மனித உயிரை விட பசுவின்
உயிர்தான் முக்கியம்!
சென்ற சனிக்கிழமை
உத்தர பிரதேசத்தில் ஹரியா நகரத்தில் விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது. போலீஸ் வாகனம்
தனது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்றுள்ளது. சாலையில் அந்த நேரம் பல பசுக்கள்
ஒய்யாரமாக சென்று கொண்டிருந்தன. வாகனம் பசுக்கள் மேல் மோதினால் கோமாதா காவலர்களால்
தாக்கப்படக் கூடும் என்று அஞ்சிய ஓட்டுனர் சாலை ஓரம் நடந்து சென்ற மக்கள் கூட்டத்தில்
வாகனத்தை ஓட விட்டு நிறுத்தியுள்ளார். அங்கு நடந்து சென்ற உஷா தேவி (60) என்ற பெண் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். அவரது
இரண்டு வயது நான்கு வயதையொத்த பேத்திகள் கடுமையான காயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வீட்டில் கட்டிப்
போட வேண்டிய உனது பசு தெய்வத்தை ஏனடா ரோட்டில் பொறுக்க விட்டாய் என்று எந்த தேச பக்தனும்
கேள்வி எழுப்பவில்லை. காவிகளின் ஆட்சியில் மனித உயிரை விட பசுவின் உயிர்தான் முக்கியம்
போல.....
தகவல் உதவி
ஹிந்துஸ்தான் டைம்ஸ்
03-06-2017
http://www.hindustantimes.com/india-news/uttar-pradesh-police-jeep-tries-to-save-cow-kills-woman/story-mGnuCtCLVvs5P2tBTizFTM.html
No comments:
Post a Comment