2989 கோடியை பாழாக்கும்
இந்துத்வா அரசு!
குஜராத்தில் நர்மதை
ஆற்றுக்கு பக்கத்தில் உலகிலேயே உயரமான சர்தார் வல்லபாய் படேலின் சிலையை நிறுவுகிறது
மோடி அரசு. மத்திய பெட்ரோலிய துறை (PSU) 200 கோடி இனாமாக தருகிறது. இந்தியன் ஆயில் கார்பரேஷன் (IOC) 50
கோடி தருகிறது. இந்த சுமைகளெல்லாம் வருங்காலங்களில்
ஏழை மக்களின் மீது மறைமுகமாக திணிக்கப்படும்.
20000 ஸ்கொயர் மீட்டர்
பரப்பளவுள்ள புழக்கத்தில் உள்ள ஏரியை தூர் வாரி படேலின் சிலையை நிறுவுகிறார்களாம்.
விவசாயிகள் வறுமையால் தற்கொலை செய்து கொள்ளும் ஒரு ஏழ்மையான நாட்டுக்கு சிலைக்கு
2989 கோடியை எந்த சிறந்த ஆட்சியாளராவது ஒதுக்குவாரா? இப்போது இந்த சிலைக்கு
என்ன அவசியம் வந்து விட்டது? இதை எல்லாம் கேள்வி
கேட்டால் நீங்கள் தேச துரோகி :-) போராட்டம் பண்ணிய
மத்திய பிரதேச விவசாயிகளின் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தி ஐந்து விவசாயிகளை
கொன்று போட்ட மோடிக்கு அதன் வலி தெரியுமா? டெல்லியில் நிர்வாண
போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகளின் வலி தெரிந்தால் சிலைக்கு இத்தனை கோடி சென்றிருக்குமா? தெரிந்திருந்தால்
ஒன்றுக்கும் உதவாத சிலைக்கு 2989 கோடியை ஒதுக்குவாரா?
மாட்டுக் கறி தடையால்
ஏற்கெனவே இந்திய பொருளாதாரம் சரிவை நோக்கி செல்கிறது. இன்னும் மூன்று ஆண்டுகளில் நமது
நாட்டை கார்பரேட் முதலாளிகளுக்கு மோடி தாரை வார்த்து விடுவார். காவிகளின் ஆட்சியில்
இதுதான் சாதனையாக பேசப்படும்.
தகவல் உதவி
இந்தியன் எக்ஸ்பிரஸ்
06-06-2017
தகவல் உதவி
இந்தியன் எக்ஸ்பிரஸ்
06-06-2017
http://indianexpress.com/article/india/for-sardar-patel-statue-oil-psus-are-directed-to-pay-rs-200-crore-4690888/
No comments:
Post a Comment