
வாழ்த்துக்கள் எஸ்.டி.பி.ஐ கட்சியினருக்கு!
எஸ்.டி.பி.ஐ. கட்சி மதுரை மாவட்டம் தெற்கு தொகுதி நிர்வாகிகளிடம் மனு ஓன்று வந்ததுள்ளது.
அதில் '' வீரராஜ்குமார் '' என்ற 14வயது சிறுவனுக்கு இருதயத்தில் ஒரு ஓட்டையும் ஒரு அடைப்பும் இருந்த நிலையில் பண உதவி கேட்டு மனு கொடுக்கப்பட்டது.
அந்த சிறுவனுக்கு அறுவை சிகிச்சை முழு பொறுப்பையும் தெற்கு தொகுதி நிர்வாகிகள் ஏற்றுக்கொண்டனர்.
அதன் அடிப்படையில் முதல் முயற்சியாக மதுரை சரவணா மருத்துவமனைக்கு சென்று '' Dr. சரவணன் '' அவர்களை அணுகி விவரங்களை எடுத்து சொல்லி வசதி இல்லாத இந்த குடும்பத்திற்கு தங்களுடைய உதவி வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளார்கள்.
எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகளின் கோரிக்கையை ஏற்று இலவசமாகவே செய்து முடிக்கிறேன் என்று டாக்டர் சொன்னவுடன் அக்குடும்பத்தார் மகிழ்ச்சியில் திகைத்து நின்றனர்.
இறைவனுடைய மாபெரும் கிருபையால் அந்த சிறுவன் அறுவை சிகிச்சைக்கு பிறகு தெற்கு தொகுதி நிர்வாகிகள் நலம் விசாரிக்க சென்றுள்ளார்கள்.
தங்களை பார்த்த அச்சிறுவன் நாங்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு எழுந்து வந்து முக மகிழ்ச்சியுடன் நிர்வாகிகளிடம் சிறிது உரையாடினான் என்கின்றனர் எஸ்.டி.பி.ஐ கட்சியின் நிர்வாகிகள்.
அறுவை சிகிச்சையின் பண மதிப்பு '' 2,25,000 '' இரண்டு லட்சத்து இருபத்து ஐந்தாயிரம்.
வாழ்த்துக்கள் எஸ்.டி.பி.ஐ கட்சியினருக்கு!
-Thanks to Paramakudi Gani
இஸ்லாமிய இயக்கங்கள் வெறும் அரசியல் ஆதாயங்களையே கணக்கில் எடுக்காமல் இது போன்ற சமூகம் சார்ந்த உதவிகளை அதிகப்படுத்த முயல வேண்டும்.
No comments:
Post a Comment