Followers

Tuesday, June 27, 2017

சுப.வீ அவர்களின் திறந்த மடல் எஸ்.வி.சேகருக்கு.......

திரு சுப.வீ அவர்களின் மடல்

திரு எஸ்.வி.சேகர் அவர்களுக்கு,

வணக்கம். நேற்று வெளியான உங்களின் 11 நிமிடக் காணொளியைக் கண்டேன். அதுகுறித்துச் சில செய்திகளை உங்களோடு பேசுவதற்காகவே இந்த மடல். ஊர் அறிய வேண்டும் என்பதற்காக இதனைத் திறந்த மடலாக வெளியிடுகின்றேன்.

நியூஸ் 7 தொலைக்காட்சியில் நண்பர்கள் நாராயணன், மதிமாறன் இருவருக்குமிடையே சில நாள்களுக்கு முன் நடைபெற்ற உரையாடலின் அடிப்படையில் உங்கள் காணொளி அமைந்துள்ளது. அந்த தொலைக்காட்சி நிகழ்வை நானும் பார்த்தேன்.

1. நீங்களும் நானும் அடிப்படையில் முற்றிலும் நேர் எதிரான கொள்கைகளைக் கொண்டவர்கள் என்பது வெளிப்படை. மீண்டும் அதனை உங்கள் காணொளி உறுதிப்படுத்தியுள்ளது. "சாதியும்  மதமும் நமக்குத் தாய், தந்தை போல" என்று கூறியுள்ளதோடு, "ஒவ்வொருத்தரும் தங்கள் சாதியை ஒசத்திப் பேசுங்க. அதிலே தப்பில்ல" என்றும் நீங்கள் காணொளியில் குறிப்பிட்டுள்ளீர்கள்.  எங்களை இழிவுபடுத்தும் சாதி உங்களுக்குத் தாய் போலத் தெரிகிறது. சாதி தாய் என்றால், 'சாதிகள் இல்லையடி பாப்பா  என்று சொன்ன  பாரதி பற்றிய உங்கள் பார்வை என்ன? சாதியைக் காப்பாறுவதுதான் உங்கள் நோக்கம் என்பதை நாங்கள் அறிவோம். சாதி அமைப்பு இருந்தால்தானே, சிலர் மேலும், பலர் கீழுமாக இந்தச் சமூகத்தில் வாழ முடியும்! ஆனால் சாதியை ஒழிக்க வேண்டும் என்பதுதான் எங்களின்  நோக்கம். எனவே நாம் இருவரும் ஒரு புள்ளியில் சந்திக்க வாய்ப்பே இல்லை.

2. "எந்தப்  பார்ப்பனர் மீதாவது ஒரு எப்.ஐ.ஆர். உள்ளதா என்று கேட்கிறீர்கள். இந்திய ராணுவ ரகசியங்களை வெளிநாட்டிற்கு விற்ற கூமர் நாராயணன் யார் சேகர்? அது பழைய கதை என்பீர்கள். சங்கரராமன் கொலைவழக்கில் ஒரு பார்ப்பனர் மீதன்று, பல பார்ப்பனர்கள் மீது எப்.ஐ.ஆர். போடப்பட்டதே? வழக்கும் நடந்ததே. அவர்கள் விடுதலையாகி  விட்டனர் என்பீர்கள்!

ஜெயலலிதா மீது வழக்குத்  தொடுக்கப்பட்டு, உச்ச நீதிமன்றம் தண்டனையும் வழங்கியுள்ளதே, அது கூடவா உங்களுக்கு மறந்து போய்விட்டது?

3. 99.9% மதிப்பெண் வாங்கினால் கூட, பார்ப்பன மாணவர்களுக்கு, படிப்பதற்கு இடம் கிடைப்பதில்லை என்று கூறியுள்ளீர்கள். அப்படியானால், இன்று பள்ளி, கல்லூரிகளில் படித்துக் கொண்டுள்ள பார்ப்பன மாணவர்கள் அனைவரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றவர்களா? பொய்யைக் கூட உங்களால் பொருந்தச்  சொல்ல முடியவில்லையே?

4. நண்பர் மதிமாறன், மதியில்லாதவர், குறுக்குப்புத்திக்காரர் என்றெல்லாம் வசைபாடும் நீங்கள், அடுத்தவரை வெறுக்காமல் வாழக்  கற்றுக்கொள்ள வேண்டும் என்று எங்களுக்கு அறிவுரை வேறு கூறுகின்றீர்கள்.  மதிமாறனின் புத்திக் கூர்மையான வினாக்களுக்கு விடை சொல்ல முடியாமல் தடுமாறிய 'பிரபலங்களைத்தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் நாங்களும் பார்த்துள்ளோம். அது போகட்டும், அவர் அடுத்த சாதியினரை அசிங்கமாகப் பேசினார், பார்ப்பனர்களைத் திட்டினார் என்று பொத்தாம் பொதுவாகவே கடைசி வரையில் பேசியுள்ளீர்களே தவிர, அப்படி என்ன பேசினார் என்று எந்த இடத்திலும் கூறவே இல்லையே ஏன்? அங்குதான், சான்று இல்லாமல் பழி தூற்றும் உங்கள் தந்திரம் இருக்கிறது என்பதை நாங்கள் அறிவோம்.

அந்த விவாதத்தில் நாராயணன் அவ்வளவு அமைதியாகவா பேசினார்? எவ்வளவு இரைச்சல்! அடுத்தவரைப் பேச விடாமல் தடுக்கின்ற ஆர்ப்பாட்டம்! யோகா செய்தால் மன அமைதி வரும், நிதானம் வரும் என்றெல்லாம் சொல்கின்றீர்கள், நண்பர் நாராயணன் யோகா செய்வதே இல்லையா?

அன்று  மதிமாறன் என்ன கேட்டார்? யோகா நல்லது என்கின்றீர்களே, சுன்னத் செய்வதும் நல்லது என்றுதான் மருத்துவ அறிவியல் சொல்கிறது. அதற்காக அனைவரும் சுன்னத் செய்து கொள்ள வேண்டும் என்று சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா என்று கேட்டார். அறிவார்ந்த இந்தக் கேள்வி உங்களைக் கோபப்படுத்தத்தான் செய்யும்.

6. திமுக செயல் தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியும், பாராட்டும் சொல்லியுள்ளீர்களே, அங்குதான் உங்களின் மூளை அபாரமாக வேலை செய்துள்ளது. மக்கள் செல்வாக்கு உள்ள ஒருவரை நேரடியாகப் பகைத்துக் கொள்ளக் கூடாது என்பதில்தான் எத்தனை கவனம்.

ஸ்டாலின் அவர்கள் மீதும் , திராவிட இயக்கத்தின்  மீதும் உங்களுக்கெல்லாம் எவ்வளவு அடங்காச் சினம் உண்டு என்பது எங்களுக்குத் தெரியாதா? சில நாள்களுக்கு முன்பு கூட, ரஜினி, அஜித், விஜய் மூவரும் சேர்ந்து கட்சி தொடங்க வேண்டும் என்று பேட்டி கொடுத்தீர்கள், அதன் உட்பொருள் என்ன? என்ன செய்தாவது திமுக ஆட்சிக்கு வருவதைத் தடுத்துவிட வேண்டும் என்பதுதானே! செயல் தலைவர் மீது இவ்வளவு கோபத்தை உள்வைத்துக் கொண்டு, வெளியில் நன்றியும், பாராட்டும் சொல்கின்றீர்களே, தேர்ந்த நடிகர்தான் நீங்கள்!

செயல் தலைவர் தளபதி அவர்களையும், ஆசிரியர் வீரமணி அவர்களையும், என்னையும், தம்பி மதிமாறனையும் வெட்டிப் போட்டு விட்டால்,   உங்களின்  கோபம் தீர்ந்துவிடுமா? அப்போது கூட எங்களை வெட்டுவதற்கு, அறியாமையிலும், வறுமையிலும் உள்ள எங்கள்  சகோதரன் ஒருவனிடம்தான் அரிவாளைக் கொடுத்து விடுவீர்கள். நீங்கள் வெட்டினால், உங்கள் மீது எப்.ஐ.ஆர் வந்துவிடுமே! 

இப்போதும் அன்புடன்

சுப. வீரபாண்டியன்

10 comments:

Dr.Anburaj said...


சுப.வீரபாண்டியன் கி.வீரமணி கலைஞா் ஸ்டாலின் ஆகிய அனைவரும் அட்டைக் கத்தி

வீரா்கள்.சாதி மத பெருமிதம் தூவேசமாக மாறி தொல்லைகளை ஏற்படுத்தி வருவதற்கு

பாா்ப்பனா்கள் மட்டும் காரணம் அல்ல.முஸ்லீம்களுக்கும் கிறிஸ்தவா்களுக்கும்

மதவெறி.கோவையில் கவுண்டா்கள் நாயுடு போன்ற சாதியினா்கள் ஆதிக்க சாதிக்காரா்கள்.

விருதுநகா் சிவகாசி பகுதியில் நாடாா் ஆதிக்க சாதியினா் .தென் மாவட்டங்களில் தேவா்

பள்ளா் சாதியினா் ஆதிக்க சாதியினா். ஆக ஒவ்வொரு பகுதியிலும் பல சாதிகள் ஆதிக்க

சக்தியாக தீண்டாமையை சமூக அவமதிப்பை பிற மக்களுக்கு எற்படுத்தும் சக்தி

படைத்தவா்களாக உள்ளாா் கள்.சுருக்கமாக சொல்லதென்றால் ” சாதி கொடுமை பஞ்சாயத்து

அளவில் எதிா்கொள்ள வேண்டியதுதான் ஏதாா்த்தம்.அதை எதிா் கொள்ளும் முதுகெலும்பு

இல்லாத கோழைகள் பாா்பனா்களை மட்டும் திட்டித் தீா்த்து வருகின்றாா்கள்.அறிவு

குருடா்கள்.

Dr.Anburaj said...

சங்ககாலப்பெயரில் 473 பேர் கிடைத்தது.

ஒரு பய கூட தன் பெயருக்குப் பின்னால் வன்னியர் - தேவர்- கவுண்டர் - நாடார் - ஐயர்- ஐயங்கார் என்று போட்டிருக்கவில்லை.

சங்கம் மருவிய காலப்பெயர்களையும் பார்த்தேன்.

கண்ணங்கூத்தனார்,மதுரை – கார் நாற்பது
கண்ணன் சேந்தனார் – திணைமொழி ஐம்பது
கணிமேதாவியார் - திணைமாலை நூற்றைம்பது
கணிமேதையார் – ஏலாதி
கபிலர் – இன்னா நாற்பது
காரியாசான் – சிறுபஞ்சமூலம்
கூடலூர் கிழார் – முதுமொழிக்காஞ்சி
சமணமுனிவர்கள் – நாலடியார்
திருவள்ளுவர் – திருக்குறள்
நல்லாதனார் – திரிகடுகம்
புல்லங்காடனார், மாறோக்கத்து முள்ளிநாட்டுக் காவிதியார் மகனார் - கைந்நிலை
பூதஞ்சேந்தனார் – இனியவை நாற்பது
பொய்கையார்– களவழி நாற்பது
மாறன் பொறையனார் – ஐந்திணை ஐம்பது
முள்ளியார், பெருவாயில் – ஆசாரக்கோவை
முன்றுறையரையனார் – பழமொழி
மூவாதியார் - ஐந்திணை எழுபது
விளம்பிநாகனார் – நான்மணிக்கடிகை

ஊகூம்.... இங்கும் சாதிப் பெயரைக் காணோம்.

அட பக்தி இலக்கிய காலத்திலாவது தேடுவோம் என்று தேடிப்பார்த்தேன்...

அங்கும் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்றும், அப்பர், சம்பந்தர், சுந்தரன் என்றே பெயர்கள் இருக்கின்றனவே ஒழிய பெயரோடு ஜாதி ஒட்டினை இணைத்துக் கொண்டு திரியும் கேவல காரியத்தை யாரும் செய்ததாக எந்தச் சான்றுமே கிடைக்கவில்லை.

ஆக, நம் மூதாதையர் யாரும் செய்திராத அசிங்கத்தினை பாரம்பர்யம் என்றும், கலாச்சாரம், என்றும், குல வழக்கம் என்றும் முன்னோர்கள் மீது பொய்ப்பழி போட்டுக்கொண்டு சாதியைச் சுமந்து திரிகிறார்கள் சம கால வன்முறையாளர்கள் என்பதே தெளிவாய்த்தெரிகிறது...

Dr.Anburaj said...

அம்பாசமுத்திரம் பூவன் பறையன் கல்வெட்டு கூறும் செய்தி
June 27, 2017
- ஆர். கோபிநாத்

மூன்றாம் ராஜசிம்ம பாண்டியன் முதலாம் பராந்தகன் என்னும் சோழ மன்னன் காலத்தவன். இவன் காலம் பொ.பி. 10 ஆம் நூற்றாண்டின் முதல் பகுதி பொ.பி. 920 வரை ஆண்டதாக சொல்கிறார்கள். இவன் கல்வெட்டுகள் தான் சடைய மாறன் என்னும் பெயரில் வெளியிடப்பட்டது. இன்றைக்கிருந்து 1100 ஆண்டுகளுக்கு முற்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் திருமூலநாதர் கோயிலில் ஒரு கல்வெட்டு இருக்கிறது. அந்த கல்வெட்டு படம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

படம் தெளிவாக இல்லாததால் அதை நானே இங்கு தருகிறேன்.

முள்ளிநாட்டு இளங்கோய்க்குடிக்கு மேற்கே புற்றும் தெற்றுமாக இருந்த ஒரு பாழ் நிலத்தை ஊர் சபையாரிடம் இருந்து வாங்கி, அந்த பாழ் நிலத்தைத் திருத்தி ஒரு குளமும் உருவாக்கி, அந்தக் குளத்து தண்ணீரால் விவசாயம் செய்து, அதிலிருந்து தூணி நெல்லும் குளத்திலிருந்து நீர் இறைக்க ஒரு ஆளும் கொடுப்பதாகவும், இந்த நிலத்திற்கு பறையன் வசக்கல் என்று பெயரிடுவதாகவும், கோயில் விளக்கேற்ற நெய்க்கு ஒரு பசுவும் கன்றும் தானமளிப்பதாகவும், சந்திராதித்தவர் உள்ளவரை இந்த தானம் தொடரும் என்று அரையன் அணுக்கரில் பூவன் பறையன் என்பவன் தானமளித்து, தானே இந்த கல்வெட்டை வெட்டியும் இருக்கிறான். பூவன் பறையனேன் என்று கல்வெட்டில் பெயரும் உள்ளது.

அரையன் அணுக்கர் என்பவர் அரசனின் மெய்க்காவல் படை வீரர்கள் அதாவது அந்தரங்க காவலர்கள். அரசனோடு அரண்மனை உட்பட அவன் போகும் இடம் அனைத்திலும் இருந்து அவனை காக்கும் பொறுப்பை ஏற்றவர்கள். இத்தகைய உயர்ந்த இடத்தில் இருப்பவன் இந்த பூவன் பறையன். இவன் தன் பெயரில் ஒரு நிலத்தை வாங்கி, அதை தானமாக கோயிலுக்கு அளித்து, அதை கல்லில் வெட்டிக்கொள்ளும் உரிமையும் பெற்றுள்ளான். ஆக பறையர் சாதியினர் குறைந்தது 10 ஆம் நூற்றாண்டு வரை சமூகத்தில் நல்ல நிலையில் தான் இருந்துள்ளனர்..

தென் தமிழகத்தில் 17ஆம் நூற்றாண்டு வரை பறையர்கள் நல்ல நிலையில் தான் இருந்திருக்கிறார்கள். வெள்ளைக் குதிரை ஏறவும், பதினாறு கால் பந்தல் போடவும், 18 வகை இசை கருவிகளை வாசித்துக்கொள்ளவும் உரிமை பெற்றவர்களாய் இருந்தனர். இப்படி இருந்தவர்கள் தான் ஏதோ ஒரு கால மாற்றத்தில் சமூகத்தில் தாழ்வு நிலையை சந்தித்துள்ளனர். தமிழகத்தின் மற்றொரு முக்கிய தாழ்த்தப்பட்ட சமூகத்தினராக பள்ளர்களைக் குறித்தும் இதே போன்ற வரலாற்றுச் சான்றுகளைக் காண்பிக்க முடியும்.

ஆக இன்று பட்டியல் சாதி அல்லது தலித் என்று சொல்லிக்கொள்ளும் ஒவ்வொரு சாதியும் வரலாற்று காலம் முதல் ஒடுக்கப்பட்ட சாதிகளாக இல்லை. அவர்களின் தாழ்ந்த நிலை என்பது கடந்த 3-4 நூற்றாண்டுகளில்,

அதுவும் குறிப்பாக இஸ்லாமிய, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் காலகட்டத்திலேயே ஏற்பட்டது என்று கருத இடமிருக்கிறது.

இது வட இந்தியாவின் வால்மீகிக்கள், நிஷாதர்கள், புலிந்தர்கள் ஆகிய பல குடியினருக்கும் பொருந்தும்.
tamilhindu

Dr.Anburaj said...

சுவனப்பிாியன் மறந்து வீட்டீர்களே!

அனைத்துயிரும் ஆகி… – யோகாசனங்களின் உணர்வு நிலைகள்
June 21, 2016
- ஜடாயு

இன்று ஜூன்-21. அனைவருக்கும் இனிய சர்வதேச யோக தின வாழ்த்துக்கள் !

யோகம் பயில்வோம். நிறைவாழ்வு பெறுவோம்.

யோகாசனங்கள் எப்படி உருவாயின என்பது பற்றிய கேள்வி ஆசனங்களைப் பயிற்சி செய்யும் பலருக்கும் தோன்றியிருக்கும். “இலக்கியத்திற்குப் பின் இலக்கணம்” எனப்து போல, யோகத்தின் முதல் நூல் என்று கருதப் படும் பதஞ்சலி யோக சூத்திரங்கள் வரையறுக்கப் படுவதற்கு முன்பே யோகம் பற்றிய பல நுட்பங்கள் அறியப் பட்டிருந்திருக்க வேண்டும் என்றே யோக அறிஞர்கள் பலரும் கருதுகிறார்கள். இந்த நூலில் ஆசனம் பற்றி ஒரே ஒரு சூத்திரம் தான் உள்ளது: “உறுதியானதும், சுகமாயிருப்பதும் ஆன நிலை ஆசனம்”. ஏதாவது ஒரு ஆசனம் செய்யும்போது யாருக்காவது உடல் வலியால் முகம் சுளிப்பது போல் ஆனால் “ஸ்திரம் சுகம் ஆசனம்” என்று எங்கள் யோக ஆசிரியர் இந்த சூத்திரத்தைச் சொல்லி நினைவூட்டிக் கொண்டே இருப்பார்!

Women Practicing Yoga at Bhangarh

பதஞ்சலிக்குப் பின்னர் வந்த “ஹடயோக ப்ரதீபிகா” போன்ற நூல்களில் இன்று மிகப் பிரபலமாகி நாம் பயின்று வரும் பல ஆசனங்களின் பெயர்களும், அந்த ஆசனத்தில் உடலின் தோற்றம் (posture) எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றிய சித்திரங்களும் கிடைக்கின்றன. படங்கள் போன்ற குறியீடுகளைப் பயன்படுத்தாமல் சொற்கள் மூலமே விளக்கினாலும் ஆசனங்களுக்கான தெளிவான கையேடாக இந்த நூல் விளங்கி வந்திருக்கிறது. இது தவிர, வழிவழியாக வந்துள்ள தொடர்ச்சியான குரு சிஷ்ய மரபுகளும் இந்த ஆசனங்களில் உள்ள கலை நுணுக்கத்தை சரியான முறையில் இன்று வரை எடுத்து வந்துள்ளன.

ஆசனங்கள் வெளி உறுப்புக்களையும், தசைகளையும் மட்டுமல்ல, உடலின் பல உள் உறுப்புக்களையும், நாடி நரம்புகளையும் உறுதியாக்குகின்றன. பல யோகாசனங்கள் பார்ப்பதற்குக் கடினமாகத் தோன்றினாலும், பயிற்சி செய்பவர்களுக்கு இவை மிக இயல்பானதாகவே தெரியும். பயிற்சி இதற்குக் காரணம் என்றாலும், யோக ஆசனங்களின் தன்மையே அப்படிப் பட்டதாயிருக்கிறது. 2-3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வளரும் பருவத்தில் தாங்களாகவே பல ஆசனங்கள் போடுவதைப் பார்க்கலாம். உட்காருவதற்கு வந்து நிற்கத் தொடங்கும் சமயம் பல குழந்தைகளுக்கு வஜ்ராசனம் தானாக வரும். தவழ்வதற்காக அமரும் தோற்றமே ஒரு ஆசனம் தான்! ஆசனங்களின் இந்த இயற்கைத் தன்மை அவற்றுக்கு இன்னும் அழகு சேர்க்கிறது.

மனித உடலின் இயக்கம் பற்றிய ஆழ்ந்த நுண்ணறிவு பெற்றிருந்தனர் பண்டைக் கால யோகிகள். காட்டில் விலங்குகள், பறவைகள் இவற்றின் வாழ்வைக் கூர்ந்து கவனித்த அவர்கள் அவை எப்போது அமைதியடைகின்றன, ஆக்ரோஷம் கொள்கின்றன இவற்றையெல்லாம் ஆராய்ந்து பல ஆசனங்களை உருவாக்கியிருக்கலாம் என்று ஒரு கருத்து உள்ளது.

Dr.Anburaj said...

புகழ்பெற்ற யோக குரு ஸ்ரீஸ்ரீரவிசங்கர் அவர்களிடம் இந்தக் கேள்வி கேட்கப் பட்ட போது அவர் கூறினார் – “யோகத்தின் ஒரு உயர்ந்த நிலையில் செல்லும்போது பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கும் ஆன்மாவை யோகிகள் உணர்ந்தார்கள். அந்த உணர்ச்சியின் வெளிப்பாடாக அவர்கள் உடல் தானாகவே பல விதமான தோற்றங்கள் கொண்டது. இப்படித் தான் ஆசனங்கள் தோன்றின. பின்னர் அவை ஆய்வுக்கு உட்பட்டு நெறிப்படுத்தப் பட்டன. பிராணாயாம முறைகள் தோன்றியதும் இப்படித் தான்.” ஸ்ரீஸ்ரீ அவர்களது உருவாக்கம் என்று கருதப் படும் புகழ்பெற்ற “சுதர்ஷன் க்ரியா” என்ற பிராணாயாம முறையும் பரிசோதனைகளாலோ, புறவயப் பட்ட முயற்சிகளாலோ தோன்றவில்லை. மாறாக, ஆழ்ந்த தியானத்தின் போது தானாகவே அது சித்தித்ததாக அவர் பலமுறை கூறியுள்ளார். உலகெங்கும் உள்ள யோக ஆசிரியர்கள் அடிப்படை யோகப் பயிற்சிகளில் புதிய புதிய பரிமாணங்களை இன்றும் ஆக்கம் செய்து வருகிறார்கள். இவற்றில் எத்தனை முயற்சிகள் அகவயப் பட்டவை என்பது கேள்விக்குரியது. இருந்தாலும் யோகம் என்பது “கணந்தோறும் புதிதாகத் தோன்றும்” ஒரு வாழும் கலை என்பதில் ஐயமில்லை.

யோகாசனங்கள் உருவாக்கும் உடல் தோற்றத்தோடு, அவை தரும் உணர்வு நிலையையும் கருத்தில் கொண்டு பின்னர் பெயர்கள் இடப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.

Dr.Anburaj said...

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகி
பல் மிருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகி
வல் அசுரராகி முனிவராய்த் தேவராய்
கல்லாய் மனிதராய்ப் பேயாய் கணங்களாய்
செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்!”

என்று திருவாசகம் கூறும் அதீத அனுபவம் பரிணாம அறிவியல் கூறும் வளர்ச்சிப் படிநிலைகளை மட்டுமல்ல, அனைத்து உயிர்களாகவும் ஆகும் ஆன்மாவின் தன்மையையும் குறிக்கிறது. எண்ணிப் பார்த்தால், இந்தப் பேரனுபவத்தின் வெளிப் பாட்டை மனித உடலின் மொழியில் பாடும் அழகிய கவிதைகள் யோகாசனங்கள்!

அசையாப் பொருள்கள் மற்றும் விலங்குகள், பறவைகள் இவற்றின் தோற்றத்தில் பல ஆசனங்கள் உள்ளன.

பர்வதாசனம் (மலை), நாவாசனம் (படகு), விருட்சாசனம் (மரம்).
புஜங்காசனம் (பாம்பு), சலபாசனம் (வெட்டுக் கிளி), மத்ஸ்யாசனம் (மீன்).
ஊர்த்துவ முக / அதோமுக ஸ்வானாசனம் (மேல் / கீழ் நோக்கும் நாய்), சிம்ஹாசனம் (சிங்கம்).
மயூராசனம் (மயில்), குக்குடாசனம் (சேவல்), கபோடாசனம் (புறா).

விருட்சாசனத்தில் கட்டுரையாசிரியர்

விருட்சாசனத்தில் கட்டுரையாசிரியர்

கருவில் இருக்கும் சிசுவாக கர்ப்ப பிண்டாசனம்.

எல்லா செய்கையும் அடங்கிய பிணமாக சவாசனம்.

முனிவர்களின் பெயரால் பரத்வாஜாசனம், மத்ஸ்யேந்திராசனம்.

தெய்வ சக்திகளாக வீரபத்ராசனம், நடராஜாசனம்.

இதயக் கமலத்தில் உறையும் ஆன்ம சக்தியின் உருவகமாகவும், ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை என்று ராஜயோகம் கூறும் சக்தி பீடமான சக்கரத்தின் உருவகமாகவும் விளங்கும் அற்புதமான பத்மாசனம்.

இப்படி ஆசனங்களிலேயே அனைத்துயிர்களின் உணர்வு நிலைகளும் தோன்றும் படி யோகிகள் இவற்றை வடிவமைத்து பெயரும் இட்டார்களோ என்றே எண்ணத் தோன்றுகிறது!

ஆமே அனைத்துயிர் ஆகிய அம்மையும்
தாமே சகலமும் ஈன்றஅத் தையலும்
ஆமே அவளடி போற்றி வணங்கிடில்
போமே வினைகளும் புண்ணிய னாகுமே.

– திருமந்திரம் 4.13.23

அடுத்த முறை விருட்சாசனம் செய்யும்போது, சில கணங்கள் கண்களை மூடிக் கொண்டு நீங்கள் மரமாகவே ஆகிவிட்டதாக உணருங்கள். அற்புதமான உணர்வு அது!

Dr.Anburaj said...


உ.பி யின் ஹாத்ரஸ் ஜில்லாவில் உள்ள அலைபூர் சுர்ஸேன் க்ராமத்தில் உள்ள மஸ்ஜிதில் நம் முஸல்மாணிய சஹோதரர்கள் இந்த தினத்தன்று யோகாப்யாசம் செய்து யோக தினத்தை கோலாஹலமாகக் கொண்டாடி இருக்கின்றனர். கீழே உள்ள உரலில் ஹிந்தியில் இது பற்றிய செய்தி பகிரப்பட்டுள்ளது

http://hindutva.info/muslims-come-out-to-celebrate-yoga-day-despite-directive-from-aimpl/

ஹிந்தி வாசிக்க இயலாத அன்பர்களுக்காக பகிரப்பட்ட செய்தி கீழே தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஆல் இந்தியா முஸ்லீம் பர்ஸனல் லா போர்ட் ஸ்தாபனத்தார் யோக தினத்தைப் புறக்கணிக்குமாறு முஸல்மாணியருக்கு ஃபத்வா விதித்துள்ளது. ஆயினும் பல முஸ்லீம் சஹோதரர்கள் இந்த ஃபத்வாவைப் புறக்கணித்து மோதியின் அறிவுரையை ஏற்று யோகதினத்தைக் கொண்டாடி இருக்கின்றனர்.

உ.பி யின் ஜில்லா ஹாத்ரஸைச் சார்ந்த அலைபூர் சுர்ஸேன் க்ராமத்தில் உள்ள மஸ்ஜிதில் இஸ்லாமிய சஹோதரர்கள் யோகாப்யாசம் செய்து யோக தினத்தைக் கோலஹலமாகக் கொண்டாடி இருக்கின்றனர். மேலும் யோகாப்யாசம் என்பது எந்த ஒரு மதத்துடனும் சம்பந்தப்பட்ட விஷயம் கிடையாது என உலக முஸ்லீம்களுக்கு இதன் மூலம் தெளிவு படுத்தியுள்ளனர். அவரவர் உடலை பேணிப்பாதுகாக்க விழைபவர்களுக்கு யோகாப்யாசம் ஒரு சாதனம் என்று தெரிவிக்கின்றனர்.

மஸ்ஜிதில் இளைஞர்கள் மட்டுமின்றி வயோவ்ருத்தர்களும் கூட யோகாப்யாச நிகழ்வுகளில் பங்கு பெற்றனர். யோகாப்யாசம் செய்வதில் எல்லாருக்கும் முன்னால் ஒரு ஆதர்சமாக செயல்பட்டவர் மஸ்ஜிதின் மௌலானா ஆகிய டாக்டர் வலீ மொஹம்மத் சாஹேப் அவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

யோகத்திற்கு எந்த ஒரு மதத்துடனும் எந்த சம்பந்தமும் கிடையாது என அவர் கருத்துப்பகிர்ந்துள்ளார். மதத்துடன் இதை சம்பந்தப்படுத்துவது தவறு என்று அவர் கூறியுள்ளார். உடலைப் பேணிப்பாதுகாப்பதற்கான ஒரு சாதனம் யோகம் என்று அவர் கருதுகிறார். சூர்ய நமஸ்காரம் மற்றும் ஓம் என்ற சொல்லாடல்களில் இருந்து இதை மதத்துடன் சம்பந்தப்படுத்த விழைகின்றனர். ஓம் என்று சொல்ல இஷ்டப்படாதவர்கள் அதைச் சொல்லாமல் இருக்கலாம். அல்லது ஓம் என்று சொல்லிக்கொள்வதற்குப் பதிலாக அல்லா என்று சொல்லிக்கொள்ளலாம். யோகாப்யாசம் செய்வதால் ………….சூரியனை நோக்கி யோகம் செய்வதில் ……..உடலுக்கு சக்தி கிடைக்கிறது. ரத்த ஓட்டம் சீரடைகிறது. கைகால்கள் வலுப்பெறுகின்றன. வயிறு சம்பந்தமான நோய்கள் குணமடைகின்றன எனப் பலன் கள் கிட்டுகின்றன என்று கருத்துப்பகிர்ந்துள்ளார்.

Dr.Anburaj said...

ஒரு சம்பவத்தை - நிஜமாக நடந்ததைப் - பார்ப்போம்.

2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கொல்கத்தாவிலிருந்து வெளி வரும் ஈ தேஷ் என்ற பத்திரிகை முந்தைய வெள்ளிக்கிழமை நடந்த ஒரு சம்பவத்தை வெளியிட்டது.சம்பவம் இது தான்.

மும்பையில் அவசரம் அவசரமாக மாலையில் அலுவலகத்திலிருந்து தொழுகைக்குச் செல்லக் கிளம்பினார் ரமீஸ்.
பொதுவாக அவர் தொழுகையை ஒரு நாளும் தவற விட்டதே இல்லை.

அன்று அவசரத்தில் தனது பர்ஸை ஆபீஸ் டிராயரிலேயே விட்டு விட்டு வெளியே வந்து விட்டார்.

ஒரு ஆட்டோவைப் பிடித்து அதில் உட்கார்ந்த அவர் பையில் கையை விட்ட போது பகீர் என்றது. பர்ஸைக் காணோம். அலுவலகத்திலேயே அதை விட்டு விட்டோம் என்பது அப்போது தான் அவருக்குப் புரிந்தது.

இப்போது ஆட்டோகாரருக்குக் கொடுக்கக் கூட ஒரு பைசா இல்லை.

திரும்பி அலுவலகம் சென்று பர்ஸை எடுக்கலாம் என்றால் தொழுகை முடிந்து விடும். நேரமே இல்லை. ‘போதாத நேரம்’ அவருக்கு.

என்ன செய்வது?ஒரு கணம் ஆட்டோ டிரைவரைப் பார்த்தார்.

நெற்றியில் நீள்மான குங்கும திலகக் கீற்று. கையில் கண்பதி உற்சவத்திற்கான பச்சையை வேறு இரு கரங்களிலும் அவர் குத்தி இருந்தார். நல்ல கணபதி பக்தர் போலும்!

ரமீஸின் பதட்டத்தைக் கவனித்த டிரைவஎ, “என்ன, ஏதாவது தகராறா, சாஹப்” என்று கேட்டார். ரமீஸ் தன் நிலைமையைச் சொன்னார்.

“என்னை மசூதியில் இறக்கி விட்டு இருபது நிமிடம் காத்திருங்கள். தொழுகையை முடித்து கொண்ட உடனேயே என் வீட்டிற்குப் போய் அங்கு உங்களுக்கான ஆட்டோ சார்ஜையும் கூடவே காத்திருந்ததற்கான வெய்டிங் சார்ஜையும் தந்து விடுகிறேன். தொழுகையை மட்டும் தவற விட்டு விடக் கூடாது. எனக்கு இதைச் செய்ய முடியுமா?” என்று அவர் டிரைவரைக் கேட்டார்.

Dr.Anburaj said...



பிஸியான் மாலை நேரம். மும்பையில் ஆட்டோ சவாரீயில் ஏதோ சிறிது ச்ம்பாதிக்க உகந்த நேரம்.

டிரைவர் தனது வேண்டுகோளை ஏற்பாரா?

“கவலைப்படாதீர்கள். உங்களை மசூதியில் டிராப் செய்து விடுகிறேன். ஆனால் காத்திருக்க ம்ட்டும் என்னால் முடியாது.தொழுகையை நல்லபடியாக முடித்து வீடு திரும்புங்கள்”

டிரைவருக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியாமல் திக்குமுக்காடிப் போனார் ரமீஸ்.

மசூதி வந்தது. அங்கு ஆட்டோ டிரைவர் செய்ததைப் பார்த்து ஆடிப் போனார் ரமீஸ்.

தன் சட்டைப் பையில் கையை விட்டு சில நோட்டுகளை எடுத்த டிரைவர், ரமீஸிடம் கொடுத்து, “இதை வைத்துக் கொள்ளுங்கள். வீடு போய்ச் சேருங்கள்” என்றார்.

ரமீஸ் இறங்கியவுடன் ஒரு வார்த்தையும் மேற்கொண்டு பேசாமல் ஆட்டோ சர்ரென்று கிளம்பியது.

பிஸியான் நேரத்தில் பிழைப்புக்கான அடுத்த சவாரியை நோக்கி அது கிளம்பியது!

தொழுகையை முடித்த ரமீஸ் பிரமிப்பிலிருந்து விடுபடவே இல்லை.

மாலையில் நடந்த சம்பவம் அவர் மனதை விட்டு அகலவே இல்லை.

மறு நாள் அந்த ஆட்டோ டிரைவரைத் தேட ஆரம்பித்தார். நெடு நேரம் பல தெருக்களில் தேடிய பின்னர் அவரைக் கண்டு பிடித்தார்.

அவரைப் பார்த்த ஆட்டோ டிரைவர், கூப்பிய க்ரங்களுடன், “அட வந்து விட்டீர்களா?” என்று வரவேற்றார்.

‘வந்து தானே ஆக வேண்டும். நீங்கள் செய்த உதவியை என் வாழ்நாளில் என்றுமே நான் மறக்க மாட்டேன்” என்று உணர்ச்சி பொங்க்ச் சொன்னார் ரமீஸ்.

கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு ஆட்டோவுக்கான கட்டணத்தை நன்றியுடன் சேர்த்துக் கொடுத்தார் ரமீஸ்.

அவர் திரும்பும் போது அவர் கையில் ஆட்டோ டிரைவர் கொடுத்த கண்பதி உற்சவத்திற்கான அழைப்பிதழ் இருந்தது.

ரமீஸின் உள்ளமோ ஒளி மயத்தால் விகசித்தது.

இப்படியும் ம்னிதர்கள் இருக்கிறார்கள்!

இந்தியாவில் மட்டுமே அல்லவா இப்படி நடக்க முடியும்.
தெய்வ தேசத்தில் ஏகம் சத்; விப்ரா: பஹுதா வதந்தி.

உண்மை ஒன்றே; அதை அறிஞர்கள் பலவாறாகச் சொல்கிறார்கள்.***

நன்றி: கொல்கொத்தாவிலிருந்து வெளி வரும் ஆங்கில வார இதழ் TRUTH – 16-9-2016

Dr.Anburaj said...



Swami Vivekananda said

" Every religion has produced ( is still producing ) men and women of most exalted characters.".

சிறந்த உன்னதமான ஆண்களையும் பெண்களையும் ஒவ்வொரு சமய பிாிவும் இனமும் உலகிற்கு அளித்துள்ளது-சுவாமி விவேகானந்தா்.

இப்படியெலலாம் உண்மையை சொல்வதற்கு ஆன்மீகம் உணா்வு வேண்டும். இறைவனுக்கு

இணை வைப்பவன் என்றும் பாவி அல்ல.சிலை வணக்கம் இழிவானது அல்ல. அப்படிச்

சொல்லி மனித உயா்களை கொன்று குவிக்க தூண்டும் காட்டு மிராண்டிகளால் உலகம்

இரத்தக்களறியாகிக் கொண்டிருக்கின்றது.கட்டடம் கட்ட சாரம் கட்டுவது போல் சிலை

வணக்கமும் பயனுள்ளதுதான்.
இன்னிசை வீணையா் பாழினா் ஒருபால்
இருக்கோடு தோத்திரம் இயம்பினா் ஒரு பால்
துன்னிய பிணைமலா்க் கையினா் ஒரு பால்
தொளுகையா் அழுகையா் துவள்கையா் ஒரு பால்
சென்னியில் அஞ்சலி கூப்பினா் ஒரு பால்
திருப்பெருந்துறை சிவபெருமானே
....
ஏதங்கள் அறுத்தெமை ஆட்கொண்டருளும் என்பெருமான் பள்ளி எழுந்தருளாயே

எது எமைப் பணி கொள்ளும் ஆரது கேட்போம்என்பெருமான் பள்ளி எழுந்தருளாயே