Followers

Tuesday, January 07, 2014

பாகிஸ்தானில் சிவன் கோவில் திறப்பு!



கராச்சி: பாகிஸ்தானில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க சிவன் கோவிலில், 66 ஆண்டுகளுக்குப் பின், பூஜைகள் துவங்கியுள்ளன.

பாகிஸ்தானின், பஞ்சாப் மாகாணத்தில், சக்கரவால் என்னும் இடத்தில், புராதன, கடாஸ்ராஜ் சிவன் கோவில் உள்ளது.இந்தக் கோவில், 900 ஆண்டுகளுக்கு முந்தையது. இங்குள்ள குளம், சிவனின் கண்ணீரால் உருவானதாக தல வரலாறு கூறுகிறது.இந்தக் குளத்தில் மூழ்கி எழுந்தால், பாவங்கள் விலகும் என்று இந்துக்கள் நம்பினர்.கடந்த 1947ல், இருநாட்டு பிரிவினைக்குப் பின், இந்தக் கோவிலில், பூஜைகள் நிறுத்தப்பட்டு, மூடப்பட்டது.கோவில் குளத்தைச் சுற்றிலும் தொழிற்சாலைகள் துவக்கப்பட்டதாலும், பராமரிப்பு இல்லாததாலும், குளம் வறண்டு போனது.இந்நிலையில், 35 கோடி ரூபாய் செலவில், ஏழு ஆண்டுகளாக, கோவிலை புதுப்பிக்கும் பணி நடந்தது.புதுப்பிக்கும் பணி முடிந்ததும், குளத்தில் தண்ணீர் நிரம்பியுள்ளது. 66 ஆண்டுக்கு பின், தற்போது, இக்கோவிலில் பூஜைகள் நடக்கின்றன.

இதுகுறித்து, பாகிஸ்தான், தொல்லியல் துறை தலைவர், அஸ்மத் தாஹிரா கூறியதாவது: பழமை மாறாமல், இக்கோவில், புனரமைக்கப்பட்டுள்ளது; பாகிஸ்தான் அரசின், இந்த புனரமைப்புக்கு, அந்நாட்டில் வசிக்கும் இந்துக்கள் நன்றி கூறினாலும், சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.கடாஸ்ராஜ் கோவில் அமைந்துள்ள பகுதி, இந்துக்களுக்கு மட்டும் உரியதல்ல; இங்கு, ஒரு புத்த மடம், சீக்கிய மாளிகைகள் மற்றும் இதர சிறுபான்மையினரின் வழிபாட்டு மையங்களும் உள்ளன.இவ்வாறு, அஸ்மத் தாஹிரா கூறினார்.

நன்றி: தினமலர்

நமது நாட்டில் புராதன சின்னமான பாபரி மஸ்ஜிதை ராமர் பிறந்த இடம் என்ற ஒரு பொய்யை சொல்லி இடித்து தரை மட்டமாக்கினர் பிஜேபியினர். ஆனால் பாகிஸ்தானிலோ புராதன சின்னமான சிவன் கோவில் பல கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு மக்களின் வழி பாட்டுக்கு திறந்து விடப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் இந்த முயற்சி பாராட்டத்தக்கது. அங்குள்ள ஒரு சில இந்திய எதிர்ப்பாளர்களை ஒரு வழிக்கு கொண்டு வந்து இந்திய விவகாரங்களில் தலையிடாமல் இருந்தால் அது இந்த முழு பிராந்தியத்துக்கும் நலவாக அமையும்.

கார்கில் மற்றும் காஷ்மீர் பகுதிகளில் அநியாயத்துக்கு பல லட்சம் கோடிகள் இரண்டு நாடுகளும் வீணுக்கு செலவிட்டு வருகின்றன. இரண்டு நாடுகளும் நெருங்கி வரும் பட்சத்தில் அங்கு செலவிடும் பொருளாதாரம் நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல திருப்பி விடப்படலாம். உயர் மட்ட தலைவர்கள் இதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்.

3 comments:

suvanappiriyan said...

திரு நட்ராயன்!

//அவர்களின் பெயர்கள் எல்லாம் என்ன அழகான தமிழ் மொழியிலா இருக்கிறது!!

தமிழில் பெயர் வைக்க இஸ்லாத்தில் தடை இல்லை. நான் தமிழில் எனது பெயரை வைத்தால் என்ன ஜாதி என்று அடுத்த கேள்வி வரும். சாதியைத் துறக்கத்தான் பெரும்பாலான மக்கள் இஸ்லாத்தை தழுவும்போது திரும்பவும் அதே அடையாளம் வருவதை தவிர்க்கத்தான் அரபு பெயர்களை தேர்ந்தெடுக்கிறார்கள். சாதிகளற்ற சமூகமாக தமிழ் சமூகம் மாறி விட்டால் எனது பெயரையும் தமிழிலேயே வைத்துக் கொள்வேன். குர்ஆனில் அதற்கு எந்த தடையும் இல்லை.

நபி ஆப்ரஹாம்(இப்றாகிம்) ஒரு அரபியரல்ல. முகமது நபியின் தோழர் ஈரான் தேசத்தை சேர்ந்த சல்மான் ஃபார்ஸி தனது பூர்வீக பெயருடனேயே இருந்தார். முகமது நபி அவர் பெயரை மாற்றவில்லை. ராமன், கிருஷ்ணன் போன்ற கடவுள் பெயர்களை தவிர்த்து அன்பழகன், அறிவழகன், ஆரோக்கியம், சாந்தி, மலர்க்கொடி என்ற அழகிய தமிழ் பெயர்களை வைக்க இஸ்லாத்தில் தடை இல்லை.

மற்றபடி மிக அழகிய விளக்கங்களைக் கொடுத்த வியாசனுக்கு நன்றி!

Dr.Anburaj said...

திருலால் கிருஷ்ண அத்வானி அவர்கள் பாக்கிஸ்தானுக்குச் சென்று பிரமதா் நவாஸ் ஷொிப்புடன் பேச்சு வாா்த்தை நடத்தியதில் கேட்டுக் கொண்டபடி பாக்கிஸ்தான் அரசு சிவாலயத்தை திருத்தி புனருதானம் செய்ய ஒப்புக் கொண்டது. திரு.அத்வானி அவர்களின் மகத்தான முயற்சி வெற்றி பெற்றுள்ளதற்கு அல்லாவிற்கு எனது பிராத்த்தனைகளை தொிவித்துக் கொள்கிறேன். பாக்கிஸ்தான் அரசுக்கு பாராட்டுக்கள். செய்தியை வெளியிட்ட தங்களுக்கும் நன்றி. பங்களாதேஷ் என்ற முஸ்லீம் பெரும்பான்மையினா் வாழும் நாட்டில் இந்துக்கள் படும்பாட்டை பல பத்திாிகைகள் எழுதியுள்ளதைதாங்க்ள பாா்க்வில்லையோ ? அக்காட்சிகளை விவரிக்கும் படங்கள் செய்திகளை வெளியிடலாமே ?

Dr.Anburaj said...

பாக்கிஸதானில் 1947 க்கு முன் இருந்த அனைத்து இந்து ஆலயங்களும் இந்துக்கள் வசம் ஒப்படைக்கப்படவில்லை.அப்படி நடந்தால் ---- பாபாி மஸ்தித் கதையை தாங்கள் பேசலாம். இல்லையெனில் அயோத்தி பிரச்சனையை பேச தங்களுக்கு தகுதியில்லை.