html



Monday, September 19, 2016

அவசியம் காண வேண்டிய காணொளி!


ராம்குமார் சாவுக்கு காரணமான அந்த "மின்சார ஒயர்"

இனி உவைசியின் பெயரைக் கேட்டாலே காத தூரம் ஓடுவார்.

அசாசுத்தீன் உவைசி வைக்கும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களைக் கண்டு விக்கித்துப் போன சுப்ரமணியம் சுவாமி!

இனி உவைசியின் பெயரைக் கேட்டாலே காத தூரம் ஓடுவார்.

Sunday, September 18, 2016

ஆர்எஸ்எஸ் அலுவலகம் முற்றுகை - தமிழ் ஆர்வலர்கள்

ராம் குமார் தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளாராம்! :-(

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம் குமார் புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்டாராம். இதை நாம எல்லாரும் நம்பிடணும். இல்லை என்றால் தேச துரோகி என்று குற்றம் சாட்டப்படுவீர்கள்.

சுவாதியை கொன்ற உண்மையான கொலையாளி தைரியமாக உலா வந்து கொண்டிருக்க அப்பாவி ராம் குமாரை கொன்று வழக்கை முடித்து விட்டார்கள்.

வாழ்க ஜனநாயகம்! வளர்க பணநாயகம்!

Saturday, September 17, 2016

பஹ்ரைன் பிரதமரின் கடல் கடந்த மனித நேயம்!





பஹ்ரைன் பிரதமரின் கடல் கடந்த மனித நேயம்!

சில தினங்களுக்கு முன்பு ஒரிசாவில் அமரர் ஊர்தி தர மறுத்ததால் தனது மனைவியை பல கிலோ மீட்டர் தோளில் சுமந்து உடலை அடக்கம் செய்த கொடுமையை படித்திருப்போம். இதனை கேள்வியுற்ற பஹ்ரைன் பிரதமர் இந்திய தூதரகம் மூலமாக 900000 லட்சத்துக்கான காசோலையை சம்பந்தப்பட்ட நபருக்கு அனுப்பி வைத்துள்ளார் பஹ்ரைன் பிரதமர்.

நம் நாட்டு பிரதமர் மோடி மாட்டுக்காக வேண்டுமானால் பரிதாபப்படுவார். ஏழை தலித்களுக்காக வருத்தம் கூட தெரிவிக்க மாட்டார். பஹ்ரைன் பிரதமரின் மனித நேயத்தை எண்ணி நம் நாட்டு மோடி வெட்கி தலை குனியட்டும்!

கல்லூரி மாணவன் பிரவீனின் தற்கொலை உணர்த்துவதென்ன?



கல்லூரி மாணவன் பிரவீனின் தற்கொலை உணர்த்துவதென்ன?

ஹைதரபாத் பல்கலைக் கழகத்தின் முதலாம் ஆண்டு மாணவன் பிரவீன் தனது அறையில் தூக்கிட்டு தொங்கியுள்ளான். எந்த கடிதமும் எழுதி வைக்கவில்லை. இவரது அப்பா பிஎஸ்என்எல்லில் நல்ல சம்பளத்தில் உள்ளார். பொருளாதார அளவில் எந்த நெருக்கடியும் இவருக்கு இல்லை. சென்ற செப்டம்பர் 9 ந்தேதி பிரவீன் தனது லேப்டாப்பில் சில குறிப்புகளை எழுதி வைத்துள்ளார். அதன் தமிழாக்கம் வருமாறு...

'என்னால் ஏன் சரியாக படிக்க முடிவதில்லை?.. நான் ஏன் எதைப் பார்த்தாலும் பயந்து கொள்கிறேன்?... என்னால் ஏன் மற்றவர்களோடு சகஜமாக பழக முடிவதில்லை? இன்று காலை ஒரு இடத்துக்கு சென்றிருந்தேன். ஒரு மாணவன் என்னோடு கை குலுக்கி பேசினான். ஆனால் அவனோடு சகஜமாக என்னால் ஏன் பழக முடியவில்லை? நான் நன்றாக படித்து எதையாவது சாதிக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் வாழ்ந்து ஒரு பிரயோசனமும் இல்லை. நான் ஏன் எப்போதும் மகிழ்ச்சி இல்லாமல் இருக்கிறேன்? நான் ஏன் என்னை ஒரு தனி மனிதனாக உணருகிறேன்?'

இவ்வாறு செல்கிறது அந்த மாணவனின் எண்ண ஓட்டங்கள். இதுதான் அவனை தற்கொலைக்கு தூண்டியிருக்கிறது. உண்மையான இறை நம்பிக்கை அந்த மாணவனுக்கு ஊட்டப்படாததாலேயே ஒரு விரக்தி அவனுக்குள் ஏற்பட்டுள்ளது. தனக்கு ஏற்படும் மன அழுத்தங்களை பகிர்ந்து கொள்ள ஒரு வடிகாலை தேடி அலைந்திருக்கிறான் அந்த மாணவன். இஸ்லாமியர்கள் ஒரு நாளைக்கு ஐந்து வேளையும் பள்ளிக்குச் சென்று தங்களின் மனச் சுமைகளை எல்லாம் இறக்கி வைத்து விடுகிறார்கள். ஆனால் மற்ற மதங்களில் முற்போக்கு என்ற போர்வையில் மதத்தை தூரமாக்கி வைத்துள்ளார்கள்.

தற்போது இந்து மதத்தில் மத நம்பிக்கை என்ற போர்வையில் இந்துத்வாவாதிகள் போலியான மத நம்பிக்கைகளை விதைக்கிறார்கள். பசு பாதுகாப்பு, ராமர் ஆலயம் என்று இந்து மக்களை உண்மையான இறை பக்தியிலிருந்து தூரமாக்கி விட்டார்கள். அதன் விளைவுகளே இது போன்ற தற்கொலைகள்.

இன்று இந்தியாவில் தலித்களை விட பொருளாதாரத்தில் கீழ் மட்டத்தில் உள்ளனர் இஸ்லாமியர். அனால் அவர்களிடமிருந்து இது போன்ற தற்கொலை செய்திகளை என்றாவது பத்திரிக்கைகளில் படித்திருக்கிறீர்களா?

எனவே உண்மையான இறை பக்தியை இது போன்ற மாணவர்களுக்கு ஊட்ட அரசும் பெற்றோரும் முயல வேண்டும். இதை செய்ய தவறினால் இது போன்ற தற்கொலை சாவுகளை நாம் தினம் தினம் சந்தித்துதான் ஆக வேண்டும்.

தகவல் உதவி
இந்தியன் எக்ஸ்பிரஸ்
17-09-2016


Cops recovered two notebooks, one laptop, two cellphones from among his possessions. In one of the notebooks, on September 9, Praveen wrote about his state of mind. “Why am I unable to study well? Why am I so scared of everything? Why am I unable to mingle with anyone? When I went to the department today morning, one student came and greeted me but I could not acknowledge properly, why am I like this? I have to study well and do something otherwise there is no meaning to my life. Why am I always unhappy? Why do I have this feeling that I am a lonely person?’’ Praveen wrote.

http://indianexpress.com/article/india/india-news-india/hyderabad-university-student-commits-suicide-no-note-found-yet-3035523/

கர்நாடகா கலவரத்து காரணம் காவிரி அல்ல!



கர்நாடகா கலவரத்து காரணம் காவிரி அல்ல! அதிர வைக்கும் சிசிடிவி ஆதாரம்!

September 16th, 2016 by டி.வி.எஸ். சோமு
பெங்களூரு:

பெங்களூரில் கடந்த திங்கள்கிழமை மிகப்பெரிய வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது அல்லவா. இது காவிரி நதிநீர் விவகாரத்திற்கான போராட்டம் என பலரும் எண்ணியிருந்த நிலையில். உண்மை அதுவல்ல என்பது தெரிய வந்திருக்கிறது.

பெங்களூரு கலவரத்துக்குக் காரணம், கொள்ளையடிக்கும் நோக்கமும் பழிவாங்கும் திட்டங்களுமே என்று ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

கர்நாடகாவில் விற்பனையில் முதலிடம் வகிக்கும் ‘விஜய் கர்நாடகா’ நாளிதழ் இந்த தகவல்களை ஆதாரங்களுடன் வெளியிட்டிருக்கிறது.

கலவர நேரத்தில் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் ரவுடி கும்பலை சேர்ந்தவர்கள் நகர வீதிகளில் சுற்றியிருக்கிறார்கள்.

இது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. இதை பார்த்த நகர குற்றப்பிரிவு போலீசார் அதிர்ந்துபோனார்கள்.

போராட்டக்காரர்கள் கையில் கத்தி எதற்கு என்பது அவர்கள் கேள்வி. சிசிடிவி காட்சிகளில் உள்ளவர்கள் ரவுடிகள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சமூக விரோதிகளின் நோக்கம், கொள்ளை மற்றும் தனிப்பட்ட விரோதத்தை தீர்ப்பது மட்டுமே.

உதாரணத்திற்கு, ஒரு நிறுவனத்திற்குள் புகுந்த கலவரக்காரர்கள், உரிமையாளர் முன்னிலையில் அவரது ஆட்டோவை தீ வைத்து எரித்த்துள்ளனர்.

பின்னர், அவரிடம், பிற பொருட்களையும், கடையையும் எரிக்காமல் இருக்க பணம் தர வேண்டும் என பேரம் பேசியுள்ளனர்.
நிறுவன உரிமையாளர் ரூ.2 லட்சம் தர ஒப்புக்கொண்டுள்ளார்.

அந்த பணத்தை பெற்றுக்கொண்டு கலவர கும்பல் அமைதியாக வெளியேறுகிறது. இந்த காட்சிகள் நிறுவன சிசிடிவி காட்சிகளில் அப்பட்டமாக பதிவாகியுள்ளது. இதுவும் போலீஸ் கைக்கு சேர்ந்துள்ளது.

இன்னொரு சம்பவம். கிரிநகர் பகுதியிலுள்ளது ஏ.வி.மசாலா புட்ஸ் பிரைவேட் லிமிடட். இந்த நிறுவனத்திற்குள் 200 பேர் கொண்ட கும்பல் நுழைந்து தீ வைத்துள்ளது.

மசாலா நிறுவனத்திற்குள் இருந்த மசாலா பொருட்களை மூட்டை மூட்டையாக கட்டிக்கொண்டு தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

இதன் பின்னணியில் தனிப்பட்ட விரோதமும் உள்ளது.

அந்த ஏரியா ரவுடிகள் சிலர், விநாயகர் சதுர்த்தியின்போது, விழா செலவுக்கு இந்த நிறவனத்திடம் ஒரு லட்ச ரூபாய் கேட்டுள்ளனர்.

அந்த நிறுவனத்தார் மிகக் குறைந்த தொகையே தந்திருக்கிறார்கள். அந்த கோபத்தை, கலவரம் என்ற பெயரில் தீர்த்துக்கொண்டார்கள், ரவுடிகள்.

சிசிடிவி காட்சிகள், டிவி சேனல் காட்சிகள், பத்திரிகை புகைப்படங்கள், சமூக வலைத்தள காட்சிகளை கொண்டு கிரிமினல்களை அடையாளம் கண்டு கைது செய்துவருகிறது கர்நாடக போலீஸ்.

பல கிரிமினல்கள், திங்கள்கிழமை கலவரத்தை நடத்தி முடித்து, அன்று இரவே வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகிவிட்டனர்.

கலவரத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு குண்டர் சட்டத்தில் கைது செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளது என்பதையும் அந்த நாளிதல் வெளியிட்டுள்ளது.

September 16th, 2016 by டி.வி.எஸ். சோமு
பெங்களூரு:

ரவிச்சந்திரன் முஹம்மது சாதிக்காக மாறிய வரலாறு!

ரவிச்சந்திரன் முஹம்மது சாதிக்காக மாறிய வரலாறு!

வேதம் படித்தவர்களும் உண்மை மார்க்கத்தை விளங்கி இன்று தூய இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கின்றனர். இஸ்லாம் வாளால் பரவியது என்ற பொய்யை கட்டவிழ்த்து விடுபவர்களுக்கு அழகிய பதிலைக் கொடுத்துக் கொண்டுள்ளார் ரவிச்சந்திரன்!

ஜப்பான் பொண்ணு ரகுமானை தமிழில் வரவேற்கிறது!



ஜப்பான் பொண்ணு ரகுமானை தமிழில் வரவேற்கிறது!

ஜப்பானுக்கு விருது வாங்க சென்ற நம்ம இசைப் புயல் ரகுமானை ஜப்பானிய பெண் தமிழிலேயே வரவேற்கிறது.

ஆனால் நம் தமிழ் நாட்டிலோ தமிழில் பேசினால் அவமானம் என்று கஷ்டப்பட்டு ஆங்கிலத்தில் பேசி இரு மொழிகளையும் கொல்கிறோம்.

செப்டம்பர் 17, இன்று பெரியார் பிறந்த தினம்.



செப்டம்பர் 17, இன்று பெரியார் பிறந்த தினம்.
-------------

"இந்தக் காலத்து இளைஞர்கள் மனம் என் மீது (வெறுப்புக் கொள்ளாது) வெறுப்புக் கொண்டு விடுமானாலும் கூட நான் அஞ்சவில்லை. இனி வருங்கால இளைஞர் பாராட்டுவார்கள். பாராட்டாவிட்டாலும் இன்று நான் சொன்னதைப் பின்பற்றி வீரத்தோடு மான வாழ்வு வாழும் வழியில் இருப்பார்கள். சரியாகவோ தப்பாகவோ நான் அதில் உறுதி கொண்டு இருப்பதால் எனக்கு எக்கேடு வருவதானாலும் சாவு வருவதானாலும் மனக்குறையின்றி நிறைமனதுடன் அனுபவிப்பேன் - சாவேன் என்பதை உண்மையாய் வெளியிடுகிறேன்."

- தோழர் #பெரியார்
- [12.04.1947 அன்று 'குடிஅரசு' இதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரையில் இருந்து சில...]

ஒட்டகங்களை வெட்டுவதை தடை போட முடியாது!



ஒட்டகங்களை வெட்டுவதை தடை போட முடியாது!

இறைவனுக்கு பலியிட ஒட்டகத்துக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்துள்ளது சுப்ரீம் கோர்ட். தியாகத் திருநாள் முடிந்து மூன்று நாட்களுக்குப் பிறகு ஆற அமர தீர்ப்பை தந்துள்ளது சுப்ரீம் கோர்ட். எல்லா இடங்களிலும் காவி சிந்தனை உடையவர்கள் நீக்கமற நிறைந்துள்ளார்கள் என்பதனை இந்த தீர்ப்பு உறுதிப்படுத்துகிறது.

இறைவனின் கட்டளைக்கு முன்னால் காவி சிந்தனைக்கு சோரம் போன நீதிபதிகளின் தடை ஆணை பொருட்படுத்தாது வழக்கம் போல் முஸ்லிம்கள் ஒட்டகத்தை அறுத்து இறைவனுக்கு பலியிட்டு ஏழைகளுக்கு உணவளித்தார்கள்.

Sunday, September 11, 2016

தொழிலாளர் பிரச்னைகளை சவுதியில் சந்திப்பது எவ்வாறு?

சவூதி அரேபியாவில் வேலை செய்பவர்கள் தங்கள் பிரட்சனைகளை எங்கு எவ்வாறு முறைஇடுவது?

சவூதியில் வாழும் பெரும்பாலான தமிழர்களுக்கு தங்கள் பணிபுரியும் இடங்களில் பல வகையான பிரட்சனைகளை சந்தித்து வருகின்றனர்

அதாவது முதளாளி தொழிலாளிக்கு செர வேண்டிய சம்பளத்தையோ அல்லது பிற சலுகைகளையோ அதாவது விடுப்புப் பணம் (வெக்கேசன் மணி)

சர்விஸ் மணி ஆகியவற்றை குறைவாக கொடுப்பது அல்லது கொடுக்காமல் இருப்பது எக்சிட் (exit)கொடுக்க மறுப்பது போன்ற பிரச்சனைகள் ஏற்ப்படும் போது அதை எவ்வாறு எதிர் கொள்வது

யாரை அனுகுவது எப்படி முறையாடுவது என்பது பற்றி பார்ப்போம்

1.ஆன்லைன் மூலம் முறை இடலாம்
2.தொழிலாளர் அமைச்சகம்(ministroy of labor)தொலைபேசி எண்மூலம் முறைஇடலாம்
3.இந்திய தூதரகத்தில் (embassy of india)முறை இடலாம்
4.இந்திய இனை தூதரகத்தில் (consulate of general of india)முறை இடலாம்
5.தொழிலாளர் நீதிமன்றம்(labor court)அனுகவும்
6.தொழிலாளர் நலன் மற்றும் வழிநடத்தும் குழு இம் முறைகளை பற்றி விரிவாக பார்க்கலாம்
1.ஆன் லைன் மூலம் விண்ணப்பித்தல

ministry of் labor
வெப்சைட்டிற்க்கு சென்று ஆன்லைன் மூலம் மிக எளிதாக தங்களது குறைகளை முறை இடலாம் அவ்வாறு முறைஇடும்போது தங்களது பெயர்/முகவரி/இக்காமா எண் ஆகியவை சரியாக இருக்கும் பட்சத்தில் அவர்களது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதன்மீது நடவடிக்கை எடுக்கப்படும்
ஆன்லைன் புகார் தெறிவிக்க
http//portal.mot.gov.sa/en/pages/complaints.aspx

2.தொழில் அமைச்சகம்(ministry of laber) தொலைபேசி மூலமும்
1.riyadh:01-4039857/kharj:01-4548231
duwadmi:01-6420920
majmaa:06-4321724
wadi addawasir:01-7840264
zulfi:06-4220235
sahqra:01-6221342
makkah:02-5420745
jeddah:02-6311687
taif:01-7461616
qun fudah:07-7320761
madinah:04-8654416
yanbu:04-3222688
al ula:04-8840380
onaizah:06-3640285
qassim(buraidah):06-3250387
al rass:04-3333502
hail:06-5321139
dammam:03-8261419
ahsa:03-5822801
hafralbatin:03-7220220
knobar:03-8641541
abqaqiq:03-5661324
jubail:03-3620150
khafji:03-7660380
ras tannurah:03-6670424
aseer(abha):07-2224128
bisha:07-6226718
baha:07-7253240
najran:07-5224995
jazan:07-3213671
jauf:04-6421108
qurrayat:04-6421108
tabuk:04-4221181
al wahj:04-4421970
arar:04-6627128
turaif:04-6521029

3.இந்திய தூதரகத்தில் மறைஇடலாம்
தொழிலாளர்கள் தங்களது பிரட்சனைகளுக்கு தீர்வுகாண அனைத்து வேலை நாட்களிலும்
9:00am லிருந்து12:30pm வரை கிழ்கண்ட விண்ணப்பத்தை பூர்த்தி செய்து நேரில் சென்று கொடுக்கவும்
labor-complain form
http//www.scribd.com/mobile/
doc/227679439?width=320

4.இந்திய இனை தூதரகத்தில் முறை இடலாம்
தொழிலாளர்களுக்கு நேர்ந்த பிரச்சனைகளை தீர்வுகாண எல்லா வேலை நாட்களிலும் கீழே உள்ள விண்ணப்பத்தை அனுகவும்
labor complaint-consulte
http//www.scribd.com/mobile/doc/227681763?width=320

5.தொழிலாளர்கள் நீதிமன்றத்தை அனுகலாம் laber court
கீழே உள்ள தொலைபேசி எண்னுக்கு தொடர்புகொண்டு தீர்வுகாணலாம்
makkah:02-5420745
jeddah:02-6311687
taif:02-7495200
qunfudah:07-7321250
madina:04:8654417
yanbu:04-3222488
alula:04-8840830
abha:07:2242128
bishan:07-6226718
al bahan:07-7253240
najrah:07:5221431
jazan:07-3226446
tabuk:04-4421181
al wahj:04-4421970
அனைத்து தொழிலாளர்கள் பிரச்சனைக்கு மேற்க்கண்ட இடங்களில் சரியான முறையில் தீர்த்து வைக்கப்படும் நீங்கள் செல்லும் போது சரியான ஆவணங்களை அதாவது வேலை ஒப்பந்த நகல் பாஸ்போர்ட் நகல் இக்காமா நகல் கபிலுடைய தொலைபேசி எண் மற்றும் முழு விலாசம் கொடுக்க வேண்டும் மேழும் நீங்கள் கொடுக்கும் விண்ணப்பங்கள் அரபியில் இருக்க வேண்டும்

6.தொழிலாளர் நலன் மற்றும் வழி நடத்தும் குழு
தொழிலாளர்கள் நலன் காக்கவே புதிதாக ஒரு அலுவலகம் ஜித்தாவில் திறக்கப்பட்டுள்ளது இங்கும் நீங்கள் நேரில் சென்று முறை இடலாம்

உங்களுக்கு ஆலோசனைகள் வழங்கி அப்பிரச்சனைக்களும் சட்ட ரீதியாக தீர்வுகாண உதவிடுவர்

முகவரி:-
office of the domestic workers committee
the director of welfer&guidance
consultant of training&social reserch
near al harama(formerly sofitel)
hotel jeddah
tel:6616688 fax:6653238
cell:0504658803

நண்பர்களுக்கு பகிரவும்...

'நீங்கள் மாட்டுக் கறி சாப்பிட்டதால் கற்பழித்தோம்'



'நீங்கள் மாட்டுக் கறி சாப்பிட்டதால் கற்பழித்தோம்'

பிஜேபி ஆட்சி செய்து வரும் ஹரியானா மேவாட்டில் மூன்று பெண்களை இந்துத்வ வெறி நாய்கள் கற்பழித்துள்ளது. 'மாட்டுக் கறி சாப்பிட்டதால் கற்பழித்தோம்' என்று இந்த நாய்கள் தைரியமாக பேட்டியளிக்கிறது. இந்த தைரியம் இந்த நாய்களுக்கு வந்தது எவ்வாறு? மோடியும் அமீத்ஷாவும் அதிகாரத்தில் இருக்கிறார்கள். தங்களை எப்படியும் காப்பாற்றி விடுவார்கள் என்ற தைரியமே இந்த நாய்களுக்கு. தற்போது இந்த நாய்களை போலீஸார் கைது செய்துள்ளனர். கைது பண்ணினாலும் மேலிட உத்தரவால் சில நாட்களில் சுதந்திரமாக உலா வருவர்.


இந்த பெண்களை கற்பழிக்கும் போது அவரது உறவினர்களை கயிறுகளால் கட்டி வைத்துள்ளனர். உயிர் போகுமளவுக்கு அடித்தும் உள்ளனர். தியாகத் திருநாள் பண்டிகையும் நெருங்குவதால் அங்கு நிலைமை பதற்றமாக உள்ளது.


எனது தாய் நாடே.... உனது நிலை இந்த அளவுக்கா கீழ்த்தரமாக போக வேண்டும்.

http://www.ndtv.com/india-news/they-asked-do-you-eat-beef-says-gangraped-haryana-woman-1457258?site=full

இதோ வந்து விட்டோம் எங்கள் இறைவா!

இதோ வந்து விட்டோம் எங்கள் இறைவா!

'ஒரு தாய் மக்கள் நாங்கள்' என்று உரக்கச் சொல்ல வந்து விட்டோம் இறைவா!

கருப்பன், வெள்ளையன், அமெரிக்கன், ஐரோப்பியன், ஆப்ரிக்கன் என்று நிற வெறி பார்க்காமல் அனைவரும் ஆதமுடைய மக்களே என்று பறை சாற்ற குழுமி விட்டோம் இறைவா!

"எங்களின் பாவங்களை மன்னித்து உலக மக்கள் அனைவரும் சந்தோஷமாக வாழ்வை கழிக்க அருள் புரிவாய்" என்று உன்னிடம் கேட்க குழுமி விட்டோம் இறைவா!

எங்களின் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வாய் எங்கள் இறைவா!

அரஃபா நோன்பின் முக்கியத்துவம்!


"அரஃபா நாள் நோன்பு அதற்கு முந்தைய ஆண்டு மற்றும் அதற்குப் பிந்தைய ஆண்டு பாவங்களுக்குப் பரிகாரமாகும்".
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)

நூல் : முஸ்லிம் -1976.

குஜராத்தில் மாமூல் தராததால் ஹூசைன் அடித்து கொல்லப்பட்டுள்ளார்!

குஜராத் பாவ் நகர் பகுதியில் ரஃபீக் ஹூசைன் என்ற காய்கறி வியாபாரி ஒரு வீட்டை வாங்கியுள்ளார். இங்கு விடு வாங்கினால் எங்களுக்கு மாமூல் தர வேண்டும் என்று சில காவிகள் ரஃபீக் ஹூசைனை மிரட்டியுள்ளனர். 'நானே கடனுக்கு வீட்டை வாங்கியுள்ளேன். இவ்வளவு அதிகம் கமிஷன் என்னால் தர இயலாது' என்று ஹூசைன் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த காவிகள் ஹூசைனை நடு ரோட்டில் சரமாரியாக அடித்தே கொன்றுள்ளனர்.

மோடியும் அமீத்ஷாவும் வளர்த்து விட்ட வானரப் படைகள் இன்று பணத்துக்காக கொலை செய்யும் வரை இறங்கியுள்ளது. வருங்கால இந்தியா மிக பயங்கரமான அழிவை சந்திக்க இருக்கிறது என்பதற்கு இதெல்லாம் ஒரு எடுத்துக் காட்டு.



Saturday, September 10, 2016

கர்னாடகாவில் இந்திய ஒருமைப்பாடு பல்லிளிக்கிறது

கர்னாடகாவில் இந்திய ஒருமைப்பாடு பல்லிளிக்கிறது
-----------------------------------------------------
பெங்களூருவில் காவேரி விவகாரம் குறித்து முகநூலில் பதிவிட்டதால் தமிழ் இளைஞருக்கு சரமாரி அடி உதை,... நடுரோட்டில் மன்னிப்பு கேட்க வைத்த கன்னட அமைப்பினர்.

காவி பயங்கரவாதிகளை கைது செய்!

தங்கம் வென்ற மாற்றுத் திறனாளி!

Thursday, September 08, 2016

விசுவரூபமெடுக்கும் தண்ணீர் பிரச்னை!

சுவாதி கொலை வழக்கின் மர்மங்களை உடைக்கும் தமிழச்சி!


தலித்களை ஒதுக்கி விட்டு முஸ்லிம்களை தேடி வரும் விநாயகர்! :-)

தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவோம்!

சிலர் தொழுகைக்கு தயாராகும் போது அளவுக்கதிகமாக தண்ணீரை வீணாக்குவதை பார்க்கிறோம். பெரும் மாநாடு, ஹஜ், உம்ரா போன்ற நெருக்கமான இடங்களில் மற்றவர்களின் தேவை மற்றும் நேரத்தை அறிந்து சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்த வேண்டும்.

இந்த முதியவர் ஒரு குவளை தண்ணீரில் முகம் கை கால்களை கழுவிக் கொள்வதைப் பாருங்கள். இதனை நாமும் நம் வாழ்வில் பின் பற்றி மற்றவர்களுக்கு இடைஞ்சல் தராமல் நடந்து கொள்வோம்.

Wednesday, September 07, 2016

நரேந்திர மோடி ராணுவத்தை நடத்தியவன் செய்த தொழில்!




மத்திய பிரதேசம் குவாலியரில் 'நரேந்திர மோடி ராணுவம்' என்ற அமைப்பை நடத்தி வரும் தினு ஜெயந்தை போலீஸார் கைது செய்துள்ளனர். பலருக்கு பெண்களை அனுப்பி வரும் மாமா வேலை பார்த்த குற்றத்திற்காக இவனை கைது செய்துள்ளது போலீஸ். நரேந்திர மோடிக்கு நெருக்கமானவர்கள் எல்லாம் எவ்வளவு கேவலமானவர்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது.

http://www.jantakareporter.com/social-media-buzz/narendra-modi-army-brigade/60950/

அடடே... மீன்களை பிடிக்க புதிய டெக்னிக்....



இலவசங்களை நம்பி ஏமாந்து பணம் வாங்கி ஓட்டளித்த தமிழக மக்களின் நிலையை இந்த மீன்களோடு ஒப்பிட்டுப் பார்க்கிறேன்.

தஞ்சையில் விநாயகர் சதுர்த்தியில் பரபரப்பு!





சிறிது நேரத்துக்கு முன் விநாயகர் ஊர்வலம் தஞ்சை ஆற்றுப்பாலத்தை கடந்தது. அங்கு ஒரு ஜும்மா பள்ளிவாசல் உள்ளது. அதுவரை வெறும் ஆட்டம் மட்டுமே போட்டு வந்த காவி துண்டும், காவி தலைப்பாகையும் கட்டி வந்த இளைஞர்கள் பள்ளிவாயிலின் முன் ஊர்வலத்தை நிறுத்தி "பாரத் மாதா கி ஜெய்" "ஹிந்துஸ்தான், ஹிந்துஸ்தான்" என்றும் மேலும் சில கோஷங்களை எழுப்பியபடி நின்றனர். பாதுகாப்புக்கு வந்த போலீசார் கெஞ்சி தம்பி வாங்க ஊர்வலத்தை நிறுத்தாதீங்க என்று கெஞ்சுகின்றனர்.. அதையெல்லாம் 'என் முதுகுக்கு சொல்லு' என்ற தொனியில் கோஷங்களை தொடர்ந்தனர்.

பின்னாடி இருந்து பாய்ந்து வந்த சிலர் பள்ளிவாசலுக்கு முன் குத்தாட்டம் போட தொடங்கினர். விபரீதம் எதுவும் நிகழ்ந்து விடுமோ என்ற அச்சம் போலீசாரின் கண்ணில் மட்டுமல்ல, ஊர்வலத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு நின்ற பொதுமக்கள் கண்ணிலும் தெரிந்தது நான் உட்பட. சட்டென்று நான்கு போலீசார் பாரிகேட்டுக்களை இழுத்து பள்ளிவாசலின் பாதையை அடைத்தது காவல் காத்தனர். ஒவ்வொரு விநாயகர் சிலை வந்த வண்டியையும் பள்ளிவாசலுக்கு முன் நிறுத்தி ஆட சிலையுடன் வந்தவர்கள் மறக்கவில்லை. ஒருவழியாக கெஞ்சி அந்த கூட்டத்தை அந்த இடத்தை விட்டு நகர செய்த பின்னரே போலீசாரின் முகத்தில் நிம்மதி தெரிந்தது.

விநாயகர் சதுர்த்தியும், ஊர்வலமும் என்ன நோக்கத்துக்காக சங் கும்பலால் முக்கியத்துவம் கொடுத்து கொண்டாடப்படுகிறது என்று படித்து தெரிந்திருந்தாலும் இன்று கண்கூடாக கண்டேன்.

என் அருகில் டூ வீலரை நிறுத்தி வேடிக்கை பார்த்தவர் சொன்னார் " இந்த வருஷம் போன வருடத்தை விட கூட்டம் கம்மியா இருக்கு" என்று..

-Akila Ramakrishnan

ஆண்டிப் பட்டி விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலவரம்!

ஆண்டிப் பட்டி விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலவரம்!

மேல் சாதி கீழ் சாதி பாகுபாடு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திலும் பிரதிபலித்தது. ஆண்டிப்பட்டயில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி, பிஜேபி தொண்டர்களிடையே கலவரம் மூண்டது. போலீஸார் தலையிட்டு கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இஸ்லாமியர்களை வம்புக்கிழுக்க வலிந்து திணிக்கப்பட்டதே விநாயகர் ஊர்வலம். இந்த வருடம் அந்த சூழ்ச்சியில் இந்துத்வாக்களே மாட்டிக் கொண்டதுதான் வேடிக்கை. உண்மையான தெய்வ பக்தி இல்லாத எந்த வழிபாடும் முடிவில் இவ்வாறு காமெடியாகவே முடியும்.

Tuesday, September 06, 2016

சவுதியில் ருசியான கோழிக்கு அலை மோதும் கூட்டம்!



அல்பெய்க் என்ற இந்த உணவகம் சவுதியில் பிரபலம். மெக்கா, மதினா, ஜெத்தா, அல்கஸீம் என்று குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய ஊர்களில் மாத்திரமே இதன் கிளைகள் உண்டு. இரண்டு முறை அல் கஸீம் பிராஞ்சில் 'அல்பெய்க் கோழி' சாப்பிட்டுள்ளேன். 12 ரியாலுக்கு நான்கு கோழி துண்டுகள் பிரட் என்று அசத்துகிறார்கள். குறைந்த செலவில் வயிறு நிரம்ப சாப்பிட முடிவதால் இங்கு எப்போதும் கூட்டம் அலை மோதுகிறது.

கெண்டகி, மெக்னோடால்ஸ் போன்ற அமெரிக்க கம்பெனிகள் மற்ற ஊர்களுக்கு அல்பெய்க் வருவதற்கு மறைமுகமாக தடை செய்து வருகிறார்கள். ஒரு சிலர் கஸீமிலிருந்து மொத்தமாக வாங்கி ரியாத்தில் விற்று வந்தனர். காவல் துறை அவர்களை கைதும் செய்துள்ளது.

உடலுக்கு தீங்கு விளைவிக்கும் இது போன்ற கோழிகளை தவிர்த்துக் கொள்வதே நல்லது. வீட்டில் வளர்க்கும் நாட்டுக் கோழியே சிறந்தது.






குஜராத் ஒளிர்கிறது என்று பீலா விட்ட மோடியின் பித்தலாட்டங்கள்!



குஜராத் ஒளிர்கிறது என்று பீலா விட்ட மோடியின் பித்தலாட்டங்கள்!

ஆட்சிக் கட்டிலில் ஏற குஜராத் ஒளிர்கிறது என்ற பொய்யை நாடு முழுக்க பரப்பியவர் மோடி. அந்த பொய்களினால் ஆட்சியையும் பிடித்துள்ளார். ஆனால் தற்போது குஜராத்தின் உண்மை நிலை உலகுக்கு தெரிய ஆரம்பித்துள்ளது. நமது நாட்டில் வறுமைக்காக கிட்னியை விற்பவர்களின் எண்ணிக்கை குஜராத்தில்தான் அதிகமாக உள்ளது.

குஜராத மாநிலம் பண்டோனி என்ற கிராமத்தில் மட்டும் கடந்த ஒரு வருடத்தில் 11 நபர்கள் கிட்னி விற்றுள்ளதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். கிட்னி விற்க தயாராக இருப்பவர்களை அறிமுகம் செய்பவர்களுக்கு ரூ.25,000 ஊக்க தொகை என்று அறிவித்து கிட்டத்தட்ட ஒரு மல்டி லெவல் மார்க்கெட்டிங் போன்று இக்குற்றம் நடந்து கொண்டிருக்கிறது. மேல்மட்ட கார்ப்பரேட் மருத்துவமனை நிர்வாகத்தில் ஆரம்பித்து கிட்னி விற்பவர் வரை மிகப் பிரம்மாண்டமான ஒரு வலைப்பின்னல் இருப்பதும் தெரியவந்துள்ளது.

ஹர்ஷத் சோலன்கி : வயது 24 தொழில் : விவசாயம்
கிட்னி விற்ற தேதி : ஆகஸ்ட், 2015 பணம் : 2.50 இலட்சம் ரூபாய்

கனுபாய் கொகெல் : வயது 37 தொழில் : விவசாயம்
கிட்னி விற்ற தேதி : நவம்பர், 2015 டெல்லி பணம் : 2.30 இலட்சம் ரூபாய்

அமீன் மாலீக் : வயது 27 தொழில் : விவசாயம்
கிட்னி விற்ற தேதி : பிப்ரவரி, 16 2016 பணம் : 1.5 இலட்சம் ரூபாய்

அதானிக்கும் அம்பானிக்கும் முழு நேர சேவகனாக உலா வரும் மோடி இனிமேலாவது தனது சொந்த மாநிலமான குஜராத்தின் அவல நிலையை போக்க முன் வர வேண்டும்.

இஸ்லாமிய குழந்தைகளுக்கு குர்ஆன் பாடமெடுக்கும் இந்து!



இஸ்லாமிய குழந்தைகளுக்கு குர்ஆன் பாடமெடுக்கும் இந்து!

ஆக்ரா: உ.பி.,யில் மேற்கு பகுதியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், 35 முஸ்லிம் குழந்தைகளுக்கு குரான் குறித்து பாடம் கற்பித்து வருகிறார்.

உ.பி.,யின் ஆக்ராவின் சஞ்சய் நகர் பகுதியை சேர்ந்த பூஜா குஷ்வாகா என்ற மாணவி, கோவில் வளாகத்தில், முஸ்லிம் குழந்தைகளுக்கு இலவசமாக குரான் குறித்து பாடம் கற்பித்து வருகிறார்.

இது தொடர்பாக பூஜாவிடம் குரான் படிக்கும் 5 வயது சிறுமியின் தாயார் ஒருவர் கூறுகையில், இந்த வயதில், மாணவியின் திறமையை பார்த்து ஆச்சர்யமாக உள்ளது. எனது குழந்தைக்கு இந்த மாணவி ஆசிரியையாக இருப்பதில் மகிழ்ச்சியாக உள்ளதுது. அந்த சிறுமியின் மதம் குறித்த எண்ணம் எனக்கோ மற்ற சிறுமிகளின் பெற்றோர்களுக்கோ வரவில்லை" எனக்கூறினார்.

பூஜா குஷ்வாகா கூறுகையில், "பல வருடங்களுக்கு முன், முஸ்லிம் தந்தைக்கும், இந்து மதத்தை சேர்ந்த தாயாருக்கும் பிறந்த சங்கீதா பேகம் என்ற பெண், குழந்தைகளுக்கு குரான் கற்பித்து வந்தார். இதில் ஆர்வமடைந்த நான் அந்த வகுப்பில் கலந்து கொண்டேன். அதில் குரானை மற்றவர்களை விட நன்கு கற்றுக்கொண்டேன்" எனக்கூறினார்.

சில குறிப்பிட்ட காரணங்களால் சங்கீதா பேகத்தால் குரான் வகுப்பை தொடர முடியவில்லை. இதனையடுத்து அவரது ஆலோசனையின் பேரில் பூஜா குஷ்வாகா, குரான் வகுப்புகளை தொடங்கினார்.

பூஜா தொடர்ந்து கூறுகையில், என்னிடம் படிக்கும் பெரும்பாலான குழந்தைகள் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள். அவர்களிடம் கொடுக்க பணம் இல்லை. நானும் பணம் வாங்க விரும்பவில்லை. குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்க வீட்டில் போதிய இடம் இல்லாத காரணத்தினால் பெரியவர்களின் ஆலோசனைப்படி கோவில் இடத்தில் கற்பித்து வருகிறேன் என்றார். பூஜாவின் மூத்த சகோதரியும் அப்பகுதியில் உள்ள ஏழை குழந்தைகளுக்கு இந்தி மற்றும் பகவத் கீதை கற்பித்து வருகிறார்.

70 வயதாகும், இஸ்லாம் மத தலைவர் ஒருவர் கூறுகையில், "இந்த நகரில் சமூக நல்லிணக்கத்திற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. ஒரு ஆசிரியர் என்பவர் ஆசிரியரே. அதில் அவரது மதம் குறித்து கேள்வி எழுப்பக்கூடாது. யாராவது அரபிக் மொழி கற்பதையோ, குரான் வாசிப்பதையோ இஸ்லாம் மதம் எதிர்க்கவில்லை" என்றார்.

தகவல் உதவி
தின மலர் நாளிதழ்

http://www.dinamalar.com/news_detail.asp?id=1601020#.V85wyxicC2w.facebook

மனித நேயத்துடன் நடந்து கொண்ட முஸ்லிம்கள்!

மனித நேயத்துடன் நடந்து கொண்ட முஸ்லிம்கள்!



முஸ்லீம் இளைஞர்களின் மதம் பாராது ஓர் இந்துவுக்கு ஈமச்சடங்கு செய்த‌ மனித நேயம்.

ஓரு இந்துவின் சடலத்துக்கு அனைத்து ஈமச்சடங்குகளையும் செய்த முஸ்லீம் இளைஞர்கள் . மனைவியை தவிர வேறு யாருமற்ற 65 வயது வமான் கடாம் தானே அருகில் உள்ள கௌசாவில் நள்ளிரவில் மரணித்தவுடன் அவருக்கு ஈமச்சடங்கு செய்ய யாருமற்ற நிலையில் கலீல் பாவ்னே, ஃபஹாத் தாபிர், நவாஸ் தாபிர்,ராஹில் தாபிர்,ஷபான் கான்,மக்சூத் கான்,ஃபாரூக் கான், முஹம்மது கஸம் ஷேக் ஆகியோர் மூங்கில், பாய், துணி, சாம்பிராணி, மண் பானை அனைத்தையும் வாங்கி வந்து பாடை கட்டி பிரேதத்தை சுமந்து சுடுகாடு சென்று நள்ளிரவு 3 மணிக்கெல்லாம் சடங்குகள் செய்து எரியூட்டினார்கள்.

அவர்கள் செயல் அப்பகுதியிலுள்ள அனைத்து இந்து முஸ்லீம் சமூகத்தாரால் பெரிதும் பாராட்டப்பட்டது.

#Mohamed Ali Jinnah

Muslim youths carry out last rites of Hindu man
By JKR Staff -
September 6, 2016
0
A group of Muslim youths from Mumbra have earned plaudits for carrying out the funeral rites of a Hindu man who passed away in the dead of the night in Kausa area near Thane.

With no one around to take care of the last rites of Waman Kadam (65) except his wife, the eight youths took the initiative of preparing for his funeral.

They purchased necessary ritualistic items like bamboo, rope, earthen pots, incense sticks as well as cloth and a thatched mat.
The youths then carried his body to the crematorium at around 3 AM and performed the last rites.

The gesture did not go unnoticed, with Mumbra-Kalwa MLA Jitendra Awhad saluting them in a Facebook post.

They were also lauded by residents of Muslim dominated Mumbra.

The youths have been identified as Khalil Pawne, Fahad Dabir, Nawaz Dabir, Rahil Dabir, Shaban Khan, Maqsood Khan, Farooque Khan, Mohammad Kasam Shaikh.

Saturday, September 03, 2016

இமயம் டிவியில் பிஜே அவர்களின் பேட்டி.....









பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் பெட்ரோல் பாம்கள்!



பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் பெட்ரோல் பாம்கள்!

உத்தர பிரதேசத்தில் உள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக் கழகத்தில் சில நாட்களாக வன்முறை நிகழ்ந்து வருகிறது. இது சம்பந்தமாக இருபதுக்கு மேற்பட்ட மாணவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். நேற்று ஆசாரியா நரேந்திர தேவ் ஹாஸ்டலில் காவல் துறை ரெய்டு நடத்தியது. அப்போது அங்கு பயங்கர சேதத்தை உருவாக்கும் எட்டு குரூட் பெட்ரோல் பாம்களை காவல் துறை கைப்பற்றியுள்ளனர். இது பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவர்கள் கல்வி கற்க கல்லூரிக்கு வருகிறார்களா? அல்லது வன்முறை பாடம் எடுக்க இங்கு வருகிறார்களா?

இதே போல் இஸ்லாமியர்களின் மதரஸாக்களில் இவ்வாறு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டிருந்தால் நமது இந்திய மீடியாக்கள் செய்திகளை எப்படி திரித்து வெளியிட்டிருக்கும் என்று சொல்லவே வேண்டாம்!

தகவல் உதவி
டைம்ஸ் ஆஃப் இந்தியா
02-09-2015

http://timesofindia.indiatimes.com/city/varanasi/Petrol-bombs-recovered-from-BHU-hostel/articleshow/53980099.cms







அம்பானி அதானி முன்னேற்றக் கழகம்!

Thursday, September 01, 2016

குலக் கல்வியை சந்தடி சாக்கில் நுழைக்கும் மோடி அரசு!



அன்பார்ந்த மாணவர்களே – இளைஞர்களே!

அன்று, உடலால் இந்தியர்களாகவும், சிந்தனையால் ஆங்கிலேயர்களாகவும் உள்ள ஊழியர்களை உருவாக்க மெக்காலே கல்வித் திட்டத்தை புகுத்தியது ஆங்கிலேய அரசு. இன்று, இந்து – இந்தி – இந்தியா எனும் பார்ப்பன தேசியத்தை கட்டுவதற்கு மாணவர்களை தயார்படுத்த புதிய கல்விக் கொள்கை எனும் நவீன மெக்காலே திட்டத்தை புகுத்துகிறது மோடி அரசு.

பார்ப்பனர்கள் வேதம் ஓத மட்டுமே பயன்படுத்தக் கூடிய, செத்த மொழியான சமஸ்கிருதத்திற்கு சிங்காரமாம் – ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை தனிப்பாடப் பிரிவாம். இது ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி-யின் சமஸ்கிருத – வேத கலாச்சாரத்தைத் திணிக்கும் முயற்சியே!

‘படிப்பில் பின் தங்கும் ஏழை மாணவர்களுக்கு ஐந்தாம் வகுப்புக்கு மேல் இனி கல்வி இல்லை. அதன்பின் திறன் மேம்பாட்டுப் பயிற்சி’ என்று பார்ப்பன நரி ராஜாஜியின் குலக்கல்வி திட்டத்தை மீண்டும் உயிர்ப்பிக்க துடிக்கிறது மோடி அரசு.

“200 வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள் இந்தியாவில் கிளை தொடங்க அனுமதி; தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்கள் கல்வித் துறையில் முதலீடு செய்ய ஊக்குவிப்பு; கல்வி நிறுவனங்களில் கல்விக் கட்டணம், நன்கொடை, உள்கட்டுமான வசதிகள் உள்ளிட்ட பிரச்சனைகளில் அரசோ, நீதிமன்றமோ தலையிடக் கூடாது. இதற்கென தனியாக ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்படும்”. இதன் மூலம் கல்வியை கார்ப்பரேட் முதலாளிகள் கைப்பற்றி கொள்ளையடிப்பதையும், அவர்களுக்குத் தேவையான படித்த திறமையான அடிமைகளை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது இந்த புதிய கல்விக் கொள்கை.

கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சங்கம் வைக்கத் தடை – கல்லூரி வாயிலில் போலீசு பூத் வைத்து கண்காணிப்பு என்று மாணவர்கள் படிக்கும் கல்விக் கூடத்தை குற்றவாளிகள் அடைக்கப்படும் சிறைக்கூடமாக மாற்றுகிறது மோடி அரசு!

மொத்தத்தில் இது தேசிய கல்விக் கொள்கையல்ல, பெரும்பான்மை மக்களுக்கு கல்வியை மறுக்கும் கொள்கை. இந்த சதித் திட்டத்தை முறியடிக்க ஓரணியில் திரள்வோம்!

இந்துத்துவா கொள்கை, மறுகாலனியாக்கத்தையும் ஒன்றாக சேர்த்து உருவாக்கப்பட்டுள்ள வீரிய ஒட்டுரகமான புதிய கல்விக் கொள்கையை (2016) முறியடிப்போம்.

சமஸ்கிருத – வேத கலாச்சார திணிப்பின் மூலம் நாட்டை பார்ப்பனிய மயமாக்கத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ்-ன் இந்து ராஷ்டிர கனவைத் தகர்த்தெறிவோம்.!

புதிய கல்விக் கொள்கைக்குஎ திரான சென்னைக் கூட்டத்தில் அணி திரள்வீர்!

மீண்டும் மனுதர்ம ஆட்சி!மீண்டும் காலனியாக்கம்!

சேட்டுகள் – பார்ப்பனர்களின் சதித்திட்டத்தை முறியடிப்போம்!

மோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து…
செப்டம்பர் 1, 2016 மாலை 5 மணி

பொதுக்கூட்டம்
மதுரவாயல்
எம்.எம்.டி.ஏ EB ஆபிஸ் அருகில், சென்னை

நிகழ்ச்சி நிரல்
தலைமை : தோழர் கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர், பு.மா.இ.மு, தமிழ்நாடு

சிறப்புரை :
திரு. பேரா. அ கருணானந்தம், வரலாற்றுத் துறை முன்னாள் தலைவர், விவேகானந்தா கல்லூரி, சென்னை
திரு ரமேஷ், அம்பேத்கர், பெரியார் வாசகர் வட்டம், ஐ..ஐ.டி, சென்னை
திரு பழ கருப்பையா, எழுத்தாளர், சென்னை
திரு பேரா. D. ரமேஷ் பட்நாயக், ஒருங்கிணைப்பு செயலர், அகில இந்திய கல்வி உரிமைக்கான கூட்டமைப்பு, ஹைதராபாத்
தோழர் சி. ராஜு, மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம், தமிழ்நாடு

தகவல்

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
சென்னை, 94451 12675

நன்றி
வினவு தளம்!

http://www.vinavu.com/2016/08/31/public-meeting-opposing-modi-govts-new-education-policy/

காயிதே மில்லத்தைப் பற்றி பேசும் பள்ளிச் சிறுமி!



காயிதே மில்லத்தைப் பற்றி பேசும் பள்ளிச் சிறுமி!
----------------------------------------------------------------
பல உண்மைகளை சொல்கிறார். குமரி அனந்தனும் காயிதே மில்லத்தைப் பற்றி சில தகவல்களை சொல்கிறார். தந்தையின் இந்த வார்த்தையை தமிழிசை அவர்கள் செவி மடுப்பாரா? இந்தியாவின் எதிர்காலத்தையே படு குழியில் தள்ள திட்டமிடும் இந்துத்வாவுக்கு ஆதரவாக செயல்படும் தமிழிசை அவர்கள் இனியாவது திருந்தி தந்தையின் வழியில் காங்கிரஸில் பயணிப்பாராக!