Followers

Saturday, December 28, 2013

2028ல் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி இந்தியா முன்றாவது இடம்!



LONDON: India will beat Japan to grab the position of the world's third-largest economy in 2028, according to an influential British thinktank, that also forecast China to overtake the US for the top position.

London-based economic consultancy Centre for Economics and Business Research (CEBR) in its annual " World Economic League Table" released here on Friday, indicated that by 2028, the league table will be reordered.

"India overtakes Japan in 2028 to become the world's third largest economy. Abenomics means that Japan is likely to follow a weak currency policy for the foreseeable future which means that its GDP in dollar terms gets overtaken by India earlier than we had previously expected," the CEBR said in reference to India's march up the economic ladder as a result of Japanese Prime Minister Shinzo Abe's aggressive policies.

http://timesofindia.indiatimes.com/business/india-business/India-to-be-worlds-3rd-largest-economy-by-2028-UK-thinktank-says/articleshow/28059381.cms

http://www.thehindu.com/business/Economy/study-projects-india-to-be-worlds-3rd-largest-economy-by-2028-after-china-us/article5508247.ece

லண்டன்: வரும் 2028-ம் ஆண்டில் இந்தியா பொருளாதார ரீதியாக உலகிலேயே மூன்றாவது பெரிய நாடாக மாறும் என கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டுள்ளது. லண்டனில் இருந்து செயல்படும் சிபர்ஸ் என்னும் பொருளாதார ஆய்வு மையமம் இந்த தகவலை வெளியிட்டு்ள்ளது.


தற்போதை நிலவரப்படி 1.7 பில்லியன் டாலர் ஜிடிபி வளர்ச்சியோடு 11-வது இடத்தில் உள்ள இந்தியா 2018-ம் ஆண்டில் 2 ஆயிரத்து 481 பில்லியன் டாலர் ஜிடிபி வளர்ச்சியுடன்ஒன்பதாவது இடத்தை பிடிக்க உள்ளதாகவும், இதே காலகட்டத்தில் ரஷ்யா 6, மெக்சிகோ 12 , கொரியா 13-வது இடங்களையும் பிடிக்கும் என அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் 2023-ம் ஆண்டில் இந்தியா 4 ஆயிரத்து 124 பில்லியன் டாலருடன் ஜிடிபி வளர்ச்சியோடு 4-வது இடத்தையும் பிடிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.


2028-ம் ஆண்டில் 6 ஆயிரத்து பில்லியன் டாலர் ஜிடிபி வளர்ச்சியுடன் மூன்றாவது இடத்தை இந்தியா பிடிக்கும். இந்த கால கட்டத்தில் அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்த படியாக பொருளாதார ரீதியாக மூன்றாவது இடத்தை பிடிக்கும் இந்தியா ஜப்பானை பின்னுக்கு தள்ளிவிடும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் இக்கால கட்டத்தில் கனடா நாடு 10-வது இடத்தை பிடிக்கும் எனவும் ஆய்வில் கூறியுள்ளது.

மன்மோகன் சிங், சிதம்பரம் போன்ற சிறந்த வல்லுனர்களின் நீண்ட கால முயற்சியாலும், வெளி நாட்டில் வாழும் இந்தியர்கள் மாதா மாதம் அனுப்பும் கோடிகளாலும் இது கண்டிப்பாக சாத்தியப்படும்.

நரேந்திர மோடி போன்ற நாலாந்தர அரசியல்வாதிகளின் வாழ்வு சூன்யமாகி அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற 'ஆம் ஆத்மிகள்' பிரதமர்களாகவும் முதல்வர்களாகவும் மக்களால் அமர்த்தப்பட்டால் 2018 லேயே அந்த இலக்கை இந்தியா அடைந்து விடும்.

வாழ்க நமது நாடு: வளர்க அதன் வளர்ச்சி:

------------------------------------------------------



இந்தியா பிரெடேர்னிட்டி பாரம், ரியாத் செய்திகள்: 25-12-2013 தமிழ்நாடு கள்ளக்குருச்சி அருகில் பெருமங்கலம் கிராமத்தை சார்ந்த திரு.பூமாலை த/பெ முதலி என்பவர் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு சவூதி அரேபியா ரியாத்தில் ஒரு வாகன விபத்தில் பாதிக்கப்பட்டு சுய நினைவின்றி கோமா நிலையில் மன்னர் பஹத் (National Guard Hospital) மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இவருக்கு உதவ நமது தூதரகம் நம்மை கேட்டுக்கொண்டதற்கிணங்க நமது உறுப்பினர்கள் மருத்துவமனையையும் திரு பூமாலை இன் சவூதி முதலாளியையும் பலமுறை தொடர்ச்சியாக சந்தித்து வந்தோம் இந்நிலையில் அவருக்கு கடந்த ஒன்றரை வருடங்களாக மருத்துவம் செய்யப்பட்டு தற்போது உடல்நிலையில் சற்று முனேற்றம் ஏற்பட்டுள்ளது அவரை தாயகம் அனுப்புவதற்கு மருத்துவமணை நிர்வாகம் அனுமதியளித்துள்ளது, கடந்த வாரம் சவூதி முதலாளியை சந்தித்தபோது பூமாலை அவர்களுக்கு பாஸ்போர்ட் இல் எக்ஸிட் அடித்துக்கொடுக்கவும் சவூதி முன்வந்தார். தற்போது இன்று எக்ஸிட் அடிக்கப்பட்டுவிட்டது. அவரை தாயகம் அனுப்பி வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. ஆனால் அவருடன் துணைக்கு ஒருவர் உடன் செல்லவேண்டும் உடன் செல்பவருக்கும் விமான டிக்கெட் இலவசமாக வழங்கப்படும். தியாக மனப்பான்மை உள்ளவர்கள் யாரேனும் சமீபத்தில் சென்னை செல்ல இருந்தால் எங்களை உடனே தொடர்புகொள்ளவும் உங்களது பாஸ்போர்ட் மற்றும் ரீ என்ட்ரி விசா அடித்த நகல்களை எங்களுக்கு அனுப்பி வைத்தால் மற்ற அணைத்து ஏற்பாடுகளையும் நாங்கள் முடித்துத்தருகிறோம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இப்படிக்கு.
இந்தியா பிரெடேர்நிட்டி பாரம், ரியாத் 0502314754 / 0505948951

-முகமது ரமீஜூதீன் அப்துல் வஹாப்!

No comments: