Followers

Sunday, December 08, 2013

'தேடல்' - கண் தானம் பற்றிய குறும்படம்!



சீரழிந்து கொண்டிருக்கும் திரைப்படத்துறையை சீர் செய்ய வேண்டியதும் நமது கடமை. இது போன்று ஆக்கபூர்வமான குறும்படங்கள் எடுக்க இந்த திரைப்படத் துறையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

உடல் தானம் செய்யலாமா

கேள்வி:உடலையும் உடலின் கண் கிட்னி போன்ற உறுப்புக்களையும் தானம் செய்ய இஸ்லாத்தில் அனுமதி உண்டா?- ரிஸ்வான்

பிஜேயின் பதில்:கண் கிட்னி போன்ற சில மனித உறுப்புக்களை பிற மனிதர்களுக்கு பொருத்தி மருத்துவம் செய்யும் முறை தற்காலத்தில் தான் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நவீன முறைகள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இருக்கவில்லை. எனவே உலக விஷயத்தில் இது போன்ற முன்னேற்றங்கள் ஏற்பட்டால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இந்த முறை இருந்ததா? என்று கேட்கக் கூடாது. மாறாக இஸ்லாத்தின் சட்ட திட்டங்களுக்கு இவை எதிராக இருக்கின்றதா? என்று மட்டும் பார்க்க வேண்டும்.

நவீன முறைகள் இஸ்லாமியச் சட்ட விதிமுறைகளுக்கு எதிராக இல்லாவிட்டால் அவை அனுமதிக்கப் பட்டதாகி விடும். கண், கிட்னி, இரத்தம் போன்றவற்றை தானமாக கொடுத்து பிறரை வாழவைப்பதை தடை செய்யும் விதமாக குர்ஆன் ஹதீஸில் எந்த சான்றும் இடம் பெறவில்லை. மாறாக மனித உயிரை வாழச் செய்வது என்ற அடிப்படையில் இது ஒரு நல்லறமாகும். சிலர் சரியான மார்க்க அறிவு இல்லாமல் மனித உயிரைக் காக்கும் இது போன்ற உறுப்பு தானங்களை எதிர்த்து வருகின்றனர். இவர்களுக்கோ இவர்களின் உறவினர்களுக்கோ பிறருடைய உறுப்பைப் பொறுத்தினால் தான் வாழ முடியும் என்ற நிலை இருந்தால் அப்போது இவர்கள் உறுப்பு தானத்தை எதிர்க்க மாட்டார்கள். இந்த சூழ்நிலையில் அனைத்து மனிதனும் மன உறுத்தலின்றி இதை ஏற்றுக் கொள்வான்.

அதே நேரத்தில் உடல் முழுவதையும் தானம் செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை. ஏனெனில் உடல் தானம் என்பது கண் தானத்தைப் போன்றதல்ல. உடல் தானம் செய்யும் மனிதனின் உடலிலுள்ள பாகங்களை எடுத்து பிற மனிதர்களுக்குப் பொருத்துவதில்லை. மாறாக உடலின் ஒவ்வொரு பாகத்தையும் எடுத்து மருத்துவக் கல்வியின் பாடத்திற்காகவும் ஆய்வுக்காகவுமே பயன்படுத்தப் படுகின்றன. கண் தானத்தின் போது கண்ணோ மற்ற உறுப்புகளோ சிதைக்கப்படுவதில்லை. இறந்தவரின் கண்ணை எடுத்து அடுத்தவருக்குப் பொருத்தப்படுகின்றது. ஆனால் உடல் தானம் செய்தவரின் உறுப்புகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக சிதைக்கப்படுகின்றன. இதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை.

கொள்ளையடிப்பதையும் ஒருவரின் அங்கங்களை (உயிருடன் இருக்கும் போதோ அல்லது இறந்த பிறகோ) சிதைப்பதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி), நூல் : புகாரி 2474, 5516


உடலைக் குளிப்பாட்டும் போது அவ்வுடலில் பல குறைபாடுகள் இருக்கலாம். உலகில் வாழும் போது அந்தக் குறைபாடுகளை அவர் மறைத்து வாழ்ந்திருக்கலாம். உடலைக் குளிப்பாட்டுபவர் அதைக் காண வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு காண்பவர் அந்தக் குறைபாடுகளை வெளியில் சொல்லாமல் மறைப்பது அவசியமாகும்.

'ஒரு முஸ்லிமைக் குளிப்பாட்டுபவர் அவரிடம் உள்ள குறைகளை மறைத்தால் அவரை அல்லாஹ் நாற்பது தடவை மன்னிக்கிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ராஃபிவு (ரலி) நூல்கள்: பைஹகீ 3/395, ஹாகிம் 1/505, 1/516 தப்ரானி 1/315

இறந்த பின்னரும் ஒரு மனிதரின் வெட்கத்தலம் மறைத்து பாதுக்காக்கப்பட வேண்டும். ஆனால் உடல் தானம் செய்தால் அந்த உடலை மற்றவர்கள் அன்றாடம் நிர்வாணமாக்க் காணும் நிலை ஏற்படும். மருத்துவ படிப்புக்கு உடல் தேவைப்படும் என்ற காரணத்தால் இதை இஸ்லாம் அனுமதிக்காது. மனித உடல் போன்ற மாதிரிகளை பிளாஸ்டிக்கில் செய்து மருத்துவப் படிப்புக்கு பயன்படுத்த முடியும்.

மேலும் பார்க்க

http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/kan_danam_udal_danam/
http://onlinepj.com/kelvi_pathil/matru_matha_kelvi/kan_thanam/
http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/moolai_sethavarin_uruppukal/
http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/moolai_sethavarin_ithayathai_matravaruku/

Article Copied From: www.onlinepj.com , Read more at: http://onlinepj.com/kelvi_pathil/naveena_pirasanaikal/udal_dhanam_seyyalama/
Copyright © www.onlinepj.com

---------------------------------------------

சவுதி அரேபியாவில் ஒரு இறந்த பங்களாதேஷத்து பெண்ணின் உடல் உறுப்புகள் மூன்று சவுதி நாட்டவர், ஒரு கத்தார் நாட்டவரின் உயிரைக் காப்பாற்றியுள்ளது. இஸ்லாத்தில் அனுமதி இருப்பதால்தான் சவுதி அரேபியா இது போன்ற அறிவியல் முன்னேற்றத்தை மக்களுக்கு நன்மையான வழியில் பயன்படுத்திக் கொள்கிறது.

The organs of a 38-year-old Bangladeshi woman who was clinically pronounced dead were used to saved the lives of three Saudis and one Qatari citizen.

A team from the Saudi Center for Organ Transplantation had followed up on the woman’s case at King Khaled Hospital in Al-Kharj. They later met with her kin and obtained their consent to donate her organs.

The organ-harvesting operation was conducted in coordination with Dr. Iyad Al-Yousif, the attending physician at the center, and medical coordinator Abdullah Al-Kharji.

One kidney was given to a 44-year-old Saudi at a specialist hospital in Riyadh and the other to a 46-year-old Saudi at the Riyadh Military Hospital. The liver was given to a 47-year-old Saudi woman at the specialist hospital. The lungs were given to a 32-year-old Qatari national also at the same hospital, while the heart valves were taken to King Faisal Specialist Hospital & Research Center for later use.

http://www.arabnews.com/news/487761

4 comments:

Anonymous said...

சிங்கப்பூரில் இது நடைமுறையில் உள்ளது. உறுப்புதானம் பண்ண விரும்பாதவர்கள் மட்டும் பெயரைப்பதிவு செய்து கொள்ளவேண்டும். இதற்கென ஃபத்வா கொடுக்கப்பட்டுள்ளது.

Anonymous said...

முதலில் ரத்த தானம் கூடாது என்றீர்கள் பின்னர் கூடும் என்றீர்கள் .கண், கிட்னி தானங்களும் இவ்வாறே முதலில் கூற பட்டு இப்போது கூடும் என்கிறீர்கள் .உடல் தானமும் வரும்காலங்களில் ஏற்கப்படும் என்று நம்புகிறேன் .

மருத்துவ கல்விக்கும் மருத்துவ ஆராய்ச்சிக்கும் வேறுபாடு உள்ளது .
Education can be possible with dummy human figure.Research needs human body.You cant do this with dummy doll.You are going to learn new thing in that body.So according to me its necessary.It may help to save mankind with a single human body.

“…if any one killed a person, it would be as if he killed the whole of mankind; and if any one saved a life, it would be as if he saved the life of the whole of mankind…” - The Holy Quran (Chapter 5, Verse 32).

“.....நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்.......”

So here they are not deforming any corpse,actually they are studying more about us.It may helps to save many lives,the whole mankind.

Anonymous said...

முதலில் ரத்த தானம் கூடாது என்றீர்கள் பின்னர் கூடும் என்றீர்கள் .கண், கிட்னி தானங்களும் இவ்வாறே முதலில் கூற பட்டு இப்போது கூடும் என்கிறீர்கள் .உடல் தானமும் வரும்காலங்களில் ஏற்கப்படும் என்று நம்புகிறேன் .

மருத்துவ கல்விக்கும் மருத்துவ ஆராய்ச்சிக்கும் வேறுபாடு உள்ளது .
Education can be possible with dummy human figure.Research needs human body.You cant do this with dummy doll.You are going to learn new thing in that body.So according to me its necessary.It may help to save mankind with a single human body.

“…if any one killed a person, it would be as if he killed the whole of mankind; and if any one saved a life, it would be as if he saved the life of the whole of mankind…” - The Holy Quran (Chapter 5, Verse 32).

“.....நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்.......”

So here they are not deforming any corpse,actually they are studying more about us.It may helps to save many lives,the whole mankind.

Dr.Anburaj said...

அரேபியா்கள் கூற்றை 1400 ஆண்டுகளுக்கு முந்தைய அரேபிய கல்வி கலாச்சார பாிணாம நிலையை முட்டாள்தனமாக இஸ்லாம் என்று மாா்க்கம் என்று உலக முஸ்லீம்கள் நம்பவைக்கப்பட்டு ஏமாற்றப்பட்டு வருகின்றனா்.முகம்மதுவின் காலம் இருண்ட காலம்.அங்கே நவீன மருத்துவம் கிடையாது.ஓட்டகத்தின் மூத்திரம்,கருஞ்சீரகம்,பேரீச்சம்பழம் தேன், ஒட்டகப்பால்தான் ஒரளவிற்கு உள்ள வைத்திய முறைகள்.அறுவைச்சிகிட்சை குறித்த எண்ணம் கூட மகம்மது காலத்தில் இல்லை. ஆகவே உடல்தானம் செய்வது தவறு என்பது வடிகட்டிய முட்டாள்தனம். இக்கருத்தை ஆரேபிய மக்கள் கடைபிடிக்கவில்லை.
இந்தியாவில் சுப்பா் அதிமகா அரேபிய அடிமைகள் ஏதோ அல்லாவின் நோ்முக உதவியாா்கள் போல் அது இது என விளக்கம் அளித்து முஸ்லீம்களை முட்டாள் ஆக்கிக் கொண்டிருக்கின்றாா்கள்.
1200 ஆண்டுகளுக்கு முன்னா சுஸ்ருதா் என்ற ஆயுள்வேத மருத்துவா் மனிதனின் பின்புறம் இருந்து சதையை வெட்டி துண்டிக்கப்பட்ட மூக்கை சாி செய்து பிளாஸ்டிக் சாஜாி செய்து உலகின் முதல் அறுவைச்சிகிட்சை நிபுணா் என்ற அங்கிகாரத்தைப் பெற்றுள்ளாா் சுஸ்ருதரை இந்துவாகவோ இந்தயனாகவே எப்படி எடுத்துக் கொள்ள சுவனப்பிாியனுக்கு பிடிக்குதோ அப்படியே எடுத்துக் கொள்ளலாம்.சுஸ்ருதா் ஆரேபிய காடடறபி அல்ல அல்ல.