Followers

Friday, January 24, 2014

சவுதி ஜப்பானிய மாணவர் பரிமாற்றம்!



சவுதி ஜப்பானிய மாணவர் பரிமாற்றம்!

சவுதி கல்வி அமைச்சகத்தின் அடுத்த முயற்சியாக ஜப்பானோடு பல ஒப்பந்தங்களை போட்டுள்ளது. கல்வி விவகாரங்களில் பல உதவிகளை இரு நாடுகளும் பரிமாறிக் கொள்கின்றன. அதன்படி இங்குள்ள மாணவர்கள் அங்கு செல்வதும் அங்குள்ள மாணவர்கள் இங்கு வந்து கல்வி கலாசாரங்களை கற்றுக் கொள்வதும் அதிகரித்துள்ளது.

சென்ற டிசம்பர் 26-2013 அன்று ஜப்பானின் பாராளுமன்ற விவகார அமைச்சர் தகாவோ மகீனோ அவர்களால் சவுதி இளைஞர் குழுவுக்கு பாராட்டு பத்திரங்கள் வழங்கப்பட்டன. சவுதி மாணவர் குழுமத்துக்கு முஹம்மத் அல்கர்னாஸ் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். இந்த குழு இளவரசர் நவாஃப் பின் பைசலின் அழைப்பின் பேரில் சென்றுள்ளது.

மகீனோ தனது உரையில் 'சவுதியும் ஜப்பானும் மாணவர்களின் முன்னேற்றம், விளையாட்டு கல்வி போன்ற பல துறைகளில் புரிந்துணர்வோடு பல உதவிகளை பரிமாறிக் கொண்டிருக்கின்றன. இந்த முயற்சியானது இரு நாடுகளின் உறவில் புதிய அத்தியாயத்தை தொடங்க வைத்துள்ளது' என்றார்.

சவுதி இளைஞர் நலத் துறை தலைவரான அப்துல் அஜீஸின் தலைமையில் இந்த குழு டொயோனோ என்ற ஜப்பானிய கிராமத்துக்கு சென்றது. அந்த கிராமத்தின் அனைத்து மக்களும், அந்த பிராந்தியத்துக்கான மேயர் மினூரோ இடோவும் மகிழ்ச்சியோடு இந்த குழுவை வரவேற்று உபசரித்தனர். இரு நாடுகளின் உறவை எந்த வகையில் மேம்படுத்தலாம் என்ற ரீதியில் கருத்துகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இடோ, அராகி என்ற இரு ஜப்பானியர் எவ்வாறு சவுதி இளைஞர்கள் தங்களின் கல்வியை இங்கு பயில்கிறார்கள் என்று விளக்கினர்.

வரும் 2015 ஆம் ஆண்டானது சவுதி ஜப்பான் இரு நாடுகளின் கூட்டு முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டு 25 வருடங்களை பூர்த்தியாக்கும் என்ற தகவலையும் அங்கு தெரிவிக்கப்பட்டது. இந்த குழுவானது ஒன்பது நாட்கள் ஜப்பானில் தங்கியிருந்து இளைஞர்களின் முன்னேற்றத்திற்கான நீண்ட கால திட்டங்களை வகுக்கும்.

தகவல் உதவி சவுதி கெஜட்.

அமெரிக்க உறவை உதறி தள்ளி விட்டு ஜப்பான் போன்ற நாடுகளின் பக்கம் தனது கவனத்தை சவுதி திருப்பியிருப்பது சந்தோஷமான செய்தியாகவே பார்க்கிறேன். இது தொடர வேண்டும்.

1 comment:

C.Sugumar said...

முஸ்லீம்கள் ஜப்பானில் கிடையாது.எனவே காடையர்கள் தொந்தரவுயின்றி ஜப்பான் உள்ளது.சவுதி கழிசடைகளை அங்கே விட்டால் ஜப்பானையும் இரத்தக் களறி ஆக்கிவிடுவார்கள். ஜப்பான் அரசை ஏற்கனவே எச்சரிக்கை செய்து விட்டேன்