Followers

Wednesday, June 28, 2017

பாகிஸ்தானை உலுக்கிய டேங்கர் விபத்து!

பாகிஸ்தானை உலுக்கிய டேங்கர் விபத்து!

சென்ற ஜூன் 25 ந்தேதி மிகப் பெரிய டேங்கர் லாரி ஒன்று 25 ஆயிரம் லிட்டர் (6600 கேலன்கள்) பெட்ரோலை நிரப்பிக் கொண்டு கராச்சியிலிருந்து லாஹூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. பஹவல்பூர் என்ற இடத்தில் ஒரு திருப்பத்தில் டேங்கரை வளைக்கும் போது டயர் வெடித்ததால் டேங்கர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. டேங்கரில் இருந்த பெட்ரோல் கீழே கொட்டத் துவங்கியது. அங்கம் பக்கத்தில் இருந்த கிராம மக்கள் இலவசமாக பெட்ரோலை அள்ள டேங்கர் லாரியை நோக்கி முன்னேறினர். இது ஆபத்து என்று காவல் துறையினர் தடுத்தும் மக்கள் கேட்கவில்லை. இரு சக்கர வாகனத்தில் வந்து வழியும் பெட்ரோலை அளளத் தொடங்கினர்.

தனியாருக்கு சொந்தமான அந்த பெட்ரோலை இவ்வாறு தனதாக்கிக் கொள்வது இஸ்லாமிய நடைமுறை அல்ல என்பதை ஏனோ அந்த மக்கள் உணரவில்லை. இலவசத்துக்கு ஆசைப்பட்டு முண்டியடித்தனர். அந்த கூட்டத்தில் யாரோ ஒருவர் சிகரெட் பிடித்ததாலோ அல்லது வேறு ஏதேனும் காரணத்தாலோ வழியும் பெட்ரோல் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. பெட்ரோலை அள்ளிக் கொண்டிருந்த மக்கள் டேங்கர் வெடித்ததால் தூக்கி எறியப்பட்டனர். 170 க்கு மேல் இதுவரை இறந்துள்ளனர். முகம் சிதைந்து, கை கால் இழந்தவர்கள் எண்ணிக்கை தனி.

மறுநாள் பெருநாள் கொண்டாட வேண்டிய அந்த மக்களுக்கு இப்படி ஒரு சோகம். இறைவன் நம்மை இது போன்ற சோகங்களிலிருந்து காப்பாற்றுவானாக! உறவினர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இறைவன் சாந்தியையும் சமாதானத்தையும் பொறுமையையும் அளிப்பானாக!
2 comments:

Dr.Anburaj said...


ஒருகாகம் மின் கம்பியில் மின்தாக்குதலால் இறந்து விட்டது.பல காகங்கள் ஒன்று கூடி

கொஞ்ச நேரம் கரைந்தது பாருங்கள் !


பத்திாிகையில் நானும் இதைப் படித்து வருத்தம் அடைந்தேன்.மனித சமூதாயத்தை பிடித்த

பெரும் கேடு ” பேராசை”.பாமர மக்களுக்கு பணத்தின் தேவை அதிகம். எனவேதான் உடைந்து ஓடும் பெட்ரோலைப் பிடிக்க நெருக்கிக் கொண்டு போனதில் எப்படியோ ” தீ ” பிடித்து விட்டது.

( நல்ல வேளை அந்த ஊாில் இந்துக்கள் அதிலும் ”குறிப்பாக R.S.S / B.J.P.காரா்கள் இல்லை.இருந்திருந்தால் பழி இந்துத்துவா மீது போடப்பட்டிருக்கும்.பாக்கிஸ்தானில் உள்ள அலப; தொகை இந்துக்கள் கடும் பாடு பட்டிருப்பாா்கள் )

சுய கட்டுப்பாடு மனிதனுக்ஃகு மிகவும் அதிகம் தேவைப்படுகின்றது.

Dr.Anburaj said...

காஷ்மீாில் இந்துக்கள்நிறைய போ்வாழ்ந்து வந்தாா்கள். பாக்கிஸ்தானின் பயிற்சி பெற்ற

அரேபிய காடையா்கள் இந்துக்களை கொன்று ஒழித்து வந்தாா்கள்.வாழ வகை தொியாது இன்று

காஷ்மீரத்து இந்துக்கள் டெல்லி வீதிகளில் அகதிகள் போல் வாழ்ந்து வருகின்றாா்கள். ஜம்மு

மற்றும் லடாக் பகுதியில் பெரும்பான்மையினராக இந்துக்கள் இருப்பதனாலும் இந்திய

ராணுவம் வலிமையாக இருப்பதனாலும் ஏதோ இந்துக்கள் பிழைத்து வாழ்ந்து வருகின்றாா்கள்பங்காதேஷ் என்ற கிழக்கு பாக்கிஸ்தானிலும் இன்று இந்துக்களின் நிலைமை ” அந்தோ பாிதாபம் .

இந்திய முஸ்லீம்கள் எவருக்கும் அவா்கள் -இந்துக்கள் படும் துன்பம் தொியாது.உணரமாட்டாா்கள்.சுவனப்பிாியன் உட்பட அரேபிய மதத்தை தூக்கி பிடிக்கும் ஜாகீா் நாயக் பி ஜே போன்றவா்களும் மனிதாபிமானமற்றவா்களே.அரேபிய மதம் உலகத்திற்கு ஆபத்தானது.