ஒரு உதவி கேட்டு தான் இத டைப் பண்றேன்.,
கோவை கோட்ட மேடு பகுதில நாங்க ரெகுலரா சாப்பிடுற பீப்
கைமாவடை தள்ளு வண்டிக்கடை ஒன்னு இருக்கு., கணவன்
மனைவி ரெண்டு பேர் தான் தினமும் கடை போடுவாங்க, அவருக்கு
தமிழ் அவ்வளவா வராது, மைசூர்காரரு. ஆனா அவங்க மனைவி தமிழ்காரங்க, அவர்
தேவை இல்லாம பேச மாட்டார், அந்த அக்கா சிரிச்ச முகத்தோட நிதானமா பக்குவமா பேசுவாங்க.,
அந்த கடையில நாங்க சாப்பிட ஆரம்பிச்சதுக்கப்புறம் கொறஞ்சது
ஒரு நூறு பேருக்காவது அந்த கடைய அறிமுகப்படுத்தி வச்சிருப்போம்., கைமாவடை அவ்வளவு சுவையா இருக்கும், கூடவே பச்ச சட்னியும் ஒரு சின்ன துண்டு எழுமிச்ச பழத்தையும்
தட்ல வச்சி கொடுப்பாங்க., பாற்க்கடலில்
மாட்டுக்கறியை கடைந்தெடுத்து அதை எண்ணை சட்டியில் வருத்தெடுத்தால் என்ன சுவை
கிடைக்குமோ அதுவே அந்த கைமாவடையின் சுவை.
ஆனா சில மாசமாவே அவங்க கடை போடுறது கம்மி ஆயிடுச்சு, மாசத்துக்கே ஏழு எட்டு தடவ தான் கட இருக்கும், என்னனு கேட்டதுக்கு அந்த அக்கா இவருக்கு உடம்பு சரியில்லனு
மட்டும் சொன்னாங்க, சரி
காச்சல் மாதிரி ஏதாவது இருக்கும்னு அசால்ட்டா விட்டுட்டோம்.,
இன்னும் ரெண்டு நாள்ல நூறு கைமாவடை வேணும்னு நேர்ல போயி
ஆர்டர் கொடுக்கலாம்னு போனா இன்னைக்கும் கடை இல்ல,
அவரோட நம்பர தேடி நண்பன்கிட்ட வாங்கி போன் பண்ணா அந்த அக்கா
எடுத்தாங்க, அக்கா
நாளைக்கு ஒரு விசேசத்துக்கு கைமாவட வேணும் போட்டுத்தர முடியுமானு கேட்டேன்.,
அவங்களுக்கு நா யாருனு தெரியல, ஒரு படத்துக்காக அங்க ஷூட் பண்ணோம், அத நாபக படுத்தின உடனே புரிஞ்சிக்கிட்டாங்க, இல்லப்பா அவர கொழுஞ்சியாம்பாறை பக்கத்துல இருக்குற
ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணிருக்கோம் இப்ப முடியாதுபா னு சொன்னாங்க, என்ன ஆச்சிக்கானு கேட்டேன்,
அவங்க குரல் நடுக்கம் எடுத்துருச்சி, இல்லப்பா சுகர் அதிகமாகி ஆப்பரேசன் பண்ணி இருக்கு, இப்ப தான் ஐ.சி.யூ கொண்டுபோனாங்கனு சொல்லவும் எனக்கு ஒரு
மாதிரி ஆயிடுச்சி, அக்கா
என்ன ஆப்பரேசன்ங்கனு கேட்டேன், சுகர்
அதிகமாகி கவனிக்காம விட்டதால முட்டிக்கு கீழ கால் எல்லாம் இன்பெக்சன் ஆயிடுச்சுனு
அதனால முட்டிக்கு கீழ ஒரு கால எடுத்துடாங்க................
ஒரு சில வினாடிகள் நானும் பேசல அந்த அக்காவும் பேசல....
சின்ன ஆறுதல் சொன்னதுக்கு அப்புறம் எனக்கு என்னமோ கேக்கனும்னு தோணிச்சி கேட்டேன், அக்கா ஆப்பரேசனுக்கு பணம் எல்லாம் ஒன்னும் சிக்கல்
இல்லையேனு....அக்கா அழுதுட்டாங்க...இன்னும் பணம் கட்டல தம்பி, என்ன பண்றதுனு தெரியாம முழிச்சிக்கிட்டு இருக்கேன்
குழந்தைங்கள வச்சிக்கிட்டு, இந்த
ஊர்ல எங்களுக்கு யாரும் இல்லப்பா, கட
விட்டா வீடு, இல்ல
கடையே தவிர... அப்படியே போயிட்டோம்...ஸ்கூல் வேற திறக்க போகுது இன்னும் பீஸ் கட்ட
பணம் இல்ல...மறுபடியும் அழுதுட்டாங்க...நாங்க ஏதாவது உங்களுக்கு பண்றோம்கான்னு
நாலு ஆறுதல் வார்த்த சொல்லி வச்சிட்டேன்...
இதெல்லாம் உங்ககிட்ட சொல்லி உதவி கேக்கலாம்னு தான் இத எழுதி
இருக்கேன், அந்த
கடையில சாப்ட்டவங்க யாராவது இத படிச்சா சாப்ட்ட நன்றிக்காவது அவங்களுக்கு எதாவது
உதவி பண்ணுங்க.,அந்தக்கடையில
சாப்பிட்டவங்க மட்டும்னு இல்ல இரக்கம் இருக்குற யாரா இருந்தாலும் கொஞ்சமா
இருந்தாலும் அவங்களுக்கு உதவலாம். ஒரு ஐநூறு ரூபா கூட இப்ப அவங்களுக்கு பெரிய
உதவியா இருக்கும்...
அந்த அக்காவோட பேங்க் அக்கவுண்ட் நம்பர் :
Tamilnadu Mercantile Bank. Trichy Road Main Branch.
A/C no : 016100050309313.
A/C Holders Name - fyroja.
TMBL 0000016
Tamilnadu Mercantile Bank. Trichy Road Main Branch.
A/C no : 016100050309313.
A/C Holders Name - fyroja.
TMBL 0000016
1 comment:
Sir, I would like to request you to write a article about tajmahal.
Post a Comment