'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Saturday, January 04, 2014
ஈரான் தலைவர் ரூஹானியின் அழகிய பேட்டி!
மிகச் சிறந்த பேட்டி. ஒரு நட்டின் தலைமைத்துவத்துவத்தில் உள்ள ஒரு நபர் எப்படி பேச வேண்டுமோ அந்த இலக்கணம் சற்றும் குறையாமல் எடுக்கப்பட்ட பேட்டி. 'நாங்கள் அறிவியலை ஆக்கபூர்வமான பணிகளுக்கு பயன் படுத்தவே விரும்புகிறோம். அதே சமயம் எங்களின் பாதுகாப்பை பலப்படுத்தி வைத்துக் கொள்வதும் எங்களுக்கு அவசியமாக படுகிறது. எட்டு வருடங்கள் ஈராக்கோடு சண்டையிட்டு அதிலிருந்து பல பாடங்களைக் கற்றுக் கொண்டுள்ளோம். இது வரை நாங்கள் எந்த நாட்டையும் ஆக்கிரமிக்கவில்லை. அது எங்களுக்கு அவசியமும் இல்லை' என்று மிக அழகாக தனது வாதங்களை வைக்கிறார் ரூஹானி.
ஆங்கிலம் ஓரளவு தெரிந்தாலும் தனது தாய் மொழியை விட்டுக் கொடுக்காமல் அவரது மொழியிலேயே பேட்டியளித்தது மற்றொரு சிறப்பு. 'கடைசிலாவது சில வார்த்தைகள் ஆங்கிலத்தில் பேசுங்களேன்' என்று பேட்டியாளர் கேட்டவுடன் சில வார்த்தைகள் பேசுகிறார்.
ஆங்கிலம் அரை குறையாக படித்த நம் தமிழர்களில் பலர் சிரமப்பட்டு ஆங்கிலத்தை கலந்து பேசி தாய் மொழியை புறந் தள்ளுவதை நாம் தொடர்ந்து பார்க்கிறோம். அவர்கள் ரூஹானியின் இந்த பேட்டியைப் பார்த்த பிறகாவது சுத்த தமிழில் பேச முயற்சிப்பார்களாக!
--------------------------------------------------
இனப் பற்று இருக்கலாம்: ஆனால் அது இன வெறியாக மாறி விடக் கூடாது என்பதனை அழகாக உணர்த்தும் ஒரு நபி மொழி!
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
முத்துக்குமார்!
//இனிமேல் சுவனப் பிரியன் இந்தப் பக்கம் தலைவைத்துப் படுக்கமாட்டார் என்றே நினைக்கிறன்.திரு.பாண்டியன் கொடுத்த அடி அப்படி. //
அப்படி என்ன ஒரு பெரிய அடியை கொடுத்து விட்டார்? அதற்கான விளக்கத்தையும் நான் கொடுத்து விட்டேனே! :-)
//காமெடியனை இழப்போம்.//
காமெடியனாக இருந்து நாலு பேரை சிரிக்க வைக்கலாம்!
வில்லனாக இருந்து நாலு குடும்பம் நாசமாகக் காரணமாகி விடக் கூடாது.
ஈரான் நாடு உருப்பட வேண்டுமானால் அது அரேபிய சிந்தனை முறையிலிருந்து மாற வேண்டும். அதன் அடிப்படை பண்பாடு பாரசீகம் - தனது பண்டைய மதப்பண்பாட்டின் அடிப்படையில் தன்னைத் திருத்தி அமைத்துக் கொள்ளவேண்டும்.அரேபிய வல்லாதிக்கத்தின் அடிமையாக இருந்தால் ஈரானும் ஈராக்கும் நீண்ட ..... நீண்ட காலம்யுத்தம் செய்து பேரழிவை அனுபவித்தது நிற்காது. யுதா்களை ஒழிக்க வேண்டும் என்பது இனவெறிதானே. யுதா்களை மக்கா மதினா போன்ற இடங்களிலிருந்து இனவெறி மதவெறி கொண்டு விரட்டியது முகம்மது மற்றும் சகாக்கள்தானே. உலகிலன் மிகச்சிறந்த போா் விமானத்தில் ஒன்றாகக் கருதப்படும் ”பால்கன” ரக போா் விமானம் இஸ்ரவேலின் தயாாிப்பு ஆகும்.இந்தியாவிற்கு 6 போா் விமானங்களை அளிக்க சம்மதித்து 2 போா் விமானங்களை இஸரவேல் அளித்துள்ளது. ஆறு மிராஜ் -2000 போா் விமானங்களின் பாதுகாப்போடு 2 பால்கன் போா்விமானங்களை இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டது. பால்கன் விமானங்கள் மிக நவீன மானவை.இதுபோன்ற தொழில் நுட்ப சாமா்த்தியம் அரேபிய வல்லாதிக்க அடிமை நாடுகள் ஒருபோதும் பெற இயலாது.ஈரான் -ஈராக் போாில் இரு நாடுகளுமே இஸ்ரேலில் இருந்து ஆயுதங்களைப் பெற்று மற்றவா்களை அழித்தனா். இதுதான் இக் அரேபிய அடிமைகளின் லட்சணம்.
சுவனப்புத்திரன் கோரீஸ் பெண்கள் குறித்த சிந்தனையில் உள்ளீரோ ? எனது கடிதத்திற்கு பதில் எழுதவில்லையே ஏன் ?
Post a Comment