வட்டியை உண்போர் மறுமை நாளில் ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். 'வியாபாரம் வட்டியைப் போன்றதே' என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். இறைவன் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான்.
-குர்ஆன் 2:275
வட்டியை இறைவன் கடுமையாக தடுக்கிறான். எனவே முஸ்லிம்களில் பெரும்பாலோர் இந்த பாவத்திலிருந்து தவிர்ந்தே வருகின்றனர்.பொருளாதாரம் சுழற்சி முறையில் எல்லோரிடமும் பரவலாக்கப் பட வேண்டும் என்பதாலேயே இறைவன் இப்படி ஒரு ஏற்பாட்டை செய்திருக்கலாம். ஆனால் பொருளாதாரத்தை வீட்டிலேயே வைக்கவும் முடியாது. லட்சக்கணக்கான ரூபாய்களின் பாதுகாப்பிற்கு நாம் வங்கிகளையே நாட வேண்டியுள்ளது. அவ்வாறு இதுவரை செலுத்தப்பட்ட பணத்துக்கான வட்டித் தொகையை பெரும்பாலான முஸ்லிம்கள் வாங்குவதே இல்லை. தற்போது இந்த பணம் மலை போல் பேங்கில் குவிந்து கிடக்கிறது. 1.5 டிரில்லியன் டாலருக்கு சமமான இந்திய ரூபாய்கள் இஸ்லாமியர்களால் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் இது கிட்டத் தட்ட 64500000000000 ரூபாய்க்கு சமமான தொகையாகும். இது சற்று மிகைப்படுத்தப்பட்டதாக தோன்றலாம். இருந்தாலும் இஸ்லாமியர்களுக்கு சொந்தமான பெருந் தொகை வங்கிகளில் சீந்துவாரின்றி கிடக்கிறது. இந்தியாவில் தற்போது 13 கோடி முஸ்லிம்கள் உள்ளனர். ஒரு குடும்பத்துக்கு ஐந்து பேர் என்று வைத்துக் கொண்டாலும் ஒவ்வொரு குடும்பமும் 24 லட்சம் இனாமாக பெறும். அல்லது வட்டியில்லாத கடனாகக் கூட கொடுத்து அவர்கள் வாழ்வை முன்னேற்றலாம். இதன் மூலம் அரசு உதவியின்றியே இந்தியாவில் முஸ்லிம்கள் தங்களின் வாழ்வை மேம்படுத்திக் கொள்ள முடியும். அல்லது வறுமை கோட்டுக் கீழ் உள்ள அனைத்து மதத்தவரையும் கணக்கெடுத்து இந்த தொகையை பிரித்துக் கொடுக்கலாம்.
உதாரணத்துக்கு ஒரு அரசு உத்தியோகத்திலிருந்து ஒரு முஸ்லிமும் ஒரு இந்துவும் ஓய்வு பெறுவதாக வைத்துக் கொள்வோம். பிராவிடண்ட் ஃபண்ட் மூலியமாக இந்த இருவருக்கும் கிடைப்பது 0.5 மில்லியன் என்று வைத்துக் கொள்வோம். இந்த தொகையை பிக்சட் டெபாசிட்டில் 12 வருடத்துக்கு அந்த இந்து நண்பர் வங்கியில் இருப்பு வைக்கிறார். அடுத்த 12 வருடத்தில் அந்த நபர் பெறும் தொகை 1.8-2 மில்லியன் ரூபாய்கள். ஆனால் முஸ்லிமுக்கு வட்டி தடுக்கப்பட்டது. எனவே இந்த முஸ்லிம் அதே 12 வருடங்களுக்கு பிறகு பெறும் தொகை 0.5 மில்லியன் மட்டுமே. எந்த அளவு தொகை வித்தியாசப்படுகிறது என்று பாருங்கள். எனவே இதற்கு ஒரு மாற்று வழியை நாம் தேட வேண்டியது அவசியமாகிறது.
இந்த தொகை இருப்பு இருப்பது நமது இந்திய நாணய மதிப்பின் சரிவை காப்பாற்றுகிறது என்று கூட சொல்லலாம். மேலும் வளைகுடாவில் வேலை செய்து வரும் பெரும்பாலான முஸ்லிம்கள் மாதா மாதம் தங்களின் செலவு போக ஒரு பெரும் தொகையை நமது நாட்டுக்கு அனுப்பி வருகின்றனர். அமெரிக்கா கனடா போன்ற நாடுகளில் உள்ள மற்ற மதத்தவர் குடும்பத்தோடு அங்கு தங்கியுள்ளதால் இந்தியா அனுப்புவது சொற்ப பணமே! இவ்வளவு ஊழல்கள் நமது நாட்டில் மலிந்தும் பொருளாதாரம் முன்னேறிச் செல்கிறது என்றால் அது மறைமுகமாக இஸ்லாமியர் அனுப்பும் பணமும் என்றால் மிகையாகாது.
இஸ்லாமிய வங்கி முறையை நடைமுறைபடுத்த முஸலிம்கள் இனிமேலாவது முயற்சி செய்ய வேண்டும். அதில் கிடைக்கும் லாபத்தை வைத்து வறுமையானவர்களை தேடி அவர்களின் வாழ்வை வளப்படுத்தலாம். சவுதி அரேபியா, மலேசியா, எகிப்து போன்ற நாடுகளில் இந்த இஸ்லாமிய வங்கி முறையானது மிகச் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது.
http://www.linkedin.com/groups/Interest-amount-Indian-Muslims-Deposit-3973265.S.59341848
1 comment:
எனக்கு தொிந்த முஸ்லீம்கள் அனைவரும் வங்கி வட்டியை வாங்கிக் கொண்டுதான் இருக்கின்றாா்கள். வங்கி வட்டி வாங்காத முஸ்லிம்களை இதுவரை நான் கண்டதில்லை. ஆகவே தங்களின் கட்டுரை ஒருகட்டுக்கதை. பெரும் அளவில் தவறானது. விதிவிலக்குகள் விதியாகாது.
Post a Comment