Followers

Thursday, January 23, 2014

பசுமை பள்ளி வாசல்கள் இனி அமைப்போமா!



இன்று உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்வு என்ன என்றால் 'புவி வெப்பமயமாதல்' என்று உடன் சொல்லி விடலாம். அந்த அளவு இன்று உலகை இந்த பிரச்னை பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. சவுதியில் உள்ள தபூக்கில் நான் ஆண்டுகள் வேலை செய்துள்ளேன். சில நேரங்களில் குழாய்களில் தண்ணீர் ஐஸாக உறைந்து தொங்கிக் கொண்டிருக்கும். அந்த அளவு குளிர். அதிலும் இந்த வருடம் இன்னும் அதிகம். ரோடுகள் எல்லாம் ஐஸ்களால் சூழப்பட்டு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. அமெரிக்காவில் வரலாறு காணாத பனிப் பொழிவு. பிலிப்பைனை தாக்கிய புயல். அதில் 6000 க்கும் மேலான மக்கள் பலி என்று சமீப காலங்களில் நடக்கும் பேரழிவுகளை பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம்.

இந்த பேரழிவுகளுக்கு நாமும் ஒரு காரணம். வாகனங்களும், தொழிற்சாலைகளும் வெளியிடும் கார்பன் இந்த உலகை தூசுக்களால் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகிறது. தொடர்ந்து வற்புறுத்திக் கேட்டதால் எனது பையன்களுக்கு டூ வீலர் வாங்கிக் கொடுத்தேன். ஆனால் நான் அதிகம் பயணிப்பது சைக்கிளில்தான். 'என் காலேஜ் ஃப்ரண்டஸ்லாம் கிண்டல் பண்றானுங்க. இனி சைக்கிளில் போகாதீங்க... நம்மகிட்டதான் டூ வீலர் இருக்கே' என்று என் மகன் சொல்வதை பார்த்து சிரிப்பேன். அவனது நண்பர்களுக்காக நான் டூ வீலரில் போக வேண்டுமாம். நான் லீவில் ஊர் சென்ற போது சைக்கிளில் சென்று கொண்டிருந்தேன். அந்த ஊரிலேயே தொழில் செய்து வரும் ஒருவர் 'நீ சைக்கிளில் போவதும்: நான் டூ வீலரில் போவதும் சில நேரங்களில் எனக்கே வெட்கமாக இருக்கிறதுப்பா...' என்று சொன்னதை இன்றும் நினைத்தாலும் சிரிப்பு வரும். உடற் பயிற்சி செய்வதற்கு சைக்கிளைப் போன்ற சிறந்த ஒரு சாதனம் வேறு இல்லை என்று சொல்லலாம். விபத்துகளும் இதனால் குறையும். செலவும் மிச்சம். உடலுக்கும் ஆரோக்கியம். புவி வெப்பமயமாதலை ஓரளவு நம்மாலும் குறைக்க முடியும். நமது நாட்டு பணம் அநியாயாத்துக்கு பெட்ரோலுக்காக வெளி நாடு செல்வதையும் ஓரளவு இது குறைக்கும். எனவே இப்படி பல பயன்கள் உள்ளதால் உடல் ஆரோக்கியம் உள்ளவர்கள் லோக்கலுக்கு அதிகம் சைக்கிளையே பயன் படுத்துவோமாக! :-)

இங்கிலாந்தில் உள்ள மேட் MADE (Muslim Agency for Development Education) என்ற என்ற அமைப்பு உலக வெப்பமயமாதலை ஓரளவு குறைக்கும் பொருட்டு பல சேவைகளை செய்து வருகிறது. பள்ளி வாசல்களை எல்லாம் பசுமைக் குடில்களாக தற்போது இவர்கள் மாற்றி வருகின்றனர். பள்ளி வாசல்கள் எங்கும் தற்போது பசுமை பூத்துக் குலுங்குகிறது. உலகில் உள்ள இயற்கை வளங்கள் அனைத்தும் நமக்கு இறைவனின் வல்லமையை பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன. நபிகள் நாயகத்தின் போதனையும் இதனையே நமக்கு சொல்கிறது.

"ஒரு முஸ்லிம் ஒரு மரத்தை நட்டு அல்லது விதை விதைத்து விவசாயம் செய்து அதிலிருந்து ஒரு பறவையோ அல்லது ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும்'' என்று இறைவனின் தூதர் நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல்: புகாரி 2320


ஆஹா...என்ன அழகிய ஒரு அறிவுரை. தொழுது கொள், ஹஜ் செய், ஜகாத் கொடு என்பது மட்டும் இஸ்லாம் அல்ல. ஒரு மரத்தை நட்டு அதனால் உயிரினங்கள் பயனுற்றால் அதற்கும் நன்மை எழுதப்படுகிறது என்ற நபிகளின் வார்த்தையை அந்த இளைஞர்கள் செயல்படுத்த ஆரம்பித்துள்ளனர். தொழுவதற்காக கை கால்களை அலம்பி சுத்தம் செய்து கொள்ளும் போது கூட தண்ணீரை சிக்கனமாக செலவு செய்யுங்கள் என்ற அறிவுரையையும் நபிகள் நாயகம் நமக்கு போதித்து இருக்கிறார்.

சுற்றுச் சூழலோடு அமைந்த பள்ளி வாசல்கள் என்றால் என்ன?

மான்செஸ்டரில் உள்ள நஜ்மி பள்ளி வாசல் இதற்கு ஒரு சிறந்த உதாரணமாக உள்ளது. இந்த பள்ளி கட்டுமானமானது ஏற்கெனவே உபயோகப்படுத்தப்ட்ட மரங்களைக் கொண்டு கட்டப்பட்டது. இந்த பள்ளி வாசலின் மின்சாரத் தேவைகள் அனைத்தும் சூரிய சக்தியால் அமைக்கப்பட்டது. மேற் கூரைகள் கண்ணாடிகளால் வேயப்பட்டுள்ளது. ஒளி தேவைப்படும் போது சூரியனின் ஒளியையே பயன்படுத்தக் கூடிய வகையில் கட்டியுள்ளார்கள். பள்ளி வாசலை சுற்றி பசுமை நிறைந்த மரங்களை வளர்க்கின்றனர்.

இந்த அமைப்பின் உப தலைவர் கூறும் போது: 'ஒரு வணக்கத்தலம் இயற்கையோடு கூடியதாக கட்டப்பட்டிருக்க வேண்டும். அந்த சூழல் இருந்தாலே இறைவனை வணங்குவதற்கு நமக்கு ஏதுவாக இருக்கும். இவ்வாறு அமைப்பதற்கு நமக்கு அதிக பொருளாதார செலவும் கிடையாது. சிங்கப்பூரில் 2012ல் இதே போன்ற ஒரு பள்ளியை நிர்மாணித்தோம். கத்தாரிலும் இதே போன்ற பள்ளிகளை அமைக்க திட்டமிருக்கிறது. தண்ணீரை மறு சுழற்சி செய்து பள்ளியை சுற்றியுள்ள தோட்டங்களுக்கு திருப்பி விடுவது. பள்ளியை சுற்றி மரங்கள் செடி கொடிகளை வளர்ப்பது. வெள்ளிக் கிழமைகளில் சொற்பொழிவுகளில் சுற்று சூழலை மாசுபடாமல் எவ்வாறு பராமரிப்பது என்பதையும் மக்களுக்கு புரிய வைப்பது. பள்ளிக்கு தொழ வருபவர்கள் கூடிய வரை நடந்தோ, சைக்கிளிலோ, அல்லது டூ வீலரோ வர அறிவுறுத்துவது. ஒரு நபருக்காக ஒரு நான்கு சக்கர வாகனத்தை உபயோகிப்பதை முடிந்த வரை தவிர்த்துக் கொள்வது. இது போன்ற பல திட்டங்களை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். இதற்கு மக்களிடம் அதிக ஆதரவும் இருக்கிறது"

"இந்த உலகை மாசுபடாமல் காக்கும் பொருப்பு மற்றவர்களை விட முஸ்லிம்களுக்கு அதிகம் உண்டு. அதனை இறைவனின் இல்லமாகிய பள்ளி வாசல்களிலிருந்து தொடங்குதல் மிக பொருத்தம் இல்லையா?' என்று கேட்கிறார் இந்த அமைப்பின் தலைவர் முராத்.


Creative ideas that can be easily implemented in almost any mosque are:

Use touch sensitive taps in all sinks; they turn on when touched and automatically turn off after a few seconds, reducing water wastage.

Provide recycling bins in the mosque. This makes it easier for community members to recycle glass, cardboard and paper, plastics, and aluminum by separating and collecting recyclables in the home and dropping them off at the neighborhood mosque.

Install solar panels that capture the sun’s energy and convert sunlight into electrical energy.

Put up colorful and informative posters that foster environmental awareness.

Encourage the imam, or leader of the mosque, to dedicate a Friday sermon to the importance of preserving the environment.

Provide bike racks in the parking space of the mosque to encourage worshipers to come to the mosque whenever possible by bike rather than car.

Plant a community garden. Transporting food across the world can be very harmful for the environment and costly. The community can grow fresh, local produce which they can share among themselves or donate to families in need.

Use environmentally friendly cleaning products and bio-degradable plates and cups during community events.



தகவல் உதவி: சவுதி கெஜட்.

2 comments:

Anonymous said...

ஷாலி says:
January 22, 2014 at 8:04 pm

//சராசரி மனிதர்களின் வாழ்க்கையே போராட்டம் நிறைந்தது. அதிலும் ஓர் ஏலாத மாற்றுத் திறனாளியின் வாழ்க்கை எப்படிப் பட்டதாக இருக்கும் ? வாழ்க்கை என்பதே சுவராசியம் கலந்த போராட்டம் தான் என்பது என் கருத்து.//

உண்மைதான் சகோதரி.ஆனால் வாழ்க்கையை ஒவ்வொருவரும் அவர்களாக கேட்டு வாங்கி வரவில்லை.இறைவன் அவரவர்களுக்கு கொடுத்த பாத்திரத்தில் உலக மேடையில் நடித்துக்கொண்டிருக்கிறோம். எம் மனிதனும் முழுமையாக இங்கு வரவில்லை.ஆளாளுக்கு ஆயிரம் குறை.மாற்றுத் திறனாளிகளுக்கு உறுப்பு இல்லாத குறை.எல்லாம் உள்ள மனிதன் கவலையில் ஆழ்ந்து நிம்மதி இழந்து நடைபிணமாக உள்ளான்.சுய இரக்கத்தை இடித்து தள்ளுங்கள்.”எனக்கும் கீழே உள்ளவர் கோடி என்று…” என்று நினைத்து உலகத்தைப் பார்த்தால் பிற மக்களைப்பார்க்கும் போது புன்னகை மட்டுமல்ல புத்துணர்சசியும் கூட வரும். உங்கள் முக மகிழ்ச்சி,எல்லாம் உள்ள நடைபிணங்களை உயிர்த்தெழ செய்யட்டும்.
ஒரு வரலாற்று சம்பவத்தை கூறுகிறேன்.

இஸ்லாமிய பேரரசின் இரண்டாவது ஜனாதிபதி உமர் பின் கத்தாப் அவர்கள்,தன் ஆளுகைக்கு உட்பட்ட நாடுகளை பார்த்துவர புறப்பட்டார்கள். சிரியா நாட்டுக்கு அருகில் உள்ள ஒரு ஊரில் பயணம் செய்தபோது,அங்கு ரோட்டு ஓரத்தில் ஒரு கை,கால் அழுகிய நிலையில் ஒரு குஷ்டரோகி படுத்துக்கிடந்தார். ஜனாதிபதியுடன் கூட வந்த ஒருமனிதர்,”ஜனாதிபதி அவர்களே! இந்த மனிதனுக்கு இறைவன் ஒரு அருட்கொடைகளையும் கொடுக்க வில்லையே!” என்று அனுதாபத்துடன் கூறினார்.அதற்க்கு கலீபா உமர் அவர்கள, ”இந்த மனிதருக்கு சாப்பாடு சாப்பிட்டு சிறுநீர், மலம் எல்லாம் நல்லமுறையில் கழிகிறதா?” என்று கேட்டார்கள். “அதிலெல்லாம் ஒரு பிரச்சினை இல்லை,நல்லமுறையில் கழிகிறது” என்று அங்குள்ளவர்கள் கூறினர்.உடனே உமர் கூறினார், “ இந்த ஒரு அருட்கொடைக்கே இந்த மனிதன் இறைவனுக்கு நன்றி சொல்லவேண்டும்.” நாம் எங்கே இருக்கின்றோம்? குஷ்டரோகி நிலையிலா?
உலகம் ஒளி மயமே! உள்ளம்தான் இருள் மயமே!
அந்த ஒளியும் இருளும் அந்த இறைவன்
அருள் மயமே!
ஒரு பாடல்.இந்த பாடல் ஒவ்வொரு உள்ளங்களிலும் உறுதியானால்,உலகில் குறை உள்ளவர் எவருமே இல்லை.நிறைவான மகிழ்ச்சியே எவருக்கும்.
உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வதும் எனக்காக
அன்னை மடியை விரித்தாள் எனக்காக
தவழும் நிலவாம் தங்க ரதம்
தாரகை பதித்த மணி மகுடம்
குயில்கள் பாடும் கலைக்கூடம்
கொண்டது எனது அரசாங்கம்.
காற்றில் மிதக்கும் ஒலிகளிலே
கடலில் தவழும் அலைகளிலே
இறைவன் இருப்பதை நானறிவேன்
என்னை அவனே தானறிவான்.

ஆனந்த் சாகர் said...

அங்கங்கே குண்டு வைத்து அப்பாவி மக்களை கொன்றுவிட்டு உங்கள் பள்ளிவாசல்களில் சில செடிகளை வளர்த்துவிட்டால் நீங்கள் நல்லவர்களாகிவிடுவீர்களா?