இந்திய சவுதி உறவில் மற்றுமொரு புதிய அத்தியாயம்!
சவுதியின் பாதுகாப்பு அமைச்சர் இளவரசர் சல்மான் அடுத்த மாதம் நமது இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். அந்த பயணத்தில் இந்திய சவுதி உறவில் புதிய அத்தியாயம் எழுதப்படும். மற்றும் பல கோடி டாலர்களுக்கான வர்த்தக ஒப்பந்தங்களும் இடப்படும் என்று நமது நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். இளவரசர் சல்மானோடு நடத்திய பேச்சு வார்த்தைகளுக்குப் பின் இந்த பேட்டியை பத்திரிக்கைகளுக்கு தந்தார் ப.சிதம்பரம்.
இளவரசர் சல்மான் ப.சிதம்பரத்தை சென்ற செவ்வாய் கிழமை வரவேற்று உபசரித்தார். இது பற்றி சிம்பரம் சொல்லும் போது 'மன்னர் அப்துல்லா 2006 ல் இந்தியா வருகை புரிந்திருந்தார். அதன் பிறகு 2010ல் பிரதமர் மன்மோகன் சிங் சவுதி அரேபியா வந்தார். இந்த இரண்டு தலைவர்களின் சந்திப்புக்கு பிறகு இந்திய சவுதி உறவானது தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. இதற்கு முன்பே கூட மன்னர் சவுத் 1955 ஆம் ஆண்டு இந்தியா வருகை புரிந்தார். 1956ல் ஜவஹர்லால் நேரு சவுதி அரேபியாவுக்கு நல்லெண்ணப் பயணம் மேற்கொண்டார். அதன்பிறகு 1982ல் பிரதமராக இருந்த இந்திரா காந்தி சவுதி அரேபியா வருகை புரிந்துள்ளார். எனவே தொடர்ச்சியாக இரு நாட்டு உறவுகளும் நல்லவிதமாகவே சென்று வருகிறது.
இந்தியாவுக்கு அதிக அளவில் கச்சா எண்ணையை அனுப்பும் நாடுகளில் சவுதி முதலிடத்தில் உள்ளது. மருத்துவ துறை, கல்வி, சுற்றுலா மற்றும் தொழில் துறைகளில் சவுதி அரசின் முதலீடுகள் இந்தியாவில் அதிகம் இந்த சந்திப்பினால் உருவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.' என்றார்.
இந்த அமைப்புக் குழுவின் சவுதி தலைவரான அப்துல்லா அல் முப்தி தனது அறிக்கையில் ' இளவரசர் சல்மானின் இந்திய பயணமானது இரு நாட்டு உறவுகளில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும். 2.8 மில்லியன் இந்தியர்கள் சவுதியில் பணி புரிகின்றனர். இந்தியாவின் நான்காவது மிகப் பெரும் தொழில் பார்ட்னராக சவுதி அரேபியா திகழ்கிறது. சவுதியின் 'சாபிக்' SABIC நிறுவனமானது இந்தியாவின் பெங்களூரில் 100 மில்லியன் செலவில் தொழில் நுட்ப பூங்காவை அமைத்துள்ளது. சைனாவுக்கு அடுத்தபடியாக மிகப்பெரும் அமைப்பாக இரண்டாவது இடத்தில் இந்த தொழிற்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது." என்றார்.
ப.சிதம்பரம் மற்றொரு அமைச்சரான முக்ரின் பின் அப்துல் அஜீஸையும் சந்தித்தார். நமது அமைச்சரின் வருகையானது மேலும் பல புதிய காண்ட்ராக்டுகள் நமது நாட்டுக்கு கிடைக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த உதவும் பல நாடுகளில் சவுதி முன்னணியில் உள்ளது என்றால் மிகை ஆகாது. இந்த நெருக்கமானது மேலும் தொடர நாமும் பிரார்த்திப்போம்.
தகவல் உதவி
அரப் நியூஸ்
9 comments:
இறைவன் ஒருவனே என்பது உண்மையானால், தமது அறிவுறைகளுக்கு ஒவ்வாத ஒரு மாற்று மதத்தில் 'மனிதனை' ஏன் அந்த இறைவன் படைக்கிறார்???
//இறைவன் ஒருவனே என்பது உண்மையானால், தமது அறிவுறைகளுக்கு ஒவ்வாத ஒரு மாற்று மதத்தில் 'மனிதனை' ஏன் அந்த இறைவன் படைக்கிறார்??? //
உலகில் பிறக்கும் அனைத்து குழந்தைகளும் இஸ்லாமியனாகத்தான் பிறக்கின்றன என்பது இஸ்லாமிய கொள்ளை. அந்த குழந்தையை வேறுமார்க்கங்களுக்கு கொண்டு செல்வது பெற்றோர்களே!
//உலகில் பிறக்கும் அனைத்து குழந்தைகளும் இஸ்லாமியனாகத்தான் பிறக்கின்றன என்பது இஸ்லாமிய கொள்ளை. அந்த குழந்தையை வேறுமார்க்கங்களுக்கு கொண்டு செல்வது பெற்றோர்களே!//
அது ஒரு மூட கூட்டத்தின் கொள்கை. அதை அடுத்தவர்களிடம் திணிக்க கூடாது.
//உலகில் பிறக்கும் அனைத்து குழந்தைகளும் இஸ்லாமியனாகத்தான் பிறக்கின்றன என்பது இஸ்லாமிய கொள்ளை.//
முஹம்மதுவின் உளரல்களில் இதுவும் ஒன்று.
உலகில் பிறக்கும் அனைத்து குழந்தைகளும் மனிதனாகத்தான் பிறக்கின்றன என்பது தான் உண்மை.அந்த குழந்தையின் மனதில் மதத்தை விதைப்பது பெற்றோர்கள் மற்றும் உற்றோர்களே!
பாரத பிரதமர் திரு.மோடி அவர்களின் ஆட்சியில் சவுதி உடன் இன்னும் சிறப்பான நல்லுறவு பேணப்படும்.
வாழ்க வளமுடன் திரு.மோடி
கொச்சின் தேவதாஸ்
/உலகில் பிறக்கும் அனைத்து குழந்தைகளும் இஸ்லாமியனாகத்தான் பிறக்கின்றன என்பது இஸ்லாமிய கொள்ளை.//
முஹம்மதுவின் உளரல்களில் இதுவும் ஒன்று.அருமையான பதிவு ஆனந்த சாகர் அவர்களே. பள்ளிக்படிப்பு இல்லாத கைநாட்டுப் பேர்வழி என்று அரேபிய மத அடிமைகளால் புகழப்படுபவர் திருவாளர் அரேபிய திலகம் முகம்மது.எந்த இந்தியக்குழந்தையும் அரேபிய கலாச்சார சுழ்நிலையில் பிறக்கவே இல்லை.குழந்தைகள் தாங்கள் பிறக்கும் தேசம்ஊர் பின்பற்றப்படும் பெருவாரியான சுழ்நிலைக்கு தக்கதான் வளர்கின்றனர். கலாச்சார கல்வி அறிவியல் பரிணாமம் நடைபெற்றக் ககொண்டிருக்கின்றது. அரேபியர்கள் மட்டும் குரானைக் கட்டி அழுதுகொண்டு ஒருவரை மற்றவர்கள் காபீர் என்று இழிவு படுத்திக் கொண்ட பாவம் செத்துத்தொலைந்து கொண்ருக்கின்றனர்.சிரியா எகிப்பது போன்ற எந்த அரேபிய மதம் நாட்டிலும் அமைதியில்லை.இரத்த ஆறு ஒடிக்கொண்டிருக்கின்றது. குரான் இருந்தால் அதுதான் நிலை.குரான் மறை்தால்தான் உலகம் உருப்படும்
பாக்கிஸ்தானுக்கு 25 F-16 போர்விமானங்களை அளித்த புரண புண்ணியவான் வருகின்றார்.செம்பை எடுத்து உள்ளே வையுங்கள். வர்த்மானம்பதிப்பகம் திருக்குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பை வெளியிட்டுள்ளது ரூ.700 விலை.சுவனப்பிரியன் அதன் ஒரு பிரதியை வாங்கி சவுதி மன்னருக்கு அனுப்பி வைக்கலாமே.சுவாமி விவேகானந்தரது நூல்களையும் திருமந்திரம் திருவாசகம் போன்ற நூல்களையும் அளிக்கலாம்.முட்டாள் அரபிகளுக்கு வெளி உலகம் புரியும். அறிவு தெளிவு பெறும்.
1400 வருட பழமையான முகம்மது காலத்திய காட்டுமிராண்டித்தனமான அரேபிய நாகரீகத்தை முன்னிலைப்படுத்தும் இயக்கம் வாஹாபியிசம்.இதைத்தான் சவுதி அரேபியா உலக அரங்கில் வளர்க்க பணம் கோடிக்கணக்கில் செலவு செய்து கலவரத்தை உருவாக்கி வருகின்றது.இந்தியாவில் சவுதி யில் உள்ள மன்னர்காலித் மருத்துவமனைக்கு இணையான வசதிகள் கொண்ட ஒரு மருத்துவனையை சவுதி அரசு கட்டி இலவச மருத்துவசிகிச்சை அளிக்க கருணைக்கடலுக்கு கோரிக்கை சுவனப்புத்திரன் வைக்க வேண்டும்.
Post a Comment