திருநாவுக்கரசரின் தேவாரம் 3051.
என்றும்நாம் யாவர்க்கும் இடைவோ மல்லோம்
இருநிலத்தில் எமக்கெதிரா வாரு மில்லை
சென்றுநாம் சிறுதெய்வம் சேர்வோ மல்லோம்
சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம்
ஒன்றினாற் குறையுடையோ மல்லோ மன்றே
உறுபிணியார் செறலொழிந்திட் டோடிப் போனார்
பொன்றினார் தலைமாலை யணிந்த சென்னிப்
புண்ணியனை நண்ணியபுண் ணியத்து ளோமே.
5. பொ-ரை: சிவபெருமான் திருவடியே சேரப்பெற்றோமாய், இறந்த பிரமவிட்டுணுக்களுடைய தலைகளை மாலையாகக் கோத்து அணிந்த தலையையுடைய புண்ணியனை நண்ணிய புண்ணியத்து உள்ளோமாதலின் யாவர்க்கும் யாம் என்றும் பின்வாங்குவோம் அல்லோம். இப்பரந்த பூமியில் எமக்கு எதிராவார் யாரும் இல்லை. யாம் தேடிச்சென்று சிறு தெய்வங்களைச் சேர்ந்து தொழுவோம் அல்லோம். யாம் ஒன்றினாலும் குறையுடையேம் அல்லேம். அதனால் மிக்க பிணிகள் எம்மைத் துன்புறுத்தலை விட்டு ஓடிப்போயின.
கு-ரை: இடைதல் - பின்வாங்குதல். எதிராவார் - இணையாவார்; உம்மை, 'உயர்வாவாரும் இல்லை' என, எதிரது தழுவிற்று. இனி, 'எதிராக ஆரும்' இல்லை என்றலுமாம். 'சேர்வோம் அல்லோமாய்' என, எச்ச மாக்குக. அன்றே - அமணரை விட்டு நீங்கிய அன்றே. உறுபிணி - மிக்கநோய். செறல் - வருத்துதல். "பிணியார்" எனவும், "ஓடிப்போனார்" எனவும் உயர்திணையாக்கியருளியது, அதனது மாட்டாமையாகிய இழிபுணர்த்தற்கு. பொன்றினார் - இறந்தவர். நண்ணிய புண்ணியம் - அடைந்த புண்ணியப் பயன். "சேரப்பெற்றோம், புண்ணியத்துளோம்" என்பவற்றை முதற்கண் வைத்து, 'அதனால்' என்னும் சொல்லெச்சம் வருவிக்க.
சிவபெருமான் திருவடியே சேரப்பெற்றோமாய், இறந்த பிரமவிட்டுணுக்களுடைய தலைகளை மாலையாகக் கோத்து அணிந்த தலையையுடைய புண்ணியனை நண்ணிய புண்ணியத்து உள்ளோமாதலின் யாவர்க்கும் யாம் என்றும் பின்வாங்குவோம் அல்லோம். இப்பரந்த பூமியில் எமக்கு எதிராவார் யாரும் இல்லை. யாம் தேடிச்சென்று சிறு தெய்வங்களைச் சேர்ந்து தொழுவோம் அல்லோம். யாம் ஒன்றினாலும் குறையுடையேம் அல்லேம். அதனால் மிக்க பிணிகள் எம்மைத் துன்புறுத்தலைவிட்டு ஓடிப் போயின.
இந்த உலகத்தில் எவருக்கும் நாம் சளைத்தவரில்லை: இந்த உலகில் நமக்கு எதிரிகள் எவரும் இல்லை: சிறு தெய்வ வணக்கங்களை விட்டொழிப்போம்: பரம் பொருளாகிய சிவபெருமானின் திருவடிகளையே பூஜிப்போம்: எந்த குறையும் எம்மை அண்டாது: இவ்வாறு சிவ பெருமானை மட்டுமே வணங்கியதால் எமக்கு வந்த துன்பங்கள் எம்மை விட்டு விரண்டோடின:
ஏக தெய்வ வணக்கத்தை மிக அழகிய முறையில் இந்த பாடல் நமக்கு எடுத்துக் காட்டுகிறது. சிவ பெருமானின் உருவத்தை பின்னால் வந்தவர்கள் தங்களின் கற்பனையால் உருவாக்கிக் கொண்டனர். ஒரு சிலர் உருவமில்லாத வெறும் லிங்கதத்தை மட்டுமே வைத்து வழிபடுவர். சிறு தெய்வங்களாக கருதப்படும் முருகன், பிள்ளையார், சரஸ்வதி, நாகூர் ஆண்டவர், வெங்கடாஜலபதி, ஐயப்பன் போன்றவைகளை வணங்குவது வெற்றியைத் தராது என்று இந்த பாடல் நமக்கு உணர்த்துகிறது.
பெருமபாலான மக்கள் இது போன்ற சிறு தெய்வ வணக்கங்களில் ஈடுபடுவதை சர்வ சாதாரணமாக பார்க்கிறோம். 'நாகூர் தர்ஹாவுக்கு ஏன் போகிறீர்கள்? எந்த ஆதாரத்தில் செல்கிறீர்கள்? முருகன் கடவுள் என்று யார் சொன்னது? அந்த உருவில்தான் கடவுள் உள்ளார் என்பதை எது உனக்கு தெரிவித்தது" என்று கேட்டால் அவர்களிடம் பதில் இருக்காது. இது பற்றிய ஒரு குர்ஆன் வசனத்தை பார்ப்போம.
'பூமியில் உள்ளவர்களில் அதிகமானோருக்கு முஹம்மதே நீர் கட்டுப்பட்டால் அவர்கள் உம்மை இறைவனின் பாதையிலிருந்து வழி கெடுத்து விடுவார்கள். அவர்கள் ஊகத்தையே பின் பற்றுகின்றனர். அவர்கள் அனுமானம் செய்வோர் தவிர வேறு இல்லை.'
-குர்ஆன் 6:116
அன்றைய அரபு மக்களிடம் 'உங்களை படைத்தது யார்?' என்றால் 'அல்லாஹ்' என்று அழகாக பதில் சொல்வார்கள். ஆனால் சிலைகளை செய்து வைத்து அதை பூஜித்து சிறு தெய்வ வணக்கங்களையும் செய்து வந்தனர். ஏன் என்று அவர்களிடம் கேட்டால் 'இந்த சிறு தெய்வங்கள் இறைவனிடம் எங்களுக்காக பரிந்து பேசும்' என்ற பதிலை சொல்வார்கள். இதை கண்டிக்கும் முகமாகத்தான் முஹமது நபியைப் பார்த்து இந்த வசனத்தில் இறைவன் அழகிய கேள்வியைக் கெட்கிறான். இன்றும் கூட 'நாகூர் தர்ஹாவுக்கு ஏன் போகிறீர்கள்?' என்று நாம் கேட்டால் 'இறைவனிடம் எங்களுக்காக இங்கு அடங்கி இருப்பவர் பரிந்து பேசுவார்' என்ற பதிலை சொல்கிறார்கள். இதற்கு ஆதாரம் எதனையும் அவர்கள் சமர்ப்பிப்பதில்லை. அன்று இறங்கிய வசனம் இன்றும் நமது தமிழகத்துக்கும் பொருந்துவதைப் பார்த்து ஆச்சரியப்படுகிறோம்.
5 comments:
திரு.சு.பி.சுவாமிகள்,
அடடா என்ன ஆச்சரியம்,தங்களை ஏக இறைவன் சிவன் தடுத்தாட்க்கொண்டுவிட்டாரா? சிறந்த சிவ பக்தரின் உரையை கேட்டது போல இருக்கு பதிவு அவ்வ்!
விரைவில் கயிலாய புனித யாத்திரைமேற்கொண்டு பயணக்கட்டுரை வெளியிடுவீர்கள் என நினைக்கிறேன் :-))
# சிவ வழிப்பாட்டின் தொன்மை தமிழகத்தில் எத்தகையது எனத்தெரியவில்லை,ஆனால் முருக வழிபாடு தமிழகத்தில் மிக தொன்மையானது என தொல்லியல் சான்றுகள் உள்ளன, ஆன்மீகத்தினை எதுக்கு எழுதிக்கிட்டுனு இருந்தேன், சரியான ஆன்மீக வரலாறு கூட பதிவு செய்யப்படாமல் இருக்குனு உங்க மூலம் தெரியுது,எனவே ஒருப்பதிவாக இடுகிறேன்.
இந்தியாவில் உருவ வழிப்பாடு என எடுத்துக்கொண்டால்,மிகத்தொன்மையானவை சக்தி மற்றும் முருக வழிப்பாடே,
சிவன்,பிரம்மா,விஷ்ணு என்ற மும்மூர்த்தி கருத்தாக்கம் மிகப்பின்னால் உருவானது.
திரு வவ்வால்!
//சிவ வழிப்பாட்டின் தொன்மை தமிழகத்தில் எத்தகையது எனத்தெரியவில்லை,ஆனால் முருக வழிபாடு தமிழகத்தில் மிக தொன்மையானது என தொல்லியல் சான்றுகள் உள்ளன, //
சிவனோ, முருகனோ, பிள்ளையாரோ யாராக இருந்தாலும் அது ஏக இறைவனையே குறிக்கும். பின்னால் வந்தவர்கள் தங்கள் கற்பனைக்கு தக்கவாறு உருவங்களை வரைந்து கொண்டனர். முருக வழிபாடு ஆதிகாலம் தொட்டு இருப்பதாகவே வைத்துக் கொள்வோம். அந்த முருகக் கடவுளுக்கு இது தான் உருவம் என்று நிர்ணயித்தது யார்? எல்லாம் நம்மவர்களின் கற்பனைதானே!
மற்றபடி உங்களன் பதிவுக்காகவும் காத்திருக்கிறேன். :-)
திரு.சுபி.சுவாமிகள்,
//அந்த முருகக் கடவுளுக்கு இது தான் உருவம் என்று நிர்ணயித்தது யார்? எல்லாம் நம்மவர்களின் கற்பனைதானே!
//
கற்பனையேதான், முருகன் என வேல்கம்பைதான் வணங்கினார்கள்,பின்னர் சிலை,மேலூம் கற்பனை சேர்த்து ஆறுமுகம் எல்லாம் :-))
உருவ வழிப்பாட்டிற்கு முன்னர் "தீ" தான் கடவுள், சொராஷ்ட்ரம் கூட தீயை தான் கடவுளாக சொன்னது.
விரைவில் பதிவப்போடுறென்.
சாம்பாரைக் கண்டுபிடித்தது யார்?சட்டையை இப்படித்தான் போட வேண்டும் எனக் கண்டுபிடித்தது யார?
இந்த மாதிரி பல விசயங்களை நமது முன்னோர்கள் தங்களது அனுபவத்தில் கண்டு அதனை வழித்தொடடு நாம் பின்பற்றி வருகிறோம்.
உலகில் உள்ள பல விசயங்களுக்கு நதிமூலம்,ரிஷிமூலம் கண்டுபிடிக்க முடியாது.
அந்த நம்பிக்கைகள் நமது வாழ்க்கைக்கு சரியாக இருந்தால் போதும். மன அமைதிக்கு ஒத்து வந்தால் போதும்.
வாழ்க வளமுடன் பாரத பிரதமர் திரு.மோடி
கொச்சின் தேவதாஸ்
முருகனுக்கு
உருவம் வரைந்ததில் முஸ்லீம்களுக்கு என்ன கேடு வந்தது. அல்லாவின்
உருவத்தையோ, இரண்டாம் கடவுளான முகமதுவின் உருவத்தையோ இந்துக்கள் யாரும்
வரையவில்லையே. முருகனை வழிபடவும் உருவம் வரையவும் இனி அரபு
அடிமைகளிடமும், அரபு மன்னனிடமும் அனுமதி கேட்க வேண்டுமென்று நினைக்கிறேன்.
Post a Comment