Followers

Thursday, January 16, 2014

அற்புத திருவந்தாதி - இறைவனை காணாமலே காதல்

காரைக்கால் அம்மையார் அருளிச் செய்த அற்புத திருவந்தாதி.

அன்றுன் திருவுருவம் காணாதே ஆட்பட்டேன்
இன்றும் திருவுருவம் காண்கிலேன் - என்றும் தான்
எவ்வுருவோ நும்பிரான் என்பார்கட்கு என்னுரைக்கேன்
எவ்வுருவோ நின்னுருவம் ஏது’


மிகவும் எளிமையாக புரிந்து கொள்ளும் வண்ணம் இந்த பாடல் இயற்றப்பட்டுள்ளது.

அன்று உன் திரு உருவம் காணாதே உனக்கு நான் ஆட் பட்டேன். உன்மேல் காதல் கொண்டேன்.

இன்றும் உன் திரு உருவம் காண்கிலேன்.

என்னிடம், "உன்னுடைய இறைவன் என்ன உருவம்" என்று கேட்பவர்களுக்கு நான் என்ன சொல்லுவேன். எது தான் உன் உருவம் என்று இறைவனிடமே கேட்கிறார் அம்மையார்.

(பிரியாதவன் என்பதன் மரூவு பிரான். எம்பிரான் என்றால் எம்மை விட்டு எப்போதும் பிரியாதவன் என்று பொருள்)

இறைவனை உளப்பூர்வமாக வணங்குவதற்கு நமக்கு முன்னால் இறைவனின் உருவம் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதை இந்த பாடல் நமக்கு உணர்த்துகிறது. உலகில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் ஐந்து வேளையும் உருவம் இல்லாமலேயே இறைவனை உளப் பூர்வமாக வழிபடுவதை தினமும் பார்க்கலாம்.

1500 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட ஒரு தமிழ் பாடல் இன்று எழுதியது போல் உள்ளதை நினைத்து நான் ஆச்சரியப்படுகிறேன். தமிழ் மொழியானது அந்த அளவு சிதையாதது இன்று வரை வாழ்ந்து வருகிறது.

------------------------------------------------------

'நீங்கள் இறைவனைப் பார்த்ததுண்டா?' என்று முகமது நபியிடம் கேட்கப் பட்டபோது 'அவனோ ஒளி மயமானவன்.நான் எப்படி அவனைப் பார்க்க முடியும்? என்று பதிலளித்தார்.

ஆதாரம் : முஸ்லிம் :261 - புகாரி 3234, 4855, 7380

மேற்கண்ட நபி மொழி மூலம் முகமது நபியும் இறைவனைப் பார்த்ததில்லை என்று நம்மால் விளங்க முடிகிறது.

இனி இறைவனின் உருவத்தைப் பற்றி குர்ஆன் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன். நன்கறிந்தவன்.'

குர்ஆன் 6 : 103


இந்த வசனத்தின் மூலம் இறைவனை பார்க்கும் சக்தி நமது கண்களுக்கு கொடுக்கப்படவில்லை என்று அறிகிறோம். இறைவனை நான் பார்த்தேன் என்று யாராவது சொன்னால் அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று உடன் சொல்லி விடலாம்.

நபி மொழியில் ஒரு இடத்தில் 'ஏழைகளுக்கு உணவளித்தால் அது இறைவனுக்கு உணவளித்தது போல் ஆகும்: ஏழைக்கு உடையளித்தால் அது இறைவனுக்கு அளித்ததாகும் அதாவது 'ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்' என்ற தத்துவத்தை அழகாக சொல்கிறது. எனவே இஸ்லாமிய நம்பிக்கைபடி உலகிலேயே இறைவனை காண வேண்டுமானால் ஏழைகளுக்கு உதவிட விட வேண்டும் என்று இஸ்லர்ம் கட்டளையிடுகிறது. நற் கருமங்கள் செய்து நல் அடியார்களாக மரணித்தவர்களுக்கு மறு உலகில் இறைவன் தனது முகத்தை காட்டுவான். அந்த நல்ல நாளுக்காக நாம் அதிகமதிகம் நன்மைகளை செய்ய முயற்சிப்போமாக!

No comments: