Followers

Friday, January 17, 2014

திரு அருட்பா - கடவுளின் சுவை

இறைவன் எப்படி இருப்பான்? அவனை எப்படி அடைவது? என்று மனிதன் சிந்திக்காத நாளே இல்லை. நமது முன்னோர்கள் இறைவனைப் பற்றிய ஒரு தெளிவு இல்லாததால் அந்த இறைச் சுவை எப்படி இருக்கும் என்ற ஒரு கற்பனையில் விளைந்த பாடலை இப்போது பார்ப்போம்.

தனித்தனிமுக் கனிபிழிந்து வடித்தொன்றாக் கூட்டிச்

சருக்கரையும் கற்கண்டின் பொடியுமிகக் கலந்தே

தனித்தநறுந் தேன்பெய்து பசும்பாலும் தெங்கின்

தனிப்பாலும் சேர்த்தொருதீம் பருப்பிடியும் விரவி

இனித்தநறு நெய்யளைந்தே இளஞ்சூட்டின் இறக்கி

எடுத்தசுவைக் கட்டியினும் இனித்திடுந்தெள் ளமுதே

அனித்தமறத் திருப்பொதுவில் விளங்குநடத் தரசே !

அடிமலர்க்கென் சொல்லணியாம் அலங்கலணிந் தருளே
---------------------------------------------------

தனித்தனிமுக் கனிபிழிந்து = தனித் தனியே மா, பலா, வாழை என்ற முக் கனியையும் பிழிந்து எடுத்து

வடித்தொன்றாக் கூட்டிச் = அந்தப் பழச் சாற்றை வடி கட்டி, பின் ஒன்றாகக் கலந்து

சருக்கரையும் = கொஞ்சம் சர்க்கரை

கற்கண்டின் பொடியு = கொஞ்சம் கற்கண்டின் பொடி

மிகக் கலந்தே = நன்றாக கலந்து.

தனித்தநறுந் தேன்பெய்து = சிறந்த நல்ல தேன் கொஞ்சம் கலந்து

பசும்பாலும் = அதோடு கூட கொஞ்சம் பசும் பால்

தெங்கின் தனிப்பாலும் = மற்றும் தேங்காய்ப் பால்

சேர்த் = சேர்த்து

தொருதீம் பருப்பிடியும் விரவி = அதோடு கொஞ்சம் முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு போன்ற பருப்புகளை பொடி செய்து விரவி

இனித்தநறு நெய்யளைந்தே = அது மேல நல்ல நெய் விட்டு

இளஞ்சூட்டின் இறக்கி = லேசா சுடவச்சு இறக்கி வச்சா.....

எடுத்தசுவைக் கட்டியினும் = அந்த கட்டி எப்படி சுவையாக இருக்கும்? அதை விட

இனித்திடுந்தெள் ளமுதே = இனிப்பாக இருக்கும் தெளிய அமுதே

அனித்தமறத் = அநித்தம் + அற. உண்மை நித்தியமானது. பொய் அநித்தியமானது. அந்த அநித்தியம் அற (விட்டுப் போக)

திருப்பொதுவில் விளங்குநடத் தரசே ! = பொதுவாக நடமிடும் அரசே

அடிமலர்க்கென் சொல்லணியாம் = உன்னுடைய திருவடிகளில் என்னுடைய சொல்லால் ஆன இந்த

அலங்கலணிந் தருளே = அணிகலனை அணிந்தருளே

------------------------------------------------------

தனித் தனியே மா, பலா, வாழை என்ற முக் கனியையும் பிழிந்து எடுத்து அந்தப் பழச் சாற்றை வடி கட்டி, பின் ஒன்றாகக் கலந்து கொஞ்சம் சர்க்கரை கொஞ்சம் கற்கண்டின் பொடி நன்றாக கலந்து சிறந்த நல்ல தேன் கொஞ்சம் கலந்து அதோடு கூட கொஞ்சம் பசும் பால் மற்றும் தேங்காய்ப் பால் சேர்த்து அதோடு கொஞ்சம் முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு போன்ற பருப்புகளை பொடி செய்து விரவி அது மேல நல்ல நெய் விட்டு லேசா சுடவச்சு இறக்கி வச்சா.....

அந்த கட்டி எப்படி சுவையாக இருக்குமோ? அதை விட உண்மையான இறைவன் நித்தியமானவன்: பொய்யான கடவுள்கள் அநித்யமானது:. அந்த அநித்தியம் என்னிடமிருந்து அகல பொதுவாக நடமிடும் அரசே! இறைவனே! உன்னுடைய திருவடிகளில் என்னுடைய சொல்லால் ஆன இந்த அணிகலனை அணிந்தருளே!

என்று திருவருட்பாவில் கடவுளைப் பற்றி பாடுகிறார்.

குர்ஆன் கூறுவதையும் பார்ப்போம்:

'இறைவன் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை: அவனுடன் எந்த கடவுளும் இல்லை. அவ்வாறிருந்தால் தான் படைத்தவற்றுடன் ஒவ்வொரு கடவுளும் தனியாகப் பொயிருப்பார்கள். ஒருவரையொருவர் மிகைத்திருப்பார்கள். அவர்கள் கூறுவதை விட்டும் இறைவன் தூயவன்'

-குர்ஆன் 23:91




2 comments:

SNR.தேவதாஸ் said...

இதைத்தான் பாரத பிரதமர் திரு.மோடி அவர்களும் கூறுகிறார்.
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்

Anonymous said...

இறைவன் ஒருவரே !
அவர் அனுபவத்தில் ஜோதியாக - ஒளியாக உள்ளார்.
அவர் நம் உடலில் உள்ளார்.
இதை அனுபவத்தில் காண நம் உடலில் உள்ள உயிர் ஒளியை காண வேண்டும்.
அதை காண தடை என்ன?
எதோ தடையாக உள்ளது.
இந்த தடையை தகர்த்து இறை அனுபவம் பெறுவதே சனாதன தர்மம்.

இறைவன் திருவடி சரண் அடைவதே இங்கு சொல்லி கொடுக்க பட்டு உள்ளது.
இது அவரவர் பக்குவத்திற்கு ஏற்பட்டது போல் புரியும்.

எந்த நிலையில் மக்கள் உள்ளனர்
சரியை :- கோயில் - ஆலயம்- வழிபாட்டு தலம் செல்லுதல்.
கிரியை :- மந்திரம் செபித்தல், பூஜை அறையில் வழிபடுதல்.
யோகம் :- மனம் உடல் பக்குவ படுத்தல்
ஞானம் :- தன்னுள் இருக்கும் இறைவனை அனுபத்தில் கானல்.

இங்கு ஆன்மீக சுகந்திரம் உள்ளது. கல்லை கும்பிடலாம், கும்பிடுவனை திட்டலாம்.
ஆனால் எல்லோரும் முக்தி என்ற நிலைக்கு செல்கிறார்கள்.

ஞானம் இதுவே முடிவான நிலை. இறைவனை அனுபவத்தில் காண
சில ஒழுக்கம் தேவை
மாமிசம் உன்ன கூடாது
உயிர் கொலை கூடாது
மது அருந்த கூடாது
புகை பிடிக்க கூடாது.


அனுபத்தில் இறைவனை காணுவதே நம் முயற்சியாக இருக்க வேண்டும்.

காலமுள்ள போதே ஆன்ம இன்ப சுகத்தை பெற வேண்டும். என்று சொல்கிறார் வள்ளலார் .
அதற்க்கு ஒரு குரு மூலம் நடுக்கண்ணை திறந்து கொள்ள வேண்டும்.

வடலூர் தை பூசம் வாருங்கள்.
www.vallalyaar.com