Followers

Monday, January 27, 2014

நுணலும் தன் வாயால் கெடும்!- சம்சுதீன் காசிமி

நுணலும் தன் வாயால் கெடும்!- சம்சுதீன் காசிமி

சம்சுதீன் காசிமிக்கு தவ்ஹீத் ஜமாத்தின் மேல் என்ன கோபம்? 20 வருடங்களுக்கு முன்பெல்லாம் சம்சுதீனைப் போல தலையில் முக்காடோடும் பெரிய ஜிப்பாவும் பெரிய தாடியும் இருந்தால் அவரை ஏகத்துக்கும் மரியாதையோடு நடத்துவோம். அவரின் கால் அழுத்தி விட கை பிடித்து விட என்று ஒரு கூட்டம் எப்போதும் இருந்து கொண்டிருக்கும். வித விதமான சாப்பாடு ஒவ்வொரு வீட்டிலிருந்தும் முறை வைத்து அனுப்பப்படும். உழைக்காமல் பாத்திஹா, தர்ஹா, போன்ற மார்க்கம் அனுமதிக்காத செயல்களை முன்னிறுத்தி அவர்களின் வாழ்க்கை எந்த கவலையும் இல்லாமல் ஓடிக் கொண்டிருந்தது.

ஆனால் தவ்ஹீத் சிந்தனை இளைஞர்கள் மத்தியில் ஊடுருவிய உடன் புரோகிதத்துக்கு மிகப் பெரிய அடி விழுந்தது. பெரும் தலைப்பாகை, முக்காடு, நீண்ட ஜிப்பா இதற்கெல்லாம் மதிப்பு இஸ்லாத்தில் கிடையாது. தூய இறை அச்சம் ஒன்றுதான் இறைவன் மனிதர்களிடம் எதிர்பார்ப்பது என்ற உண்மை விளங்கியதால் மார்க்க அறிஞர்கள், இமாம்களை சாதாரணமாகவே பார்க்கத் தலைப்பட்டனர் பொது மக்கள். பாத்திஹாக்கள் குறைந்தது. தட்டு தாயத்துகள் குறைந்தது. தேவையற்ற விருந்துகள் குறைய ஆரம்பித்தது.

காலா காலமாக இதனை எல்லாம் அனுபவித்து வந்த ஒரு கூட்டம் அவ்வளவு இலகுவாக தங்களின் வருமானத்தை இழக்க விரும்புவார்களா? எனவே தான் இந்த மாற்றத்துக்குக் காரணமான தவ்ஹீத் ஜமாத்தின் மீதும் அது நடத்தும் போராட்டங்களின் மீதும் தேவையற்ற விமரிசனங்களை இந்த புரோகிதக் கூட்டம் வைத்துக் கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சிதான் சம்சுதீன் காசிமியின் ஜூம்ஆ பிரசங்கம்.

இந்த மதி கெட்டவரின் பேச்சால் நாளை நடக்க இருக்கும் 28ந்தேதி போராட்டத்துக்கு மேலும் விளம்பரம் கிடைத்துக் கொண்டிருக்கிறது. :-) எனது கிராமத்திலிருந்து மட்டும் மூன்று பஸ்களும் ஐந்து வேன்களும் திருச்சியை நோக்கி செல்கிறதாம். சிறிய கிராமத்திலேயே இந்த நிலை என்றால் மற்ற ஊர்களைப் பற்றி சொல்லத் தேவையில்லை. இந்த போராட்டத்தின் மூலம் முஸ்லிம்களின் விகிதாச்சாரத்திற்கு ஏற்ப அரசு வேலை வாய்ப்புகளை ஆட்சியாளர்கள் தர இறைவனிடம் உதவியை எதிர்பார்ப்போம்.

உள்ளங்களைப் புரட்டக் கூடியன் நம்மைப் படைத்த இறைவன் ஒருவனே!

இன்று நடந்து வரும் சிறை செல்லும் போராட்டத்தை நேரலையில் காண


15 comments:

Anonymous said...

சுவனப்பிரியரே,
ஏற்கனவே முஸ்லீம்களுக்கு கொடுத்த இட ஒதுக்கீட்டை நிரப்பவே ஆள் இல்லையாம்.
அப்படி இருக்கும் போது யாரை ஏமாற்ற இந்த போராட்டம். அண்ணன் பீஜெ சொல்லி
விட்டார். ஆட்டு மந்தை கூட்டம் பின்பற்றுகிறது. உள்ளே போகும் கூட்டம்
நிரந்தரமாக உள்ளே இருந்து விட்டால் தமிழ்நாடு நிம்மதியாக இருக்கும்.

ஆனந்த் சாகர் said...

//தூய இறை அச்சம் ஒன்றுதான் இறைவன் மனிதர்களிடம் எதிர்பார்ப்பது என்ற உண்மை விளங்கியதால் மார்க்க அறிஞர்கள், இமாம்களை சாதாரணமாகவே பார்க்கத் தலைப்பட்டனர் பொது மக்கள்.//

தனக்கு பயப்படவேண்டும் என்று சொல்பவன் இறைவன் அல்ல. கடவுள் எவரையும் எதற்காகவும் வெறுக்க மாட்டார்; தண்டிக்க மாட்டார். கடவுள் தன்னை எவரும் வணங்க வேண்டும், புகழ வேண்டும் என்று எதிபார்ப்பதும் இல்லை. கடவுளுடய இயல்பு எல்லா உயிர்களையும் உயிரற்ற பொருள்களையும் எந்த நிபந்தனையும் விதிக்காமல் அன்பு கூறுவது மட்டுமே.

தமீமுன் அன்சாரி said...

அஸ்ஸாலாமு அலைக்கும்... உங்கள் தளத்தில் நான் பதிவிடுவது இதுவே முதல் முறை....

தமீமுன் அன்சாரி said...

பத்து சதவீதம் இட ஒதுக்கீடு தந்தால் முஸ்லிம்களை யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போட சொல்லுவது சரியா...? P.J அவர்கள் மீது எனக்கு மதிப்பும் மரியாதையும் உள்ள்து... ஆனால் TNTJ இவ்வாறு அறிக்கை விடுவது சரியா..? அதுவும் மோடிக்கு ஆதரவு என்பது சரியா...?

suvanappiriyan said...

//தனக்கு பயப்படவேண்டும் என்று சொல்பவன் இறைவன் அல்ல.//

அந்த இறைவனை மனிதன் பயப்படுவதால் இறைவனுக்கு தகுதி ஏதும் கூடி விடப் போவதில்லை. இறைவனின் பண்புகளில் தலையாயது அன்பாளன், மற்றும் அருளாளன். இறைவனை பயப்படுவது என்றால் இறைவனின் கட்டளைகளை முடிந்த வரை நமது வாழ்நாளில் செயல்படுத்துவது. மக்களின் அன்பாக நடப்பது: பொய் சொல்லாமல், திருடாமல், கொலை செய்யாமல், மற்ற மனிதர்களுக்கு தீங்கிழைக்காமல், வட்டி வாங்காமல், இறைவனுக்கு நிகராக மற்றவர்களை நினைக்காமல் தனது வாழ்வை சந்தோஷமாக கொண்டு செல்வதுதான் இறைவனுக்கு பயப்படுவது என்பதன் அர்த்தம். இதை சரியாக விளங்காததால்தான் உலகில் அதிக வன்முறைகள் அரங்கேறுகிறது. இறைவனின் கட்டளைகளை செயல்படுத்துவது மனித குலத்துக்குத்தான் நன்மை.

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம் சகோ அன்சாரி!

// உங்கள் தளத்தில் நான் பதிவிடுவது இதுவே முதல் முறை....//


முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Unknown said...

மவுன்ட் ரோடு தர்காவுக்கு மிக நெருங்கி இருந்தும்கூட, துணிச்சலாக ஷிர்க்கை எதிர்த்துப் பிரசங்கம் செய்த மார்க்க அறிஞர் சம்சுத்தீன் காசிமியை கொலை செய்யத் திட்டமிட்டு வந்தார்கள் கபுர் வணங்கிகள்.

சம்சுத்தீன் காசிமி அவர்களுக்கு ஆதரவாக சமுதாய அமைப்புகள் அனைத்தும் திரண்டு வந்து, கண்டனத்தைத் தெரிவித்தன.அப்போது த.த.ஜ. மட்டும் வரவில்லை!

இப்போது உங்கள் திட்டத்தை எதிர்த்து ஜும்ஆ உரை நிகழ்த்தியதால், துடைப்பங்களை எடுத்துப் பெண்களும்,'ஆண்கள்' கொடும்பாவி எரிப்பும் செய்து த த ஜ கீழ்த்தரமாக எதிர்த்ததும்... உண்மையில் கப்ரு வணங்கிகளோடு த த ஜ வுக்குக் கள்ளக் காதலோ என்று சந்தேகப்பட வைக்கின்றது!

ஆனந்த் சாகர் said...

//அந்த இறைவனை மனிதன் பயப்படுவதால் இறைவனுக்கு தகுதி ஏதும் கூடி விடப் போவதில்லை.//

உண்மைதான். ஆனால் குரானில் அல்லாஹ் தனக்கு மனிதர்கள் பயப்படவேண்டும் என்று கெஞ்சுவதும் மிரட்டுவதும் ஏன்? ஏனெனில் முஹம்மது அல்லாஹ் அப்படி சொல்வதாக பொய்யுரைத்தார்.

//இறைவனின் பண்புகளில் தலையாயது அன்பாளன், மற்றும் அருளாளன்.//

உண்மைதான். குரான் கூறுகிற அல்லாஹ் அப்படிப்பட்டவன் இல்லை. அவன் தன்னை தொழாத, தனக்கு இணை வைக்கிற, தன்னுடய வசனங்களை நிராகரிக்கிற மனிதர்களை நரக நெருப்பில் போட்டு எரிப்பேன் என்கிறான்; மனிதர்களை நரக நெருப்பில் நித்திய காலமாக எரித்துக்கொண்டு இருப்பேன் என்கிறான்; அவர்களுக்கு கள்ளி செடியை உணவாகவும் சீழை பானமாகவும் கொடுப்பேன் என்கிறான்; கொதிக்கும் நீரை அவர்கள்மேல் ஊற்றுவேன் என்கிறான். இந்த செயல்கள் எல்லாம் அன்பாளன், அருளாளன் செய்யக்கூடிய செயல்களா? இது இறைவனுடய பண்பு அல்ல. மாறாக தீய சக்தியின் பண்பு. ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் தீய சக்தி என்றும் எதுவும் இல்லை. ஷைத்தான் என்பதுவும் வெறும் மனித கற்பனையே.

// இறைவனை பயப்படுவது என்றால் இறைவனின் கட்டளைகளை முடிந்த வரை நமது வாழ்நாளில் செயல்படுத்துவது.//

முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். கடவுள் எந்த வேதங்களையும் கட்டளைகளையும் கொடுக்கவில்லை. தன்னை கடவுளின் தூதரென்று கூறிக்கொண்டு திரிந்தவர்களெல்லாம் பொய்யர்கள்; ஏமாற்றுக்காரர்கள்.

பயமும் அன்பும் ஒன்றுக்கொன்று நேரெதிரானவைகள். பயம் இருக்கும் இடத்தில் அன்பு இருப்பதில்லை. அதேமாதிரி அன்பு இருக்கும் இடத்தில் பயம் இருப்பதில்லை. ஒருவரிடம் அன்பு கொண்டு அவரின் விருப்பத்திற்கு ஏற்ப நடந்து கொள்வது என்பது வேறு. ஒருவருக்கு பயந்து அவர் சொல்படி நடந்து கொள்வது என்பது வேறு. நீங்கள் சொல்வது இரண்டாவது வகையை சார்ந்தது. அது சர்வாதிகாரத்தனம் தானே ஒழிய அது போதும் அன்பை அடிப்படையாக கொண்டது இல்லை. குரான் கூறுகிற அல்லாஹ் வன்முறை மனநோய் பீடித்த பைத்தியக்கார சர்வாதிகாரி. அவன் அன்பானவன் அல்ல. அவனிடம் இறைவனுக்குறிய எந்த பண்புகளும் இல்லை.

//மக்களின் அன்பாக நடப்பது: பொய் சொல்லாமல், திருடாமல், கொலை செய்யாமல், மற்ற மனிதர்களுக்கு தீங்கிழைக்காமல், வட்டி வாங்காமல், இறைவனுக்கு நிகராக மற்றவர்களை நினைக்காமல் தனது வாழ்வை சந்தோஷமாக கொண்டு செல்வதுதான் இறைவனுக்கு பயப்படுவது என்பதன் அர்த்தம்.//

நல்ல செயல்களை செய்வதற்க்கும் தீய வழிகளில் இருந்து விலகி இருப்பதற்கும் கடவுளிடம் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதை சக மனிதர்களிடமும் தன்னிடமும் கொண்ட அன்பினால் மட்டுமே சரியாக செய்ய முடியும்.

// இதை சரியாக விளங்காததால்தான் உலகில் அதிக வன்முறைகள் அரங்கேறுகிறது. இறைவனின் கட்டளைகளை செயல்படுத்துவது மனித குலத்துக்குத்தான் நன்மை.//

உலகில் வன்முறை ஒழிய வேண்டும் என்றால் மனிதர்கள் ஒருவர் மேல் ஒருவர் அன்பு கொள்ள வேண்டும். மனிதர்கள் அனைவரும் ஒன்றே என்ற புரிதல் வேண்டும். இதற்கு கடவுளின் கட்டளைகள் அவசியமில்லை. கடவுள் அப்படி எந்த
கட்டளைகளையும் கொடுக்கவும் இல்லை.

suvanappiriyan said...

சகோ தமீமுன் அன்சாரி!

//பத்து சதவீதம் இட ஒதுக்கீடு தந்தால் முஸ்லிம்களை யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போட சொல்லுவது சரியா...? P.J அவர்கள் மீது எனக்கு மதிப்பும் மரியாதையும் உள்ள்து... ஆனால் TNTJ இவ்வாறு அறிக்கை விடுவது சரியா..? அதுவும் மோடிக்கு ஆதரவு என்பது சரியா...? //

மோடிக்கு ஆதரவு தருவதாக எங்கு சொல்லப்பட்டது? அதைத்தான் மறுத்து அறிக்கை அல்தாபி கொடுத்தாரே! பார்க்கவில்லையா? இன்றும் கூட விளக்கமாக திருச்சியில் கூறியுள்ளார். பாருங்கள்.

Anonymous said...

செந்தில்: அது ஏண்ணே அவிங்களை "அரேபிய அடிமைகள்"ன்னு திட்டறீங்க?

கவுண்டமணி: அடேய் மங்கூஸ் மண்டையா! அவனுக நம்ம மாதிரி ஒரு பண்டிகை கூட சுயமா கொண்டாட முடியாது.. அதுக்கும் அரேபியாவிலிருந்து பர்மிசன் கொடுத்தாத்தான் இவங்க பிரியாணியில கைய வைக்க முடியும். இவங்களை அடிமைன்னு சொல்லாம, அரசன்னா சொல்ல முடியும்?

Anonymous said...

சுவனப்ரியர், சிறை நிரப்பும் போராட்டம் என்று அறிவித்து விட்டு வெறும் கோஷம் போட்டதுடன் அல்லாவின் பிள்ளைகள் திரும்பி விட்டார்களே, ஏன்? 'கொடுத்த இடத்தை நிரப்ப துப்பில்லை, இதில் மேலும் இடம் வாங்கி சிரைக்க போகிறார்களா" என்று பிற மக்களின் மைண்ட் வாய்ஸ் TNTJ வினருக்கு கேட்டு விட்டதா
ஒட்டு மொத்தமாக கொஞ்ச நாள் எல்லாரும் உள்ளே இருந்துவிட்டு வந்திருந்தால் அது வரையாவது தமிழ்நாடு நிம்மதியாக இருந்திருக்குமே

Anonymous said...

"உழைக்காமல் பாத்திஹா, தர்ஹா, போன்ற மார்க்கம் அனுமதிக்காத செயல்களை முன்னிறுத்தி அவர்களின் வாழ்க்கை எந்த கவலையும் இல்லாமல் ஓடிக் கொண்டிருந்தது"

ஒரு சிலர் செய்யும் தவறால், எல்லோரையும் குறை சொல்லுவது எந்த விதத்தில் நியாயம். பாத்திஹா ஒத கூடாது என்று சொல்லுவதற்கு உங்களுக்கு அதிகாரம் தந்தது யார்...;.?????? இறந்தவருக்கு நன்மை சேர்க்க கூடாதா...??? இறந்தவருக்கு குர்ஆனில் சில பகுதியை ஓதி அதன் நன்மையை அவர்களுக்கு சேர்த்து வையுங்கள் என்று ஒரு நபி மொழி கேட்டது நியாபகம் வருகின்றது

Anonymous said...

ஒரு சிலர் செய்யும் தவறால், எல்லோரையும் குறை சொல்லுவது எந்த விதத்தில் நியாயம். பாத்திஹா ஒத கூடாது என்று சொல்லுவதற்கு உங்களுக்கு அதிகாரம் தந்தது யார்...;.?????? இறந்தவருக்கு நன்மை சேர்க்க கூடாதா...??? இறந்தவருக்கு குர்ஆனில் சில பகுதியை ஓதி அதன் நன்மையை அவர்களுக்கு சேர்த்து வையுங்கள் என்று ஒரு நபி மொழி கேட்டது நியாபகம் வருகின்றது

mohamedali jinnah said...

http://nidurseasons.blogspot.in/2014/01/blog-post_5075.html


http://anbudanseasons.blogspot.in/2014/01/blog-post_7854.html

Dr.Anburaj said...

தீண்டாமை என்ற சமூக நோயினால் பாதிக்கப்பட்ட Sc/ST சாதி மக்களுக்கே உரித்தான இடஒதுக்கீட்டை முறபட்ட இந்தியாவை 800 வருடங்கள் கொடுங்கோலாட்சி செய்த பிறமதத்தவர்களை காபீர் என்று இன்றும் இழித்துப் பேசித் திரியும் முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு என்பது பைத்தியக்காரத்தனம். இந்துக்கள் ஏன் இப்படி ஏமாளிகளாகவே இருக்கின்றார்கள் என்பது புரியவில்லை.