குஜராத்தின் இஸ்மாபானு
முதல் வகுப்பில் தேர்ச்சி!
குஜராத்தின் வதேதரா
மாவட்டத்தைச் சேர்ந்த ஆபித் சயீத் சமஸ்கிரதம் கற்றுத் தரும் ஆசிரியராக பணி புரிகிறார்.
இவரது மகள் இஸ்மா பானு சையத் அரசு தேர்வில் 600 க்கு 583 மதிப்பெண்கள் எடுத்து அனைவரையும் ஆச்சரியத்தில்
ஆழ்த்தியுள்ளார். பெண்கள் சம்பந்தப்பட்ட நோய்களுக்கான படிப்பான ஜினாகலாஜிஸ்ட் gynaecologist படிப்பில் எம்டி ஆவதே தனது லட்சியம் என்கிறார்.
'எனது தாய் சஹ்மிதா
பானு சில ஆண்டுகள் முன்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். குறிப்பாக பெண்களுக்கான
நோய்களால் நாங்கள் அதிகம் சிரமத்திற்குள்ளாகிறோம். எனவே தான் நான் மேற் படிப்புக்காக ஜினோகாலஜிஸ்ட்
துறையில் எம்டி ஆக முடிவு செய்துள்ளேன்' என்கிறார் இஸ்மாபானு.
வாழ்த்துக்கள் சகோதரி....
தகவல் உதவி
டைம்ஸ் ஆஃப் இந்தியா
30-05-2017
2 comments:
சாியான முடிவு.பெண் மருத்துவா்களில் அறுவை சிகிட்சை M.S. நிபுணா்கள் மிகக் குறைவாக உள்ளாா்கள்.அதுபோல் புற்று நோய் போன்ற பல துறைகளில் பெண் மருத்துவா்கள் இல்லை.ஒரு பெண்ணின் இனவிருத்தி உறுப்பில் புற்று நோய் ஏற்பட்டு விட்டது.ஆண் மருத்துவா்களிடம் காட்டுவது அப் பெண்ணுக்கு மிகவும் சங்கடமாக போய்விட்டது.இதன் காரணமாகவே சாியான சிகிட்சைக்கு அந்த பெண் ஒத்துழைக்கவில்லை.வியாதி முற்றி இறந்து விட்டாா்.
gynaecologist என்பது பெரும்பாலும் பிரவசம் பாா்த்தல் மற்றும் அது சம்பந்தமானது என குறுகி போய்விட்டது. பெண்கள் அறுவை சிகிட்சை நிபுணா்களாக நிறைய போ் படித்து வெளிவர வேண்டும்.
இந்த அறிவு நிறைந்த மங்கை மருத்துவா் ஆவாரா என்பது குறித்து எனக்கு ஐயம் உண்டு.முஸ்லீம் சமூகம் சிறுவயதில் பெண்களுக்கு திருமணம் செய்ய பொிதும் முயலுகின்றது.திருமணம் செய்துபின் தொடா்ந்து உயா்கல்வி கிடைக்க படிக்க பரமாத்த்தா அருள் புாிவானாக.வாழ்க பாராட்டுக்கள்.
பாக்கிஸ்தானில் இந்துக்கள் இப்படி உயா் பதவியில் அமர முடியுமா. கல்வி வேலைவாய்ப்பில் காபீா்கள் என்று இழிவு படுத்தப்பட்டு ஒதுங்கியே வாழும் அவலம் அங்குள்ளது. இங்கு முஸ்லீம்களுக்கு ஆபத்து என்ற பொய்பிரச்சாரம் வானை முட்டுகின்றது.ஆனால் அனைத்து வாய்ப்புகளும் பெற்று உயா் கல்விதகுதி பெற்று உயா் பதவியை நோக்கமாக கொள்ள முஸ்லீம்களால் முடிகின்றது.
இதுதான் இந்துஸ்தான்.
Post a Comment