
காஷ்மீரின் ரியாஸி மாவட்டம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு அருகில் அமைந்திருக்கிறது. தினமும் துப்பாக்கிச்சூடு நடக்கும் யுத்த பூமி. இங்கு ஏ.எஸ்.பி-யாகப் பணிபுரியும் அஜிதா பேகம், கோவையைச் சேர்ந்தவர்.
”காஷ்மீர் கேடரில் பணிபுரிவது ராணுவத்தில் வேலை பார்ப்பதற்குச் சமம். இங்கே ராணுவமும் காவல் துறையும் இணைந்த கூட்டு நடவடிக்கைகள் மூலமா கத்தான் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஊடுருவல்களைத் தடுக்கிறோம். அதனால் நாளரு சவால், பொழுதொரு தேடல் என வாழ்க்கை பரபரப்பாக இருக்கிறது. விடுமுறை சமயங்களில்கூட தமிழ்நாட் டுக்கு வர முடியாது.
அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத் தோழிகளிடம் சோஷியல் நெட்வொர்க் தளங்கள் மூலம் இப்போதும் தொடர்பில் இருக்கிறேன். ஒவ்வொரு நாளும் அலுவலகத்துக்குப் போக முடியுமா என்பதே நிச்சயம் இல்லாத நிலைதான் இங்கு. ஏனெனில், எப்போது குண்டு வெடிக்கும், துப்பாக்கிச்சூடு நடக்கும் என்று கணிக்கவே முடியாது. அதனால், வீட்டையே கிட்டத்தட்ட அலுவலகம் போலத்தான் வைத்திருப்போம்.
பிரச்னை என்றால், வீட்டில் இருந்தே அலுவல்களைத் தொடர்வோம். எனது பெயரும் எனக்குப் பெரிய ப்ளஸ். ‘இந்த ஊருப் பொண்ணு’ என்று நினைத்துக்கொண்டு என்னுடன் உடனே நெருக்கமாகிவிடுவார்கள் இந்த ஊர் மக்கள்!” – சந்தோஷமாகச் சிரிக்கிறார் அஜீதா பேகம்.
தமிழகத்திலிருந்து, ஐ.பி.எஸ்.,பணிக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் முஸ்லிம் பெண் அஜிதா பேகம் என்பது குறிப்பிடதக்கது..
- இந்தியாவை ஒளிரச் செய்யும் தமிழர்கள்!
ஆனந்த விகடன் – Feb, 2012
இவர் தற்போது கேரளாவில் எஸ்.பி யாக பணியாற்றி வருகிறார்.
1 comment:
பாராட்டுக்கள்.அஜிதாபேகம் போல் ஆயிரக்கணக்கில் வீரமங்கைகள் வரவேண்டும். தகுதி,உழைப்பு அறிவு அர்பணிப்பு என்ற உயர்ந்த தகுதிகள் எந்த குறிப்பிட்ட சமுகத்திற்கும் சொந்தமானதல்ல. இந்தியாவில் தகுதி யிருந்தால் சமூக நீதி கிடைக்கும் என்பதற்கு அஜிதாபேகம் ஒரு எடு்த்துக்காட்டு. முஸ்லீம்களுக்க அரசு வேலைவாய்ப்பில் அநீதி விளைவிக்கப்படவில்லை என்பதற்கு சகோதரி நல்ல உதாரணம். தவ்ஹித் ஜமாத் நண்பர்கள் உணருவார்களா ? வெறுப்பை வளர்த்து வருகின்றார்கள்.
Post a Comment