'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Wednesday, December 11, 2013
பார்பனர்களின் எச்சில் இலையில் உருளும் அதிசயம்!
இந்த கொடுமை இந்த வருடமும் அரங்கேறியுள்ளது. இந்த பாமர மக்களை ஆரிய கொள்கை அந்த அளவு மீள முடியாமல் இவர்களை கட்டிப் போட்டுள்ளது. விடுதலையில் வந்த சம்பவத்தை பதிகிறேன். படித்துப் பாருங்கள்.
மங்களூரு, டிச. 9, 2013 - பார்ப்பனர்கள் உணவருந்திய எச்சில் இலைகள் மீது மற்ற ஜாதியினர் உருளும் சடங்கு கர்நாடகாவின் பெருமைக்கு இழுக்காகும் என்பதுடன் மனித குலத்துக்கு இழைக்கப் படும் அநீதியும், இந்திய பண்பாட்டின் மீது சுமத்தப்படும் களங்கமுமாகும் என்று தார்வாட் ரேவன சித்தேஸ்வர மடாதிபதி சிறீ பசவ ராஜா தேவாரு கூறினார். மங்களூர் அருகே உள்ள குக்கே சுப்ரமணியா கோவிலில் நடைபெற்று வரும் இந்த மூடநம்பிக்கை சடங்கினை எதிர்த்து நடைபெற்ற ஒருநாள் பட்டினி போராட்டத்தில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு கூறினார்.
கர்நாடகா ராஜ்ய இந்து லிடாவர்க்கலா ஜகுருடா வேதிக் பிற்படுத்தப்பட்டோர் நல அமைப்பு சனிக் கிழமையன்று மங்களூர் துணை ஆணையாளர் அலுவலகம் எதிரில் மடேஸ் நானாவை எதிர்த்து சனிக் கிழமையன்று ஒருநாள் பட்டினிப் போராட்டம் நடத்தியது. எச்சில் இலைகள் மீது உருளுவதால் யாரும் குணம் அடை வதில்லை. பார்ப்பனர் களின் அகந்தையின் அடையாளமாக இது இன்றும் நீடிக்கிறது. எச்சில் இலை மீது உருளும் மக்கள் அப் பாவிகள் என்றும் நம் பிக்கையின் பெயரால் அவர்கள் நசுக்கப்படு கிறார்கள் என்றும் உதவி யற்றவர்கள் ஆக ஆக்கப் படுகிறார்கள் என்றும் தேவாரு குறிப்பிட்டார். மாநில முதல்வர் உடன டியாக இதில் தலை யிட்டு இது போன்ற மனித விரோத செயல் களை நிறுத்த அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்றும் அவர் சொன்னார்.
இந்த மூட நம்பிக்கைப் பழக்கம் பல ஆண்டுகளாக நீடிக்கிறது. கடந்த நான்காண்டுகளாக தங்களது அமைப்பு இதை எதிர்த்து வருகிறது. இதற்காக தன்மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது இந்திய சமுதாயத்துக்கு விடுக்கப் படும் சவால். இந்த பழக்கம் நிறுத்தப்படும் வரை தங்களுடைய எதிர்ப்பு தொடரும் என்றும் பிற்படுத்தப்பட்டோர் அமைப்பின் மாநில தலைவர் சிவ ராமு கூறினார். மைசூர் பேட்டாடபுரா மடாதிபதி சிறீரச்சோட்டி சிவாச்சார்ய சுவாமிஜியும் இந்த மடேஸ்நானா நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
அமைச்சர் எதிர்ப்பு
தெற்கு கன்னடாவில் உள்ள குக்கே சுப்ர மணியா கோவிலில் நடைபெற்று வரும் மடேஸ்நானா போன்ற குருட்டுத்தனமான மூட நம்பிக்கைப் பழக்கங்களை மக்கள் ஆதரிக்கக்டாது என்று கர்நாடகா சமூக நலத்துறை அமைச்சர் எச்.ஆஞ்ச நேயா செய்தியாளர்களிடம் கூறினார். இது ஒரு மனித விரோத முட்டாள் தனமான நடைமுறை என்றும் அவர் கூறினார். இதில் கலந்து கொண்டவர்களை முட்டாள்கள் அல்லது அறிவாளிகள் என்று தன்னால் கூற இயலவில்லை என்றும் அவர் சொன்னார். எச்சில் இலைகள் மீது உருளுவதால், அவர் களின் தோல் மேலும் பாதிக்கப்படுமே தவிர அவர்கள் நம்புவது போல் தோல் வியாதிகள் குணம் அடைவதில்லை என்றும் அவர் கூறினார்.
இது போன்ற மூட நம்பிக்கைகளை சட்டங்களால் அகற்ற முடியாது என்றும் அவர் கூறினார். பல்வேறு மடாதிபதிகளும், மதத் தலைவர்களும் இது வொரு மனிதாபிமான மற்ற நடைமுறை என்று அறிவித்த பின்பும் மக்கள் இதில் ஈடுபடுவது வருந்தத்தக்கது என்றும் அவர் சொன்னார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மடேஸ்நானாவை எதிர்த்து இயக்கம் நடத்திய சிவராமுவை மத வெறி அமைப்புகள் கடுமையாக தாக்கின. இதனால் கடந்த இரண்டாண்டுகளாக பலத்த பாதுகாப்புடன் மடேஸ்நானா நடத்தப் பட்டு வருகிறது. இவ் வாண்டு கோவில் வளாகத்தில் நூற்றுக்கு மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர்.
தகவல் உதவி: விடுதலை
இது என்ன கொடுமை? தங்களின் வியாதி குணமாக பார்பனர்களின் எச்சில் தட்டில் உருளுவது அவர்களின் உரிமை அல்லவா? இதை எப்படி ஒரு அமைச்சரே தடுக்கலாம்?
நரேந்திர மோடி பிரதமரானால் இந்து ராஷ்ட்ரம் மலரும். அப்போது மடே ஸ்நாநாவை கர்நாடகம் மட்டும் அல்லாது முழு இந்தியாவுக்குமான சட்டமாக்கப்படும் என்று இதனை எதிர்ப்போருக்கு சொல்லி வைக்கிறோம்.. :-)
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
இந்த நிகழ்ச்சிக்கு போய் நரேந்திர மோடியை இழுப்பானேன். முட்டாள்கள் எங்கும் உள்ளனா். கா்பாலா நினைவுநாளில் முஸ்லீம்கள் பலா் உடலெங்கும் கத்தியால் வெட்டிக்காயப்படுத்திக் கொள்வாா்களே அதுபோல் இதுவும் சில முட்டாள்களின் செயலே. பிற மதங்களை எப்படியும் மலினப்படுத்திப் பாா்க்க வேண்டும். எனனே உங்கள் தந்திரம்
இந்து சமூகம்பற்றி நல்ல கருத்துக்களை எழுதலாம ஒருநாள் கூட தாங்கள் எழுதவில்லையே
Post a Comment