மேலப்பாளையத்தானுக்கு இனி தொழிலே கிடையாது !
இனி உன் தொழில்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக பறிக்கப்படும் !
உங்களுக்கெல்லாம் நினைவு இருக்குமா என்று தெரியவில்லை ...பல
வருடங்களுக்கு முன் நம் தெருவில் கிட்டத்தட்ட காலை ஒரு 11 மணி
அளவில் "உப்போவ் உப்போவ்" என்றும் "கோலாப்பொடி, கோலாப்பொடி"
"கீர கீரை" வெங்காயம்" "புளீ" "பால்"
"தயிர்" "கிழங்கு" "கருப்பட்டி"
"மண்டவலம்"
#மாலை_நேரம் ஆனால்
'வடை" "தட்டம் பயிரு" "அச்சி
முருக்கு" "பணியம்" "சுசியம்" கருப்பட்டி
"மிட்டாய்" "தட்டை" "பயனீ"
#இரவு_நேரத்தில் "சுக்கு
காப்பி" "மிளாகு பால்" "ஊருகாய்" "கொண்ட கடலை"
"தட்டாம் பயிரு" என்ற குரல்கள் ஒலித்து இருக்கும் ...
ஆனால் இன்று மேலே ஒழித்த அனைத்து சத்தமும் மறைந்துவிட்டது
"கோலாப்பொடி, கோலாப்பொடி" " இரும்பு பித்தளை ப்ளாஸ்டிக்
வியாபாரி சத்தம் மட்டும் மிஞ்சியது !
ஆம் ! உப்பில் ஐயோடின் இல்லை என்று தொடர்ந்து பிரச்சாரம்
செய்யப்பட்டது, பிறகு சிறு தொழில் மற்றும் தமிழ்நாட்டுகாரர்களிமிருந்து
அந்த தொழில் முழுவழுமாக பறிக்கப்பட்டு வடஇந்திய கம்பெனிகளான டாடா சால்ட் , ஆசிர்வாத்
சால்ட்களிடம் கொடுக்கப்பட்டது !
விவாசாய நிலங்களை குறி வைத்து நெல்லைக்கே பெருமை சேர்ப்பது
போல விளம்பரம் செய்து நெல்லை மக்களை உளவியல் மாற்றம் செய்து விவசாய நிலங்களை
அழித்து துணிக்கடை பாத்திரக்கடைகள் அமைத்து விட்டார்கள் ஊர் காரர்களாக வேடிக்கை
பார்த்துகொண்டு இருந்தோம்
அனுமதி இல்லாத விவசாய நிலங்களை பணத்துக்காக அபகரித்து
ப்ளாட் போட்டு விற்றார்கள் அழிந்தது பனை மர தோட்டங்கள் , கருப்பட்டி
அழித்து வெள்ளை சர்க்கரை இறக்குமதி செய்தார்கள் வெள்ளையாக இருந்தால் நாம்
பிரியத்தை சொல்லவா வேணும்?
விவசாயி குடிசை தொழிலாளி நேரடியாக மக்களிடம் தொடர்பு
வைத்திருந்தால் காப்ரேட் ஊடுருவ முடியாது என பாலித்தின் கவரால் மூடிய காய்கறிகளை, பால், தயிர், எண்ணை
நெய் , விற்று வவசாயிகளின் தொடர்பை விட்டு நம்மை ஒதுக்கியதே
அழிந்தது நம்மை நம்பி வியாபாரம் செய்த விவசாயி அவன் குடும்பம் மட்டும் அல்ல நம்
உடல் நலனும் ஆடுத்த தலைமுறையும் தான்
இப்படி எத்தனையோ அழித்து இன்று மறைமுகமாக நம்மை ஆண்டுகொண்டு
இருக்கின்றனர்? அதன் விளைவு நம் ஊரில் மெடிக்கல் கடைகள் இன்று 100 ஐ
தொட்டுவிட்டது
அடுத்து குளம், பாளையம்
கால்வாய். அழிவின் பாதையில்
ஏன் என்றால் ஐயோடின் நம்மால் உப்பில் சேர்க்க முடியாது
அல்லவா ? அதை சேர்க்க சூப்பர்மேன்களான வடஇந்திய கம்பெனிகளால் மட்டுமே
முடியுமல்லவா ? என்ன ஓர் அவலம் ? இந்த
அவலம் முற்றிலுமாக நடந்தேறிவிட்டது. தமிழர்காளன நாம் வேடிக்கை மட்டுமே
பார்த்துக்கொண்டு இருந்தோம்.
இப்போது ஒரு சில நடந்தேறிய விசயங்களை சொல்கிறேன், கொஞ்சம்
யோசித்து பாருங்கள்.
கடந்த ஓரிரு வருடங்களாக மெல்ல மெல்ல பிளாஸ்டிக் முட்டை
தமிழ்நாட்டில் வருகிறது என்றும், sunflower ஆயி
லில் பெட்ரோல் இருக்கிறது என்றும் மெல்ல மெல்ல பரப்பப்பட்டது.... பிறகு ஜெயலலிதா மறைகிறார்.
லில் பெட்ரோல் இருக்கிறது என்றும் மெல்ல மெல்ல பரப்பப்பட்டது.... பிறகு ஜெயலலிதா மறைகிறார்.
இதன் வேகம் ஜெட் ஸ்பீடில் செல்கிறது. கோல்ட் வின்னர் (காளீஸ்வரி) நிறுவனம்மீது தீடீர் என்று வருமான வரி சோதனை, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அணைத்து பாலிலும் கலப்படம் உள்ளது என்று எந்த வித ஆதாரம் இல்லாமல் தொடர்ந்து ஊடகங்களில் பேட்டி அளிக்கிறார். இப்போது பிளாஸ்டிக் அரிசி என்று ராக்கெட் வேகத்தில் ஏன் ? எதனால் ?
அங்குதான் இருக்கிறது வடஇந்திய பெரு நிறுவனங்களின்
மிகப்பெரிய லாபி ! இவர்கள் தொடர்ந்து தமிழ்நாட்டில் ஊடுருவ பல உத்திகளை
கையாண்டார்கள் , உப்பு விற்க்கும் சிறு வியாபாரிகள் போன்ற விசயத்தில் தமிழக
வியாபாரிகளை ஒழித்து வெற்றியும் கண்டார்கள் ! இப்போது நம் அடிப்படை உணவுகாளான
முட்டை, பால் மற்றும் அரிசி வரைக்கும் வந்துவிட்டார்கள் !
முட்டை, அரிசி போன்ற வியாபாரங்கள் கொங்கு வேளாள கவுண்டர்கள் கையிலும், காளீஸ்வரி (கோல்ட் வின்னர்) மற்றும் பால் வியாபாரங்கள் (அருண் ஐஸ் கிரீம்ஸ்/ஹட்சன் ) நாடார்கள் கையிலும, ஆடு மாடு கசாப்பு கடைகள் பாய்மார்களிடம் உள்ளது. அதை அவர்கள் சிறப்பாகவே செய்து வருகிறோம்
நம்மிடம் இருந்து இதை பறிக்க பல முயற்சிகள் நடந்த போதிலும்
இவர்களின் சமுதாயத்தில் இருக்கும் ஒற்றுமை இவர்களை காப்பற்றி வந்தது.
பிறகு அரிசி வியாபாரத்தையும் முட்டை/கோழி வியாபாரத்தையும்
வைத்துஇருக்கும் கவுண்டர்களையும், பால்
மற்றும் எண்ணெய் வியாபாரத்தை கையில் வைத்துஇருக்கும் நாடார்களையும் எப்படித்தான்
ஒழிப்பது ? சிபிஐ ரைட் போன்ற நேரடி தாக்குதல்கள் பிறகு வடஇந்திய
நிறுவனங்கள் லோக்கல் உதவியை நாடுகிறது !
நம்மாழ்வார் 'விதைகளை
என்னிடம் கொடுத்து வையுங்கள், நான்
பத்திரமாக பதுகாத்து ஊருக்குள் எல்லாருக்கும் கொடுத்துவிடுகிறேன்' என்ற
வகையிலான பரப்புரையில் ஈடுபட்டதாக தெரியவில்லை. ஆனால் இன்று அவரது பெயரை
போட்டுக்கொண்டு பெரும் மாஃபியா கும்பல் அவர் சொல்லாததையெல்லாம் செய்துவருகிறது.
நம் பெண்களுக்கு அரிசியைக் கையில் அள்ளினாலே பச்சரிசியா
புழுங்கலராசியா என தெரிந்துவிடும். கொஞ்சம் வாயில் போட்டுப் பார்த்ததும் அது
எவ்வளவு நேரம் வேக வேண்டும், எவ்வளவு
தண்ணீர் ஊற்றி ஆரம்பிக்கவேண்டும் என்பதை சொல்லிவிடுவார்கள். ஆனால் இன்ரைய தலைமுறை
பெண்கள் அப்படியே நேர்மார் அவர்களுக்கு சமயலரை என்றாலே அலர்ஜி
இனி நீங்கள் கோதுமை நல்லது, இந்த
செர்டிபிகேட் வாங்கிய அரிசியை மட்டும் பயன்படுத்துங்கள் போன்ற அவலங்களை
பார்க்கக்கூடும் !
அந்த செர்டிபிகேட்டும் அவர்களால் மட்டுமே கொடுக்க முடியும்
என்று சட்டம் கூட வரும் ! இனி பாபா ராம்தேவின் பதஞ்சலி அரிசிகள் வரக்கூடும் !
ஒவ்வொன்றாக நம் ஊர் விவசாயிகளையும் தொழில்களை பறிகொடுத்து
கொண்ட துளிக்கடையும் சூப்பர் மார்க்கேட்டும் மெடிக்கல் கடையும் ஹோட்டல் கடையும்
துவங்கி கொண்டு இருக்கிறோம்....
இதில் பாதிப்பு இந்துக்களுக்கு தானே என்று நான் வேறு மதம்
எனக்கு என்ன பிரச்சனை என்று நீங்கள் நினைத்து கொள்ளலாம் ஆனால் முதலில்
அப்படித்தானே ஆரம்பிக்கும் !
முதலில் இஸ்லாமியர் தலித்துகள் மட்டும் தான்
தேசத்துரோகிகள்!!!
இப்போது தழிமிழர்கள் அனைவரும் தேசத்துரோகி ஆகவில்லையா ??
அதே யுக்திதான்
அதே யுக்திதான்
by Thameem tantra
No comments:
Post a Comment