Followers

Monday, January 13, 2014

சிதம்பர ரகசியம் - ஒரு அலசல்

'அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்ன சம்பந்தம்' என்று நீங்கள் கேட்கலாம்! இன்று நான் முஸ்லிமாக இருந்தாலும் எனது முன்னோர்கள் முன்பு இந்துக்களாகத்தானே இருந்துள்ளனர். எங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் சிதம்பரமும் எங்கள் முன்னோர்களின் வாழ்வில் ஒரு அங்கமாக இருந்திருக்கலாம். இனி இந்த கோவிலின் பிரச்னை பற்றி இணையத்தில் வரும் செய்திகளைப் பார்ப்போம்:

//தமிழக மன்னர்களால் கட்டப்பட்ட இந்தக் கோயில், கரையான் புற்றெடுக்கக் கருநாகம் குடிபுகுந்த கதையாகி விட்டது. தமிழ் அரசர்கள் கோயிக்காக விட்ட தானங்களை, நிலங்களை தீட்சதப் பார்ப்பனர்கள் கபளீகரம் செய்து விட்டனர்.

இந்தப் பார்ப்பனர்கள் கைலாசத்திலிருந்து நேரே இறங்கி வந்தவர்களாம். மூவாயிரம் பார்ப்பனர்களில் தலைமை எண்ணும்போது ஒரு தலை குறைந்ததாம் அந்த ஒரு ஆசாமி நான்தான் என்று சிவனே சொன்னதாகக் கதையளந்து வைத்துள்ளனர்.

தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் என்று பரமசிவன் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு அடி எடுத்துக் கொடுக்க திருத்தொண்டத் தொகையை சுந்தரர் பாடினாராம். தில்லையில் வாழும் பார்ப்பனர்களின் அடியார்களுக்கும் அடியாராம் சிவபெருமான்!

வானம் முட்டும் கோபுரங்கள் கட்டியவர் யார்? அதன் உச்சிக்கெல்லாம் தங்க மூலாம் பூசியவர் யார்? தில்லை நடராசருக்குத் தங்கக்கூரை வேய்ந்து தந்தவர் யார்? சத்திரம், சாவடி கட்டியவர் யார்? அன்றாடம் ஆறுகால பூஜைக்கு உதவி வருபவர் யார்? எல்லாம் நாம் தானே? நாம் போட்டுக் கொடுத்த செல்வம் தானே இவை யாவும்? ஒரு பார்ப்பானாவது, ஒரு செல்லாக் காசாவது கோவில், குளம், தானம் தருமம் இவற்றிற்குக் கொடுத்திருப்பானா? அப்படியிருக்க இவ்வளவு செய்தும் நாம் ஏன் சூத்திரர்களாயிருக்க வேண்டும்? அவர்கள் மட்டும் ஒன்றும் செய்யாமலேயே நம்மை ஏமாற்றி உண்டு, பிராமணர்களாக வாழ வேண்டும்.

இந்தக் கோவிலே அந்த கோவில் பக்தர்களுக்குச் சொந்தமாக இருக்க வேண்டுமே தவிர, அது சில பித்தர் களுக்கு சொந்தமாக இருக்கக்கூடிய வாய்ப்புகள் இருக்காது - இருக்கக் கூடாது

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகத் தமிழர்களின் சைவத்தில் எந்த பிரிவும் (denomination ) கிடையாது. ஆனால் தமிழ்நாடு அரசு தகுதி வாய்ந்த வழக்கறிஞரை வைத்து, அவர்களின் வாதத்தை எதிர்த்து வாதாடாததால், தமிழர்களின் முக்கியமான வரலாற்றுச் சின்னம் ஒரு குறிப்பட்ட சாதியினருக்கு தாரை மட்டும் வார்த்துக் கொடுக்கப்பட்டு விட்டது,

இதில் கவலைப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், பெரும்பாலான தமிழ்நாட்டுத்தமிழர்கள் எனக்கென்ன போச்சு என்றிருக்கிறார்கள். இதைப் பற்றி கருத்துத் தெரிவித்த பதிவர்களையே விரல் விட்டு எண்ணிவிடலாம். மற்றவர்கள் எம்மை முற்போக்குள்ள, மதச்சார்பற்றவர்கள் என்று எண்ண வேண்டுமென்பதற்காக, தமிழர்களின் வரலாற்றுச் சின்னங்களை மற்றவர்கள் அநீதியான முறையில் சொந்தம் கொண்டாடும் போது அமைதி காப்பது சரியான கோழைத்தனம்.

‘கோயில்’ என்று உலகமெங்கும் வாழும் தமிழர்கள் போற்றும் சிதம்பரம் தீட்சிதர்களுக்கு மட்டும் பாத்தியதையான கோயில் என்றால்,, தீட்சிதர்கள் ஏனைய தமிழ்ச்சைவர்களை விட வேறொரு Denomination என்றால், தமிழர்கள் சிதம்பரத்துக்கு எதற்காகப் போக வேண்டும். உண்மையில் சிதம்பரம் மீண்டும் தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை “தீட்சிதர்களுக்குப் பாத்தியதையான”” சிதமபரம் கோயிலை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும். அப்படி அங்கு சென்றாலும் எந்தக் காணிக்கையும் செலுத்தக் கூடாது, தமிழ்நாட்டுத் தமிழர்களிடம் ஒற்றுமை இல்லை, அது தான் இதற்கெல்லாம் காரணம். அடுத்ததாக திருவரங்கம் போன்ற கோயில்களுக்கும் இப்படி நடக்காதென்று, என்ன நிச்சயம்?//


படித்து விட்டீர்களா? சைவர்களின் மெக்காவாக போற்றப்படுவது சிதம்பரம் தில்லை நடராஜர் கோவில். மெக்கா என்றவுடன் எனக்கு கஃபாவின் ஞாபகம் வந்தது. அந்த கஃபாவுக்குள் நுழைய யாரின் அனுமதியையும் பெறத் தேவையில்லை. நேற்று இஸ்லாத்தை ஏற்ற ஒரு தலித் சகோதரன் கூட உரிமையோடு அந்த கஃபாவுக்கு நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு செல்லலாம். உண்டியல் இல்லை. இறைவனிடம் உங்கள் கோரிக்கைகளை வைக்க எந்த மத குருமார்களும இல்லை. உலக மக்கள் யாவரும் வந்து தங்கள் தலையை தரையில் வைத்து தங்களது தாய் மொழியில் மணிக் கணக்கில் அழுது இறைவனிடம் தங்கள் குறைகளை சொல்லிக் கொண்டிருப்பர். எத்தனை நாள் வேண்டுமானாலும் நீங்கள் அங்கு இலவசமாக தங்கிக் கொள்ளலாம். தூக்கத்தை தியாகம் செய்து முதல் ஆளாக நீங்கள் போனால் முதல் வரிசையில் நீங்கள் நின்று கடமையான தொழுகைகளை தொழ முடியும். அங்கேயே இறந்து விட்டால் அரசு செலவில் உங்கள் உடலை குளிப்பாட்டி உங்களுக்கு பிரார்த்தனை தொழுகையும் உலக மக்கள் முன்னிலையில் நடைபெறும். அருகில் உள்ள மைய வாடியில் எந்த பாகுபாடும் இல்லாமல் உங்கள் உடல் அடக்கமும் செய்யப்படும்.

நாடு, இனம், நிறம் என்று எந்த பாகுபாடும் இல்லாமல் உலக மக்கள் ஒன்றாக கூடி தினம் ஐந்து வேளை தொழுகைகளை இந்த பள்ளியில் எந்த ஒரு காவலர் துணையுமின்றி நிறைவேற்றுகிறார்களே! அப்படியிருக்க.....

சைவர்களின் மெக்கா தில்லை நடராஜர் கோவில் என்ற பெயர் பெற்ற இந்த தில்லை நடராஜரை வணங்க வருபவர் அதிகம் தமிழர்களே! உலக நாடுகளிலிருந்து பக்தி மேலீட்டால் அங்கு வருபவர்களை தமிழில் பாடக் கூடாது என்றும், பணம் கொடுத்தால் மட்டுமே உள்ளே அனுமதிப்போம் இல்லை என்றால் வெளியிலேயே தரிசனம் பண்ணி விட்டு போ என்று அங்குள்ள பார்பனர்கள் சொல்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கோடிக்கணக்கான சொத்துக்கள் அங்குள்ள பார்பனர்களால் களவாடப்படுகிறது. இது பற்றி அரசும் கண்டு கொள்வதில்லை. நகைகளும் சொத்துக்களும் கொள்ளை போவதாக அங்குள்ள தீட்ஷிதர்களே சொல்கிறார்கள்.

எனவே புனித கஃபா ஆலயத்தை பின் பற்றி வழிபட வரும் மக்கள் எந்த மொழியில் பாட, பிரார்த்தனை செய்ய ஆசைப்படுகிறார்களோ அந்த மொழியிலேயே பாடவும் பிரார்த்தனை செய்யவும் அனுமதிக்கப்பட வேண்டும். புரோகிதர் தேவையில்லை: இறைவனிடம் நாங்கள் நேரிடையாக எங்கள் பிரார்த்தனையை வைக்கிறோம் என்று பக்தர்கள் கேட்டால் அவர்கள் விருப்பத்துக்கு விட வேண்டும். தற்போது உள்ள தீட்ஷிதர்களே தொடரட்டும். விருப்பமுள்ளவர்கள் அவர்களை வைத்து பூஜைகள் செய்து கொள்ளட்டும். அங்குள்ள நிர்வாகத்தை கவனிக்க அந்த ஊர் மக்களைக் கொண்ட ஒரு கமிட்டி அமைத்து நிலைமையை சீராக்கலாம். அரசு மேற்பார்வையிடலாம். அந்த மேற்பார்வையும் அரசியல் கலப்பில்லாமல் இருக்க வேண்டும். பெரும்பான்மை மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவது அரசின் கடமை. அதனை இந்த அரசு செய்கிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

5 comments:

Anonymous said...

அத்தியாயம் : 3
ஆலு இம்ரான் - இம்ரானின் குடும்பத்தினர்
மொத்த வசனங்கள் : 200.

இம்ரான் என்பவர், ஈஸா நபி (இயேசு) அவர்களின் தாய்வழிப் பாட்டனாரும் மர்யம் (மேரி) அவர்களின் தந்தையும் ஆவார். இம்ரானின் குடும்பத்தினர் என்பது மர்யமையும் அவரது தாயாரையும் ஈஸா நபியையும் குறிக்கும் .

இந்த அத்தியாயத்தில் 35, 36, 37 ஆகிய வசனங்களில் இம்ரானின் குடும்பத்தார் பற்றிய முக்கிய நிகழ்ச்சி கூறப்படுகின்றது. எனவே இந்த அத்தியாயம் இம்ரானின் குடும்பத்தினர் எனப் பெயர் பெற்றது.


150. மாறாக அல்லாஹ்வே உங்கள் அதிபதி. அவனே உதவி செய்வோரில் சிறந்தவன்.

151. அல்லாஹ் எந்தச் சான்றையும் அருளாமலிருந்தும் அவனுக்கு இணை கற்பித்ததால் (நம்மை) மறுத்தோரின் உள்ளங்களில் பீதியை ஏற்படுத்துவோம். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோர் சென்றடையும் இடம் மிகவும் கெட்டது.

152. அல்லாஹ்வின் விருப்பப்படி அவர்களை நீங்கள் கருவறுத்த போது தனது வாக்குறுதியை உங்களுக்கு உண்மைப்படுத்தினான். தளர்ந்து போய் இவ்விஷயத்தில் முரண்பட்டீர்கள்! நீங்கள் விரும்பியதை அவன் உங்களுக்குக் காட்டிய பிறகும் (அவனுக்கு) மாறுசெய்தீர்கள். உங்களில் இவ்வுலகை விரும்புவோரும் இருந்தீர்கள். மறுமையை விரும்புவோரும் இருந்தீர்கள். உங்களைச் சோதிப்பதற்காக484 அவர்களை (வெற்றி கொள்வதை) விட்டும் அவன் உங்களைத் திருப்பினான். உங்களை மன்னித்தான். நம்பிக்கை கொண்டோர் மீது அல்லாஹ் அருளுடையவன்.

153. உங்களுக்குப் பின்னால் இத்தூதர் (முஹம்மத்) உங்களை அழைத்துக் கொண்டிருக்கும் போது எவரையும் திரும்பிப் பார்க்காமல் நீங்கள் (மலை மேல்) ஏறிச் சென்றதை எண்ணிப் பாருங்கள்! உங்களுக்கு (வெற்றி) தவறியதற்காகவும், துன்பம் ஏற்பட்டதற்காகவும் நீங்கள் கவலைப்படாமலிருப்பதற்காக அதை விடப் பெருங்கவலையை அவன் உங்களுக்குப் பரிசளித்தான்.102 நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

154. பின்னர் கவலைக்குப் பிறகு உங்களுக்கு மனஅமைதியை ஏற்படுத்த சிறு தூக்கத்தைத் தந்தான். உங்களில் ஒரு பகுதியினருக்கு அது மேலிட்டது. இன்னொரு பகுதியினரைக் கவலை பிடித்துக் கொண்டது. அவர்கள் அல்லாஹ்வைப் பற்றி உண்மைக்கு மாறான அறியாமைக்கால எண்ணம் கொண்டனர். 'நமக்குச் சிறிதளவாவது அதிகாரம் கிடைக்குமா?'' என்று அவர்கள் கேட்டனர். 'அதிகாரம் முழுமையாக அல்லாஹ்வுக்கே உரியது'' என்று கூறுவீராக! உம்மிடம் வெளிப்படையாகக் கூறாததை தமது உள்ளங்களில் மறைத்துள்ளனர். 'நமக்குச் சிறிதளவாவது அதிகாரம் இருந்திருந்தால் இங்கே கொல்லப்பட்டிருக்க மாட்டோம்'' என்றனர். 'உங்கள் வீடுகளில் நீங்கள் இருந்திருந்தாலும் உங்களில் கொல்லப்பட வேண்டும் என்று விதிக்கப்பட்டோர் தமது களத்திற்குச் சென்றிருப்பார்கள். உங்கள் உள்ளங்களில் உள்ளதை சோதிப்பதற்காகவும்இ484 உங்கள் உள்ளங்களில் இருப்பதைத் தூய்மைப்படுத்தவும் அல்லாஹ் இவ்வாறு செய்தான். உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் அறிந்தவன்'' எனக் கூறுவீராக!

155. இரு அணிகளும் மோதிக் கொண்ட நாளில் உங்களில் பின்வாங்கியவர்களை, அவர்களின் சில செயல்கள் காரணமாக ஷைத்தான் வழி தவறச் செய்தான். அல்லாஹ் அவர்களை மன்னித்தான். அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத் தன்மைமிக்கவன்.



விளக்கங்கள்.

102.எண்ணுக்கான விளக்கம்
http://www.onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal-new/102_sirukavalai_theera_perungavalai/

484.எண்ணுக்கான விளக்கம்
http://www.onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal-new/484_thinbangaluku_kalangakoodathu/

488.எண்ணுக்கான விளக்கம்
http://www.onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal-new/488_iraivan_uruvamatravana/

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

திருவள்ளுவா் ஆண்டு 2045
இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

பொங்கல் திருநாள் பொழியட்டும் நல்வளங்கள்
தங்கத் தமிழ்போல் தழைத்து!

பொங்கல் திருநாள் புகழட்டும் பூந்தமிழை
எங்கும் இனிமை இசைத்து!

பொங்கல் திருநாள் புனையட்டும் புத்துலகைச்
சங்கத் தமிழாய்ச் சமைத்து!

பொங்கல் திருநாள் புடைக்கட்டும் வேற்றுமையை!
கங்குல் நிலையைக் கழித்து!

பொங்கல் திருநாள் பொருத்தட்டும் ஒற்றுமையை!
எங்கும் பொதுமை இசைத்து!

பொங்கல் திருநாள் புதுக்கட்டும் சாதிமதம்
தொங்கும் உலகைத் துடைத்து!


கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

suvanappiriyan said...

கவிஞர் திரு பாரதி தாசன்!

உங்களுக்கும் எனது தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

சாதி சமய மோதல் இன்றி எல்லோரும் எல்லா சுகமும் பெற்று வாழ அந்த ஏக இறையை பிரார்த்திக்கிறேன்.

ஆனந்த் சாகர் said...

முஸ்லிம் அல்லாத மக்களை கஅபாவுக்குள் அனுமதிக்க மறுத்த்துவிட்டு மற்றவர்களை குறை சொல்ல வெட்கமாக இல்லையா உங்களுக்கு?

Unknown said...

உலகில் இருக்கும்வேற்று மதத்தினர் அனைவரையும் கொல்ல துடிக்கும் மிருகத்தனமான முட்டாள்கள் உங்களுக்கு சிவன் பற்றி பேச உரிமை இல்லை