Followers

Friday, June 30, 2017

கொல்லப்பட்ட ஜூனைத் எழுதும் கடிதம்....

கொல்லப்பட்ட ஜூனைத் எழுதும் கடிதம்....

'பசு பாதுகாவலர்கள்' என்ற போர்வையில் சில தேச விரோதிகள் சில மனித மிருகங்கள் இளைஞன் ஜூனைதை ரயிலில் அடித்துக் கொன்றதை நாம் பார்த்திருப்போம். அப்போது அருகில் இருந்த அவரது நண்பன் அஸாருத்தீன் டெல்லி ஜந்தர் மந்தரில் திரளான மக்கள் கூட்டத்தில் ஜூனைத் தனது தாயாருக்கு எழுதுவதாக ஒரு கடிதத்தை உருதுவில் வாசித்தார். அதன் ஆங்கில மொழியாக்கம்.

My beloved Ammi,

Assalam alaykum wa Rahmatullahe Wa Barakaatuhu. [May the peace, mercy, and blessings of Allah be with you too]
I hope you are be doing well, and I pray to God you are always in high spirits.

Maa, I've reached my real home, I am in Jannat. You wanted to see me in new clothes! 
Look, I am dressed in absolutely new clothes. You sent me to Delhi to buy clothes, but fate brought me to heaven.

Here, I buy very nice pairs of clothes here.

Maa! I am very happy over here. I do not have to fear crowds here, neither is there any discrimination here. I stroll in the gardens of Jannat, and eat from its fruits.

I forgot to tell you that I am celebrating Eid with other martyrs. I am accompanied by Mohsin Sheikh and Minhaj Ansari, and all others, who are all living a life of eternal luxury.


But Maa, I miss you a lot. I miss my brothers, too, they all got injured..the crowd used knives to try to kill us. But look, Maa, everything changed and now I will live forever.

What makes me sad, Maa, is that you will not wear new clothes. You will not make Sewai for Eid. And like previous Eids, you wont be happy today. Looking at others will make you sad, because I will be nowhere in sight.

Who will have the sewai you make for Eid? Who will wear new clothes and come to you to make you happy?

Who will make mischief around the house?

You sent me away to get new clothes so I look handsome, just like a bridegroom. But what could I do, Maa, some things are not meant to be..You will not be able to see me in my new clothes.

Maa,
There is nothing to worry about, I am now married to the hoors in jannat. You will be very pleased to see me. Pehlu Khan and Akhlaq also attended my wedding.

But don't think about all this, Maa. Life on earth has a very short span. One day you will come to me, and then we will all live together.

Maa, I have a complaint to make, will you listen to it?

Maa, you lied to me. You used to tell me Hindus and Muslims form a brotherhood. But when the crowd was trying to murder me, no one came forward to save me, they remained mute spectators. They saw how I was being stabbed, yet they made videos of my murder. 
I pleaded for help, but no one came forward. 

Does a brother silently watch another brother get stabbed to death; does a brother make videos while this happens? 

Maa, for God's sake, please don't lie anymore. Don't say the government is there to help us, now that you have witnessed the Modiji did not utter a word of either condolence or condemnation.

Don't spread the rumor that community and political leaders are our protectors. You are now aware of everything.

Some legislators are in the opposition, others are busy with aftaar parties, yet others are out to take selfies in the political corridors. These are the things they feel will bring them rewards from Allah, hence they spend their time trying to make headlines.

Nobody cares about you or me.

Was I not human? Are you not human? Was not the Noble Quran in my heart? Then why did they not come to ask after us?

Okay, Maa, let us leave this be. 

There is one thing which you were right about. You used to tell me that there is no one but Allah we can turn to. 

Don't you see, Maa?

The oppressed are sitting under His shade. No one labels us Pakistani, no one shoos us away and no one stares at us with suspecting eyes. 

Pehlu Khan misses his elderly mother dearly, and this makes him sad. 

I can see perseverance on Chacha Akhlaq's face; he misses his widow, and, perhaps his children, too.

And Saifullah is angry at his father.

Maa, do you know who Saifullah is? 

He is the one who was devoured by political hounds. They labelled his death an encounter. 
It is he who is the one upset with his father. 

Would you like to know why, Maa? His father was bribed into declaring his innocent son a terrorist. He made him an oppressed in the eyes of the people. 

Maa, people are very strange creatures. Even when it came to my murder, they got divide into two groups. Some consoled you and shared in your sorrow, praying their Eid namaz with black bands, while some declared fatwas against them, they imagined that by showing solidarity with black bands, they had rebelled against Nature.
   
I have heard today Shehla Rashid and poet Imran Pratapgarhi will wear black bands to show their support to you, without caring for fatwas.

May Allah reward them with Good. May this be, and then, again, may this be.

But will all this get me justice? Will all this bring back your happiness?

I am aware that I will not get justice, neither will the smile return to your face, because the Junaid you send to the market will never come back with new clothes to show them to you.
Because our legislators, infact not ours, only yours,.. these legislators are least bothered. 
And lastly, don't ever let my departure grieve you, and do not cry...because its apt to mourn the dead, but I have become eternal, I am alive.

And do always remember me in your prayers, and keep reciting the verses from the Quran.


Your darling child,
Hafiz Junaid Shaheed 

Residence - Jannat al Firdaus/ The gardens of Paradise



கதிராமங்கலத்தில் போலீஸ் தடிஅடி... பதற்றம்....

கதிராமங்கலத்தில் போலீஸ் தடிஅடி... பதற்றம்....

கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிஸி பதித்த குழாய்களிலிருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டு வயல்களில் பரவியது. அந்த பகுதியில் துர்நாற்றமும் வீசியது. இதனால் கதிராமங்கலம் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்புக்கு அங்கு வந்த போலீஸாருக்கும் பொது மக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு முடிவில் தடிஅடியாக மாறியது. போலீஸின் லத்திக்கு பயந்து சிதறி ஓடும் மக்கள்.

இத்தனை எதிர்ப்பையும் மீறி கார்பரேட் கம்பெனிகளுக்கு நாட்டின் வளத்தை தாரை வார்க்கத்தான் வேண்டுமா? மோடி அரசு இந்த நாட்டை பல வழிகளில் சுடுகாடாக மாற்றிக் கொண்டுள்ளது. இதன் முடிவு எங்கு போய் நிற்குமோ?

இறைவா! தேச விரோதிகளான இந்த இந்துத்வா ஆட்சியாளர்களிடமிருந்து எனது நாட்டை காப்பாற்று!

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
01-07-2017










Thursday, June 29, 2017

மணமகன் தேவை......

மணமகன் தேவை

Registration No : TMG00040

1. பெயர் : மெகராஜ்

2. வயது : 18

3. த/பெயர் : முகமது கவுஸ்

4. ஊர்/மாவட்டம் : வேலூர்

5. படிப்பு : 12 வது

6. நிறம் :

7. உயரம் : 155cm

8. TNTJ வை சேர்ந்தவரா ? : ஆம்

9. அல்லாஹ்வின் மீது ஆணையாக வரதட்சணை கொடுக்க மாட்டேன் என்று உறுதி கூறுகிறீர்களா ? : ஆம்

10. தொலைப்பேசி : 9677487499

11. குறிப்பு/எதிர்பார்ப்பு : தவ்ஹீத் கொள்கையில் உறுதியுள்ள மணமகன் தேவை

========================

இணை கற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மணமுடித்துக் கொடுக்காதீர்கள்! இணை கற்பிப்பவன் உங்களை எவ்வளவு தான் கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன். (அல்குர்ஆன் 2:221)

என்றும் துஆவுடன்...

அல்லாஹ்வுடைய திருப்தியை மட்டும் நாடி தவ்ஹீத் திருமணம் குரூப் அட்மின்கள் 


தொடர்புக்கு : 00966530764108, 9677452016,  00966572878916

மணமகள் தேவை......

1. பெயர் : முஹம்மது மக்தூம் (எ) நிஜாம்
2. வயது  : 28


3. த/பெயர் : முகம்மது மைதீன்.M

4. ஊர்       : திருநெல்வேலி மாவட்டம் ,
                     வடகரை கிராமம்

5. படிப்பு : Diploma Hotel management,
                  B.sc tourism management ,
                  Marine ship course ,
                  MBA marketing

6. வேலை :
 ஆரம்பத்தில் கப்பல் வேலை ,
 இப்போது சவூதியில் சொந்த வேலை

7. நிறம் : வெள்ளை

8. உயரம் : 169 cm

9. TNTJ வில் உறுப்பினரா ? : ஆம்

10. தொலைப்பேசி எண் 050 2253724 , +917 303 43 2024 (What's Up No) magdhoom

         
11. குறிப்பு/ எதிர்பார்ப்பு : மார்க்க அறிவும், குர் -ஆன் , ஹதீஸ் முறைப்படி வாழ்க் கூடியவரும் , உலக கல்வியறிவு இருத்தல் வேண்டும் .
ஓரிறைக் கொள்கையில் உறுதியாக இருக்கும் எனக்கு அதே சிந்தனையுடைய தவ்ஹீத் மணமகள் தேவை..

========================
5090. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''
நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்:
1. அவளுடைய செல்வத்திற்காக
2. அவளுடைய குடும்பப் பாரம்பரியத்திற்காக.
3. அவளுடைய அழகிற்காக
4. அவளுடைய மார்க்க (நல்லொழுக்க)த்திற்காக. எனவே, மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்!
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 67. திருமணம்

இந்த ஹதீஸின் அடிப்படையில்  பெண் பார்க்கிறேன்  இதில் நான்கில் மூன்று பண்பு கிடைக்க பெற்றாலும் அல்ஹம்துலில்லாஹ்
இன்ஷா அல்லாஹ் இதில் உள்ள அனைத்து பண்புடன் கிடைக்க வேண்டும் என்ற துஆவுடன்....
அல்லாஹ்வுடைய திருப்தியை மட்டும் நாடி

தொடர்புக்கு:
009 665 02253724 ,

* +91 73 0343 2024* (what's app no )

Wednesday, June 28, 2017

இந்துத்வாவினர் கால் பட்ட இடத்தை எதை வைத்து சுத்தம் செய்வது?

இந்துத்வாவினர் கால் பட்ட இடத்தை எதை வைத்து சுத்தம் செய்வது?

மைசூருவில் உள்ள கலா மந்திர் அரங்கில் சமூக பண்பாட்டு அமைப்பின் சார்பில் தனி நபரின் சுதந்திரமும், உணவு உரிமையும்என்ற தலைப்பில் 3 நாட்கள் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கன்னட எழுத்தாளர் கே.எஸ்.பகவான், பேராசிரியர் மகேஷ் சந்திரகுரு, சமூக செயற்பாட்டாளர் சிவராம் உள்ளிட்டோர் பங்கேற் றனர். அரங்கில் கடந்த ஞாயிற்றுக் கிழமை மதிய உணவின் போது பங்கேற்பாளர்களுக்கு ஆட் டிறைச்சி, கோழி இறைச்சி மற்றும் மாட்டிறைச்சி பரிமாறப்பட்டது.
இது குறித்த தகவல் அறிந்த பாஜக, ஆர்எஸ்எஸ், பஜ்ரங் தளம் உள்ளிட்ட அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் மைசூரு மாவட்ட பாஜக இளைஞரணி தலைவர் சம்பத் தலைமையிலான பலர், நேற்று கலா மந்திருக்குள் நுழைந்து மாட்டிறைச்சி விருந்துக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். மேலும் மாட்டிறைச்சி பரிமாறப்பட்ட கலா மந்திர் அரங்கம் மற்றும் வளாகத்தில் பசுவின் கோமியத்தை மாவிலையால் தெளித்தனர். இதன் மூலம் கலா மந்திர் புனிதம் அடைந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலாவுக்கு பாஜக எம்.பி. ஷோபா கரந்த லாஜே எழுதிய கடிதத்தில், “மைசூரு பல்கலைக்கழக பேராசிரியரான மகேஷ் சந்திர குரு தொடர்ந்து இந்துக்களின் மனதை புண்படுத்தி வருகிறார். அரசுப் பணியில் இருக்கும் அவர், அரசு இடத்தில் சட்டத்தை மீறும் வகையில் மாட்டிறைச்சி சாப்பிட்டுள்ளார். எனவே அவரை பணிநீக்கம் செய்ய வேண்டும்என கேட்டுக்கொண்டுள்ளார்.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
29-06-2017

பசுவின் பெயரால் அராஜகங்கள் செய்து சமூகத்தை பாழாக்கும் அரை கிறுக்கர்கள் நிறைந்த தேசமாக இந்தியா மாறி விட்டது.




வாழ்த்துக்கள் பிரகாஷ் ராஜ்!

தெலுங்கானா மெஹபூப் நகரில் உள்ள கொண்டட்டிப் பள்ளியில் உள்ள ஏழை முஸ்லிம் ஒருவருக்கு வீட்டை இலவசமாக கட்டிக் கொடுத்துள்ளார் நடிகர் பிரகாஷ் ராஸ்.

வாழ்த்துக்கள் பிரகாஷ் ராஜ்...




பாகிஸ்தானை உலுக்கிய டேங்கர் விபத்து!

பாகிஸ்தானை உலுக்கிய டேங்கர் விபத்து!

சென்ற ஜூன் 25 ந்தேதி மிகப் பெரிய டேங்கர் லாரி ஒன்று 25 ஆயிரம் லிட்டர் (6600 கேலன்கள்) பெட்ரோலை நிரப்பிக் கொண்டு கராச்சியிலிருந்து லாஹூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. பஹவல்பூர் என்ற இடத்தில் ஒரு திருப்பத்தில் டேங்கரை வளைக்கும் போது டயர் வெடித்ததால் டேங்கர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. டேங்கரில் இருந்த பெட்ரோல் கீழே கொட்டத் துவங்கியது. அங்கம் பக்கத்தில் இருந்த கிராம மக்கள் இலவசமாக பெட்ரோலை அள்ள டேங்கர் லாரியை நோக்கி முன்னேறினர். இது ஆபத்து என்று காவல் துறையினர் தடுத்தும் மக்கள் கேட்கவில்லை. இரு சக்கர வாகனத்தில் வந்து வழியும் பெட்ரோலை அளளத் தொடங்கினர்.

தனியாருக்கு சொந்தமான அந்த பெட்ரோலை இவ்வாறு தனதாக்கிக் கொள்வது இஸ்லாமிய நடைமுறை அல்ல என்பதை ஏனோ அந்த மக்கள் உணரவில்லை. இலவசத்துக்கு ஆசைப்பட்டு முண்டியடித்தனர். அந்த கூட்டத்தில் யாரோ ஒருவர் சிகரெட் பிடித்ததாலோ அல்லது வேறு ஏதேனும் காரணத்தாலோ வழியும் பெட்ரோல் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. பெட்ரோலை அள்ளிக் கொண்டிருந்த மக்கள் டேங்கர் வெடித்ததால் தூக்கி எறியப்பட்டனர். 170 க்கு மேல் இதுவரை இறந்துள்ளனர். முகம் சிதைந்து, கை கால் இழந்தவர்கள் எண்ணிக்கை தனி.

மறுநாள் பெருநாள் கொண்டாட வேண்டிய அந்த மக்களுக்கு இப்படி ஒரு சோகம். இறைவன் நம்மை இது போன்ற சோகங்களிலிருந்து காப்பாற்றுவானாக! உறவினர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இறைவன் சாந்தியையும் சமாதானத்தையும் பொறுமையையும் அளிப்பானாக!




























ராகவன் ராஜா போன்ற பார்பனர் எண்ணம் பலிக்கவில்லை!

ராகவன் ராஜா போன்ற பார்பனர் எண்ணம் பலிக்கவில்லை!

தமிழகம் என்றுமே மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக் காட்டு. ராகவனும் எச் ராஜாவும் அஸ்வினை தாக்கியது இஸ்லாமியர் என்று முகநூலில் வதந்தியை பரப்பினர். கலவரத்தை உண்டு பண்ண நினைத்தனர். ஆனால் காவல் துறை உரிய நடவடிக்கை எடுத்து மணி கண்டன் (22), முத்து ராமலிங்கம் (29), சதீஷ்குமார் (22), முத்துராமலிங்கம் மகன் மணிகண்டன் (38) ஆகியோரை கைது செய்து உண்மை குற்றவாளிகளை சிறையில் அடைத்துள்ளது.

Tuesday, June 27, 2017

சுப.வீ அவர்களின் திறந்த மடல் எஸ்.வி.சேகருக்கு.......

திரு சுப.வீ அவர்களின் மடல்

திரு எஸ்.வி.சேகர் அவர்களுக்கு,

வணக்கம். நேற்று வெளியான உங்களின் 11 நிமிடக் காணொளியைக் கண்டேன். அதுகுறித்துச் சில செய்திகளை உங்களோடு பேசுவதற்காகவே இந்த மடல். ஊர் அறிய வேண்டும் என்பதற்காக இதனைத் திறந்த மடலாக வெளியிடுகின்றேன்.

நியூஸ் 7 தொலைக்காட்சியில் நண்பர்கள் நாராயணன், மதிமாறன் இருவருக்குமிடையே சில நாள்களுக்கு முன் நடைபெற்ற உரையாடலின் அடிப்படையில் உங்கள் காணொளி அமைந்துள்ளது. அந்த தொலைக்காட்சி நிகழ்வை நானும் பார்த்தேன்.

1. நீங்களும் நானும் அடிப்படையில் முற்றிலும் நேர் எதிரான கொள்கைகளைக் கொண்டவர்கள் என்பது வெளிப்படை. மீண்டும் அதனை உங்கள் காணொளி உறுதிப்படுத்தியுள்ளது. "சாதியும்  மதமும் நமக்குத் தாய், தந்தை போல" என்று கூறியுள்ளதோடு, "ஒவ்வொருத்தரும் தங்கள் சாதியை ஒசத்திப் பேசுங்க. அதிலே தப்பில்ல" என்றும் நீங்கள் காணொளியில் குறிப்பிட்டுள்ளீர்கள்.  எங்களை இழிவுபடுத்தும் சாதி உங்களுக்குத் தாய் போலத் தெரிகிறது. சாதி தாய் என்றால், 'சாதிகள் இல்லையடி பாப்பா  என்று சொன்ன  பாரதி பற்றிய உங்கள் பார்வை என்ன? சாதியைக் காப்பாறுவதுதான் உங்கள் நோக்கம் என்பதை நாங்கள் அறிவோம். சாதி அமைப்பு இருந்தால்தானே, சிலர் மேலும், பலர் கீழுமாக இந்தச் சமூகத்தில் வாழ முடியும்! ஆனால் சாதியை ஒழிக்க வேண்டும் என்பதுதான் எங்களின்  நோக்கம். எனவே நாம் இருவரும் ஒரு புள்ளியில் சந்திக்க வாய்ப்பே இல்லை.

2. "எந்தப்  பார்ப்பனர் மீதாவது ஒரு எப்.ஐ.ஆர். உள்ளதா என்று கேட்கிறீர்கள். இந்திய ராணுவ ரகசியங்களை வெளிநாட்டிற்கு விற்ற கூமர் நாராயணன் யார் சேகர்? அது பழைய கதை என்பீர்கள். சங்கரராமன் கொலைவழக்கில் ஒரு பார்ப்பனர் மீதன்று, பல பார்ப்பனர்கள் மீது எப்.ஐ.ஆர். போடப்பட்டதே? வழக்கும் நடந்ததே. அவர்கள் விடுதலையாகி  விட்டனர் என்பீர்கள்!

ஜெயலலிதா மீது வழக்குத்  தொடுக்கப்பட்டு, உச்ச நீதிமன்றம் தண்டனையும் வழங்கியுள்ளதே, அது கூடவா உங்களுக்கு மறந்து போய்விட்டது?

3. 99.9% மதிப்பெண் வாங்கினால் கூட, பார்ப்பன மாணவர்களுக்கு, படிப்பதற்கு இடம் கிடைப்பதில்லை என்று கூறியுள்ளீர்கள். அப்படியானால், இன்று பள்ளி, கல்லூரிகளில் படித்துக் கொண்டுள்ள பார்ப்பன மாணவர்கள் அனைவரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றவர்களா? பொய்யைக் கூட உங்களால் பொருந்தச்  சொல்ல முடியவில்லையே?

4. நண்பர் மதிமாறன், மதியில்லாதவர், குறுக்குப்புத்திக்காரர் என்றெல்லாம் வசைபாடும் நீங்கள், அடுத்தவரை வெறுக்காமல் வாழக்  கற்றுக்கொள்ள வேண்டும் என்று எங்களுக்கு அறிவுரை வேறு கூறுகின்றீர்கள்.  மதிமாறனின் புத்திக் கூர்மையான வினாக்களுக்கு விடை சொல்ல முடியாமல் தடுமாறிய 'பிரபலங்களைத்தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் நாங்களும் பார்த்துள்ளோம். அது போகட்டும், அவர் அடுத்த சாதியினரை அசிங்கமாகப் பேசினார், பார்ப்பனர்களைத் திட்டினார் என்று பொத்தாம் பொதுவாகவே கடைசி வரையில் பேசியுள்ளீர்களே தவிர, அப்படி என்ன பேசினார் என்று எந்த இடத்திலும் கூறவே இல்லையே ஏன்? அங்குதான், சான்று இல்லாமல் பழி தூற்றும் உங்கள் தந்திரம் இருக்கிறது என்பதை நாங்கள் அறிவோம்.

அந்த விவாதத்தில் நாராயணன் அவ்வளவு அமைதியாகவா பேசினார்? எவ்வளவு இரைச்சல்! அடுத்தவரைப் பேச விடாமல் தடுக்கின்ற ஆர்ப்பாட்டம்! யோகா செய்தால் மன அமைதி வரும், நிதானம் வரும் என்றெல்லாம் சொல்கின்றீர்கள், நண்பர் நாராயணன் யோகா செய்வதே இல்லையா?

அன்று  மதிமாறன் என்ன கேட்டார்? யோகா நல்லது என்கின்றீர்களே, சுன்னத் செய்வதும் நல்லது என்றுதான் மருத்துவ அறிவியல் சொல்கிறது. அதற்காக அனைவரும் சுன்னத் செய்து கொள்ள வேண்டும் என்று சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா என்று கேட்டார். அறிவார்ந்த இந்தக் கேள்வி உங்களைக் கோபப்படுத்தத்தான் செய்யும்.

6. திமுக செயல் தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியும், பாராட்டும் சொல்லியுள்ளீர்களே, அங்குதான் உங்களின் மூளை அபாரமாக வேலை செய்துள்ளது. மக்கள் செல்வாக்கு உள்ள ஒருவரை நேரடியாகப் பகைத்துக் கொள்ளக் கூடாது என்பதில்தான் எத்தனை கவனம்.

ஸ்டாலின் அவர்கள் மீதும் , திராவிட இயக்கத்தின்  மீதும் உங்களுக்கெல்லாம் எவ்வளவு அடங்காச் சினம் உண்டு என்பது எங்களுக்குத் தெரியாதா? சில நாள்களுக்கு முன்பு கூட, ரஜினி, அஜித், விஜய் மூவரும் சேர்ந்து கட்சி தொடங்க வேண்டும் என்று பேட்டி கொடுத்தீர்கள், அதன் உட்பொருள் என்ன? என்ன செய்தாவது திமுக ஆட்சிக்கு வருவதைத் தடுத்துவிட வேண்டும் என்பதுதானே! செயல் தலைவர் மீது இவ்வளவு கோபத்தை உள்வைத்துக் கொண்டு, வெளியில் நன்றியும், பாராட்டும் சொல்கின்றீர்களே, தேர்ந்த நடிகர்தான் நீங்கள்!

செயல் தலைவர் தளபதி அவர்களையும், ஆசிரியர் வீரமணி அவர்களையும், என்னையும், தம்பி மதிமாறனையும் வெட்டிப் போட்டு விட்டால்,   உங்களின்  கோபம் தீர்ந்துவிடுமா? அப்போது கூட எங்களை வெட்டுவதற்கு, அறியாமையிலும், வறுமையிலும் உள்ள எங்கள்  சகோதரன் ஒருவனிடம்தான் அரிவாளைக் கொடுத்து விடுவீர்கள். நீங்கள் வெட்டினால், உங்கள் மீது எப்.ஐ.ஆர் வந்துவிடுமே! 

இப்போதும் அன்புடன்

சுப. வீரபாண்டியன்

Thursday, June 22, 2017

Dr Zakir Naik having Iftaar (breaking fast) with Shaikh Sudais

Dr Zakir Naik having Iftaar (breaking fast) with Shaikh Abdur Rehman Sudais on 23rd night of Ramadhaan in Haram Makkah. Dr Zakir especially requested Shaikh Sudais to pray for the safety of the Muslims of India.


இந்துத்வாவாதிகளின் தேச பக்தி என்பது இதுதான்.

கேரளா திருச்சூரைச் சேர்ந்த ராகேஷ் மற்றும் ராஜேஸ் இருவரும் சகோதரர்கள். ராகேஷ் யுவ மோர்சாவின் முக்கிய மெம்பர். ராஜீவ் பிஜேபியில் உறுப்பினராகவும் இருந்து தீவிர பணியாற்றி வருபவர். இவர்கள் இருவரும் தங்கள் வீடுகளில் 2000 மற்றும் 500 ரூபாய் கள்ள நோட்டு அடித்து அதனை புழக்கத்தில் விடும்  போது வகையாக மாட்டிக் கொண்டு தற்போது சிறையில் உள்ளனர்.

தகவல் உதவி
டைம்ஸ் ஆஃப் இந்தியா
22-06-2017

இந்துத்வாவாதிகளின் தேச பக்தி என்பது இதுதான்.


Tuesday, June 20, 2017

வரலாறு எப்படி திரிக்கப்படுகிறது?

வரலாறு எப்படி திரிக்கப்படுகிறது?

ஆதாரம் இல்லாமல் சொல்லப்படுகிறது என்பதை உங்களுக்குக்கெல்லாம் அறிமுக மான பேராசிரியர் இர்ஃபான் ஹபிப் அவர்கள் ஒரு செய்தியைச் சொன்னார்கள். அதை சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக் கின்றேன். இது ஒரு எண்டோவ்மென்ட் லெக்சர். அறக்கட்டளை சொற்பொழிவு.

Islam and Indian Culture Towards National integration
என்ற பெயராலே ஒரிசாவிலே கவர்னராக இருந்த மிகப் பெரிய மூத்த சிந்தனையாளர் சி.என். பாண்டே - அவர் இல்லை இப்பொழுது.

மூத்த சிந்தனையாளர் சி.என். பாண்டேமிகப் பெரிய வரலாற்று ஆசிரியர் சி.என். பாண்டே அவர்கள். அலகாபாத் பல்கலைக் கழகத்திலே பாட்னா பல்கலைக் கழகத்திலே அவர்கள் ஆராய்ச்சி நிகழ்த்தினார்கள்.

நீண்ட காலத்திற்கு முன்னாலே எனக்கு அறிமுகமான ஒருவர். அவர் ஒரு முற்போக்கு சிந்தனையாளர். அவருடைய நூலை எனக்கு அனுப்பினார். அந்த நூலிலே ஒரு ஆழமான செய்தியை சுட்டிக் காட்டியிருக்கின்றார். வரலாறு எப்படி திரிக்கப்படுகிறது என்பதை சொல்லி யிருக்கின்றார்கள்.
சமுதாயத்திற்கு பெரிய கேடுஅந்த ஒன்றே ஒன்றை மட்டும் எடுத்துச் சொல்லி, அது சமுதாயத்திற்கு எவ்வளவு பெரிய கேடாக ஆகியிருக்கிறது என்பதை மட்டும் உங்களுக்குச் சுட்டிக்காட்டி என்னுடைய உரையை நான் நிறைவு செய்ய விரும்புகின்றேன்.

இஸ்லாமியர்களுடைய வரலாற்றைச் சொல்லும் பொழுது பல இந்திய சரித்திர நிலைகளைச் சொல்லுகின்றார்.

திப்பு சுல்தான் பற்றி ஆராய்ச்சிபேராசிரியர் எம். ஹபீப் சொல்கிறார். திப்பு சுல்தானைப்பற்றி நான் ஆராய்ச்சி செய்தேன். அலகாபாத் பல்கலைக் கழகத்திலே ஆராய்ச்சி செய்தார். ஆய்வுபற்றி சொன்னார்கள் அல்லவா டாக்டர் ராமசாமி அவர்கள். ஆய்வுகள் எப்படி நடத்தப்படுகின்றன என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.

1928 ஆம் ஆண்டு திப்பு சுல்தான்பற்றி ஆராய்ச்சி அலகா பாத்தில் நடத்தினேன். 3000 பார்ப்பனர்களை திப்பு சுல்தான் இஸ்லாம் மதத்திற்கு மாற்றினார் என்று டாக்டர் ஹரி பிரசாத் சாஸ்திரி என்பவர் சமஸ்கிருத துறைக்குத் தலைவர் - கல்கத்தா பல்கலைக் கழகத்திற்கு. இப்படி நீங்கள் எழுதியிருக்கின்றீர்களே இதற்கு என்ன ஆதாரம் என்று கேட்கின்றார். ஹபீப் பல நினைவூட்டல் கடிதங்களை எழுதினார்.

ஆதாரம் இல்லைமைசூர் கெசட்டில் இருக்கிறது என்று அவர் பதில் எழுதினார். மைசூர் கெசட் அலகாபாத் பல்கலைக் கழகத்திலும் கிடைக்க வில்லை. கல்கத்தா பல்கலைக் கழகத்திலும் கிடைக்கவில்லை என்றவுடன் மைசூர் யுனிவர்சிட்டி துணை வேந்தருக்குக் கடிதம் எழுதுகிறார். மைசூர் கெசட்டிற்கு புதிதாக ஒரு ஆசிரியரைப் போட்டு ஸ்ரீகண்டய்யா என்பவர் அதை எடிட் பண்ணிக் கொண்டிருக்கின்றார். துணை வேந்தர் அவர்கள் ஸ்ரீ கண்டையா அவர்களுக்கு இந்தக் கடிதத்தையும் பார்வைக்கு அனுப்புகின்றார்.

திப்பு சுல்தானின் தளபதியே ஒரு பார்ப்பனர்பேராசிரியர் ஸ்ரீகண்டையா இந்த மாதிரி ஒரு சம்பவமே கிடையாது என்று அவர் பதில் எழுதியிருக்கின்றார். திப்பு சுல்தானுடைய பிரைம்மினிஸ்டரே ஒரு பார்ப்பனர். அந்த பார்ப்பனருடைய பெயர் பூர்ணய்யா.

திப்புசுல்தானின் படைத் தளபதியும் ஒரு பார்ப்பனர். அவருடைய பெயர் கிருஷ்ணாராவ். 168 கோயில்களுக்கு ஆண்டுதோறும் திப்பு சுல்தான் மானியம் வழங்கியிருக்கின்றார்.

சிருங்கேரி மட ஜகத் குரு சங்கராச்சாரியாருக்கு கடிதங்கள் பல எழுதி இணக்கமாக இருந்திருக்கிறார் என்று இவ்வளவு ஆதாரத்தையும் கொடுத்தார்.

தகவல் வெளியே வந்திருக்காது.........

இந்த ஆதாரத்தை ஒருவர் இவ்வளவு கஷ்டப்பட்டு வழங்கி யிருக்காவிட்டால் இவ்வளவு தகவல்களும் வெளியே வந்திருக்காது. இந்த புத்தகத்தில் இருக்கின்ற தகவலும் இதுவரை சரியாக வெளியே போகவும் இல்லை. எனவே இன்னமும் என்ன சொல்லி கொடுக்கிறார்கள்?
3000 பிராமணர்கள் தற்கொலையா? திப்பு சுல்தான் நெருக்கடி கொடுத்ததினாலே மூவாயிரம் பிராமணர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று பிரச்சாரம் செய்கின்றான். இதைப்போய் குஜராத்தில் சொன்னால் என்ன ஆகும்? இதை உத்தரப் பிரதேசத்தில் சொன்னால் என்ன ஆகும்? இந்தப் பாடத்தை ராஜஸ்தானத்திலே படித்தால் என்ன ஆகும்? மத நல்லிணக்கம் இருக்குமா? சமூக ஒற்றுமை இருக்குமா? சமூகத்தில் மனித நேயம் இருக்குமா?

உண்மைகளை எழுதுங்கள்.  விருப்பை உண்டாக்குவதற்குப் பதிலாக மனிதர்களை ஒன்று படுத்துவதற்குப் பதிலாக, மண்ணின் ஒருமைப்பாடு பேசக் கூடியவர்கள், மக்களின் ஒருமைப்பாட்டைப் பற்றி கவலைப்பட வேண்டாமா?

எனவே பேராசிரிய பெருமக்களே..... உங்களை நாங்கள் வேண்டுவதெல்லாம் உண்மைகளை அதன் நிர்வாணத் தன்மையிலே நீங்கள் எடுத்துக் காட்டுங்கள். தேவையானால், குறைந்த பட்ச ஆடையை மட்டும் போடுங்கள். உண்மைக்கு ஒப்பனை செய்யாதீர்கள். அது வரலாறாக ஆகிவிட முடியாது. உண்மை உண்மையாக இருக்க வேண்டும்.
ஒளிப்படம் ஒளிப்படமாக இருக்கட்டும். ஊடுகதிர் - எக்ஸ்ரே எக்ஸ்ரேவாக இருக்கட்டும். ஒருபோதும் ஓவியமாக மாற்ற வேண்டாம் என்று கேட்டு, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி விடைபெறுகின்றேன்.


- சென்னைப் பல்கலைக் கழகத்தில் 14-12-2007 அன்று நடை பெற்ற நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி