
இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் இலங்கையில் 2013 ஆம் ஆண்டின் இரண்டாவது கட்டத்தில் 10,250 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டிருப்பதாக யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதரகம் கூறியிருக்கின்றது.
இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்போடும். கலந்தாய்வோடும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் 43 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது. இதில் 2013 ஆம் ஆண்டில் பத்தாயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த இலக்கில் கணிசமான முன்னேற்றம் காணப்பட்டிருக்கின்றது என்று இந்திய துணைத்தூதரகம் சுட்டிக்காட்டியிருக்கின்றது.
வடமாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் 10,184 வீடுகளும், கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 66 வீடுகளும் கடந்த வருடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
மேலதிகமாக இரண்டரை இலட்ச ரூபா செலவில் திருத்தியமைப்பதற்காக 100 வீடுகள் தெரிவு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், இது வரையில் பயனாளிகளுக்கு இலங்கை ரூபா 7.8 பில்லியன் (ஏறத்தாள இந்திய ரூபா 355 கோடி) நேரடியாக வழங்கப்பட்டுள்ளது.
பிறந்துள்ள 2014 இல் மேலும் 16,000 வீடுகள் நிர்மாணிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மிகுதி 17,000 வீடுகளும் 2015 இல் பூர்த்தியாக்கப்படும் என இந்திய துணைத்தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் வீடமைப்புத் திட்டம் உத்தியோகபூர்வமாக 2013 வைகாசி 22 இல் தான் ஆரம்பித்துவைக்கப்பட்டது. இம் மாகாணத்தில் முதலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டு 66 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன. மேலும் 400 வீடுகள் முடிவடையும் தருவாயில் உள்ளன. கிழக்கு மாகாணத்தில் மற்றைய மாவட்டங்களில் விரைவில் திட்டத்தை ஆரம்பிக்க முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இரண்டாம் கட்டத்தில் வடமாகாணத்தில் 39,000 வீடுகளும், கிழக்கு மாகாணத்தில் 4,000 வீடுகளும் கட்டி முடிக்கப்படும்.

மலையக வீடுகள்
இந்திய வீடமைப்புதிட்டத்தின் மூன்றாவது கட்டம், மத்திய, ஊவா மாகாணங்களில் உள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கான முகவர்கள் மூலம் நடைமுறைப்படுத்தும் முறையில் 4,000 வீடுகள் கட்டும் பணி சம்பந்தப்பட்ட தோட்ட கம்பனிகளினால் காணிகள் விடுவிக்கப்பட்டு, தேவையான காணி பண்படுத்தல் முடிவடைந்ததும் 2014 ஏப்பிரல் மாதமளவில் ஆரம்பிக்கப்படும்.
இந்திய அரசாங்கத்தால் மூன்றாம் கட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நிபுணர் ஒருவர் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளார்.
நான்காவது கட்டம், முகவர்களினால் செயற்படுத்தும் முறை மூலம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தாங்களே வீடுகளை கட்ட முடியாத நிலையிலுள்ள உள்ளுரில் இடம்பெயர்ந்தவர்களுக்கான 4,000 வீடுகளை 2014 இல் நிர்மாணித்தலைக் உள்ளடக்கியது.
முகவர்களினால் செயற்படுத்தும் முறை மூலம் வடமாகாணத்தில் 1000 வீடுகள் கட்டும் பரீட்சார்த்தமான திட்டம் இலங்கை அரசாங்கத்தால் வழங்கப்பட்ட காணிகளில் 2012 ஜுலை மாதத்தில் செய்து முடிக்கப்பட்டது.
இம் முழுத்திட்டமும் இந்திய அரசின் முழுமையான மானிய உதவித்திட்டத்தின் கீழ் இந்திய ரூபா 1372 கோடியில் (இலங்கை ரூபா 30 பில்லியன்), நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
இது இந்திய அரசாங்கத்தால் ஏனைய நாடுகளுக்கு வழங்கப்பட்ட நிதி உதவியுடன் ஒப்பிடும் போது மிகப்பெரிய திட்டமாகும் என்றும் இந்தியத் துணைத் தூதரகம் கூறியிருக்கின்றது.
நன்றி பிபிசி!
----------------------------------------------
இலங்கை தமிழர்களுக்கு நமது அரசின் இந்த ஆக்கபூர்வமான நடவடிக்கையை கட்சி பேதமின்றி அனைவரும் பாராட்ட வேண்டும். வைகோவைப்போல் 'தனி ஈழம்' என்று வெறும் வாயால் வெற்று வாக்குறுதிகளை கொடுப்பதை விடுத்து இது போன்ற நிரந்தர நல வாழவு பணிகளை முடுக்கி விடும் சோனியா அரசாங்கத்துக்கு நமது ஆதரவை அளிக்க வேண்டும். பூபோள ரீதியாக எந்த வகையில் பார்த்தாலும் தனி ஈழம் என்பது சாத்தியப்படாத ஒன்றே! மற்ற பல விஷயங்களில் காங்கிரஸ் அரசோடு எனக்கு கருத்து வேறுபாடு இருந்தாலும் இந்த திட்டத்தை பொறுத்த வரை மிக சரியான இலக்கிலேயே செல்வதாக நான் உணருகிறேன்.
9 comments:
தனி ஈழம் ஒருபோதும் தீா்வாகாது. இந்தியா-இலங்கை ஆகிய இரு நாடுகளும் பரஸ்பரம் நட்புாிமை பேணிியிருந்தால்தான் இலங்கை தமிழா் பிரச்சனைக்கு நிரந்தர தீா்வு கிடைக்கும். நட்பும் உறவும் அதிக நன்மை கிடைக்கும். போராட்டங்கள் வீண் அறிக்கைகள் எந்த நன்மையைத்தராது. ஆழந்த ஞானத்தில் திளைத்த இந்திய அரசு மிகுந்த முதா்ச்சியோடு இலங்கைத் தமிழா்களுக்கு உதவி வருகின்றது. பாராட்டுக்கள். இலங்கை தமிழா்களம் பழையதை மறந்து சி்ங்களவா்களோடு நடபு பாராட்டி வசுதேசகுடும்பத்தை உருவாக்க வேண்டும்.
திரு கந்தர்வன்!
//அதென்னங்க சார், சட்டரீதியில் குற்றவாளியல்ல என்று நிரூபிக்கப்பட்ட மோடியை ‘அவன் இவன்’ என்று ஒருமையில் கூறுவதும், ஒசாமா போன்ற வெட்கங்கெட்ட அயோக்கியர்களை ‘அவர் இவர்’ என்று மரியாதையுடன் பன்மையில்?//
அவன் இவன் என்று மோடியை நான் குறித்ததாக எனக்கு நினைவில்லை. மோடிக்கு எதிராக இந்துத்வாவாதிகள் தங்கள் வாய்மொழியாகவே கொடுத்த வாக்கு மூலங்கள் டெஹல்காவால் தரப்பட்டு உலகம் முழுவதும் பார்க்கப்பட்டது. சஞ்சீவ் பட்டின் வாக்கு மூலத்தையும் நாம் பார்க்க வேண்டும். நமது நாட்டில் பதவியும் பணமும் உள்ளவர்கள் சட்டத்தை விலைக்கு வாங்குவது சாதாரணமாகி விட்டது. அதற்கு மோடியின் இந்த வழக்கே சிறந்த உதாரணம்.
அடுத்து உசாமா பின் லேடன் அமெரிக்காவில் படித்து பட்டம் பெற்ற ஒரு பொறியாளர். தனது நாட்டிலும், ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலும் பெட்ரோல் மற்றும் இயற்கை வளங்களை கொள்ளையடிப்பதற்காக பொய்யான காரணங்களை கூறி வளைகுடாவில் கூடாரம் அடித்து தங்கி விட்ட அமெரிக்கர்களை எதிர்த்தே அவரது பயணம் இருந்தது. இரட்டை கோபுர தாக்குதலுக்கு தான் காரணமல்ல என்று உசாமா பல முறை மறுத்துள்ளார். இன்றும் ஜெத்தாவில் ஒரு தெருவுக்கு பெயரே 'பின் லேடன் தெரு'. அந்த அளவு வசதிகளோடு இருந்தவர் பாலைவனத்தில் காய்ந்த ரொட்டித் துண்டுகளை சாப்பிட்டு போராட வேண்டிய அவசியம் என்ன?
உசாமா குற்றவாளி என்றால் வெள்ளையனை எதிர்த்து படை திரட்டிய சுபாஷ் சந்திர போசும் உங்கள் பார்வையில் குற்றவாளியா? காந்தி, நேரு, ஆசாத்., வஉசி போன்ற அனைவருமே குற்றவாளிகளா?
//உங்களுக்கு ஒரு சவால்… ஒசாமா செய்தது தவறு என்று நீங்கள் எண்ணினால் ‘அவனுக்கு நிச்சய நரகவாசம் தான்’ என்று தயங்காமல் சொல்லுங்கள் பார்ப்போம்?//
நாம் நரகவாசி என்று நினைப்பவர்கள் இறைவனின் புறத்தில் சொர்க்கவாசியாக பார்க்கப்படலாம். அதேபோல் நாம் சொர்க்கவாசி என்று நினைப்பவர்கள் இறைவன் புறத்தில் நரகவாசியாக கருதப்படலாம். ஒருவருக்கு சொர்க்கம் கிடைக்குமா நரகம் கிடைக்குமா என்பதை இறைவனும் சம்பந்தப்பட்ட மனிதனின் உள் மனதுமே அறியும். புறத் தோற்றங்களை வைத்து நீங்களோ நானோ முடிவு செய்ய முடியாது.
ஆனால் உசாமா அப்பாவி மக்களை கொன்றிருந்தால் அதற்கான தண்டனையை கண்டிப்பாக இறைவனிடம் பெற்றுக் கொள்வார்.
Kavya says:
July 9, 2012 at 9:51 am
ஒரு சின்ன டவுட் மணி.
சமணர்கள் கொலை செய்யப்படவில்லை. தற்கொலைதான் என்பது உங்கள் வாதம்.
அதைச்சரியென்று ஏற்றுக்கொள்வோம். தற்கொலை செய்தவர்கள் ஓரிரு நபர்களல்ல. பல்லாயிரக்கணக்கானவர்கள் ஒரே நேரத்தில் மதுரையில்.
இதை ஒரு மன்னன் எப்படிப்பார்த்துக்கொண்டிருந்தான்? இதை மதுரை மக்கள் ஏற்றுக்கொண்டார்களா?
இது நியாயமா? நீதியா? நேர்மையா? சமணர்கள் எல்லாம் ரவுடிகளா? பலரைக்கொன்றழித்தவர்களா? வெறும் மதவாதிகள்தானே?
இவர்கள் கூட்டமாக பல்லாயிரக்கணக்கில் கழுமரமேறி தற்கொலைபண்ணியதை மதுரைப்பாண்டியன் வேடிக்கப்பார்த்துக்கொண்டிருக்க, மதுரை மக்கள் கைகொட்டிச்சிரிக்க, சம்பந்தரும், பரஞ்சோதியும் மங்கையர்க்கரசியாரும் நகைத்தனரா? தமிழர்கள் அவ்வளவு கொடிய மனத்தினரா?
எங்கோயோ உதைக்கிறதே மணி?
வணக்கம்!
புத்தாண்டு வாழ்த்துக்கள்
பல்லாண்டு வாழ்க! படா்கின்ற புத்தாண்டை
நல்லாண்டு வாழ்க நலஞ்சூடி! - வல்லதமிழ்ச்
சொல்லாண்டு வாழ்க! சொந்தமென நம்மினத்தின்
தொல்லாண்டு வாழ்க சுடா்ந்து!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
01.01.2014
திரு பிரசன்னா சுந்தர்!
//“உனக்கு அறிவில்லை, நான் உன்ன அறிவில்லாதவனாக தான் படைச்சேன். செத்தப்பிறகு தான் உனக்கு அறிவே வரும்னு ஒருத்தன் சொன்னா, அது கடவுளா?//
மனிதனை அறிவில்லாதவனாக எங்குமே இறைவன் குறிப்பிடவில்லை. உயிர் பற்றிய அறிவு மட்டுமே மறைவாக்கி வைத்துள்ளதாக இறைவன் கூறுகிறான்.
'தான் நாடியோருக்கு ஞானத்தை வழங்குகிறான்' - 2:269
மனிதனுக்கு சிந்திக்கும் அறிவை வழங்கியிருப்பதாக இங்கு இறைவன் குறிப்பிடுகிறான்.
'முஹம்மதே! படைத்த உனது இறைவனின் பெயரால் ஓதுவீராக!' - 96:1
குர்ஆனின் முதல் வசனமே ஓதுவீராக! படிப்பீராக! எனறு மனிதனை சிந்திக்கத் தூண்டுகிறது.
'அறியாதவற்றை மனிதனுக்குக் கற்றுத் தந்தான்' - 96:5
மனிதனின் அறிவு வளர்ச்சியானது அந்த இறைவன் கொடுத்ததே! அதைக் கொண்டுதான் நம்மை அறிவில் சிறந்தவன் என்று கூறிக் கொள்கிறோம்.
//உயிர்னா என்ன? ஆத்மானா என்ன இதெல்லாம் உபநிஷதங்கள்ல தெளிவா சொல்லியிருக்காங்க!//
உயிர் பற்றி அப்படி என்ன தெளிவை உபநிடதங்கள் சொல்லியிருக்கின்றன. புரிகிற மாதிரி கொஞ்சம் சொல்லுங்களேன். நானும் தெரிந்து கொள்கிறேன்.
திரு பாண்டியன்!
//பல முஸ்லிம் இணைய தளங்களில் இது இருக்காது. சாமர்த்தியமாக வெட்டி விட்டார்கள். இவர்கள் தான் வரலாறு திரிபு பற்ரி பேசும் உத்தம சீலர்கள். நாம் உத்தம சீலரும் இவ்வகைதான்;//
நான் காப்பி பேஸ்ட் செய்த தளத்தில் இவ்வாறுதான் இருந்தது. வேண்டுமென்றே நான் எதையும் நீக்கவில்லை.
அடுத்து அரபு மொழி தேவ மொழி என்று எங்கும் சொல்லப்படவில்லை. எனக்கு எனது தாய் மொழியான தமிழ்தான் மிகுந்த இன்பம் தரக் கூடிய மொழி. முகமது நபி அரபியராக இருந்ததால் குர்ஆன் அரபி மொழியில் இறங்கியது. முகமது நபி தமிழராக இருந்திருந்தால் இதே குர்ஆன் தமிழ் மொழியிலேயே நேரிடையாக அருளப்பட்டிருக்கும்.
ஒளரங்கஜேப் தனது ஆசிரியரிடம் வருத்தப்பட்டது நியாயமானதே! ஒரு அரசருக்கு வாழும் நாட்டு மக்களின் மொழியை பிழையற பேசத் தெரிந்தருக்க வேண்டும். அதை செய்யத் தவறிய ஆசிரியரை அரசர் கடிந்து கொண்டது நியாயமானதே! ஒரு முஸ்லிம் குர்ஆனை தொழுகையில் ஓத வேண்டும். அதன் அர்த்தத்தை தனது தாய் மொழியல் படித்தால்தான் அதன் உண்மையான அர்த்தங்கள் விளங்க வரும். அரபு மொழி வெறி ஒளரங்கஜேப்புக்கு இல்லை என்பது இதிலிருந்து நமக்கு மேலும் விளங்குகிறது.
கவிஞர் திரு கி பாரதிதாசன்!
//பல்லாண்டு வாழ்க! படா்கின்ற புத்தாண்டை
நல்லாண்டு வாழ்க நலஞ்சூடி! - வல்லதமிழ்ச்
சொல்லாண்டு வாழ்க! சொந்தமென நம்மினத்தின்
தொல்லாண்டு வாழ்க சுடா்ந்து!//
உங்களின் வாக்கு பலித்து அந்த மக்களின் வாழ்வில் புத்துணர்வு பொங்கட்டும் தோழரே!
//ஆனால் உசாமா அப்பாவி மக்களை கொன்றிருந்தால் அதற்கான தண்டனையை கண்டிப்பாக இறைவனிடம் பெற்றுக் கொள்வார்.//\
மோடியும் , அப்பாவி மக்களை கொன்றிருந்தால் அதற்கான தண்டனையை கண்டிப்பாக இறைவனிடம் பெற்றுக் கொள்வார்.
சமணா்களும் சைவரும் மதவெறி கொண்டு வாழ்ந்தாா்கள் என்பது உண்மைதான். இந்திய மண்ணில் மதவெறி சைவம் -வைணவம், சமணம்- சைவனம் , அததுவைதம் துவைதம் விசிட்டாத்வைதம் என்று சமய தத்துவ சண்டைகள் சிலகாலம் நடந்தது உண்டு.ஆனால் பண்டிதா்கள்தான் இத்தகைய கதைகளில் ஈடுபட்டனா்.பாமர மக்கள் -அதிக எண்ணிக்கையில் உள்ள இந்துக்கள் - இவற்றைப்பற்றி கவலைப்படவில்லை. வேறுபடும் சமயமெல்லாம் புகுந்துபாா்க்கின் பரம் பொருளே நின் விளையாட்டல்லால் வேறு வினையில்லை என்ற தத்துவத்தை உணா்நது - காலப்போக்கில் இதையே உணா்ந்து மதவெறி காய்ந்துபோனது. புதியனவற்றை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் கொண்ட இந்து சமய மரபு ஒவ்வொரு இயக்கத்தில் உள்ள நல்லனவற்றை ஏற்று வீறு நடைபோட்டது. ஆகவே மதவெறி அழிந்துபோனது. ஆனால் அரேபிய வல்லாதிக்கம் பேசும் இஸ்லாம் பிற கலாச்சாரங்களில் நன்மையிருப்பதாக ஒருபோதும் ஏற்காது.அரேபியா்கள் கூட ஏற்றுக் கொள்வாா்கள். இந்திய முஸ்லீம்கள் ஏற்றுக் கொள்ள மாட்டாா்கள். இதுதான் வேடிக்கை.
Post a Comment