Followers

Wednesday, January 08, 2014

ராஜபக்ஷேயும் நெதன்யாகுவும் தற்போது ஒன்றாக!




இலங்கையின் போர்க் குற்றவாளி மகிந்த ராஜபக்சவும், இஸ்ரேலின் போர்க் குற்றவாளி நெத்தன்யாகுவும், இன்று ஜெருசலேம் நகரில் சந்தித்து கை குலுக்கிக் கொண்டனர். இந்தப் படத்தையும், தகவலையும் தமிழ் ஊடகங்கள், இணையத் தளங்கள் இருட்டடிப்பு செய்திருந்தால் அதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. "ஈழத் தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட்டு, இஸ்ரேலிடம் இருந்து பாடம் கற்க வேண்டுமென்று" அறிவுரை கூறிய தமிழ் இன உணர்வாளர்கள் இப்போது எங்கே? ராஜபக்சவுடன் காஸ்ட்ரோ கைகோர்த்தார், அப்பாஸ் கை குலுக்கினார் என்று வாய் ஓயாமல் ஓலமிட்டவர்கள், இப்போது மௌனமாக இருக்கிறார்கள்.

ராஜபக்ச அரசு, புலிகளுக்கு எதிரான போர் நடவடிக்கை என்ற பெயரில், வன்னியில் ஆயிரக் கணக்கான தமிழ் மக்களை படுகொலை செய்தது. இஸ்ரேலில் அதே காலகட்டத்தில், நெத்தன்யாகு அரசு, ஹமாசுக்கு எதிரான போர் நடவடிக்கை என்ற பெயரில், காசா பிராந்தியத்தில் ஆயிரக் கணக்கான பாலஸ்தீன மக்களை படுகொலை செய்தது. ராஜபக்ச, நெத்தன்யாகு இருவர் பேரிலும் நிறைய போர்க்குற்றச் சாட்டுகள் உள்ளன. ஐக்கிய நாடுகள் ஆணைக்குழு, இலங்கையிலும், இஸ்ரேலிலும் சம காலத்தில் நடந்த போர்க் குற்றங்களை பட்டியலிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது.

தனது நாட்டின் மீது போர்க்குற்றம் சாட்டுவது, இலங்கைக்கு எதிரான தேசத் துரோகம் என்றும், தனது படையினரில் ஒருவரைக் கூட சர்வதேச நீதிமன்றத்திற்கு அனுப்பப் போவதில்லை என்று மகிந்த ராஜபக்ச சூளுரைத்துள்ளார். நெத்தன்யாகு அதை அப்படியே இஸ்ரேலிய நிலைமைக்கு ஏற்றவாறு மாற்றிக் கூறுகின்றார். இஸ்ரேலின் மீது போர்க்குற்றம் சாட்டுவது யூத எதிர்ப்பாகும் என்றும், தனது படையினரில் ஒருவரைக் கூட, சர்வதேச நீதிமன்றத்திற்கு அனுப்பப் போவதில்லை என்றும் சூளுரைத்துள்ளார். 

--நன்றி கலையரசன்

இந்துத்வாவாதிகளும், இஸ்ரேலும், ராஜபக்ஷேயும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது. வைகோவும் சுப்ரமணியம் சுவாமியும் இன்னும் கை குலுக்கிக் கொள்ளாமல் இருப்பதுதான் ஆச்சரியம். இன்னும் சில நாட்களில் அதுவும் நடக்கலாம்.

1 comment:

Anonymous said...

//இஸ்ரேலின் மீது போர்க்குற்றம் சாட்டுவது யூத எதிர்ப்பாகும் என்றும், தனது படையினரில் ஒருவரைக் கூட, சர்வதேச நீதிமன்றத்திற்கு அனுப்பப் போவதில்லை என்றும் சூளுரைத்துள்ளார். //

நல்ல முடிவு. இதை கடைசி வரை கடைபிடித்தால் நல்லது