Followers

Saturday, June 17, 2017

தேவதாசி முறைக்கு தள்ளப்பட்ட 10 வயது சிறுமி

தேவதாசி முறைக்கு தள்ளப்பட்ட 10 வயது சிறுமி

கர்நாடகாவின் கலபுர்கி மாவட்டத்தில் கோயில் பூசாரியால் தேவதாசி முறைக்குள் தள்ளப்பட்ட 10 வயது சிறுமி, 5 வருடங்களுக்குப் பிறகு மீட்கப்பட்டுள்ளார்.

காலாபுர்கி மாவட்ட குழந்தைகள் நலக் குழு, சைல்ட் ஹெல்ப்லைன் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் துறை அதிகாரிகள் இணைந்து அச்சிறுமியை மீட்டுள்ளனர்.

இதுகுறித்துப் பேசிய குழந்தைகள் நலக்குழு உறுப்பினரும், சமூக சேவகருமான விட்டல் சிக்கானி, ''5 வருடங்களுக்கு முன்னர் தலித் சிறுமி தேவதாசி முறைக்குள் தள்ளப்பட்டுள்ளார். ஆனால் இந்தத் தகவல் இன்றுதான் எங்களுக்குத் தெரியவந்தது. உடனே அந்தச் சிறுமியை 2 மணி நேரத்துக்குள் மீட்டுள்ளோம்.

சிறுமியின் பெற்றோரும், கோயில் பூசாரி சரணப்பாவும் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். பெற்றோர்களிடம் விசாரிக்கும்போது சிறுமி நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டதாகவும், இதுகுறித்து அவர்கள் பூசாரியிடம் விவாதித்தபோது அவரே தேவதாசியாகச் சிறுமியை கோயிலுக்கு நேர்ந்துவிடுங்கள் என்று கூறியதாகவும் தெரிவிக்கின்றனர்.

தாலி கட்டிய பூசாரி
அதைத் தொடர்ந்து அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டதாகவும், பூசாரி சிறுமிக்கு தாலி கட்டி, மற்ற சடங்குகளைச் செய்ததாகவும் கூறினர். பல ஆண்டுகளாக சுமார் 1000 சிறுமிகளை தேவதாசிகளாக மாற்றியுள்ளதை கோயில் பூசாரி ஒப்புக்கொண்டுள்ளார்'' என்று தெரிவித்தார்.

இதுகுறித்துப் பேசிய துணை ஆணையர் உஜ்வால் குமார் கோஷ், ''இந்த சம்பவம் குறித்து கிராமத்தில் இருக்கும் இரண்டு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால் இதுகுறித்து அவர்கள் எதுவும் கூறவில்லை.அவர்களின் கடமையைச் சரியாகச் செய்யாததால் அவர்களையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாகப் புகார் மனுவில் சேர்த்திருக்கிறோம்.

மீட்கப்பட்ட சிறுமி அரசு சிறார் இல்லத்தில் சேர்க்கப்படுவார். கலபுர்கியிலோ, வெளி மாவட்டத்திலோ அவரைப் பள்ளியில் சேர்க்கவும் முடிவெடுத்திருக்கிறோம்'' என்றார்.

தகவல் உதவி
தமிழ் இந்து
17-06-2017

இந்துத்வா எங்கெல்லாம் காலூன்றியுள்ளதோ அங்கெல்லாம் இது போன்ற கொடுமைகள் அரங்கேறவே செய்யும். மோடியும் யோகி ஆதித்யநாத்தும் முத்தலாக் பற்றி கவலைப்படுவதாக நீலிக் கண்ணீர் வடிப்பதை விடுத்து இந்த அபலைப் பெண்களை மீட்டெடுக்கலாம். இந்த சாமியார் சரணப்பா 1000 சிறுமிகளை இவ்வாறு சீரழித்துள்ளான். இதற்கு இந்துத்வா அரசு என்ன செய்யப் போகிறது? தமிழகத்தில் பெரியாரின் பிரசாரத்தால் இந்த முறை முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளது.




1 comment:

Dr.Anburaj said...


தேவ தாசி முறையும் குழந்தைகள் திருமணமும் தடை செய்யப்பட்டுள்ளது.

சட்டம் சாியாக உள்ளது.தவறு சட்டத்தை மீறி நடந்துள்ளது.நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இன்று பத்திாிகையைப் பாருங்கள்.தென்காசியில் ஒரு ஆட்டோ ஓட்டுநா் கொலை -முஸ்லீம் - செய்யப்பட்ட செய்தியும் கொலையை செய்தவா்கள் காரணம் ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டம் தன் கடமையை செய்யும் என்றுதான் நாம் நம்ப வேண்டும்.

தலாக் தலாக் ஹாலால் என்பது முட்டாள்தனமானது.விவாகரத்து செய்ய அனுமதியை இந்துக்களுளுக்கும் கிறிஸ்தவா்களுக்கு நீதி மன்றம் வழங்குகின்றது.அதுபோல் இனி முஸ்லீம்களுக்கும் நீதிமன்றம் வழங்கும் என்பதுதான் திரு.நரேந்திர மோடி பிரதமராக் கொண்ட மத்திய அரசு கொண்டு வரவிழையும் சட்டம்.இதில் என்ன தவறு கண்டீர்.எல்லா மக்களைக்போல் முஸ்லீம்களும் இந்த நாட்டு மன்னா்தாம்.சட்டங்கள் அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும்.ஒரு முஸ்லீம் ஆண் மகனுக்கு தான் நினைத்தால் ஒரு பெண்ணை விவாகரத்து செய்து விட முடியும் என்ற நிலைமையை முஸ்லீம்கள் யாரும் ஆதாிக்கவில்லை.அறுதி பெரும்பான்மையான முஸ்லிம்கள் அளவறற ஆனந்தத்துடன் இந்தசட்டத்தை ஆதாிக்கின்றாா்கள் என்பது உண்மை.
நிக்காஷ்ஹலால் என்பது விவாதிப்பதற்கே ஒரு அருவருப்பான காாியம்.அரேபிய கைநாட்டு போ்களின் காண்டுமிராண்டித்தனம்.அதைப்போய் இசுலாமிய பண்பாடு ஹலால் தீன் ஷாியா என்று உளறிக்கொடடுவது அறியாமையின் சிகரம்.மடத்தனம்.